புதுடில்லி: ''கற்பழிக்கும் போது, முரண்டு பிடித்து, எதிர்ப்பு
தெரிவித்து ஆக்ரோஷமாக நடந்து கொண்டதால் தான், அந்தப் பெண்ணை கொடூரமாக
துன்புறுத்தினோம்,'' என, டில்லி மருத்துவ மாணவியை, பாலியல் பலாத்காரம்
செய்ததற்காக, தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவனான, முகேஷ்
சிங், 28, கூறியுள்ளான்.டில்லி, திகார் சிறையில்
அடைக்கப்பட்டுள்ள அவன், பி.பி.சி., செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள
பேட்டியில் கூறியதாவது: எங்களைப் போன்ற கற்பழிப்பு குற்றவாளிகளை தூக்கில்
போடுவதால், கற்பழிப்புக்கு ஆளாகும் பெண்களுக்குத் தான் பாதிப்பு.
கற்பழிக்கப்படும் பெண்ணை, சும்மா மிரட்டி விட்டு விடுபவர்கள் கூட, 'இவளை
உயிருடன் விட்டால் நம்மை காட்டிக் கொடுத்து விடுவாள்' என நினைத்து, கொன்று
விட வாய்ப்பு உள்ளது. டில்லியில் நடைபெற்றது ஒரு விபத்து. அந்த
சம்பவத்திற்கு, அந்தப் பெண்ணும் ஒரு காரணம் தான். சும்மா இருந்திருந்தால்,
நாங்கள் அவளை கெடுத்து விட்டு விட்டிருப்போம். எங்களுடன் பலமாக போராடினாள்;
ஆக்ரோஷமாக எதிர்த்தாள். அதனால் தான், நாங்களும் கொடூரமாக நடந்து கொள்ள
வேண்டியதாகி விட்டது. நல்ல பெண்களுக்கு, ராத்திரியில் என்ன வேலை... 9:00
மணிக்கு மேல், காதலனுடன் ஊர் சுற்றிய அந்தப் பெண்ணை யாரும் குற்றம்
சொல்லவில்லை. ராத்திரி ஆனா, வீட்டில இருக்க வேண்டிய பெண், ஊர் சுற்றலாமா?
இவ்வாறு அவன் கூறியுள்ளான். உனக்கு அதரவாக பேசிய பண்ணாடைங்களுக்கு , மனித உரிமை பேசுபவர்களுக்கு இந்த கேள்வி? இவனை தூக்கில் போட கூடாது ஏன் வாதிடுகறிர்கள்? இன்னும் நீ உயிரோடு இருப்பதே இந்த பாழாபோன சட்டத்தினால் தாண்டா...உனக்கு
தூக்கு தண்டனை போதாது....அதுக்கும் மேலே ,,அதுக்கும் மேலே ,,,,அதுக்கும்
மேலே,,,,,,,,,,,,,,,,,,,,
செவ்வாய், 3 மார்ச், 2015
திங்கள், 2 மார்ச், 2015
அவிஜித் ராய் ! வங்கதேசத்தில் கொல்லப்பட்ட அமெரிக்க பகுத்தறிவு எழுத்தாளர் .
அமெரிக்காவை சேர்ந்த பிரபல இணைய எழுத்தாளர் வங்காளதேசத்தில் கொலை
செய்யப்பட்ட சம்பவத்திற்கு அமெரிக்க தனது கடும் கண்டனத்தை
தெரிவித்துள்ளது.தீவிரவாதத்துக்கு எதிராக
வலைப்பூவில் எழுதி வந்த அமெரிக்காவைச் சேர்ந்த அவிஜித் ராய் என்ற பிரபல
எழுத்தாளர், வங்காள தேசத்தில் நடந்த புத்தக கண்காட்சியில் பங்கேற்க சென்ற
போது மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தனர். இந்த சம்பவத்தில்
அவரது மனைவியும் படுகாயம் அடைந்தார்.
இந்த
நிலையில், எழுத்தாளர் அவிஜித் ராய் படுகொலைக்கு அமெரிக்கா தனது கடும்
கண்டனத்தை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நேற்று அமெரிக்க வெளியுறவு துறை
செய்தி தொடர்பாளர் ஜென் பெஸ்கி கூறுகையில், அவிஜத் ராயை படுகொலைக்கு
அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவிக்கிறது. இது இரக்கமற்ற கோழைத்தனமான செயல்.
மாயாண்டி பாரதி ! உண்மையும் நேர்மையும் தேசபக்தியும் நிரம்பிய ஐ.மா.பா.!
ஜெயகாந்தனோடு பல்லாண்டு 21- ஜே.கே.வும், தமிழ் சினிமாவும்! இந்த சிங்கத்தோடு பேசவே பயமாக இருக்கிறது .பாலசந்தர்
ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்’ என்கிற
புத்தகத்தில் ஜெயகாந்தனின் சினிமா அனுபவங்கள் எல்லாம் விவரமாக
எழுதப்பட்டுள்ளன. அவருக்கும் சினிமா உலகுக்கும் உள்ள உறவை, அதை விடவும்
சிறப்பாகவும் விளக்கமாகவும் நான் எழுதிவிட முடியாது.
இருப்பினும், என் தனி அனுபவங்களில் நான் அறிந்தவற்றை எழுதுவது அதிகப்பிரசங்கித்தனம் ஆகாது என்று நம்புகிறேன்.
ஜெயகாந்தன் தமிழ் சினிமாவை மிகக் கடுமையாக விமர்சித் திருக்கிறாரே தவிர,
நான் அறிந்தவரை, அது சம்பந்தமான நபர்களை எப்போதும் ஒரு பரிவுடனேயே நடத்தி
வந்துள்ளார்.
சேத்துப்பட்டு மெக்னிகல்ஸ் ரோடில் ஜெயகாந்தன் குடியிருந்தார். என்
துணைவியார் என் மகன் சிவகுமாரைப் பெற்றெடுக்கும் பொருட்டு எழும்பூர் தாய் -
சேய் நல மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டிருந்தார். அப்போதெல்லாம் என்
துன்பமான நேரங்களை எல்லாம், ஜெயகாந்தனுடன் நெருங்கி இருந்த இன்பத்திலேயே
கழித்தேன்.
நம்மால் மீண்டு வர முடியாத கட்டத்தை அடைந்து விட்டோம்: தாமரைக்கு தியாகு கடிதம்
கணவரை சேர்த்து வைக்க கோரி, கடந்த வெள்ளி பிப்ரவரி
27 ஆம் தேதி காலை 11 மணி அளவில் தர்ணா போராட்டத்தை தொடங்கிய கவிஞர்
தாமரை நான்காவது நாளாக இன்றும் தனது போராட்டத்தை தொடர்கிறார்.
இந்நிலையில் தாமரைக்கு அவரது கணவர் தியாகு எழுதியுள்ளார். அதில், நான் விலகியிருப்பதால் உனக்கும் சமரனுக்கும் எவ்வளவுத் துன்பம் என்று எனக்குப் புரியாமலில்லை. கடந்த ஓராண்டுக்கால நிகழ்வுகளை மட்டும் எண்ணிப் பார்த்தாலே போதும், நம்மால் மீண்டு வர முடியாத கட்டத்தை அடைந்து விட்டோம் என்பது விளங்கும்.இப்போது என்ன செய்வது? மற்றவர்களை அணுகிப் பேசுவதென்றால் பேசலாம், நீதிமன்றப் படியேறுவதென்றாலும் ஏறலாம். அதற்கு முன் நமக்குள் கொஞ்சம் உரையாடலாம் என்பது என் கருத்து. நேரில் பேசும் போது நீ உணர்ச்சிவயப்படுவதைத் தவிர்க்க முடியாது என்பதால் மின்னஞ்சல் வழியாகவே உரையாடலாம் என்கிறேன். அது சரிப்படாத போது மற்ற வழிகளை நாடலாம்.

உச்ச நீதிமன்றம் : சிறப்பு காரணங்கள் இருந்தால் கற்பழிப்பு குற்றவாளிக்கு குறைந்த தண்டனை வழங்கலாம்
சிறப்பான காரணங்கள் இருந்தால், கற்பழிப்பு வழக்கில் குற்றவாளிக்கு
குறைவான தண்டனை விதிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு ஒரு வழக்கில் பரபரப்பு
தீர்ப்பு வழங்கி உள்ளது.
கற்பழிப்பு வழக்கு மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ரவீந்திரா. இவர் 1994–ம் ஆண்டு, ஆகஸ்டு 24–ந் தேதி, தனது வயலில் வேலை செய்த ஒரு இளம்பெண்ணை கற்பழித்து விட்டார்.
இது தொடர்பான வழக்கை விசாரித்த செசன்சு கோர்ட்டு அவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் மத்திய பிரதேச ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். அந்த மேல் முறையீடு வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, செசன்சு கோர்ட்டின் தீர்ப்பை உறுதி செய்து, ரவீந்திராவின் மேல் முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்தது.
சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ரவீந்திரா அப்பீல் செய்தார். இந்த அப்பீல் வழக்கை நீதிபதிகள் எம்.ஒய்.இக்பால், பி.சி.கோஷ் ஆகியோர் விசாரித்தனர். கற்பழிப்புக்கு சிறப்பு காரணங்கள் என்ன அழகான கில்லாடி சொற்பதம் ? நிச்சயமா இந்த நீதிபதியோட தீர்ப்பு தவறான பாதையில் நீதி செல்வதாக சந்தேகத்தை தருகிறது

புலியூர் முருகேசன் ! ஜெயமோகன் : சாதியதிகாரம் இடைநிலைச்சாதியினரின் கைகளுக்குச் சென்றுவிட்டதையே
ஊர் திரும்பியபின்னர்தான் புலியூர் முருகேசன் அவர் எழுதிய கதைக்காகத்
தாக்கப்பட்டதை அறிந்தேன். ஒருவகை கொந்தளிப்பும் பின்னர் ஆற்றாமையும்தான்
ஏற்பட்டது. இனி சாதியவாதிகள் கிளம்பி எழுத்தாளர்களுக்கு பாடம் எடுக்கத்
தொடங்குவரகள் என எதிர்பார்க்கலாம்.
மீண்டும் ஒரே கதைதான். இலக்கியத்தில் சமூகம் பற்றி எழுதாதே. எழுதினால் மனம்புண்படுகிறது. ஆகவே ‘யார் மனதையும் புண்படுத்தாமல்’ எழுது. அது ரமணிசந்திரன் போல ‘எல்லார் மனதையும் குளிர்விப்பதாக’ இருந்தால் சாலவும் நன்று
ஒருவகையில் இதுவும் நல்லதே. தமிழ்ச்சமூகம் ‘சாதியற்ற’ முற்போக்கு சமூகமாக ஆகிவருகிறது என்ற பிரமை இங்கே சிலரால் உருவாக்கப்பட்டிருந்தது. அப்படி அல்ல, இது இன்னமும் பிகாரை விட பிற்போக்கான சாதியசமூகம் தான் என்பதும் சாதியதிகாரம் இடைநிலைச்சாதியினரின் கைகளுக்குச் சென்றுவிட்டதையே இங்கு முற்போக்காக கொண்டாடிக்கொண்டிருந்தோம் என்பதும் தெளிவாகியிருக்கிறது.

சுப்பர் சிங்கரும் உலகத்தமிழரின் அடாவடி அரசியலும்!
கடந்த சில வருடங்களாக விஜய் ரி.வியின் சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியினை தவறாது பார்த்து வருகின்றேன். இந்த வருடத்து சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியில்தான் (2014-2015) இசை தோற்றுப் போனதையிட்டு மிகவும் மனவருத்தம் அடைகின்றேன்.
மிகச்சிறந்த பாடகர்கள், இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவதிலிருந்து, முதல் மூன்று இடங்களுக்கு வருவதுவரை, மிகவும் நேர்த்தியாக திட்டமிட்டு தவிர்க்கப்பட்டுள்ளது. யசிக்காவிற்கு ஒரு கோடிக்கு மேற்பட்ட வாக்குகள் அளிக்கப்பட்டதாகவும், ஆனால் ஜெசிக்காவிற்கு முதலிடம் வழங்காமல் விஜய் ரி.வி மோசடி செய்து விட்டதாகவும் இலங்கைத்தமிழர்சார் இணையங்கள் பிரச்சாரம் செய்து வருவது இன்னமும் வேதனையை அதிகரிக்க செய்துள்ளது.
ஞாயிறு, 1 மார்ச், 2015
பிரியங்கா காந்தி காங்கிரஸ் பொதுசெயலாளர் ஆகிறார்
புதுடெல்லி: ராகுல் காந்தி விடுப்பில் சென்றதால் கடும் விமர்சனங்கள்
எழுந்துள்ள நிலையில், கட்சியின் பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தியை
நியமிக்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கட்சியை பலப்படுத்துவதற்கு அச்சாரமாக அவருக்கு பொறுப்பு வழங்க
திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி
திங்கட்கிழமையே பிரியங்கா பொதுசெயலாளராக நியமிக்கப்படுவார் என தகவல்
வெளியாகியுள்ளது.
இதனிடையே ராகுல் காந்தி எங்கிருக்கிறார் என்பதை
கண்டறிய மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ
அமர்வில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. ராகுல் காந்தியின் செயல்பாட்டை
கண்டித்து கான்பூர் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ்
கட்சியினரே போஸ்டரை ஒட்டினர்.
கேரளாவில் விழுந்த எரிகற்கள்? ஆறு மாவட்டங்களில் வானில் இருந்து நெருப்பு
கேரள மாநிலம் எர்ணாகுளம், பத்தனம்திட்டா, கண்ணணூர், கோழிக்கோடு,
கோட்டயம், ஆலப்புழா ஆகிய 6 மாவட்டங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு வானில்
தீப்பிழம்பு தோன்றியதை அந்த பகுதி பொதுமக்கள் பார்த்து உள்ளனர்.
மின்னல் வேகத்தில் ராக்கெட் போல் அந்த தீப்பிழம்பு வானில் பயணித்ததாகவும் அப்போது பயங்கர சத்தம் கேட்டதாகவும், அந்த நேரத்தில் நில அதிர்வை உணர்ந்ததாகவும் அந்த பகுதி பொதுமக்கள் பீதியுடன் தெரிவித்துள்ளனர்.
இந்த மர்ம தீப்பிழம்பு இந்த 6 மாவட்டங்களில் 50–க்கும் மேற்பட்ட இடங்களில் சிதறி விழுந்துள்ளது. இதன் காரணமாக பல இடங்களில் தென்னை மரங்கள் உள்பட பயிர்கள் தீயில் கருகி சாம்பலாகி உள்ளது.
அதிர்ஷ்டவசமாக குடியிருப்புகள் மீது இந்த தீப்பிழம்பு விழாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. ஆலப்புழா அருகே புச்சாக்கல் என்ற இடத்தில் ராஜேஷ் என்பவர் வீட்டு முன்பு தீப்பிழம்பில் இருந்து சிதறிய ஒரு இரும்பு வளையம் போன்ற ஒரு மர்ம பொருள் கிடந்ததை அவரது வீட்டினர் பார்த்துள்ளனர்.

விற்பனைக்கு வந்துள்ள இந்தியா! நிலம் கையக படுத்தும் சட்டத்தை சொல்கிறோம்!
புடவையைத்தானே இழுக்கிறேன் பெண்ணே! உன் சுந்தர தேகத்துக்கு ஆபத்து ஒன்றும் இல்லையே திரௌபதி!’ என்று அஸ்தினாபுரத்து இளவரசன் துச்சாதனன், சான்றோர் நிறைந்த சபையில் கூறினான். அதேபோலத்தான் இருக்கிறது... 'நிலங்களைத்தானே எடுக்கிறோம். உங்கள் உயிருக்கு ஆபத்து ஒன்றும் இருக்காது விவசாயிகளே’ என்று இப்போது மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசு சொல்வதும்.
100 ஆண்டு காலத்துக்கும் மேலான போராட்டத்துக்குப் பிறகு, வெள்ளைக்கார காலத்து அடிமை சட்டத்துக்குப் பதிலாக, கடந்த கால காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ஒரு புதிய சட்டம் பிறந்தது. அது, 100 சதவிகிதம் விவசாயிகளுக்கு நன்மை செய்யும் சட்டம் இல்லைதான். 'வெள்ளைக்காரனின் கொடுங்கோல் சட்டத்துக்கு, ஏதோ பரவாயில்லை’ என்றே ஏற்றுக் கொண்டனர் விவசாயிகள். ஆனால், 'சுத்தம் சுயம்பிரகாசம் நாங்கள், இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் மட்டுமே கொண்டு சொல்வோம், வெள்ளைக்காரர்களை விரட்டியது போதாது... கொள்ளைக்காரர்களையும் நாட்டைவிட்டு விரட்டுவோம், விவசாயிகளுக்கு எங்களைவிட்டால் வேறு தோழர்களே கிடையாது’ என்றெல்லாம் பசப்பு மொழிகளைக் கூறி ஆட்சியைப் பிடித்த நரேந்திர மோடி, வெள்ளைக்காரன் போட்ட சட்டத்தைவிட, மிகக்கொடுமையான ஒரு சட்டத்தை அவசர அவசரமாக கொண்டுவந்து விவசாயிகளை ஒரேயடியாக கொல்லத் துடித்தால் எப்படி?
சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசுடன் பேசி முடிவு! அருண் ஜெட்லி பேட்டி
மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த பின்னர் நிதிமந்திரி அருண்ஜெட்லி நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:–
வரும் நிதியாண்டில் வளர்ச்சி விகிதம் கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கிறோம். வசதி படைத்தவர்கள் மானியத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். ஏழைகள் மட்டுமே மானியம் பெறவேண்டும்.
சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து தமிழக அரசுடன் பேசி முடிவு எடுக்கப்படும். வரி ஏய்ப்பவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும். வரி செலுத்துவோரிடம் அதிக பணம் இருப்பதையே அரசு விரும்புகிறது. ராணுவத்தில் ஒரு பதவிக்கு ஒரே ஓய்வூதியம் என்ற திட்டத்தை செயல்படுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.dailythanthi.com

மங்கள சமரவீரா : சீன நீர்முழ்கி கப்பல்களை அனுமதிக்க மாட்டோம்!
சீனாவின் நீர் மூழ்கி கப்பல்களை எங்கள் நாட்டு கடல் எல்லைக்குள் அனுமதிக்க
மாட்டோம் என மைத்ரிபாலா சிறிசேனா தலைமையிலான இலங்கை அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சீனத் தலைநகர் பீஜிங்கில் இன்று செய்தியாளர்களுக்கு
பேட்டியளித்த வெளியுறவு துறை மந்திரி மங்கல சமரவீரா, ‘‘கடந்த செப்டம்பர்
மாதம் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இலங்கைக்கு வந்த அதேநாளில் எந்த
சூழ்நிலையில் சீன நீர்மூழ்கி கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு வந்தன?
என்பது பற்றி எனக்கு உண்மையில் எதுவும் தெரியாது.
ஆனால், எங்களது ஆட்சிக்காலத்தில் இதைப்போன்ற சம்பவங்கள் இனி நேராது என்று நாங்கள் உறுதியளிக்க முடியும்’’ என குறிப்பிட்டுள்ளார
கடந்த செப்டம்பர் மாதம் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே அந்நாள் இலங்கை அதிபர்
ராஜபக்சேவை சந்திப்பதற்காக கொழும்பு நகருக்கு வந்த அதேநாளில் ஜப்பானோடு
கடல் எல்லை தகராறில் ஈடுபட்டுவரும் சீனாவின் நீர் மூழ்கி கப்பல்களை
கொழும்பு துறைமுகம் பகுதியில் எப்படி அனுமதித்தீர்கள்? என்ற நிருபர்களின்
கேள்விக்கு பதிலளித்த மங்கல சமரவீரா இவ்வாறு கூறியுள்ளார். maalaimlar.com ஐந்நூறு அடிக்கு தோண்டி இருநூறு அடிக்கு இரும்புக் குழாயை இறக்கி
சுற்றிச் சுற்றி ஆழ்குழாய் கிணறுகளைத் தோண்டுகிறார்கள். எங்கள் வீட்டில்
ஒரு குழாய். எதிர்வீட்டில் ஒன்று அதற்கு பக்கத்துவீட்டில் ஒன்று. வெறுமனே
தோண்டுவதில்லை. தோண்டிக் கொண்டிருக்கும் போது அவ்வப்போது அழுத்தமான காற்றை
உள்ளே அனுப்புகிறார்கள். ‘புஸ்ஸ்’ என்ற பெரும் சப்தத்துடன். உடைந்த கற்கள்
மண்கட்டிகளையெல்லாம் சிதறடிக்கும் ஒரு நுட்பம் அது. ‘நான் நல்லா இருந்தா
போதும்’ என்கிற கான்செப்டும் அதில் உண்டு.
எங்கள் ஆழ்குழாயில் நூற்றியிருபது அடியிலேயே தண்ணீர் வந்துவிட்டது. மூன்று
வருடங்களுக்கு முந்தைய கதை இது. ஆனால் எதற்கும் இருக்கட்டும் என்று ஐந்நூறு
அடிக்கு தோண்டி இருநூறு அடிக்கு இரும்புக் குழாயை இறக்கியிருந்தோம்.
தரையிலிருந்து இருநூறு அடி வரைக்கும் உதிரி மண். விழுந்து குழியை மூடிவிடக்
கூடாது என்பதற்காக பாதுகாப்பு அஸ்திரம் அந்த இரும்புக் குழாய். அந்த
அஸ்திரத்தில் பக்கத்து வீட்டுக்காரர்கள் அம்பு எறிந்துவிட்டார்கள்.
எங்களுக்குப் பிறகு அவர்கள் போர்வெல் தோண்டினார்கள்.
அதிமுகவின் 38 எம்பிக்களும் ஜனாதிபதி உரை விவாதத்திற்கு ஜகா வாங்கி வாய்தா வாங்கி !
போதுமான எம்.பி.,க் கள் பலம் இருந்தும், ஜனாதிபதி உரை
மீதான விவாதத்தில், பங்கெடுத்து பேச முன்வராமல், பின்வாங்கியதன் மூலம்,
தனக்குரிய முக்கியத்துவத்தை அ.தி.மு.க., தாரைவார்த்துள்ளது. பேச வரும்படி,
திரும்ப திரும்ப அதிகாரி கள் தரப்பில் அழைப்பு விடுத்தும் கூட, நாளை வரை,
'வாய்தா' கேட்டது தெரியவந்து உள்ளது.பார்லிமென்ட்டின் மைய
மண்டபத்தில், ஜனாதிபதி உரை நடத்திய பின், அந்த உரை மீதான விவாதம், லோக்சபா,
ராஜ்யசபா என, இரு சபைகளிலும் நடக்கும்.விவாதத்தில் கலந்து கொண்டு பேசும்
எம்.பி.,க்கள், தேசிய மற்றும் மாநில அளவிலான முக்கிய பிரச்னைகள், மக்கள் நல
திட்டங்கள் என, கலந்து கட்டி குரல் கொடுத்தும், அரசியல் ரீதியாக விமர்சனம்
செய்தும் கவனத்தையும் ஈர்ப்பர். இதனாலேயே, விவாதத்தில் பங்கேற்று
உரையாற்ற, எம்.பி.,க்கள் மத்தியில் போட்டி நிலவும்.அதிமுகவில் ஒரு விததிறமையும் கொள்கையும் இல்லாமல் வெறும் காவடி எடுத்தல் அலகு குத்தல் அம்மா புராணம் பாடுதல் போன்றவைகள் செய்பவர்கள் மட்டுமே நின்று பிடிக்க முடியும். இந்த எம்பிக்கள் தப்பி தவறி ஏதாவது பேச போய் அதையாராவது சும்மா சீண்டிப்பாக்க பாராட்டினாங்கன்ன என்ன நடக்கும் கதை காலி . அதாய்ன் எல்லா எம்பிக்களும் ஜகா வாங்குதுங்கோ ?
சனி, 28 பிப்ரவரி, 2015
கவிஞர் தாமரை தர்ணா : தலைமறைவான கணவர் வீடு திரும்ப வேண்டும்; என்ன நேரிட்டாலும் தியாகுவே பொறுப்பு
எஸ்ஸார் குழும சலுகைகளை அனுபவித்த கட்காரி, ஜெய்ஸ்வால், திக்விஜய்சிங்.. அதிர வைக்கும் 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்
மத்திய அரசின் ஆவணங்கள் திருடப்பட்டு பெருநிறுவனங்களுக்கு விற்பனை
செய்யப்பட்ட விவகாரம் விஸ்வரூபமெடுத்திருக்கும் நிலையில் ஸ்டீல் மற்றும்
எரிசக்தி துறையின் முன்னணி நிறுவனமான எஸ்ஸார் குழுமத்தின் சலுகைகளை
அனுபவித்த அரசியல் தலைவர்கள் பட்டியல் வெளியாகி பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளேட்டில் இது தொடர்பாக வெளியாகியுள்ள செய்தி
விவரம்:
பொதுநலன் வழக்குகளுக்கான மையம் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தொடர
உள்ளது. எஸ்ஸார் குழுமமானது எப்படியெல்லாம் அமைச்சர்கள், அதிகாரிகள்,
பத்திரிகையாளர்களுக்கு சலுகைகள் வழங்கி வளைத்துப் போட்டது என்பதற்கு
ஆதாரங்களாக எஸ்ஸார் குழுமத்தின் இ மெயில்கள், சுற்றறிக்கைகள்
இணைக்கப்பட்டுள்ளன.
வெள்ளி, 27 பிப்ரவரி, 2015
அமெரிக்காவில் இந்திய யோகா குரு மீது 6 பெண்கள் கற்பழிப்பு
அமெரிக்காவில் வசிக்கும் இந்திய யோகா குரு மீது 6 பெண்கள் கற்பழிப்பு வழக்குகள் தொடர்ந்துள்ளனர்.
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இந்திய யோகா கல்லூரி என்ற பெயரில் யோகா
கல்லூரி நடத்தி வருபவர், யோகா குரு பிக்ரம் சவுத்ரி (வயது 69). இந்திய
அமெரிக்கரான இவரது பூர்வீகம் கொல்கத்தா. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும்
குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் யோகா குரு பிக்ரம் சவுத்ரி, தன்னிடம் யோகா கற்க வந்த பெண்களை
பாலியல் பலாத்காரம் செய்ததாக அடுக்கடுக்காக புகார்கள் எழுந்துள்ளன.
குறிப்பாக, 6 பெண்களை இந்தியா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வைத்து
கற்பழித்து விட்டதாக அமெரிக்காவில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
மத்திய அமைச்சர்களின் சொத்து விபரங்கள் அறிய தடை! மோடி அரசாங்கத்தின் சுயரூபம் அம்பலம் ,
மத்திய அமைச்சர்களின் சொத்து விவரங்களை வெளியிடும் நடைமுறைக்கு பிரதமர் அலுவலகம் தடை
மத்திய அமைச்சர்களின் சொத்து விவரங்கள் குறித்த தகவல்களை பகிரங்கமாக வெளியிடும் நடைமுறைக்கு, பிரதமர் அலுவலகம் தடை விதித்துள்ளது.
கடந்த 2010ஆம் அண்டில் இருந்து பிரதமரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மத்திய அமைச்சர்களின் சொத்து விவரங்கள், அவர்களது குடும்பத்தினரின் தொழில் விவரங்கள் உள்ளிட்டவை வெளியிடப்பட்டு வந்தன. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், மத்திய தலைமை தகவல் ஆணையரின் உத்தரவின்பேரில் இதுவெளியிடப்பட்டது.
இந்த நிலையில் இந்த மாதம் மத்தியிலிருந்து இந்த விவரங்களை வெளியிட பிரதமர் அலுவலகம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி பாஸ்வேர்டு இருந்தால்தான் இந்த விவரங்களை காண முடியும். பிரதமர் அலுவலகத்தின் இந்த முடிவுக்கு தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் பிரதமர் அலுவலகத்தை கட்டுப்படுத்தும் அதிகாரம் மத்திய தலைமை தகவல் ஆணையருக்கே உள்ளது. ஆனால் இந்த பதவி கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் காலியாக இருக்கிறது.nakkheeran.in
சாந்த சிகரம் தமன்னாவுக்கு வந்ததே கோபம் ....
சாந்தமானவர்
எத்தனை டேக் சொன்னாலும் கோபப்படாமல் நடிப்பவர் என்று தமன்னாவுக்கு
இன்டஸ்ரியில் நல்ல பேர் இருக்கிறது. ஒரு குரூப் படுத்திய பாடு அவரை
கோபத்தில் கொப்பளிக்க வைத்த சம்பவம் நடந்துள்ளது. டோலிவுட் படமொன்றின்
வெளிப்புற படப்பிடிப்பில் சமீபத்தில் பங்கேற்றார் தமன்னா. பாடல் காட்சியில்
தற்போது பெண் மற்றும் ஆண் மாடல்கள் பயன்படுத்தப்படுகின்றனர். தமன்னா
பங்கேற்ற பாடல் காட்சிக்காக மாடல்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர். அழகு
தேவதைகளாக வந்திறங்கிய மாடல்களுடன் அவர்களது பாய்பிரண்ட்கள் ச¤லரும்
வந்திருந்தனர். வெளிப்புற படப்பிடிப்பு என்றுகூட பார்க்காமல் அவர்கள் ஜோடி
ஜோடியாக நின்றுகொண்டு சேட்டையில் ஈடுபட்டனர். இதை கண்டும் காணாமல்
இருந்தார் தமன்னா.
ரயில்வே பட்ஜெட்: உடனடி தகவல்கள்
- கடற்கரை வழியாக நாகர்கோவிலுக்கு இணைப்பு வசதி செய்து தரப்படும்.
- பட்ஜெட் அளவு ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.
- 970 தரைப்பாலங்கள் மற்றும் மேம்பாலங்கள் கட்டப்படும்.
- லெவல் கிராஸிங் பாதுகாப்புக்கு 6,581 கோடி ரூபாய் ஒதுக்கீடு செயப்பட்டுள்ளது.
- மிகவும் பின் தங்கிய, தொலை தூரங்களுக்கு ரயில் இணைப்பு வழங்க திட்டம்
- ரயில் பெட்டிகளில் தீ விபத்து குறித்து எச்சரிக்கும் கருவி பொருத்தப்படும்.
- மாநிலங்களுடன் இணைந்து கூடுதல் திட்டங்கள் செயல்படுத்தப்படும்
- அனைத்து மாநிலங்களிலும் மெட்ரோ ரயில்சேவை துவங்குவது குறித்து ஆய்வு செய்யப்படும்
- தேர்வு செய்யப்பட்ட 4 பல்கலைக்கழகங்களில் ரயில்வே ஆய்வு மையம் ஏற்படுத்தப்படும்.
வியாழன், 26 பிப்ரவரி, 2015
ஜெகன் மோகன் ரெட்டியின் ரூ.225 கோடி சொத்துக்கள் முடக்கம்
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வருமான வரித்துறை மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் தற்போது ரூ.225 கோடி மதிப்புள்ள அவரது சொத்துக்களை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் முடக்கி உள்ளனர்
நிலம் கையகப்படுத்தும் சட்டம் பாஜகவின் வாட்டர் லு
முஷரப்: ஆப்கான்., தலிபானுடன் கைகோர்க்க வேண்டும், இந்தியாவை தடுக்கவேண்டும்
ஆப்கானிஸ்தானில் அமைதி ஏற்பட வேண்டும் என்று விரும்பினால், அரசு,
தலிபான்களுடன் அதிகாரத்தை பகிர்ந்துக் கொள்ள வேண்டும், இந்தியாவின்
ஆதிக்கத்திற்கு தடைசெய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் ராணுவ
ஆட்சியாளர் பர்வேஷ் முஷாரப் தெரிவித்துள்ளார்.
தேச துரோக குற்ற சாட்டில் கைதான பாகிஸ்தான் முன்னாள் சர்வாதிகாரி பர்வேஷ்
முஷாரப் தற்போது ஜாமீனில் உள்ளார். தி வால் ஸ்ட்ரீட் ஜெர்னல்
பத்திரிக்கையில் பர்வேஷ் முஷாரப்பின் பேட்டி வெளியிடப்பட்டுள்ளது. பர்வேஷ்
முஷாரப், கடந்த செப்டம்பர் மாதம் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி, அரசு
மற்றும் தலிபான் மற்றும் பிற குழுக்களுடன் சமரசம் செய்துக் கொள்ள
ஒருவாய்ப்பை வழங்கினார். அஷ்ரப் கானி சமச்சீரான மனிதர், அவர் சிறப்பான
நம்பிக்கை கொண்டிருப்பார் என்று நான் நம்புகிறேன். பாகிஸ்தான் மற்றும்
இந்தியா முற்றிலும் விலகியிருக்க வேண்டும். மறைமுகப் போரை ஊக்குவிப்பதை
தவிர்க்க வேண்டும். தன்தலையை காப்பாத்த பாகிஸ்தானை தீராத படுகுழியில் தள்ள நினைக்கிறார். இதேபோலத்தான் மறைந்த ஜியாவுல் ஹக்கும் முஜஹீதின்களை வளர்த்து விட்டு நாட்டையே குட்டி சுவராக்கினர் . தாலிபான்களால் கடத்தபட்ட இந்திய விமான சம்பவத்தில் இந்த ஆளை இன்னும் விசாரிக்காம இருக்கிறாங்க .அப்போது இவருதான் தாலிபானுக்கு ரொம்ப நெருங்கி இருந்தவர்.
700 கோவில்களில் அதிமுகவினர் ஜெயாவின் விடுதலைக்காக மரம் நட்டனர்! ஜோதிடர் குறிந்த நேரத்தில் ...
ஜெயலலிதா பிறந்த நாளை ஒட்டி, அவரது நலனுக்காக பல்வேறு நிகழ்ச்சிகளை
நடத்துவது அ.தி.மு.க.,வினரின் வழக்கம். அதில், ஆண்டுதோறும் ஏதாவது ஒரு
விஷயத்தை புதியதாக சேர்த்து வருகின்றனர்.
இந்த ஆண்டு பிறந்த நாளான நேற்று முன்தினம், குறித்து தரப்பட்ட நல்ல நேரத்தில், மாநிலம் முழுவதிலும் உள்ள, 700 சிவன் கோவில்களில் மரக்கன்றுகளை அ.தி.மு.க.,வினர் நட்டுள்ளனர். என்ன வகை மரக்கன்றுகள், எந்த நேரத்தில் அதை நட வேண்டும் என்பது உள்ளிட்ட எல்லா தகவல்களும், போயஸ் தோட்டத்தில் இருந்து, சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலர்களுக்கு, 23ம் தேதியே போய் சேர்ந்துள்ளது. அதை சத்தமின்றி ஆளுங்கட்சியினர் செய்து முடித்துள்ளனர். இந்த வைபவத்திற்காக தான் சட்டசபையை 4 நாளோடு முடிச்சிக்கிட்டாங்க போல....இந்த ரேட்டில் போனால் விரைவாக கிமுவுக்கு போய்விடலாம் . இதுதான்யா time travel ங்கிறது

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

.jpg)