ஞாயிறு, 1 மார்ச், 2015

பிரியங்கா காந்தி காங்கிரஸ் பொதுசெயலாளர் ஆகிறார்

புதுடெல்லி: ராகுல் காந்தி விடுப்பில் சென்றதால் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், கட்சியின் பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தியை நியமிக்க  காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சியை பலப்படுத்துவதற்கு அச்சாரமாக அவருக்கு பொறுப்பு வழங்க  திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி திங்கட்கிழமையே பிரியங்கா பொதுசெயலாளராக நியமிக்கப்படுவார் என தகவல்  வெளியாகியுள்ளது. இதனிடையே ராகுல் காந்தி எங்கிருக்கிறார் என்பதை கண்டறிய மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ அமர்வில் பொதுநல  வழக்கு தொடரப்பட்டுள்ளது. ராகுல் காந்தியின் செயல்பாட்டை கண்டித்து கான்பூர் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினரே போஸ்டரை ஒட்டினர்.
கட்சியின் துணைத் தலைவர் பதவியில் இருந்து அவர் விலகுவதோடு பிரியங்கா காந்தியை முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற கோஷமும் வலுத்து வருகிறது.  இதன் காரணமாக பிரியங்காவுக்கு உடனடியாக புதிய பதவி வழங்க கட்சி தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது  dinakaran.com

கருத்துகள் இல்லை: