ஞாயிறு, 1 மார்ச், 2015

அதிமுகவின் 38 எம்பிக்களும் ஜனாதிபதி உரை விவாதத்திற்கு ஜகா வாங்கி வாய்தா வாங்கி !

போதுமான எம்.பி.,க் கள் பலம் இருந்தும், ஜனாதிபதி உரை மீதான விவாதத்தில், பங்கெடுத்து பேச முன்வராமல், பின்வாங்கியதன் மூலம், தனக்குரிய முக்கியத்துவத்தை அ.தி.மு.க., தாரைவார்த்துள்ளது. பேச வரும்படி, திரும்ப திரும்ப அதிகாரி கள் தரப்பில் அழைப்பு விடுத்தும் கூட, நாளை வரை, 'வாய்தா' கேட்டது தெரியவந்து உள்ளது.பார்லிமென்ட்டின் மைய மண்டபத்தில், ஜனாதிபதி உரை நடத்திய பின், அந்த உரை மீதான விவாதம், லோக்சபா, ராஜ்யசபா என, இரு சபைகளிலும் நடக்கும்.விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் எம்.பி.,க்கள், தேசிய மற்றும் மாநில அளவிலான முக்கிய பிரச்னைகள், மக்கள் நல திட்டங்கள் என, கலந்து கட்டி குரல் கொடுத்தும், அரசியல் ரீதியாக விமர்சனம் செய்தும் கவனத்தையும் ஈர்ப்பர். இதனாலேயே, விவாதத்தில் பங்கேற்று உரையாற்ற, எம்.பி.,க்கள் மத்தியில் போட்டி நிலவும்.அதிமுகவில் ஒரு விததிறமையும் கொள்கையும் இல்லாமல் வெறும்  காவடி எடுத்தல்  அலகு குத்தல்  அம்மா புராணம் பாடுதல் போன்றவைகள் செய்பவர்கள் மட்டுமே நின்று பிடிக்க முடியும். இந்த எம்பிக்கள் தப்பி தவறி ஏதாவது  பேச போய் அதையாராவது  சும்மா சீண்டிப்பாக்க  பாராட்டினாங்கன்ன  என்ன நடக்கும் கதை காலி . அதாய்ன் எல்லா எம்பிக்களும் ஜகா வாங்குதுங்கோ ?
இந்நிலையில், ஜனாதி பதி உரையின் மீதான விவாதம், கடந்த 25ம் தேதி, ராஜ்யசபாவில் துவங்கியது. பா.ஜ.,வின் சார்பில், சந்தன்மித்ரா, புபீந்தர் யாதவ் ஆகியோர் துவக்கி வைக்க, அடுத்ததாக, 67 எம்.பி.,க்களை கொண்ட, இரண்டாவது பெரிய கட்சியான காங்., சார்பில், எதிர்க்கட்சித் தலைவரான, குலாம்நபி ஆசாத் பேசினார். இந்த வரிசையில், வெறும் 4 எம்.பி.,க்களை கொண்ட, தி.மு.க., சார்பில் திருச்சி சிவாவும் பேசினார்.முதல்நாளிலேயே, உரை நிகழ்த்த அனுமதிக்க வேண்டுமென்று, திருச்சி சிவா வலியுறுத்தியதால், அவருக்கு வாய்ப்பு தரப்பட்டது. இதை சரியாக பயன்படுத்தி, தனக்கு கிடைத்த 10 நிமிடங்களுக்குள், காவிரி பிரச்னை, இலங்கை பிரச்னை, மீனவர் பிரச்னை, தமிழ் ஆட்சிமொழி என,சகலத்தையும் பேசிவிட்டார். ஆனால், அ.தி.மு.க., வின் சார்பில், யாரும் பேசவில்லையே என்ற சந்தேகமும், குழப்பமும் சபையில் ஏற்பட்டது. அடுத்த நாளாவது, முதல் ஆளாக விவாதத்தில் அ.தி.மு.க., பங்கேற்கும் என்றால், அதுவும் நடக்கவில்லை. ஒருவழியாக அ.தி.மு.க., சார்பில், 20வது நபராக, ரபிபெர்னாட் பேசினார்.

இந்த குழப்பம் குறித்து, ராஜ்யசபாவட்டாரங்கள் கூறியதாவது: அ.தி.மு.க.,வுக்கு என, முன்னுரிமை வழங்கப்பட்டது. மொத்தம், 32 நிமிடங்களை அதிகாரப்பூர்வமாக ஒதுக்கி, பேசப் போகும் எம்.பி.,க்களின் பெயர்கள் கோரப்பட்டது.நவநீதகிருஷ்ணன், முத்துக்கருப்பன், ரபிபெர்னாட் என, மூன்று பெயர்கள் தரப்பட்டன. பேசுவதற்கு, முன்னுரிமையை வழங்கிய போது, 'இன்னும் தயாராகவில்லை; கால அவகாசம் வேண்டும்' என, கேட்கப்பட்டது.

திணறல்:

எப்போது பேச முடியுமென்று, அ.தி.மு.க., தரப்பை பலமுறை கேட்டும், தெளிவான பதில் கிடைக்காமல் போகவே, அதிகாரிகள் திணற துவங்கினர். 'என்ன பேச வேண்டுமென்பது குறித்து, கட்சித் தலைமையிடம் இருந்து தகவல் வர வேண்டும். இறுதிநாளான, 2ம் தேதி, பேசிக் கொள்வது' என, தெரிவிக்கப்படவே, அதிகாரிகள் மேலும் குழப்பமடைந்தனர்.அடுத்தநாளான, 26ம் தேதி, குட்டி குட்டி கட்சிகளின் எம்.பி.,க்கள் கூட, வரிசையாக பேசிக் கொண்டே போய்க் கொண்டிருக்க, 11 எம்.பி.,க்களைக் கொண்ட, அ.தி.மு.க.,வையும், வரிசையில் சேர்க்க வேண்டுமே என்பதற்காக, விஷயம், அ.தி.மு.க., மூத்த தலைவரும், துணை சபாநாயகருமான தம்பிதுரையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதன்பிறகே, வேறுவழியின்றி, ஓரளவு தயார் நிலையில் ஏற்கனவே இருந்த, ரபிபெர்னாட்டை பேச வைக்க ஏற்பாடாகியது. அதன்படி, ஜனாதிபதி உரையில், 6வது இடத்தில் பேசியிருக்க வேண்டிய, அ.தி.மு.க., 20வது நபராக பங்கேற்க நேர்ந்தது; மீதமுள்ள மற்ற இருவரும், 2ம் தேதி பேசலாம்.பேச வாய்ப்பு கிடைக்காதா, அப்படியே கிடைத்தாலும் போதுமான நேரம் கிடைக்குமா என, பலரும் முட்டி மோதும் நிலையில், ராஜ்யசபாவில், 11 எம்.பி.,க்களுடன், பலம் பொருந்திய நிலையில் இருந்தும், தானாகவே கிடைக்கும் முன்னுரிமையையும், பெரிய கட்சி என்ற பெருமையையும், அ.தி.மு.க., பயன்படுத்த முன்வரவில்லை.இதன்மூலம், தன் முக்கியத்துவத்தை, அந்த கட்சி தாரைவார்த்துள்ளது என்றே கூற வேண்டும்.இவ்வாறு, அந்த வட்டாரங்கள், தெரிவித்தன.

- நமது டில்லி நிருபர் - தினமலர்.com

கருத்துகள் இல்லை: