வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

ரயில்வே பட்ஜெட்: உடனடி தகவல்கள்

 • கடற்கரை வழியாக நாகர்கோவிலுக்கு இணைப்பு வசதி செய்து தரப்படும்.
 • பட்ஜெட் அளவு ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.
 • 970 தரைப்பாலங்கள் மற்றும் மேம்பாலங்கள் கட்டப்படும்.
 • லெவல் கிராஸிங் பாதுகாப்புக்கு 6,581 கோடி ரூபாய் ஒதுக்கீடு செயப்பட்டுள்ளது.
 • மிகவும் பின் தங்கிய, தொலை தூரங்களுக்கு ரயில் இணைப்பு வழங்க திட்டம்
 • ரயில் பெட்டிகளில் தீ விபத்து குறித்து எச்சரிக்கும் கருவி பொருத்தப்படும்.
 • மாநிலங்களுடன் இணைந்து கூடுதல் திட்டங்கள் செயல்படுத்தப்படும்
 • அனைத்து மாநிலங்களிலும் மெட்ரோ ரயில்சேவை துவங்குவது குறித்து ஆய்வு செய்யப்படும்
 • தேர்வு செய்யப்பட்ட 4 பல்கலைக்கழகங்களில் ரயில்வே ஆய்வு மையம் ஏற்படுத்தப்படும்.
 • நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ரயில் விபத்துக்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
 • காகிதம் இல்லா பயணச் சீட்டுகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
 • முதியோர் ஊனமுற்றோருக்கு கீழ் படுக்கை வசதி கிடைக்க முன்னுரிமை
 • 3,400 ஆளில்லா லெவல் கிராஸிங் முற்றிலும், ஒழிக்கப்படும்.
 • ரயில் நிலையத்திற்குள் நுழைந்த 5 நிமிடத்திற்குள் டிக்கெட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்
 • 9 வழித்தடங்களில் ரயில்களின் வேகம் 160 கி.மீட்டராக அதிகரிக்கப்படும்.
 • மெட்ரோ ரயில் வசதி 160 கிமீட்டர் முதல்  200 கிலோ மீட்டர் வரை விரிவுப்படுத்தப்படும்.
 • வரும் நிதியாண்டில் 6000 கி.மீ பாதைகள் மின் மயமாக்கப்படும்
 • சிறப்பான விளக்கு வசதிகளுடன் ரயில் பெட்டிகளின் உள்கட்டமைப்புகள் மாற்றியமைக்கப்படும்
 • மாநிலத்தின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் ரயில் நிலையங்கள் மாற்றியமைகப்படும்.
 • இரட்டை பாதை, மின்மயமாக்கல் உள்ளிட்ட 77 புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்.
 • 9,400 கிலோ மீட்டர் தூரத்திற்கு மீட்டர் கேஜ் பாதை அகல ரயில் பாதையாக மாற்றப்படும்.
 • முக்கிய ரயில்களின் படுக்கை வசதி எண்ணிக்கை உயரும்
 • புறநகர் பயணிகளுக்காக ஸ்டர்டிலைட் முனையம் ஏற்படுத்தப்படும்
 • சாமானியரோடு தொடர்பு கொள்ள எம்.பி. தலைமையில் குழு ஏற்படுத்தப்படும்.
 • முன்பதிவு செய்வதற்கான கால அவகாசம் 120 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது
 • மூத்த பயணிகள், கர்ப்பிணிகள், ஆகியோருக்கு கீழ் படுக்கை வசதி கிடைக்க வகை செய்யப்படும்.
 • அடுத்த 2 ஆண்டுகளில் புல்லட் ரயில் அறிமுகம் செய்யப்படும்
 • பயண நேரத்தை 20 சதவீதம் குறைக்க ரயில்வே துறை முடிவு எடுத்துள்ளது.
 • முக்கிய ரயில் நிலையங்களில் இலவச wifi வசதி செய்து தரப்படும்
 • கூட்ட நெரிசலை தவிர்க்க கூடுதல் பொதுப்பெட்டிகள் இணைக்கப்படும்.
 • ரயில் பெட்டிகளில் சி.சி.டி.வி. காமிரா பொறுத்த ஏற்பாடு செய்யப்படும். 
 • ரயில் நேரம் குறித்து எஸ்.எம்.எஸ். மூலம் பயணிகளுக்கு அறிவிக்க வசதி.
 • தொலை பேசி மூலமும் ஸ்மார்ட் போன் மூலமும் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகள் விற்பனை செய்ய திட்டம்
 • 109 ரயில்களில் மின்னணு முறையில் உணவு வழங்கும் வசதி ஏற்படுத்தப்படும்.
 • மார்ச் 1ம் தேதி முதல் குறைகளை தீர்க்க மொபைல் அப்ளிகேஷன் அறிமுகப்படுத்தப்படும்
 • எஸ்.எம்.எஸ் மூலம் குறைகளை பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்படும்
 • 24 மணி நேரமும் செயல்படும் குறைதீர் மையங்கள் அமைக்கப்படும் இதற்கான உதவி எண் 138.
 • 650 ரயில் நிலையங்களில் புதிய கழிப்பறைகள் கட்டப்படும். 17 ஆயிரம் கழிப்பறைகள் சீரமைக்கப்படும்.
 • ரயில் நிலையங்களில் தூயமைக்கென தனித்துறை அமைக்கப்படும்
 • முன்னுரிமை அளிக்கப்படவேண்டிய 11 அம்சங்கள் பின்பற்றப்படும்
 • எதிர்பார்த்ததை விட நிதி அதிகரித்துள்ளது.
 • ரயில்வே துறையில் 8.5 கோடி முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
 • பயணிகள் கட்டணம் உயர்த்தப்படாது.
 • நிதித்தேவையில் தன்னிறைவு பெற்றதாக ரயில்வே துறை மாற்றம் பெறும்
 • அடுத்த 5 ஆண்டுகளில் 4 அம்ச இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
 • உள் கட்டமைப்பை நவீனமயமாக்குவது பாதுகாப்பு இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
 • தூய்மை இந்தியா, இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்துக்கு ரயில்வேயில் முன்னுரிமை கொடுக்கப்படும்
 • ரயில்வே தரத்தை மேம்படுத்த 20 ஆயிரம் ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன.
 • பாதுகாப்பான பயணத்துக்கு ரயில்வே உறுதியளிக்கும்
 • சரக்கு ரயில் போக்குவரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்
 • ரயில்வே பாதைகள் அவற்றின் திறனையும் தாண்டி பயன்படுத்தப் படுகின்றன
 • ரயில்வே துறையில் செய்யப்படும் முதலீடுகள் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுக்கும்
 • ரயில்வேயில் அதிக முதலீட்டால் வேலை வாய்ப்பு பெருகும்
 • இந்திய பொருளாதாரத்தில் ரயில்வே துறை முக்கியப் பங்காற்றுகிறது: சுரேஷ்பிரபு
 • ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்து அமைச்சர் சுரேஷ் பிரபு உரையாற்றுகிறார்
 • எதிர்கட்சிகள் குறித்து கூறிய கருத்துக்கு வெங்கைய நாயுடு நாடாளுமன்றத்தில் விளக்கம்
 • நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் பகல் 11.30மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது
 • பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதல் படியே ரயில்வே துறையில் வளர்ச்சி திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: சுரேஷ் பிரபு
 • ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்ய நாடாளு மன்றத்துகு புறப்படார் அமைச்சர் சுரேஷ் பிரபு
 • ரயில்வே பட்ஜெட் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும்: அமைச்சர் சுரேஷ் பிரபு தகவல்
 • ரயில்வே பட்ஜெட் இன்று பகல் 12 மணிக்கு தாக்கல் செய்யப்பட உள்ளதாக ரயில்வே துறை இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.
   
 • சாதாரண மனிதர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக ரயில்வே பட்ஜெட் இருக்கும்: மனோஜ் சின்ஹா dinamani.com

கருத்துகள் இல்லை: