வாட்ஸ் அப் போன்றே வாட்ஸ் அப் பிளஸ் ( WhatsApp+) என்ற
அப்ளிகேஷனை ஆன்ட்ராய்ட் ரக போன் வைத்திருப்பவர்கள் சிலர் பயன்படுத்தி
தங்களது நண்பர்கள் மற்றும் உறவு வட்டாரங்களுக்கு தகவல், புகைப்படம், வீடியோ
உள்ளிட்டவற்றை அனுப்பி பகிர்ந்துகொண்டுள்ளனர். ஆனால் இவர்களில் பலர்
வாட்ஸ் அப் பிளஸ் அப்ளிகேஷனும், வாட்ஸ் அப் அப்ளிகேஷனும் வெவ்வேறு என்ற
விவரம் தெரியவில்லை.
புதன், 21 ஜனவரி, 2015
திடீர் தடை? வாட்ஸ் அப் பிளஸ் அப்ளிகேஷனும், வாட்ஸ் அப் அப்ளிகேஷனும் வெவ்வேறு.....
ஏர் ஏசியா விமானத்தின் எச்சரிக்கை அலாரம் ஒலி கருப்பு பெட்டியில் பதிவாகி உள்ளது
விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானம் ஜாவா கடலில் விழுவதற்கு முன் எச்சரிக்கை அலாரம் ஒலித்தது கருப்பு பெட்டியில் பதிவாகி உள்ளது.
இந்தோனேசியாவின் சுரபயா நகரிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஏர் ஏசியா
விமானம் கடந்த மாதம் 28–ம் தேதி 162 பயணிகளுடன் ஜாவா கடல் பகுதியில் உள்ள
பங்காலன் பன் என்ற இடத்தில் விழுந்தது. தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு
கடலுக்குள் கிடந்த விமானத்தின் கருப்பு பெட்டி சமீபத்தில் மீட்கப்பட்டது.
அதில் உள்ள பதிவுகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கருப்பு பெட்டியில் இரைச்சலுடன் பல அலாரங்கள்
பதிவாகியிருப்பதாகவும், அதில் ஒன்று விமானம் கட்டுப்பாட்டை இழந்து செல்வதை
குறிக்கும் வகையில் இருப்பதாகவும் விசாரணை அதிகாரி ஒருவர்
தெரிவித்துள்ளார்.இந்த எச்சரிக்கை அலாரத்தில், பைலட்டும் துணை பைலட்டும் விமானத்தை
நிலைப்படுத்தி விபத்தை தவிர்க்க கடுமையாக முயற்சி செய்வது கேட்பதாகவும்,
இரைச்சல் காரணமாக அவர்கள் பேசுவது சரியாக பதிவாகவில்லை என்றும் அந்த
அதிகாரி கூறியுள்ளார்.
விமானம் கடலில் விழுவதற்கு முன், மோசமான வானிலை காரணமாக வழக்கத்திற்கு
மாறான உயரத்தில் பறந்ததாக இந்தோனேசிய போக்குவரத்து துறை மந்திரி
கூறியதையடுத்து இந்த தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. maalaimalar.com
சுனந்தா உயிரைகாக்க போராடினாரா? சுனந்தா கொலை வழக்கு கிடைக்கும் 'திடுக்' தகவல்கள்!
டெல்லி: சுனந்தா கொலையை மூடி மறைக்க முயற்சி நடந்துள்ளதை இந்த வழக்கை
விசாரித்து வரும் சிறப்பு குழு கண்டுபிடித்துள்ளது. சுனந்தா இறந்த பிறகு
அவரது அறையில் இருந்த அவருடைய பொருட்கள் சில மாயமாகியுள்ளன. யாரோ
சாட்சியங்களை அழிக்க முயற்சி செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சுனந்தாவின் காலணிகள், உடைகள் ஆகியவை
மாயமாகியுள்ளன. ஒருவர் மர்மமான முறையில் இறந்த இடத்தில் வழக்கமாக இது
போன்று நடக்காது என்று விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மூடி மறைக்க முயற்சி:
இது கொலை தான் என்பதற்கான ஆதாரங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. அவர்
தற்கொலை செய்திருந்தால் அவரது அறையில் இருந்த பொருட்களை ஏன் அகற்றியிருக்க
வேண்டும் என்று அந்த விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.
சுனந்தா இறந்து அது வெளியே தெரியும் முன்பு அவரது அறைக்கு ஒன்றுக்கும்
மேற்பட்டவர்கள் வந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அறையில் கண்ணாடி
உடைந்து கிடந்துள்ளது, அவரது உடைகள், காலணி ஆகியவை மாயமாகியுள்ளது.
கண்ணாடி உடைந்து கிடந்ததை பார்க்கையில் அறையில் சண்டை நடந்திருக்கலாம்
அல்லது கொலையை மறைக்க முயல்கையில் கண்ணாடி உடைந்திருக்கலாம் என்று அதிகாரி
தெரிவித்துள்ளார். சுனந்தா தனது உயிரை காக்க போராடியிருக்கக்கூடும் என்று
கூறப்படுகிறது.
ராமஜெயம் சயனைட் விஷம் கொடுத்து கொல்லப்பட்டார் ! விஷம் கொடுத்த பின்புதான் தாக்கப்பட்டார்?
கட்சிக்காரர்களுக்கு பிரச்னை என்றால், அடுத்த நிமிடம்
போன் பறக்கும். உடனுக்குடன் சரிசெய்வார். வருடா வருடம் பள்ளி அட்மிஷன்
நேரங்களில், இவரது தில்லை நகர் ஆபீஸுக்கு தங்கள் குழந்தைகளுக்கு பிரபல
பள்ளிகளில் சீட் வேண்டும் என கியூவில் நிற்பார்கள். தங்கள் ஊர்களில் கோயில்
கட்ட பணம் வேண்டும் என பலர் வரிசையில் நிற்பார்கள். அவற்றையெல்ல்லாம்
சட்டென முடிக்கும் ராமஜெயத்தின் பாணியே வித்தியாசமானது.;
இது ராமஜெயத்தின் ஒரு முகம். அவருக்கு மற்றொரு முகமும் உண்டு. வெட்டு
ஒண்ணு, துண்டு ரெண்டு என பேசும் கோபக்காரர். திருச்சி ஏரியாவில்
சர்ச்சைக்குரிய நிலங்கள் விற்பனைக்கு வந்தால், அதில் அங்கு அரங்கேறும்
பிசினஸ் பிரச்னை, நிலம் கொடுக்கல் வாங்கல் என அனைத்திலும் ராமஜெயம் பெயர்
அடிப்படாமல் இருக்காது. இதையெல்லாம் வைத்துதான் ஒரு கட்டத்தில்,
திருச்சியையே இவர் வளைத்துப் போட்டுவிட்டதாகவே சாதாரணமானவர்களைக்கூட பேச
வைத்தது.
டெல்லி சட்டசபை தேர்தல்: கவர்ச்சி புயல்களின் பின்னால் சென்ற பாஜக!
புதுடெல்லி: டெல்லி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சிகள்
அனைத்தும் வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நிலையில் பிரசாரம் சூடுபிடிக்க
தொடங்கியுள்ளது.டெல்லியில் 2013 டிசம்பரில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில்
யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆம் ஆத்மி கட்சி காங்கிரசுடன்
இணைந்து அமைந்த ஆட்சி 49 நாட்களில் முடிவுக்கு வந்தது. கெஜ்ரிவால் பதவி
விலகியதை அடுத்து அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. வருகிற
பிப்ரவரி 7ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை தவற விட்ட
ஆட்சியை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி வழக்கம்
போல் தனது ஸ்டைலில் தெருவில் இறங்கி மக்களிடம் பிரசாரம் செய்து வருகிறது.
பெரும்பான்மை பெற ஓரிரு இடங்களை தவற விட்ட பாஜ இம்முறை நட்சத்திர
வேட்பாளர்களையும், அமைச்சர்களையும், எம்பிக்களையும் களமிறக்கி சூறாவளி
பிரசாரம் செய்து வருகிறது.
கிரண் Bedi நழுவி விட்டார்? கெஜ்ரிவாலின் நேருக்கு நேர் சவாலை ஏற்க பாஜக தயக்கம்?
அடுத்த மாதம் 7ல், நடைபெற உள்ள டில்லி சட்டசபைத் தேர்தலில், பா.ஜ.,
முதல்வர் வேட்பாளராக, நாட்டின் முதல் பெண், ஐ.பி.எஸ்., அதிகாரி கிரண் பேடி,
65, அறிவிக்கப்பட்டு உள்ளார். ஆட்சியை மீண்டும் கைப்பற்றி விடலாம் என
எண்ணிய, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, 46, இதனால், மிகுந்த
பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. 'இரும்பு மனுஷிக்கும், ஓடிப்போன நபருக்கும்
இடையிலான போட்டி இது' என, பா.ஜ., வர்ணனை செய்துள்ளதை அடுத்து, தேர்தல்
பிரசாரம் கடும் சூட்டையும் கிளப்பியுள்ளது.சமூக ஆர்வலர் அன்னா
ஹசாரேயின், 'ஊழலுக்கு எதிரான இந்தியா' அமைப்பில் முக்கிய பங்காற்றியவர்கள்
தான், கிரண் பேடியும், கெஜ்ரிவாலும். இப்போது, இருவரும், அரசியலில்
நேருக்கு நேர் எதிரிகளாக மாறியுள்ளனர்.
இருவருக்கும் இடையே, நேற்று நடைபெற்ற அறிக்கை விவாதம்:
கெஜ்ரிவால்: பொது மேடையில், என்னுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த தயாரா? ஜாதி, மதத்தை பார்த்து தான் மக்கள், ஓட்டளிக்கின்றனர். முக்கிய விவகாரங்கள் பற்றி, அவர்கள் யோசிப்பதில்லை. வாருங்கள், 12 மணி நேரம் வேண்டுமானாலும் விவாதம் நடத்தலாம்.
கிரண் பேடி: நான், தெரு விவாதத்திற்கு தயாரில்லை; வேண்டுமென்றால், சட்டசபையில் சந்திப்போம். நேற்று வரை நேர்மை சிங்கம் வேஷம் போட்ட கிரண் பேடி எப்படியாவது குறுக்கு வழியில் முதல்வராகலாம் என்று நினைப்பது கேவலம்
இருவருக்கும் இடையே, நேற்று நடைபெற்ற அறிக்கை விவாதம்:
கெஜ்ரிவால்: பொது மேடையில், என்னுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த தயாரா? ஜாதி, மதத்தை பார்த்து தான் மக்கள், ஓட்டளிக்கின்றனர். முக்கிய விவகாரங்கள் பற்றி, அவர்கள் யோசிப்பதில்லை. வாருங்கள், 12 மணி நேரம் வேண்டுமானாலும் விவாதம் நடத்தலாம்.
கிரண் பேடி: நான், தெரு விவாதத்திற்கு தயாரில்லை; வேண்டுமென்றால், சட்டசபையில் சந்திப்போம். நேற்று வரை நேர்மை சிங்கம் வேஷம் போட்ட கிரண் பேடி எப்படியாவது குறுக்கு வழியில் முதல்வராகலாம் என்று நினைப்பது கேவலம்
செவ்வாய், 20 ஜனவரி, 2015
ஓட்டுக்கு 2,000 ரூபாயாம்...களைகட்டும் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்!
சீனாவின் அதிர்ச்சி ? அருணாச்சல் பிரதேஷ் இந்தியாவின் ஒரு பகுதியாமே?
கடந்த வாரம் இந்தியாவுக்கு வந்த ஜப்பான் வெளியுறவுத் துறை அமைச்சர் புமியோ கிஷிடா, இந்திய வடகிழக்கு மாநிலங்களில் உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்ய ஜப்பான் தயாராக இருப்பதாகவும், ஆனால், அருணாச்சலப் பிரதேசத்தில் மட்டும் முதலீடு செய்ய முடியாது என்றும் கூறியது.
மேலும், அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒரு பகுதியாகவே ஜப்பான் பார்க்கிறது. எனினும், அப்பகுதியில் முதலீடு செய்யும் திட்டம் இல்லை என்று கூறியிருந்தார்.
மதிமாறன் : அடுத்து திமுக ஆட்சி அமைக்கும்!
திட்டு வரும் கண்ட னங்கள் வரும்.. விருது வந்திருக்கிறது
‘எழுத்துப் போராளிக்கு பெரியார்
விருது!’ என்று தலைப்பிட்டு ‘விடுதலை’ என்னை கவுரவித்திருக்கிறது. நன்றி
:ஆசிரியருக்கும் – கவிஞருக்கும்.
தொடர்ந்து எழுத்தாளர் வே. மதிமாறனுக்கு,
தமிழர் தலைவர் பெரியார் விருது வழங்கி சிறப்பித்தார். முன்னதாக
அவரைப்பற்றிய ஒளிப்படக் காட்சி திரையிடப்பட்டது.
தொடர்ந்து வே. மதிமாறன் ஏற்புரையாற்றினார்.
அவர் தனது உரையில், தான் எழுத்தாளர் ஆவதற்கு முக்கியக் காரணம் பேராசிரியர்
சுப. வீரபாண்டியன்தான் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
பிறகு, பெரியார் மாதிரி பேசினால் திட்டு
வரும். கண்ட னங்கள் வரும். இப்பொழுதுதான் விருது வந்திருக்கிறது என்று
பலத்த கைதட்டல்களுக்கிடையில் கூறிவிட்டு, பெரியாரை எதிர்க்கின்றவர்களை
நன்றாக விமரிசனம் செய்.உனக்குப் பின்னால் நாங்கள் இருக்கின்றோம் என்று
கூறுவதாகத்தான் இந்த விருதை எனக்கு அளித்ததாக தான் பார்க்கிறேன் என்று
சொல்லிவிட்டு,
பூந்தமல்லி நீதிமன்ற வளாகத்தில் கைதி வெட்டி படுகொலை ! பட்டப்பகலில் நீதிமன்ற வளாகத்திற்குள் !
கடந்த
2010ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வரதன் என்பவரை, வேலூர்
சிறையில் இருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 2 மணி அளவில் பூந்தமல்லி
ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்துச் சென்றனர்.அப்போது,
பூந்தமல்லி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மறைந்திருந்த மர்ம நபர்கள் அவரை
அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். பட்டப்பகலில் நீதிமன்றத்தில் நடந்த இந்த
சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.கொலை சம்பவம் நடந்த பூந்தமல்லி ஒருங்கிணைந்த நீதிமன்ற பகுதியை அம்பத்தூர் துணை காவல்துறை ஆணையர் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார்.படுகொலை
செய்யப்பட்ட வரதன் மீது இரண்டு கொலை வழக்குகள், ஒரு கொலை முயற்சி வழக்கும்
இருந்துள்ளது. வரதன் நெசப்பாக்கம், பிள்ளையார் கோவில் தெருவைச்
சேர்ந்தவர். இந்த கொலை சம்பவம் பழிவாங்கும் செயலாக இருக்கலாம் என்ற
சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த
கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் இரண்டு பேர் என்றும், தப்பியோடிய அவர்களை
பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.nakkheeran.in
Chennai சுரங்கம் தோண்டும் பணியால் பூமிக்குள் இறங்கிய வீடு!
சென்னை,ஜன.19
(டி.என்.எஸ்) மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை தோண்டும் பணியால், சென்னையில்
இரண்டு அடுக்கு வீடு ஒன்றை பூமியில் இறங்கிய சம்பவம் பொதுமக்களை பெரும்
அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில்
சுரங்கப்பாதை தோண்டும் பணி வேகமாக நடந்து வருகிறது. திருமங்கலம் ஷெனாய்
நகர் இடையே 5 கிலோ மீட்டர் தூர சுரங்கப்பாதை தோண்டும் பணிகள் சமீபத்தில்
முடிவடைந்தது. இதில் தண்டவாளம் அமைக்கும்பணி நடந்து வருகிறது.
அவசரகால
வழி அமைத்தல் மின்சார உபகரணங்கள் பொருத்துதல் போன்ற வேலைகள் நேற்று இரவு
நடந்தது. ஏராளமான மெட்ரோ ரயில் ஊழியர்கள் இதில் ஈடுபட்டிருந்தனர்.
இரவு
11.30 மணியளவில் ஷெனாய்நகர் பில்லா அவென்யூ சாலையும், 8–வது குறுக்கு
தெருவும் சந்திக்கும் இடத்தில் உள்ள ஒரு கட்டிடம் திடீர் என்று 2 அடி
மண்ணுக்குள் இறங்கியது. இதனால் அருகில் உள்ள வீடுகளும் அதிர்ந்தன.
டெல்லி மாநில BJP முதல்வர் வேட்பாளர் கிரண்பேடி:
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக முதல் அமைச்சர் வேட்பாளராக கிரண்பேடி போட்டியிடுவார் என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா அறிவித்துள்ளார். கிருஷ்ணா நகர் தொகுதியில் கிரண் பேடி போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். மேலும், டெல்லி சட்டமன்றத் தேர்தலை பாஜக கிரண்பேடி தலைமையில் சந்திக்கும். டெல்லியில் நடந்த பாஜக தேர்தல் குழு கூட்டத்தில் ஒருமனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதில் டெல்லி பாஜக தலைவர்களிடையே கருத்து வேறுபாடு எதுவும் இல்லை. நடைபெற உள்ள டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்றார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கிரண்பேடி, டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ.க., முதல்வர் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி என தெரிவித்தார்.nakkheeran.in
ஸ்டாலின்: சகல ஊழல் குற்றச்சாட்டுக்களில் இருந்தும் ஜெயாவை விடுவிக்க பாஜக முயல்கிறது?
ஜெயலலிதாவை மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி சந்தித்ததற்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளதாவது,
ஜனநாயக நாட்டின் சரித்திரத்தில் முதல் முறையாக மத்திய நிதியமைச்சர் ஒருவர் ஊழல வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு, சிறைத் தண்டனை பெற்றவரின் வீட்டிற்கே சென்று அவரை சந்தித்திருக்கிறார்.
இதை அவமானம் என்று அழைப்பது நடந்த நிகழ்வை மிகச் சாராரணமாக எடுத்துக்கொள்வது போலாகும். ஆனால், இதன்பிறகும் பாஜக தலைமை தாங்கும் மத்திய அரசுக்கு ஏதாவது நேர்மை மிச்சமிருக்கிறதா?
ஆட்சிக்கு வந்தால் தூய்மையான, ஊழலற்ற அரசைக் கொடுப்போம் என்று தேர்தல் நேரத்தில் இந்திய மக்களுக்கு பாஜகவினர் வாக்குறுதி கொடுத்தார்களே? அது இப்படி செயல்படுவதற்குத்தானா? இனி அடுத்தது என்ன செய்யப் போகிறார்கள்?
கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஊழல் வழக்கு மேல்முறையீட்டிலிருந்து ஜெயலலிதாவை விடுவிக்க ஒட்டுமொத்த மத்திய அரசும் செயல்படப்போகிறதா? இந்தக் கேள்விகளுக்கான பதில் தான் இப்போது தேவை. இவ்வாறு கூறியுள்ளார் nakkheeran.in
திங்கள், 19 ஜனவரி, 2015
"ஐ" திருநங்கைகளை கேவலமாக சித்தரித்த டைரக்டர் ஷங்கர்! திருநங்கைகள் ஆவேசம்! கமிஷனர் அலுவலகம் முன்பாக முற்றுகை !
சென்னை: ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த 'ஐ' படம் பொங்கலன்று
வெளியானது. இந்த படத்தில் திருநங்கைகளை இழிவுபடுத்தும் விதத்தில்
காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதை நீக்கும்படியும் திருநங்கைகள்
கோரிக்கை விடுத்திருந்தனர். காட்சிகளை நீக்காமல் தொடர்ந்து படம் வெளியாகி
ஓடுவதால் இன்று காலை திரைப்பட தணிக்கைதுறை (சென்சார் போர்டு) அலுவலகத்தை
முற்றுகையிட போவதாக அறிவித்திருந்தனர். இதையொட்டி சென்னை சாஸ்திரி பவன்
அலுவலகத்தில் உள்ள சென்சார் அலுவலகம் அருகே காலை முதலே ஏராளமான போலீசார்
குவிக்கப்பட்டிருந்தனர். காலையில் அங்கு திருநங்கைகள் வந்தனர். 'ஐ'
படத்தில் திருநங்கைகளை இழிவுபடுத்தும் காட்சிகளை நீக்கும்படி கோஷமிட்டனர்.
பின்னர் கமிஷனர் அலுவலகம் புறப்பட்டு சென்றனர். கமிஷனர் அலுவலகத்தில்
15க்கும் மேற்பட்ட திருநங்கைகள் மற்றும் தோழி அமைப்பினர் கூட்டாக
கமிஷனரிடம் கடிதம் ஒன்றை அளித்தனர்.
EVKS இளங்கோவன்:ஜெயலலிதா அருண் ஜெட்லியை சந்தித்தது வெட்ககேடானது! நீதியை கேலியாக்கும் கள்ள உறவு .....
தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுடன் மத்திய நிதியமைச்சர்
அருண் ஜெட்லி சந்தித்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் கடும் சர்ச்சைகளை
எழுப்பியுள்ளது. ஊழல் வழக்கில் 4 ஆண்டுகாலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு
முதலமைச்சர் பதவியிழந்து விடுதலையாகியுள்ள ஜெயலலிதாவை அருண் ஜெட்லி
சந்தித்ததன் மூலம் அரசியல் தார்மீக நெறிமுறைகளை காலில் போட்டு
மிதித்திருக்கிறார். ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவரை நிதியமைச்சர்
பொறுப்பிலே இருக்கிற ஒருவர் சந்திக்கலாமா? இதன் மூலம் ஊழல் எதிர்ப்பு வேடம்
போட்ட பா.ஜ.க.வின் முகமூடி கிழிந்திருக்கிறது.கடந்த
நாடாளுமன்றத்தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியை கடுமையாக விமர்சித்த
ஜெயலலிதாவுக்கு தமிழக மக்கள் 37 இடங்களில் வெற்றி பெறச்செய்தனர். இத்தகைய
தீர்ப்பை பெற்ற ஜெயலலிதா சமீபகாலமாக மத்திய அரசுக்கு எதிராக கண்டனங்கள்
எழுப்புவதை தவிர்த்து வருவதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாகவே கருத
வேண்டியுள்ளது.
மார்க்சிஸ்ட் கட்சி செயலாளர் பதவியில் இருந்து பிரகாஷ் காரத் அதிரடி நீக்கம்?
ஹைதராபாத்: லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கட்சி
தொடர்ந்து தோல்வியைத் தழுவி வரும் நிலையில் அக்கட்சியின் தேசியப் பொதுச்
செயலர் பிரகாஷ்காரத் அப்பொறுப்பில் இருந்து நீக்கப்படக் கூடும் என்று
டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக பிரகாஷ்காரத்
இருந்து வருகிறார். அவர் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த
சில ஆண்டுகளாக சந்தித்து வரும் தேர்தல்களில் அடுத்தடுத்து தோல்வியை தழுவி
வருகிறது.
மேற்கு வங்க மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அசைக்க முடியாத ஆளும்
கட்சியாக இருந்தது. தற்போது அந்த கட்சி மம்தா பானர்ஜியின் திரிணாமுல்
காங்கிரசிடம் தோற்று எதிர்க்கட்சி வரிசைக்கு தள்ளப்பட்டு விட்டது.
கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலிலும் பல தொகுதிகளை மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் பறி கொடுத்தது. இந்த தொடர் தோல்வி பிரகாஷ்காரத் மீது கடும்
அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதாவின் அகில இந்திய ரசிகர் பிரகாஷ் கரத் போனாலும் தமிழக ரசிகர் பாண்டியன் இருப்பாரே?
ஊழல் குற்றவாளியை மத்திய நிதியமைச்சர் வீடு தேடிப் போய்ச் சந்தித்தது... ஸ்டாலின் கடும் கண்டனம்
சென்னை: ஜனநாயக நாட்டின் சரித்திரத்தில் முதல் முறையாக மத்திய நிதி
அமைச்சர் ஒருவர் ஊழல் வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு,
சிறைத் தண்டனை பெற்றவரின் வீட்டிற்கே சென்று அவரைச் சந்தித்துள்ளார். இதை
அவமானம் என்று அழைப்பது நடந்த நிகழ்வை மிகச் சாதாரணமாக எடுத்துக் கொள்வது
போலாகும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.
ஜெயலலிதாவை, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அவரது போயஸ் தோட்ட
வீட்டுக்குப் போய் சந்தித்துப் பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இதுகுறித்து திமுக தலைவர் கருணாநிதி கடும் விமர்சனம் செய்து அறிக்கை
வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது பேஸ்புக் பக்கத்தில்
போட்டுள்ள கருத்து:
ஜனநாயக நாட்டின் சரித்திரத்தில் முதல் முறையாக மத்திய நிதி அமைச்சர் ஒருவர்
ஊழல் வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு, சிறைத் தண்டனை
பெற்றவரின் வீட்டிற்கே சென்று அவரைச் சந்தித்துள்ளார்.
டெல்லியில் இலங்கை வெளியுறவு மந்திரி மங்கள சமரவீராவும், சுஷ்மா சுவராஜும் ஆலோசனை.
புதுடெல்லி,
தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புவது தொடர்பாக, டெல்லியில் நேற்று இலங்கை வெளியுறவு மந்திரி மங்கள சமரவீராவும், சுஷ்மா சுவராஜும் ஆலோசனை நடத்தினார்கள்.
இந்தியாவுடன் நல்லுறவு இலங்கையில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சே பெரும் தோல்வியை சந்தித்தார். எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக போட்டியிட்ட சிறிசேனா வெற்றி பெற்றார். அங்கு அவரது தலைமையில் புதிய அரசு பதவி ஏற்று உள்ளது.
அண்டை நாடான இலங்கைக்கு இந்தியா பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. போரினால் பாதிக்கப்பட்ட பகுதியில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்வதில் இந்தியாவின் பங்களிப்பு முக்கியமானது ஆகும். எனவே பல்வேறு அம்சங்களையும் கருத்தில் கொண்டு, இந்தியாவுடனான உறவை பலப்படுத்துவதில், சிறிசேனா அரசு அதிக ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது. முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணமாக அதிபர் சிறிசேனா விரைவில் இந்தியா வர இருக்கிறார்.
தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புவது தொடர்பாக, டெல்லியில் நேற்று இலங்கை வெளியுறவு மந்திரி மங்கள சமரவீராவும், சுஷ்மா சுவராஜும் ஆலோசனை நடத்தினார்கள்.
இந்தியாவுடன் நல்லுறவு இலங்கையில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சே பெரும் தோல்வியை சந்தித்தார். எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக போட்டியிட்ட சிறிசேனா வெற்றி பெற்றார். அங்கு அவரது தலைமையில் புதிய அரசு பதவி ஏற்று உள்ளது.
அண்டை நாடான இலங்கைக்கு இந்தியா பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. போரினால் பாதிக்கப்பட்ட பகுதியில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்வதில் இந்தியாவின் பங்களிப்பு முக்கியமானது ஆகும். எனவே பல்வேறு அம்சங்களையும் கருத்தில் கொண்டு, இந்தியாவுடனான உறவை பலப்படுத்துவதில், சிறிசேனா அரசு அதிக ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது. முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணமாக அதிபர் சிறிசேனா விரைவில் இந்தியா வர இருக்கிறார்.
திபெத் அகதிகளுக்கு குடியுரிமை!
புதுடில்லி:இந்தியாவில் வாழும் திபெத் அகதிகள், வரும் டில்லி சட்டசபை
தேர்தலில் ஓட்டளிக்க வசதியாக, வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்
என, தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது. வாக்காளர் அடையாள அட்டை
பெறுவதன் மூலம் திபெத் அகதிகள், இந்திய குடியுரிமை பெறுவார்கள். ஆனால்,
இதற்கு திபெத் அகதிகள் இடையே பரவலாக எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து, திபெத் அகதிகள் குழுவின் தேசிய அமைப்பாளர் என்.கே. திரிக்கா
''சீன ஆக்கிரமிப்பில் இருந்து திபெத் விடுதலையாகும் நாளுக்காக, அகதிகளாக இங்கு வாழ்கிறோம். இந்திய குடியுரிமை பெற்றால், இந்த அடிப்படை நோக்கமே பாழாகிவிடும்'' என்றார்.
இதுகுறித்து, திபெத் அகதிகள் குழுவின் தேசிய அமைப்பாளர் என்.கே. திரிக்கா
''சீன ஆக்கிரமிப்பில் இருந்து திபெத் விடுதலையாகும் நாளுக்காக, அகதிகளாக இங்கு வாழ்கிறோம். இந்திய குடியுரிமை பெற்றால், இந்த அடிப்படை நோக்கமே பாழாகிவிடும்'' என்றார்.
ஞாயிறு, 18 ஜனவரி, 2015
ஸ்ரீரங்கம் ! கட்சிகளுக்கு 91 வகையான கட்டுப்பாடுகள் ! 144 போட்டு ஜெயிச்சவிங்க 91 போட்டு ஜெயிக்க மாட்டாகளா?
ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை
தொடங்குகிறது. தேர்தலையொட்டி அமைச்சர்கள், அரசியல் கட்சிகளுக்கான 91 வகை
கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. மேலும், சுயேச்சை
வேட்பாளர்களுக்கான 84 சின்னங்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு பிப்ரவரி
13-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்தத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் நாளை (19-ம் தேதி) தொடங்குகிறது.
27-ம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி என்பதால்,
ஸ்ரீரங்கம் நட்சத்திர அந்தஸ்து கொண்ட தொகுதியாக கருதப்படுகிறது. இதனால்,
தேர்தல் நடைமுறைகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. திமுக, அதிமுக
மட்டுமே இதுவரை வேட்பாளர்களை அறிவித்துள்ளன. அதிமுக சார்பில் திருச்சி
மாநகராட்சி கவுன்சிலராக இருந்த எஸ்.வளர்மதி, திமுக சார்பில் என்.ஆனந்த்
ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்து’ என்.ராம்: படைப்பாற்றல் சுதந்திரம், கருத்துரிமை ஆகியவற்றை காத்துக்கொள்ள போராடவேண்டும்
‘இந்து’ என்.ராம்:
அமைதி ஒப்பந்தத்தில் பெருமாள்முருகன் கையெழுத்து போட்டதாலேயே அவரது
எழுத்து இறந்துவிட்டதாக அர்த்தமல்ல. அரசியலமைப்புச் சட்ட வரையறைக்கு
உட்பட்டு படைப்பாற்றல் சுதந்திரம், கருத்துரிமையைக் காத்துக்கொள்ள நாம்
உறுதியான முடிவுகளை எடுக்கவேண்டும்.
இந்தியாவில் கருத்துரிமை தொடர்ந்து நெருக்கடிக்கு உள்ளாகிவருகிறது.
லீலா சாம்சன் ராஜினாமா! Messenger of God தடையை ரத்து செய்தது தவறு?
மத்திய திரைப்பட தணிக்கைக்குழு வாரியத்தின் தலைவராக இருந்த லீலா சாம்சனின்
ராஜினாமா ஏற்கப்பட்டது. புதிய வாரியம் விரைவில் அமைக்கப்படும் என மத்திய
அரசு அறிவித்துள்ளது.
‘மெசேஞ்சர் ஆப் காட்’ (கடவுளின் தூதர்) என்ற படத்திற்கு மத்திய திரைப்பட
தணிக்கைக்குழு வாரியம் அனுமதி மறுத்தது. ஆனால், திரைப்பட தணிக்கைக்குழு
தீர்ப்பாயம் ஒப்புதல் வழங்கியது. இதில் அதிருப்தி அடைந்த தணிக்கைக்குழு
வாரியத்தின் தலைவர் லீலா சாம்சன் நேற்று முன்தினம் பதவி விலகினார்.
தணிக்கைக்குழு வாரியத்தில் தலையீடுகள் வந்ததாகவும், நிதி ஒதுக்கப்படாததால் 9
மாதங்களாக உறுப்பினர்கள் சந்திப்பு நடைபெறாததாகவும் அவர் குற்றம்
சாட்டினார்.
அவரைத் தொடர்ந்து 12 உறுப்பினர்களும் பதவி விலகி உள்ளனர்.
மேனகா காந்தி : ஜல்லிகட்டை தொடர்ந்து பாஜக எதிர்க்கும்! இறைச்சிக்கு மாடுகளை பாஜக தொடர்ந்து வரவேற்கும்?
அப்படி பா ஜ க சொல்வது உண்மையானால் பா ஜ கவின் அடிப்படை கொள்கையே
தவறானதுதானே? மதம் சார்ந்த தீவிரவாதம் எந்த வகையை சேர்த்தி? இந்தியாவில் பா
ஜ க அதனை செய்வது ஐ எஸ் ஐ எஸ் போன்ற அமைப்பினை விட சற்று குறைவானதே
என்றாலும் அதற்கு நிகரகாதானே இருக்கின்றது. அதனால் பா ஜ கவையே தடை
செய்திடலாமோ? இவர்கள் ஆளும் குஜராத் மாநிலம்தான் நம்பர் ஒன்..எதில்?
பசுக்களை கொன்று மேலை நாடுகளுக்கு மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்வதில்?
இவர்கள் பசுக்கள் மேல் அக்கறை கொள்பவர்கலாமே? இந்த லட்சணத்தில்
உள்ளபோது..மாடுகளை யார் இங்கே சித்திரவதை செய்கின்றார்கள். இது காலம்
தோறும் நடைமுறையில் உள்ள ஓர் தனிப்பட்ட இனத்தின் கலாச்சாரம்..ஆயிரம் ஆயிரம்
ஆண்டுகளாக நடைபெற்றுவரும் கலாச்சாரம். மேலை நாடுகளில் உள்ளது போல மாட்டின்
மீது அம்பை எய்து கொடுமை படுத்துவது போன்றல்ல..இது இளைஞர்களுக்கு ஓர்
சவாலான வீரவிளையாட்டு. எல்லையில் கூடத்தான் பாகிஸ்தான் நமது வீரர்களை
சுட்டுகொல்கின்றது..தலையை தனியே எடுத்து சென்று பந்து போன்று
விளையாடுகின்றது..அதனால் எல்லையில் வீரர்களை திரும்ப பெற்றுகொல்வோமா?
உங்களுக்குத்தான் வாயில்லா ஜீவன்கள் மேலே அவ்வளவு பற்று உள்ளதே..அப்புறம்
ஏன் இந்த வீரர்கள்? அவர்களுக்கும் குடும்பம் குழந்தைகள் உள்ளதுதானே?
எல்லையோரம் எல்லாம் வெள்ளை கொடியை நட்டுவைத்துவிட்டு உயிர் பலியாவதை
தடுக்கலாமே? மேனகா ஏன் இந்திரா காந்தி அவர்களால் ஒதுக்கப்பட்டார் என்பது
புரிகின்றது. இந்த ப்ளூ கிராஸ் உறுப்பினர்களின் தொல்லை
தாங்கமுடியலையே..வீம்புக்கு பேசுவது இதுதான்..எவராவது மாடுகளை கொல்வார்களே
என்றாலோ..அல்லது மாட்டிறைச்சி விற்பதை செய்தாலோ..அவர்களுக்கு இந்த மேனகா
என்ன சொல்லப்போகிறார்? பா ஜ கவின் ஒவ்வோர் புள்ளிகளும் சும்மா புகுந்து
விளையாடுகின்றார்கள்..ஷ்யூர் அடுத்த ஆட்சி பா ஜ கவசம் கிடையவே
கிடையாது..குறைந்த பட்சம் எதிர்க்கட்சி என்கிற அந்தஸ்தை கூட இழக்க
நேரிடும்..அதற்க்கான அத்தாட்சிதான் மேனகாவின் அதிபுத்திசாலித்தன
வியாக்கியானம். இவர் தான் நதிநீர் இணைப்பை எதிர்த்தவர். இவர் தமிழ்நாட்டு விவசாயிகளின் எதிரி
சேகர் சேகரன்
தினமலர்.com
சேகர் சேகரன்
தினமலர்.com
ஜெயலலிதா Flashback :என்னை அரசியலில் இருந்து ஒழித்துகட்ட எம்ஜியார் தன்னால் முடிந்ததை எல்லாம் செய்கிறார்!
1.1.1989 ‘மக்கள் குரல்’ இதழில், ஜெயலலிதாவைப் பற்றி, எம்.ஜி.ஆர். கூறும்போது, “அம்முவின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. எதையோ நினைத்து அம்முவை அரசியலில் ஈடுபடுத்தினேன். பிள்ளையார் பிடிக்கப் போய் அது குரங்காய் முடிந்துவிட்டது. சூதும், வாதும், வஞ்சகமும், சூழ்ச்சியும் கற்ற இந்த அம்மு எனக்கே உலை வைக்கிறாள்.
எம்.ஜி.ஆருக்கு தற்போது புகழ் மாலை சூடும் ஜெயலலிதா, அவர் உயிரோடு இருந்தபோது, அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களுக்கு சேலம் கண்ணன் மூலமாக ஒரு கடிதம் அனுப்பியது தமிழ்நாட்டு மக்களுக்கு மறந்து விட்டதா என்ன? ஜெயலலிதா அப்போது தன் கைப்பட எழுதிய அந்தக் கடிதம் “மக்கள் குரல்” ஏட்டிலேயே அப்போது “பிளாக்” செய்து வெளியிடப்பட் டிருந்ததே?
அதாவது, “மிகுந்த செல்வாக்குடன் நான் (ஜெயலலிதா) பிரபலம் அடைந்திருப்பதை பார்த்து முதலமைச்சர் (எம்.ஜி.ஆர்) மிகவும் பொறாமைப் படுகிறார்.
இதுதான் இங்கு நடைபெறும் ஒவ்வொரு செயலுக்கும் மூலகாரணம். நான் மிகவும் பிரபலம் அடைந்துள்ளதை அவரால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.
எனவே, அரசியலில் இருந்தும், பொதுவாழ்வில் இருந்தும் என்னை ஒழித்துக் கட்ட தன்னால் முடிந்ததையெல்லாம் அவர் (எம்.ஜி.ஆர்) செய்து வருகிறார்” என்று எம்.ஜி.ஆரைப் பற்றி எழுதினார்.
அது மாத்திரமல்ல; அதே கடிதத்தில், (எனக்கு உரிய முக்கியத்துவம் தர விரும்பாத எம்.ஜி.ஆர்., என்னை அமைச்சரவையில் சேர்க்கவும் விரும்பவில்லை. அவரை எதிர்க்க இங்கு யாருக்கும் தைரியமில்லை. ஏனென்றால் அவரில்லாவிட்டால் மற்றவர்கள் எல்லாம் பூஜ்யங்கள்) என்றெல்லாம் எழுதியவர், இன்றைக்கு தானே முன் வந்து சென்னை விமான நிலையத்திற்கு அருமை நண்பர் எம்.ஜி.ஆர். அவர்களின் பெயரைச் சூட்ட வேண்டுமென்று கேட்க முன் வந்திருப்பது கண்டு, பாசத்தாலா அல்லது பதவி ஆசையினாலா எனத் தமிழ் மக்கள் சந்தேகிப்பது இயல்பானதுதானே? http://nakkheeran.in/Users/frmNews.aspx?N=136251
எம்.ஜி.ஆருக்கு தற்போது புகழ் மாலை சூடும் ஜெயலலிதா, அவர் உயிரோடு இருந்தபோது, அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களுக்கு சேலம் கண்ணன் மூலமாக ஒரு கடிதம் அனுப்பியது தமிழ்நாட்டு மக்களுக்கு மறந்து விட்டதா என்ன? ஜெயலலிதா அப்போது தன் கைப்பட எழுதிய அந்தக் கடிதம் “மக்கள் குரல்” ஏட்டிலேயே அப்போது “பிளாக்” செய்து வெளியிடப்பட் டிருந்ததே?
அதாவது, “மிகுந்த செல்வாக்குடன் நான் (ஜெயலலிதா) பிரபலம் அடைந்திருப்பதை பார்த்து முதலமைச்சர் (எம்.ஜி.ஆர்) மிகவும் பொறாமைப் படுகிறார்.
இதுதான் இங்கு நடைபெறும் ஒவ்வொரு செயலுக்கும் மூலகாரணம். நான் மிகவும் பிரபலம் அடைந்துள்ளதை அவரால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.
எனவே, அரசியலில் இருந்தும், பொதுவாழ்வில் இருந்தும் என்னை ஒழித்துக் கட்ட தன்னால் முடிந்ததையெல்லாம் அவர் (எம்.ஜி.ஆர்) செய்து வருகிறார்” என்று எம்.ஜி.ஆரைப் பற்றி எழுதினார்.
அது மாத்திரமல்ல; அதே கடிதத்தில், (எனக்கு உரிய முக்கியத்துவம் தர விரும்பாத எம்.ஜி.ஆர்., என்னை அமைச்சரவையில் சேர்க்கவும் விரும்பவில்லை. அவரை எதிர்க்க இங்கு யாருக்கும் தைரியமில்லை. ஏனென்றால் அவரில்லாவிட்டால் மற்றவர்கள் எல்லாம் பூஜ்யங்கள்) என்றெல்லாம் எழுதியவர், இன்றைக்கு தானே முன் வந்து சென்னை விமான நிலையத்திற்கு அருமை நண்பர் எம்.ஜி.ஆர். அவர்களின் பெயரைச் சூட்ட வேண்டுமென்று கேட்க முன் வந்திருப்பது கண்டு, பாசத்தாலா அல்லது பதவி ஆசையினாலா எனத் தமிழ் மக்கள் சந்தேகிப்பது இயல்பானதுதானே? http://nakkheeran.in/Users/frmNews.aspx?N=136251
தொழிற்சாலைகள் தமிழகத்தை விட்டு ஓடுவது ஏன்? கலைஞர் அறிக்கை!
கேள்வி :- ஜல்லிக்கட்டுப் போட்டியை இந்த ஆண்டு நடத்த நீதிமன்றத்திடம் அனுமதி பெற்றுத் தர அ.தி.மு.க. அரசு தவறி விட்டதே?
கலைஞர் :- அ.தி.மு.க. அரசு எல்லாவற்றையும் போல, இந்தப் பிரச்சினையிலும் முன்கூட்டியே முயற்சி எடுத்து உச்ச நீதிமன்றத் தில் முறையான அனுமதியைப் பெற்றுத் தரத் தவறி விட்டது. மக்களை ஏமாற்றுவதற்காக முயற்சி எடுப்பது போல, பிரதமருக்குக் கடிதம் எழுதியிருக்கிறோம், அதிகாரிகளை டெல்லிக்கு அனுப்பியிருக்கிறோம், உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்திருக்கிறோம் என்று நொண்டிச் சமாதானங்களைச் சொல்லி, அறிக்கைகள் விட்ட போதிலும், அ.தி.மு.க. அரசு தமிழ் மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுமென்ற உண்மையான நோக்கத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதே உண்மை. ஜல்லிக்கட்டுக்குப் பெயர் பெற்ற பகுதியிலிருந்து வந்திருக்கும் பன்னீர் செல்வமே, அந்த மக்களின் நியாயமான எதிர்பார்ப்பை நிறைவேற்றிடத் தவறி விட்டார்.
;கேள்வி :- தொழிற்சாலைகளை மூடுவதில் தமிழகம்தான் முன்னிலை வகிப்பதாக ஒரு செய்தி வந்துள்ளதே?
கலைஞர் :- அ.தி.மு.க. அரசு எல்லாவற்றையும் போல, இந்தப் பிரச்சினையிலும் முன்கூட்டியே முயற்சி எடுத்து உச்ச நீதிமன்றத் தில் முறையான அனுமதியைப் பெற்றுத் தரத் தவறி விட்டது. மக்களை ஏமாற்றுவதற்காக முயற்சி எடுப்பது போல, பிரதமருக்குக் கடிதம் எழுதியிருக்கிறோம், அதிகாரிகளை டெல்லிக்கு அனுப்பியிருக்கிறோம், உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்திருக்கிறோம் என்று நொண்டிச் சமாதானங்களைச் சொல்லி, அறிக்கைகள் விட்ட போதிலும், அ.தி.மு.க. அரசு தமிழ் மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுமென்ற உண்மையான நோக்கத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதே உண்மை. ஜல்லிக்கட்டுக்குப் பெயர் பெற்ற பகுதியிலிருந்து வந்திருக்கும் பன்னீர் செல்வமே, அந்த மக்களின் நியாயமான எதிர்பார்ப்பை நிறைவேற்றிடத் தவறி விட்டார்.
;கேள்வி :- தொழிற்சாலைகளை மூடுவதில் தமிழகம்தான் முன்னிலை வகிப்பதாக ஒரு செய்தி வந்துள்ளதே?
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)







