கடந்த
2010ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வரதன் என்பவரை, வேலூர்
சிறையில் இருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 2 மணி அளவில் பூந்தமல்லி
ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்துச் சென்றனர்.அப்போது,
பூந்தமல்லி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மறைந்திருந்த மர்ம நபர்கள் அவரை
அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். பட்டப்பகலில் நீதிமன்றத்தில் நடந்த இந்த
சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.கொலை சம்பவம் நடந்த பூந்தமல்லி ஒருங்கிணைந்த நீதிமன்ற பகுதியை அம்பத்தூர் துணை காவல்துறை ஆணையர் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார்.படுகொலை
செய்யப்பட்ட வரதன் மீது இரண்டு கொலை வழக்குகள், ஒரு கொலை முயற்சி வழக்கும்
இருந்துள்ளது. வரதன் நெசப்பாக்கம், பிள்ளையார் கோவில் தெருவைச்
சேர்ந்தவர். இந்த கொலை சம்பவம் பழிவாங்கும் செயலாக இருக்கலாம் என்ற
சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த
கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் இரண்டு பேர் என்றும், தப்பியோடிய அவர்களை
பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.nakkheeran.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக