நடிகர் சல்மான் கான் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இந்த
சந்திப்பின் போது என்ன பேசினார்கள் என்பது தெளிவாக தெரியவரவில்லை.
அண்மையில் தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, அதை
முன்னோக்கி செயல்படுத்த 9 பிரபலங்களை நியமித்தார். அதில் சல்மான் கானும்
ஒருவர் ஆவர். தூய்மை இந்தியா திட்டத்துக்கு தன்னை நியமித்ததற்காக மோடிக்கு
சல்மான் கான் பாரட்டு தெரிவித்து இருந்தார்.அதேபோல், தூய்மை இந்தியா திட்டத்தில் அவராகவே தன்னை இணைத்து கொண்டார் என்று
பிரதமர் மோடியும் சல்மான் கானை பாராட்டி இருந்தார் என்பது
குறிப்பிடத்தக்கது.maalaimalar.com
வெள்ளி, 7 நவம்பர், 2014
பாரிஸ் முனியாண்டி விலாசில் தமிழர்கள் கோஷ்டி மோதல்! தேமதுர தமிழோசை உலகமெல்லாம் ????
Un gang agresse les clients d'un restaurant... by leparisien
பாரீஸ்: பிரான்சின் பாரீஸ் நகரில் உள்ள முனியாண்டி விலாஸ் ஹோட்டல்
கடைக்குள் புகுந்து கடுமையாக சண்டை போட்டுக் கொண்ட தமிழர்கள் சிலரால் கடையே
சூறையாடப்பட்டது. பிரெஞ்சுக்காரர்கள் தமிழர்களின் இந்த சண்டையை கூடி
நின்று வேடிக்கை பார்த்தனர்.
பாரீஸின் லா செப்பல் என்ற இடத்தில் தமிழகத்தின் முனியாண்டி விலாஸ் ஹோட்டல்
உள்ளது. இது இப்பகுதியில் பிரபலம். தமிழர்கள் மட்டுமலல்லாமல்
பிரெஞ்சுக்காரர்களும் கூட சிக்கன், மட்டன் பிரியாணி உள்ளிட்ட அசைவ
வகையறாக்களை ஒரு பிடி பிடிக்க வருவது வழக்கம்.
இந்தநிலையில் இந்த ஹோட்டலில் சில நாட்களுக்கு தமிழ் இளைஞர்களின் இரு
பிரிவுக்கிடையே கடையில் வைத்து கோஷ்டி மோதல் வெடித்தது. இரு தரப்பினரும்
சரமாரியாக மோதிக் கொண்டனர். இரு தரப்பினரும் கையில் கிடைத்ததை எடுத்து
வீசிக் கொண்டனர். இதனால் கடையே சூறையாடப்பட்டது.
இவர்களின் சண்டையில் சிக்கி காயப்படாமல் இருக்க மேசை, சேரை எடுத்து கேடயம்
போல பயன்படுத்திக் கொள்ளும் நிலையும் கடைக்காரர்களுக்கு ஏற்பட்டு விட்டது.
இந்த சண்டையை பிரெஞ்சுக்காரர்கள் கூடி நின்று வேடிக்கை பார்க்கும் அளவுக்கு
சண்டை செம சூடாக இருந்தது.
tamil.oneindia.com
tamil.oneindia.com
ஜாதி சுழலில் சிக்குகிறாரா முதல்வர்? : இறுகும் கண்காணிப்பு வளையம்
முதல்வர் பன்னீர்செல்வம், ஜாதி அரசியலுக்குள் சிக்குவதாக எழுந்திருக்கும்
புகாரைத் தொடர்ந்து, அவர் செயல்பாடுகளை கண்காணிக்கும்படி, அதிகார
மட்டத்திலிருந்து, சிலருக்கு அசைன்மென்ட் கொடுக்கப்பட்டிருப்பதாக, அரசியல்
வட்டாரங்களில் பரபரப்பு கிளம்பியிருக்கிறது.
கோபத்துக்கு ஆளாகக்கூடாது: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் சிக்கி, தண்டனை அடைந்ததால், எம்.எல்.ஏ., பதவியையும், முதல்வர் பதவியையும் இழக்க வேண்டியதானது. இதனால், தமிழகத்தில் புதிய முதல்வராக, நிதியமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் முதல்வராக பதவி ஏற்றுக் கொண் டாலும், எந்த இடத்திலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோபத்துக்கு ஆளாகி விடக்கூடாது என்பதில், தெளிவாக இருந்து செயல்படுகிறார். முதலில் இந்த குருபூஜைகளை தடை செய்யவேண்டும் அல்லது மக்களே அவற்றைத் தடுத்து நிறுத்தவேண்டும். அவை இனவெறியைத் தூண்டுவதைத் தவிர வேறு எதற்க்காகவுமல்ல
கோபத்துக்கு ஆளாகக்கூடாது: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் சிக்கி, தண்டனை அடைந்ததால், எம்.எல்.ஏ., பதவியையும், முதல்வர் பதவியையும் இழக்க வேண்டியதானது. இதனால், தமிழகத்தில் புதிய முதல்வராக, நிதியமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் முதல்வராக பதவி ஏற்றுக் கொண் டாலும், எந்த இடத்திலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோபத்துக்கு ஆளாகி விடக்கூடாது என்பதில், தெளிவாக இருந்து செயல்படுகிறார். முதலில் இந்த குருபூஜைகளை தடை செய்யவேண்டும் அல்லது மக்களே அவற்றைத் தடுத்து நிறுத்தவேண்டும். அவை இனவெறியைத் தூண்டுவதைத் தவிர வேறு எதற்க்காகவுமல்ல
வியாழன், 6 நவம்பர், 2014
5 லட்சத்தில் ஒரு மலையாளப்படம் அள்ளியது சில கோடிகள்! படம் படுமோசம் ஆனாலும் பார்த்தார்கள்? பார்த்தார்கள்?
கிருஷ்ணனும் ராதையும்' என்றெரு மலையாள படம் கேரளா திரை உலகின் பாரம்பரியங்களை உடைத்தெறிந்து விட்டது, சந்தோஷ் பண்டிட் என்பவர் இந்த படத்தை வெறும் ஐந்து லட்சம் ரூபாய்களில் தயாரித்து பெரும் வெற்றியும் பெற்று விட்டார். அதுமட்டுமல்ல வெறும் லூசுப்படம் என்று ஏறக்குறைய எல்லாராலும் விமர்சிக்கப்பட்ட இப் படத்தில் ஹீரோவா நடிச்சு, பாட்டும் எழுதி, பாடல்கள்,
இசை, சண்டைப் பயிற்சி, கலை, பின்னணி இசை, கிராஃபிக்ஸ், பாடகர், கதை,
வசனம், திரைக்கதை, உடைகள், பி.ஆர்.ஓ, இயக்குநர், தயாரிப்பு என 18
ஒர்க்குகளை செய்து ரெக்கார்டு பிரேக் பண்ணி கேரளாவையே அதிர வைத்திருகிறார் சந்தோஷ் பண்டிட்
படத்துல வர்ற 3 பாட்டுக்களை Youtubeலயே வெளியிடறாரு.நிறைய வந்திருது, அதிகமில்லைங்க 5 லட்சம் hitsதான். ஆச்சர்யமா இருக்கா? அப்படியான்னு, அடுத்து இன்னும் 3 பாட்டுக்களை வெளியிட்டாரு, hits எகிர ஆரம்பிச்சிருச்சு. மக்களோட எதிர்பார்ப்பும் அதிமாயிருச்சு. கடைசியா 2 பாட்டுக்கள், அப்புறம் Trailer. பட்டை லவங்கம் எல்லாம் சேர்த்து கெளப்பிருச்சு பாட்டுக்கள். Fans Clum அங்காங்கே முளைக்க வேற ஆரம்பிச்சிருச்சு. இப்படி Youtubeஆலயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தின படம் கிருஷ்ணனும் ராதையும். அதுவும் படம் வெளிவருவதற்கு முன்னமேயே. சரி, அப்படி என்னதான் அந்தப் பாட்டுக்களிலும், trailerலும் கேட்குறீங்களா. நீங்களே பார்த்துக்குங்க. இப்பொழுது கேரளாவில் ரிங் டோனாக வலம் வரும் பாடல் இது நம்மூர் அஷ்டாவதானி டீ.ஆர் எல்லாம் தூரமா போய் நிக்கச் சொல்லுங்க. படத்துல இவரோட பங்களிப்பு என்னென்னு பாருங்க. எல்லாரும் லூசுன்னு சொன்னாலும் சாதனை சாதனைதான் இளையதலைமுறைக்கு ரசிப்பதற்கு இவரது படைப்பில் ஏதோ இருக்கிறது ?உண்மையில் இவரது கதையை திரைப்பட கல்லூரிகளில் பாடமாக வைக்கவேண்டும்
படத்துல வர்ற 3 பாட்டுக்களை Youtubeலயே வெளியிடறாரு.நிறைய வந்திருது, அதிகமில்லைங்க 5 லட்சம் hitsதான். ஆச்சர்யமா இருக்கா? அப்படியான்னு, அடுத்து இன்னும் 3 பாட்டுக்களை வெளியிட்டாரு, hits எகிர ஆரம்பிச்சிருச்சு. மக்களோட எதிர்பார்ப்பும் அதிமாயிருச்சு. கடைசியா 2 பாட்டுக்கள், அப்புறம் Trailer. பட்டை லவங்கம் எல்லாம் சேர்த்து கெளப்பிருச்சு பாட்டுக்கள். Fans Clum அங்காங்கே முளைக்க வேற ஆரம்பிச்சிருச்சு. இப்படி Youtubeஆலயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தின படம் கிருஷ்ணனும் ராதையும். அதுவும் படம் வெளிவருவதற்கு முன்னமேயே. சரி, அப்படி என்னதான் அந்தப் பாட்டுக்களிலும், trailerலும் கேட்குறீங்களா. நீங்களே பார்த்துக்குங்க. இப்பொழுது கேரளாவில் ரிங் டோனாக வலம் வரும் பாடல் இது நம்மூர் அஷ்டாவதானி டீ.ஆர் எல்லாம் தூரமா போய் நிக்கச் சொல்லுங்க. படத்துல இவரோட பங்களிப்பு என்னென்னு பாருங்க. எல்லாரும் லூசுன்னு சொன்னாலும் சாதனை சாதனைதான் இளையதலைமுறைக்கு ரசிப்பதற்கு இவரது படைப்பில் ஏதோ இருக்கிறது ?உண்மையில் இவரது கதையை திரைப்பட கல்லூரிகளில் பாடமாக வைக்கவேண்டும்
பிகினி உடையில் நீதிபதி ! மொல்டாவியாவில் ஆடை சுதந்திரம் ,
மோல்டோவியா
நாட்டின் தலைநகர் சிசினவ் நகரை சேர்ந்தவர் மரியா கோசமா (வயது 27). இவர்
அந்நாட்டின் சுப்ரிம் கோர்ட் நீதிபதி மைக்கேல் பாலுங்கி( வயது 52)
பேத்தியாவார். மரியா சமீபத்தில் தான் பிரதான குற்றவியல் நீதிமன்றமான
சென்ரு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கபட்டார். தற்போது இந்த அழகிய நீதிபதி
கடும் விமர்சனத்திற்கு ஆளாகி உள்ளார்.>தற்போது
இவர் எடுத்து கொண்ட பிகினி புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.
இந்த புகைப்படத்தை பார்த்த பலர் பெண் நீதிபதிக்கு கண்டனம்
தெரிவித்துள்ளனர். பலவேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. .. nakkheeran,in சகாயம் IAS மதுரையில் மட்டுமே? டிராபிக் ராமசாமி புதிய வழக்கு !இதர மாவட்டங்களில் கனிமவள கொள்ளையில் யாரை பாதுக்காக்க பன்னீர் முயற்சி ?
சென்னை: கனிமவள முறைகேடு விசாரணை பபற்றி டிராபிக் ராமசாமி சென்னை உயர்
நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி, தமிழகம்
முழுவதும் நடந்த கனிமவள முறைகேடு பற்றி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்
என்று வழக்கு தொடர்ந்தார். அவரது வழக்கை விசாரித்த நீதிமன்றம், முறைகேடு
குறித்து விசாணை நடத்த ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தை நியமித்தது. அவர் முறைகேடு
குறித்து விசாரணை நடத்தி அறிக்கையை 2 மாதத்திற்குள் தாக்கல் செய்ய
நீதிமன்றம் உத்தரவிட்டது.
கனிமவள முறைகேடு குறித்து விசாரணை நடத்த சகாயத்தை நியமிக்க நீதிமன்றம்
பிறப்பித்த உத்தரவை ஏற்று அரசு செயல்படவில்லை என டிராபிக் ராமசாமி அவதூறு
வழக்கு தொடர்ந்தார்.தமிழ்நாட்டில் கனிமவள கொள்ளை பத்து மாவட்டங்களில் நடப்பதாக தெரிகிறது, சுமார் ஐந்து லட்சம் கோடி கொள்ளை போயிருக்க வாய்பிருக்கிறது, அவர்களை எல்லாம் காப்பாற்றும் முயற்சிதான் சகாயத்தை மதுரையில் முடக்கும் முயற்சி, நீதித்துறையை கேலியாக்கும் பன்னீர்செல்வம்
சுப.வீரபாண்டியன் : கலாசார காவலர்களுக்கு முத்தம் பிடிக்காது ஆனால் பாலியல் வன்முறை? நாடெங்கும் நடக்கிறதே? எங்கே அந்த குண்டர்கள்?
சோனியா அவசர அழைப்பு : இளங்கோவன், தங்கபாலு,ஜெயந்திநடராஜன் டெல்லி விரைந்தனர்
முன்னாள்
மத்திய மந்திரி ஜி.கே.வாசன் தன் ஆதரவாளர்களுடன் காங்கிரஸ் கட்சியில்
இருந்து விலகி, புதிய கட்சித் தொடங்கியுள்ளார். திருச்சியில் விரைவில்
நடைபெற உள்ள கூட்டத்தில் புதிய கட்சியின் பெயர் மற்றும் கொடியை வெளியிட
திட்டமிட்டுள்ளார்.புதிய
கட்சி தொடங்கி உள்ள வாசனுக்கு 2 எம்.எல்.ஏ.க்கள், 9 முன்னாள்
எம்.பி.க்கள், 30–க்கும் மேற்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், 20–க்கும்
மேற்பட்ட மாவட்ட தலைவர்களின் ஆதரவு உள்ளது. இந்த ஆதரவு பலத்தை மேலும்
அதிகரிக்க செய்யும் முயற்சிகளில் வாசனுடன் உள்ள தலைவர்கள் தீவிரமாக
ஈடுபட்டுள்ளனர். வாசனின் புதிய கட்சி பெயர் பதிவு வேலைகள் தீவிரமாக நடந்து
வரும் நிலையில், மாவட்ட வாரியாகவும் ஆள் பிடிக்கும் வேலை நடந்து வருகிறது.இந்த
நிலையில் காங்கிரஸ் பலவீனப்படுவதைத் தடுக்கும் முயற்சிகளில் ஈ.வி.கே.எஸ்
.இளங்கோவன் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
வாசன் கட்சியின் பெயர் 'த.மா.தே.கா TMTC ?தமிழ் மாநில தேசிய காங்கிரஸ் !
இது குறித்த அறிவிப்பு கட்சி துவக்க விழாவில் வெளியிடப்படுகிறது.
தமிழக காங்கிரஸ் தலைவராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிவிக்கப்பட்ட உடன்
அக்கட்சியில் இருந்து வெளியேறினார் முன்னாள் மத்திய அமைச்சரான ஜி.கே.வாசன்.
கட்சியை விட்டு வெளியேறிய அவர் தனது ஆதரவாளர்களுடன் புதிய கட்சியை துவங்க
முடிவு செய்தார். கட்சிக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று ஆலோசனை நடந்து
வந்தது. இந்நிலையில் கட்சிக்கு தமிழ் மாநில தேசிய காங்கிரஸ் என்று பெயர்
வைக்க முடிவு செய்துள்ளார்களாம்.
கட்சியின் பெயர் திருச்சியில் நடக்கும் கட்சி துவக்க விழாவில்
அறிவிக்கப்படுகிறது. அப்பொழுது கட்சியின் கொடியும் அறிமுகப்படுத்தப்படும்.
திருச்சியில் கட்சி துவக்க விழா நடக்கும் என்று வாசன் அறிவித்தார். ஆனால்
தேதியை அறிவிக்கவில்லை. இந்நிலையில் வரும் 22ம் தேதி அமாவாசை அன்று கட்சி
துவக்க விழாவை நடத்த தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனது கட்சிக்கு ஆதரவு அளிக்குமாறு வாசன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை
கேட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
tamil.oneindia.com
tamil.oneindia.com
பாவனா படதயாரிப்பாளரை திருமணம் புரிகிறார் ! காதலராம் !
திருவனந்தபுரம்:
நடிகை பாவனா பட தயாரிப்பாளரை காதல் திருமணம் செய்கிறார்.‘சித்திரம்
பேசுதடி’, ‘ஜெயங்கொண்டான்’, ‘வெயில்’, ‘தீபாவளி’, ‘ராமேஸ்வரம்’ உட்பட
ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் நடிகை பாவனா. இப்போது கன்னட படங்களில்
நடித்து வருகிறார். 2012ம் ஆண்டு இவர் நடித்த ‘ரோமியோ’ என்ற கன்னடப்
படத்தைத் தயாரித்தவர்களில் ஒருவர் நவீன். இவரும் பாவனாவும் காதலித்து
வருவதாக முதலில் செய்தி வெளியானது. இதுபற்றி அப்போது கேட்டபோது, ‘நான்
காதலிப்பது உண்மைதான். யார் என்பதை திருமணம் நடக்கும்போது சொல்கிறேன்’
என்று கூறியிருந்தார் பாவனா. நவீனும், ‘பாவனா என் தோழி’ என்று மட்டும்
சொல்லி இருந்தார். இப்போது இந்தக் காதல் உண்மை என தெரியவந்துள்ளது. அடுத்த
வருட தொடக்கத்தில் இவர்கள் திருமணம் பாவனாவின் சொந்த ஊரான திருச்சூரில்
நடக்கும் என்று கூறப்படுகிறது.சரிதா நாயர் : நான் தற்கொலை செய்துகொள்ளவேண்டும் என்றே ஆபாச படம் வெளிட்டுள்ளனர்.
திருவனந்தபுரம், நவ 6 - கேரளாவில் சோலார் பேனல் மோசடி வழக்கில் கைதாகி
ஜாமீனில் வந்தவர் சரிதாநாயர். இவரது ஆபாச படங்கள் சமீபத்தில் வாட்ஸ் அப்
மற்றும் இணையதளங்களில் வெளியானது. இது பற்றி சரிதா நாயர் போலீசில் புகார்
செய்ததோடு கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார். போலீசார் நடத்திய விசாரணையில்
சரிதா நாயரின் வழக்கை விசாரித்த போலீஸ்காரர் ஒருவர் ஆபாச படங்களை
வெளியிட்டது தெரியவந்தது. இது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை
எடுக்கப்பட்டது. இந்த நிலையில் செல்போனில் பரவிய சரிதாநாயரின் ஆபாச படங்கள்
சுமார் 28 ஆயிரம் பேரின் செல்போன்களில் பதிவேற்றம் செய்யப்பட்டது
தெரியவந்துள்ளது. இந்த செல்போன் எண்களின் செயல்பாடுகளை போலீசார்
கண்காணித்து வருகிறார்கள்.
ஐ.எஸ். பயங்கரவாதிகளின் காட்டுமிராண்டித்தனம்! கழுத்தறுப்பதா கடவுளின் மார்க்கம்?
இஸ்லாமிய தேசம்’ என்று சொல்லப்படும் ஐ.எஸ். பயங்கரவாதிகள், அநீதிகளை
எதிர்த்துப் போராடுகிறார்களோ இல்லையோ, வெளிநாட்டினரின் தலைகளைத்
துண்டிப்பதில்தான் பெரும் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். சிரியாவில்
உள்நாட்டுப் போர்ச் செய்திகளைத் திரட்ட வந்த அமெரிக்க நிருபர்கள் ஜேம்ஸ்
ஃபோலே, ஸடீவன் சாட்லாஃப்ட், பிரிட்டன் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த டேவிட்
ஹெயின்ஸ், ஆலன் ஹென்னிஸ்கின் முதலானோரை ஐ.எஸ். பயங்கரவாதிகள் கழுத்தைத்
துண்டித்துக் கொலை செய்தனர். பிணைக் கைதிகளுக்கு மட்டுமல்ல,
எதிர்ப்பாளர்கள் மாற்று இனத்தவர்கள் போன்றவர்களுக்கும் மரணம்தான் தண்டனை.
கடவுளின் மார்க்கத்தைப் பின்பற்றுவதாகவும், கடவுளின் ஆட்சியை நிலைநாட்டவே
போராடுவதாகவும் சொல்லிக்கொள்ளும் இந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள், ஒவ்வொரு முறை
பிணைக் கைதிகளின் தலையைத் துண்டிக்கும்போதும், துண்டிக்கப்பட்டுத் தரையில்
வீழ்வது மனிதர்களின் தலைகள் அல்ல, மகத்தான ஒரு மார்க்கத்தின் மானமும்
மரியாதையும்தான்.
Pakistan கிறிஸ்தவ தம்பதி உயிருடன் எரித்து கொலை.இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு
லண்டன் : 'பாகிஸ்தானில், முஸ்லிம்களின் புனித நூலான திருக்குரானை
அவமதித்ததாக கூறி, கிறிஸ்தவ தம்பதியை உயிருடன் எரித்து கொன்ற முஸ்லிம்
பழமைவாதிகள் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; சிறுபான்மையின
மக்களை பாதுகாக்க போதிய சட்டங்கள் இயற்ற வேண்டும்' என, 'ஆம்னஸ்டி
இன்டர்நேஷனல்' எனப்படும் சர்வதேச பொது மன்னிப்பு சபை வலியுறுத்தியுள்ளது.
இஸ்லாமிய நாடான பாகிஸ்தானில், பிற மதத்தினருக்கு சம உரிமைகள், அதிகாரங்கள்
வழங்கப்படுவதில்லை. குறிப்பாக, இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள்
மற்றும் ஷியா பிரிவு முஸ்லிம்கள், அங்குள்ள பெரும்பான்மை முஸ்லிம்களால் பல
விதங்களில்
கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர். வெளிப்படையான மத சுதந்திரம் அங்கு தடை
செய்யப்பட்டுள்ளது. கிறிஸ்தவர்கள் அங்கு தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். அங்குள்ள பஞ்சாப் மாகாணத்தில், கோட் ராதா கிஷன் என்ற கிராமத்தில், கிறிஸ்தவ தம்பதி, வன்முறை கும்பலால் நேற்று முன்தினம் எரித்து கொல்லப்பட்டனர்.
அதிருப்தி தேமுதிக 9 எம்எல் ஏக்களும் பாஜக போகிறார்கள் , அதிமுக சொன்னபடி சூட்கேஸ் பண்ணலையாம்ல ?
சென்னை: தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 9 பேரும் ஏகோபித்த முடிவு
ஒன்றுக்கு வந்துள்ளனர். இனியும் அதிமுகவை நம்பி குப்பையைக் கிளறிக்
கொண்டிருக்க முடியாது. பேசாமல் போய் பாஜகவில் சேர்ந்து விடலாம் என்பதுதான்
அந்த முடிவாம்.
ஜெயலலிதா இனியும் லைம் லைட்டுக்குத் திரும்புவார் என்ற நம்பிக்கையை அவர்கள்
இழந்து விட்டார்களாம். அதை விட முக்கியமாக அதிமுகவுக்கு ஆதரவாக
திரும்பினால் தருவதாக சொன்ன எதையுமே அதிமுககாரர்கள் தரவில்லை என்ற பெரும்
அதிருப்தி அவர்களிடம் உள்ளதாம்.
இதன் காரணமாக சமீபத்தில் 9 பேரும் கூடிப் பேசி பாஜகவில் போய் கலந்து
விடலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனராம்.
tamil.oneindia.com/
tamil.oneindia.com/
ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கு: ஐ.பெரியசாமியின் மகளுக்கு ஜாமீன்
மதுரை சின்னசொக்கிக்குளத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஜமால் முகமது,
கொடைக்கானலுக்கு கடத்திச் செல்லப்பட்டு
கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக முன்னாள் அமைச்சர்
ஐ.பெரியசாமியின் மகள் இந்திரா, கணேசன்,
பூங்கொடி, சங்கர், சித்திக், மாரிமுத்து உள்பட பலரை தல்லாகுளம் போலீசார்
கைது செய்தனர். இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இந்திரா, கணேசன் உள்ளிட்ட 6 பேர் ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்து
இருந்தனர்.
இந்த மனுக்கள் அனைத்தையும் நீதிபதி ஜி.சொக்கலிங்கம் விசாரித்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி, இந்திரா உள்ளிட்ட 2 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
கர்நாடகாவில் தொடர் பாலியல்வன்முறைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
பெங்களூர்,
தொடர் கற்பழிப்பு சம்பவங்களை கண்டித்து பெங்களூரில் முதல்–மந்திரி வீட்டை முற்றுகையிட்டு பா.ஜனதா மகளிர் அணியினர் நேற்று போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்தின்போது, ஷோபா எம்.பி.யை போலீசார் தாக்கியதாக கூறி தலைவர்கள் திடீரென்று தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மகளிர் அணியினர் ஊர்வலம் பெங்களூர் உள்பட கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான கற்பழிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த சம்பவங்களை கண்டித்து ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த சம்பவங்களை தடுக்க தவறிய மாநில காங்கிரஸ் அரசை கண்டித்து பா.ஜனதா மகளிர் அணி சார்பில் முதல்–மந்திரி வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் 5–ந் தேதி (அதாவது நேற்று) நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
தொடர் கற்பழிப்பு சம்பவங்களை கண்டித்து பெங்களூரில் முதல்–மந்திரி வீட்டை முற்றுகையிட்டு பா.ஜனதா மகளிர் அணியினர் நேற்று போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்தின்போது, ஷோபா எம்.பி.யை போலீசார் தாக்கியதாக கூறி தலைவர்கள் திடீரென்று தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மகளிர் அணியினர் ஊர்வலம் பெங்களூர் உள்பட கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான கற்பழிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த சம்பவங்களை கண்டித்து ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த சம்பவங்களை தடுக்க தவறிய மாநில காங்கிரஸ் அரசை கண்டித்து பா.ஜனதா மகளிர் அணி சார்பில் முதல்–மந்திரி வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் 5–ந் தேதி (அதாவது நேற்று) நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
வாகாவில் இந்திய பயணிகளை குறிவைத்து தற்கொலை தாக்குதல்? தவறுதலாக பாகிஸ்தானியர்களை பதம் பார்த்துவிட்டது?
டெல்லி: வாகா எல்லையில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல் இந்திய
பகுதியை குறிவைத்தது தவறுதலாக அந்த பக்கம் நடந்துள்ளதாம்.
பாகிஸ்தானில் வாகா எல்லையில் தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன் தனது உடலில்
கட்டியிருந்த 12 கிலோ வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில் இந்திய-பாகிஸ்தான்
எல்லையில் தேசிய கொடியிறக்கத்தை பார்த்துவிட்டு திரும்பியவர்களில் 60 பேர்
பலியாகினர், 200 பேர் காயம் அடைந்தனர். குண்டு பாகிஸ்தான் பகுதியில்
வெடித்தது.
வாகா எல்லை தாக்குதல்: இந்தியாவை குறி வைத்து மிஸ்ஸாகிவிட்டது
குருநானக்கின் பிறந்தநாளையொட்டி நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் இந்தியாவில்
இருந்து லாகூரில் உள்ள தேவ் பிறந்த இடமான நான்கனா சாகேபுக்கு செல்வதற்கு
முந்தைய நாள் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
புதன், 5 நவம்பர், 2014
பால் நாரிமன் ஜெயலலிதாவின் வழக்கில் அன்று எதிராக வாதம் இன்று ஆதரவாக வாதம்! மகனே நீதிபதி அப்பன் வழக்கறிஞர்? பழைய ஹிந்தி மசாலா படம்?
முதலமைச்சர்
ஜெயலலிதா மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் மீதான 48 வழக்குகளை விசாரிக்க
1997-ம் ஆண்டு தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது. நீதிபதிகள்
வி.ராதாகிருஷ்ணன், எஸ்.சம்பந்தம், பி.அன்பழகன் ஆகிய மூன்று பேர் தலைமையில்
மூன்று நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டன. விசாரணை தொடங்கியது. 98-ம் ஆண்டு
மத்தியில் பி.ஜே.பி ஆட்சி அமைந்தது. அந்த அரசில் அ.தி.மு.க இடம்பெற்றது.
தம்பிதுரை சட்ட அமைச்சராக ஆனார். இப்படிப்பட்ட தனி நீதிமன்றங்கள் அமைக்கும்
அதிகாரம் மாநில அரசுக்குக் கிடையாது என்று சொல்லி ஓர் உத்தரவை
பிறப்பித்தார். தனி நீதிமன்றங்களில் பரபரப்பாக விசாரிக்கப்பட்ட வழக்குகள்
அனைத்தும் வழக்கமான நீதிமன்றங்களுக்கு மாற்றப்பட்டன. அப்படியானால்
விசாரணைகள் காலதாமதம் ஆகும் என்பதுதான் இதன் நோக்கம். 98-ம் ஆண்டு பிப்ரவரி
5-ம் நாள் இந்த உத்தரவு போடப்பட்டது. இந்த உத்தரவை தி.மு.க தலைமையிலான
அரசு எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. அப்போது தமிழக
அரசு சார்பில் வாதாடியவர்தான் ஃபாலி நாரிமன்.
அன்று ராம்ஜெத்மலானியின் அமைச்சு வாய்ப்பை பறித்து தம்பிதுரைக்கு கொடுத்த ஜெயலலிதா ! இன்று?
ராம் ஜெத்மலானி!
இந்தியாவின்
புகழ்பெற்ற வழக்கறிஞர்களில் முதல் 10 பேரில் ஒருவர். அவரது ஒரு மணிநேர
வாதத்துக்கான பைசா எவ்வளவு என்பது அவருக்கும் வாதிக்கும் மட்டுமே தெரியும்.
உச்ச நீதிமன்றத்தில்தான் தினமும் வலம் வருவார். பிரேமானந்தாவுக்காக
புதுக்கோட்டை சப் கோர்ட்டுக்கும் இறங்கி வந்தவர். அவர்தான் ஜெயலலிதாவுக்கு
தண்டனை தரப்பட்டதுமே, 'இது தவறான தீர்ப்பு’ என்று அறிக்கைவிட்டு, அதன்
மூலமாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு மீது வாதாடும் வாய்ப்பைப்
பெற்றார்.
கூடலூர் பஸ் விபத்து: பயணிகளைக் காத்த டிரைவர்... பிரமிக்க வைத்த பிரேமா!
.jpg)
இன்னும்
மிரட்சியில் இருந்து மீளவில்லை அவர்கள். அவர்கள் ....? கடந்த
திங்கட்கிழமை கேரள மாநிலத்தின் சுல்தான்பத்தேரிஎன்ற ஊரிலிருந்து தமிழக
பகுதியான கூடலுருக்கு வந்த பேருந்தில் பயணம் செய்த பயணிகள்.மொத்த பயணிகளின் கரங்களும் ஒரு பயணியை நோக்கி கும்பிடுகிறது. அவர் பிரேமா. இன்று அத்தனை உயிர்களும் நிம்மதியில் கிடக்க அவரும் ஒரு முக்கிய காரணம்.
நடிகர் கார்த்திக் காங்கிரசில் இணைந்தார்! பின்பு வழக்கம்போல குழம்பினார் ? இன்னும் இணையவில்லை ஆனால் ஆதரவு என்றார்! முடியல?
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் இளங்கோவன்
கட்சியின் பலத்தை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார். இந்த
நிலையில், சத்திய மூர்த்தி பவனுக்கு இன்று பல்வேறு கட்சிகளைச்
சேர்ந்தவர்கள் வந்து, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன்னிலையில் காங்கிரசில்
சேர்ந்தனர்.
என்.ஜி.ஓ. சங்க முன்னாள் தலைவர் சூரியமூர்த்தி, நாடாளுமன்ற தேர்தலில்
சிதம்பரம் தொகுதியில் பாமக சார்பில் போட்டியிட்ட மணிரத்தினம் ஆகியோர்
தலைமையில் 100க்கும் மேற்பட்டவர்கள் காங்கிரசில் இணைந்தனர்.
கட்சியில் இணைந்தவர்களை வரவேற்று இளங்கோவன் பேசியதாவது:
காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்துள்ள இந்த சூழ்நிலையில், நீங்கள்
காங்கிரசில் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
சோ அடித்த பல்டிகள்! ஊழலைப் பற்றி பி.ஜே.பி பேசுவது நகைச்சுவைக்கு மட்டுமே?
(துக்ளக் 13.8.97 ) சாயம் வெளுக்கிறது... சரித்திரம் சிரிக்கிறது!
''கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் நாம் எத்தனையோ சாதனைகளைச் செய்திருக்கிறோம். அதை எல்லாம் மக்களிடம் முறையாக எடுத்துச் சொல்லவில்லை'' என்று ஜெயலலிதா சொல்லியதைக் குறிப்பிட்டு வாசகர் ஒருவர் கேள்வி கேட்டபோது, 'ஜெயலலிதாவுக்கு இந்த மனக்குறை தேவை இல்லை. அந்த சாதனையைத்தான் பல வழக்குகள் எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கின்றனவே'' (துக்ளக் 13.8.97 - பக் 14) என்று பதிலளித்தார் சோ.
மத்திய பி.ஜே.பி ஆட்சி இந்த வழக்குகளை முடக்கும் நடவடிக்கையை எடுத்தபோது, ''ஜெயலலிதா மீதான ஊழல் வழக்குகளை எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தூரம் தாமதப்படுத்துவதற்கு உதவி செய்வது என்று தீர்மானித்து பி.ஜே.பி செயல்படுகிறது. இனி ஊழலைப் பற்றி பி.ஜே.பி பேசுவது நகைச்சுவைக்கு மட்டுமே பயன்படும் என்ற நிலைகூட வந்துவிடும் போலிருக்கிறது'' (துக்ளக் 20.1.99 - பக்.8) என்று பாய்ந்தவர் சோ.
ஜெயலலிதாவைக் குறிவைத்து சோ எழுதிவருவதைப் பார்த்து ஒரு வாசகர், ''ஜெயலலிதாவின் ஊழல் மட்டும் உங்கள் கண்களை ஏன் உறுத்துகிறது?'' என்று கேள்வி கேட்டபோது, ''தி.மு.க ஊழலில் இருந்து இந்திரா காந்தி ஊழல் உள்பட ஜெயலலிதா, லாலு பிரசாத் ஊழல் வரை எல்லா ஊழல்களும் உறுத்தத்தான் செய்கின்றன. இந்த உறுத்தல்களை துக்ளக் விவரித்துத்தான் வந்திருக்கிறது. உறுத்தல்கள் வளர்ந்து ஜெயலலிதா ஊழல் நோயாக முற்றிவிட்டது. அதனால்தான் கவலை அதிகம்'' என்று (10.2.99 - துக்ளக் பக்-15) விளக்கம் அளித்தவர் சோ.
''ஊழல் ஒரு குற்றமே அல்ல என்று நினைக்கும் அளவுக்குப் பெருந்தன்மை காட்டியவர் ஜெயலலிதா'' (27.1.99 துக்ளக் - பக்-8) என்று குற்றம் சாட்டியவரும் சோ-தான்.
மத்திய பி.ஜே.பி ஆட்சி இந்த வழக்குகளை முடக்கும் நடவடிக்கையை எடுத்தபோது, ''ஜெயலலிதா மீதான ஊழல் வழக்குகளை எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தூரம் தாமதப்படுத்துவதற்கு உதவி செய்வது என்று தீர்மானித்து பி.ஜே.பி செயல்படுகிறது. இனி ஊழலைப் பற்றி பி.ஜே.பி பேசுவது நகைச்சுவைக்கு மட்டுமே பயன்படும் என்ற நிலைகூட வந்துவிடும் போலிருக்கிறது'' (துக்ளக் 20.1.99 - பக்.8) என்று பாய்ந்தவர் சோ.
ஜெயலலிதாவைக் குறிவைத்து சோ எழுதிவருவதைப் பார்த்து ஒரு வாசகர், ''ஜெயலலிதாவின் ஊழல் மட்டும் உங்கள் கண்களை ஏன் உறுத்துகிறது?'' என்று கேள்வி கேட்டபோது, ''தி.மு.க ஊழலில் இருந்து இந்திரா காந்தி ஊழல் உள்பட ஜெயலலிதா, லாலு பிரசாத் ஊழல் வரை எல்லா ஊழல்களும் உறுத்தத்தான் செய்கின்றன. இந்த உறுத்தல்களை துக்ளக் விவரித்துத்தான் வந்திருக்கிறது. உறுத்தல்கள் வளர்ந்து ஜெயலலிதா ஊழல் நோயாக முற்றிவிட்டது. அதனால்தான் கவலை அதிகம்'' என்று (10.2.99 - துக்ளக் பக்-15) விளக்கம் அளித்தவர் சோ.
''ஊழல் ஒரு குற்றமே அல்ல என்று நினைக்கும் அளவுக்குப் பெருந்தன்மை காட்டியவர் ஜெயலலிதா'' (27.1.99 துக்ளக் - பக்-8) என்று குற்றம் சாட்டியவரும் சோ-தான்.
பி.எஸ்.ராகவன் கருத்து :வட இந்தியத்தலைவர்கள் தமிழ்நாடு என்றால் இட்லி, தோசை, ரசம், சாம்பார் மாநிலம்???
தேசிய ஒருமைப்பாட்டு குழுவை நேரு ஆரம்பித்த காலத்தில் இருந்து இந்திரா
காந்தி பிரதமராக இருந்த வரை அதன் செயலராக பதவி வகித்தவர். தேசிய அளவில்
பல்வேறு கட்சித் தலைவர்களுக்கும் பிரதமர் களுக்கும் அரசியல் மற்றும் அரசு
ரீதியாக ஆலோசனைகளை வழங்கிய அனுபவம் உள்ளவர்.
தமிழகத்தில் தமிழ் மாநில காங்கிரஸை தொடங்கிய ஜி.கருப்பையா மூப்பனாரின்
பெரும் மதிப்பைப் பெற்றவரும் ‘பாரத ரத்னா’ சி.சுப்ரமணியத்துடனும்
நெருங்கிப் பழகியவருமான பி.எஸ்.ராகவன், தற்போது காங்கிரஸின் உட்கட்சிப்
பூசல் குறித்தும் காங்கிரஸின் வளர்ச்சிக்கு அடுத்த கட்டம் எப்படி இருக்க
வேண்டும் என்றும் தனது கருத்துகளை தெரி வித்துள்ளார். அவர் கூறியதாவது:
தேசியக் கட்சிகளில் காங்கிரஸ் ஆனாலும், பாஜக ஆனாலும்.. வட இந்தியத்
தலைவர்களால் மட்டுமே டெல்லியில் இருந்து இயக்கப்படுகின்றன. தமிழகத்தின்
கலாச்சாரம், பண்பாடு, வழிமுறைகள், உணவு முறை போன்ற எதையுமே டெல்லித்
தலைவர்கள் தெரிந்து கொள்ளக்கூட முயற்சிப்பதில்லை. தமிழ்நாடு என்றால் இட்லி,
தோசை, ரசம், சாம்பார் மாநிலம் என்று நினைக்கின்றனர்.
பட்டபகலில் அண்ணாநகரில் டாக்டரிடம் துப்பாக்கி முனையில் 70 சவரன் நகை கொள்ளை! நடிகர் லிவிங்க்ஸ்டனின் ex வீடு ....
சென்னை அண்ணாநகர் கிழக்கு 15-வது தெரு ‘க்யூ’ பிளாக்கில் வசித்து வருபவர் டாக்டர் ஆனந்தன். இவர் சென்னை
அரும்பாக்கத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் இருதய சிகிச்சை பிரிவு மருத்துவராக உள்ளார்.
இவருடைய மகன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார்.
நேற்று ஆனந்தன், தனது மனைவி, பெரியம்மா மற்றும் வேலைக்கார பெண் மீனாவுடன் வீட்டில் இருந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் டாக்டர் ஆனந்தன் வீட்டுக்குள் 2 மர்ம நபர்கள் புகுந்தனர். அவர்கள்
திடீரென்று தாங்கள் கொண்டு வந்த துப்பாக்கியை காட்டி ஆனந்தனை மிரட்டி வீட்டின் பீரோ சாவியை வாங்கினர். பீரோவில்
இருந்த ரூ.3 லட்சம் பணம், 75 சவரன் நகைகளை கொள்ளையடித்தனர்.
பின்னர் ஆனந்தனையும், அவருடைய மனைவி, பெரியம்மா, வேலைக்காரி மீனாவையும் அறையில் கட்டிப்போட்டுவிட்டு அந்த
2 மர்ம நபர்களும் கொள்ளையடித்த பணம், நகைகளுடன் தப்பினர்.
கொல்கொத்தா துறைமுகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் திட்டம் அம்பலம்! Sub marraines நிறுத்தப்பட்டுள்ளது,
மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஹால்டியா துறைமுகத்தில் இந்த
வாரம் பாகிஸ்தான் கப்பல் படையின் உதவி பெறும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த
திட்டமிட்டுள்ளதாகவும், பாதுகாப்பை பலப்படுத்தும்படியும் மத்திய அரசு
எச்சரிக்கை விடுத்தது. இந்த தகவல் துறைமுக பாதுகாப்பை கவனித்துவரும் மத்திய
தொழில் பாதுகாப்பு படைக்கு அனுப்பப்பட்டது.
இதைத் தொடர்ந்து மத்திய தொழில்பாதுகாப்பு படை, போலீசார், துறைமுக
நிர்வாகத்தினர் கலந்து ஆலோசித்து 24 மணி நேரமும் துறைமுகம் மற்றும்
சுற்றுவட்டார பகுதிக்கு பலத்த பாதுகாப்பு போட்டுள்ளனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)









