செவ்வாய், 7 ஜனவரி, 2014

சரத் பவார்: காங்., உடன் கூட்டணி கிடையாது ! உங்க கொள்கையை கண்டு நான் வியக்கிறேன் .....

மும்பை : ''காங்கிரசுடன், மகாராஷ்டிராவில் மட்டுமே கூட்டணி அமைப்போம். மற்ற மாநிலங்களில், தனியாகவே தேர்தலை சந்திப்போம்,'' என, தேசியவாத காங்., தலைவரும், மத்திய விவசாய அமைச்சருமான, சரத் பவார் கூறியுள்ளார்.மகாராஷ்டிராவில், காங்., - தேசியவாத காங்., கூட்டணி, பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இங்கு, இந்த கூட்டணி தான், தற்போது ஆட்சியில் உள்ளது. இந்நிலையில், தேசியவாத காங்., தலைவரும், மத்திய விவசாயத் துறை அமைச்சருமான, சரத் பவார் கூறியதாவது:கடந்த லோக்சபா தேர்தலில், மகாராஷ்டிராவில், எங்கள் கட்சி, 22 தொகுதிகளிலும், காங்கிரஸ், 26 தொகுதிகளிலும் போட்டியிட்டன. இந்தாண்டில் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், தொகுதி பங்கீடு குறித்து, இன்னும் பேச்சுவார்த்தை துவங்கவில்லை. ஆனால், வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் போட்டியிடுவோம். ஏற்கனவே வைத்துள்ள எந்த தொகுதியையும், காங்கிரசுக்கு விட்டுத் தர மாட்டோம்.மகாராஷ்டிராவை தவிர, குஜராத், கோவா, மத்திய பிரதேசம், உ.பி., ஒடிசா, அசாம் ஆகிய மாநிலங்களில், காங்கிரசுடன் கூட்டணி அமைக்கும் எண்ணம் இல்லை. தனியாகவே, தேர்தலை சந்திப்போம். கேரளாவில், இடதுசாரி கட்சி கூட்டணியில், எங்கள் கட்சி அங்கம் வகிக்கும்.இவ்வாறு, சரத் பவார் கூறினார்.

சவுதியில் பறந்த விமானத்தில் இருந்து விழுந்த மனித உடல்உறுப்புக்கள்: அதிச்சியில் போலிசார்

சவுதி அரேபியா மீது பறந்த விமானத்திலிருந்து மனித உறுப்புகள் கீழே விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஜெடாவின் முஸ்ரேபா பகுதியில் மனித உறுப்புகள் சிதரிக்கிடப்பதாக பொலிசாருக்கு காலை 2.30 மணிக்கு ஒரு அழைப்பு வந்தது. தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், முதற்கட்ட விசாரணைக்கு பின் தவறுதலாக நாட்டின் எல்லையை தாண்டும் நபர்கள் சிலர் தப்பிக்க விமானத்தின் சக்கரம் வழியாக முற்பட்டிருக்கலாம், அவ்வாறு செய்யும்போது யாரேனும் உயிரிழந்திருக்கலாம். இது அவ்வாறு இறந்தவர்களின் உடல் உறுப்புகளாக இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். மேலும், விமானத்தின் லேன்டிங் கியர் பகுதியிலிருந்து உடல் உறுப்புகள் விழுந்ததாக தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. எல்லைத் தாண்டிச் செல்லும் பலர் கிடைக்கும் விமானத்தில் ஏறுவது சவுதி விமான நிலையங்களில் வழக்கமாக உள்ளது. இங்குள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் உன்னிப்பானதாக இல்லை என்பதும் இதற்கு காரணமாக கருதப்படுகிறது. 

திங்கள், 6 ஜனவரி, 2014

சுந்தர்.சி படத்தில் நடிக்க அஜீத் மறுப்பு ! DMK குஷ்புவுடன் தொழில் ரீதியான அஜீத் விரும்பவில்லை !

வீரம் படம் பொங்கலையொட்டி வரும் ஜனவரி 10ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அஜீத் தற்போது குடும்பத்தினர்களுடன் வெளிநாட்டி தங்கி ஓய்வு எடுத்து வருகிறார்.
அங்கேயே மகளின் 6வது பிறந்தநாளையும் உற்சாகமாக கொண்டாடினார். வீரம் படம் வெளியாகும் ஒருநாள் முன்பாக அதாவது வரும் 9ம் தேதி இரவுதான் அஜீத் சென்னை திரும்புகிறார். இந்நிலையில் அஜீத் குறித்து ஒரு பரபரப்பான தகவல் வெளி வந்துள்ளது.
அஜீத் வெளிநாட்டு பயணம் செய்வதற்கு முந்தைய நாள் அவரை குஷ்பு தனது கணவர் சுந்தர் சியுடன் அவருடைய வீட்டுக்கு சென்று சந்தித்தாராம். அப்போது குஷ்பு தயாரிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கும்படி கேட்டார்களாம். ஆனால் அஜீத்தோ இப்போதைக்கு தன்னுடைய முழு கவனமும் கெளதம் மேனன் படத்தில் மட்டுமே இருக்கும் என்றும் அதற்கு அடுத்த படம் என்ன என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் கூறிவிட்டாராம்.
மேலும் எதுவாக இருந்தாலும், தன்னுடைய வெளிநாட்டு பயணம் முடிந்து நாடு திரும்பியவுடன் பேசிக்கொள்ளலாம் என்று மழுப்பலாக பதில் கூறி அவர்களை அனுப்பிவிட்டாராம்.
அஜீத்துக்கு ஏற்கனவே திமுக ஆட்சியின்போது கசப்பான அனுபவம் ஏற்பட்டிருப்பதால், திமுகவில் முக்கிய தலைவராக வளர்ந்து வரும் குஷ்புவுடன் தொழில் ரீதியான உறவு வைத்துக்கொள்ள அஜீத் விரும்பவில்லை என அஜீத் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

மீண்டும் ஆப்கனிஸ்தானில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ! காது அறுப்பு, மூக்கறுப்பு, உதடுகளைத் துண்டிப்பது என்று மிகக் குரூரமான தண்டனைகள்.

உலகில் வேறெந்த தேசத்திலும் இல்லாத அளவுக்குக் கடந்த வருஷம் ஆப்கனிஸ்தானில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மிகத் தெளிவாக, தீர்மானமாக, ஆத்ம சுத்தியுடன் அரங்கேற்றப்பட்டிருக்கின்றன. தண்டனை என்ற பெயரில் சட்டபூர்வமாகவே நிறைவேற்றப்பட்ட கொடுமைகள் ஒரு பக்கம் என்றால், கிராமப்புற, ஆதிவாசி மக்கள் மத்தியில் கட்டைப் பஞ்சாயத்து கண்ணியவான்கள் தனியாவர்த்தனமாகச் செய்த அயோக்கியத்தனங்கள் அதைக் காட்டிலும் அதிகம்.
சிறைத்தண்டனை, பட்டினித் தண்டனை, பிரம்படி எல்லாம் இல்லை. காது அறுப்பு, மூக்கறுப்பு, உதடுகளைத் துண்டிப்பது என்று மிகக் குரூரமான தண்டனைகள். இந்தக் கொடுமை ஒரு பக்கமென்றால் முறை தவறிய உறவுகளுக்குத் தண்டனையாக முன்பு இருந்த கல்லால் அடித்துக் கொல்வது என்பதை தூசு தட்டி மீண்டும் மறு அறிமுகப்படுத்த ஹமீத் கர்சாயின் சட்டத்துறை அமைச்சகம் ரெட்டை ரெடி என்று பச்சைக்கொடி காட்டியிருக்கிறது.

அழகிரியின் கருத்து ஸ்டாலினுக்கு தேவையில்லையாமே ! தேவையற்ற தென்மண்டல அமைப்புச் செயலாளர் ?


கேள்வி: தேமுதிக கூட்டணி தேவையில்லை என்று தென்மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி கூறியிருக்கிறாரே?
பதில்: நான் படிக்கவில்லை. தேவையற்ற செய்திகளை நான் பார்ப்பதுமில்லை. அவசியமில்லாத செய்திகளை நான் படிப்பதுமில்லை.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் திமுக மாநாடு நடைபெறவுள்ள திருச்சியில் தீரன் நகரில் திங்கள்கிழமை ஆய்வு நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.
திருச்சியில் திமுக மாநாடு வெற்றிகரமாக நடைபெற இருக்கிறது. கழிப்பிட வசதிகளும், குளியல் அறைகளும் போதுமான அளவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 15ஆம் தேதி மாநாடு தொடங்கி 16ஆம் தேதி மாலைக்கு மேல் திமுக கூட்டணியில் சேர்ந்திருக்கக் கூடிய தலைவர்கள் எல்லாம் அதில் பங்கேற்று உரையாற்ற இருக்கிறார்கள். மாநாட்டு பந்தல் 1200 நீளமும், 600 அடி அகலமும் மாநாட்டு பந்தல் அமைய உள்ளது. மொத்தம் 250 ஏக்கர். அதில் 100 ஏக்கர் தொண்டர்களின் கார் பார்க்கிங் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது என்றார்.
கேள்வி: மாநாட்டில் கூட்டணி பற்றிய முழு அறிவிப்பு வெளியிடப்படுமா?
பதில்: கூட்டணி பற்றி தலைவர் கலைஞர் ஏற்கனவே அறிவித்திருக்கிறார்கள். ஏற்கனவே இருக்கக் கூடிய கட்சிகளோடு இணைந்து, போட்டியிட இருக்கிறோம் என்று கலைஞர் குறிப்பிட்டிருக்கிறார். வேறு ஏதேனும் கட்சிகள் சேர்ந்தால் கலைஞர் உரிய முறையில், உரிய நேரத்தில் அறிவிப்பார்.
கேள்வி: திமுக கூட்டணி தேவையில்லை. காங்கிரஸ் கட்சியோடு இணைந்ததால் இதுவும் ஊழல் கட்சிதான் என்று பாஜக சொல்கிறதே?
பதில்: அதை அவர்களிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும்.
கேள்வி: தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடந்ததா?
பதில்: தேமுதிகவை பொறுத்தவரை ஏற்கனவே கலைஞர் அவர்கள், வந்தால் மகிழ்ச்சி என்று அறிவித்திருக்கிறார். அதையொட்டி நேற்றையதினம் நானும் அதைத்தான் வழிமொழிந்து குறிப்பிட்டு காட்டியிருக்கிறேன். அதைத்தான் இப்போதும் வழிமொழிகிறேன்.

சிதம்பரம் நடராசர் ஆலயத்தை அரசே நடத்த தனிச்சட்டம் கொண்டு வரவேண்டும் கி. வெங்கட்ராமன்

சிதம்பரம் நடராசர் ஆலய நிர்வாகத்தைத் தமிழக அரசு ஏற்றது செல்லாது என உச்சநீதிமன்றம்
அளித்த தீர்ப்பு குறித்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச்செயலாளர்
கி.வெங்கட்ராமன் அளித்த அறிக்கை ''தில்லை நடராசர் ஆலயத்தின்
நிர்வாகத்தை தமிழக அரசு ஏற்று நடத்தியது செல்லாது என உச்சநீதி மன்றம் இன்று
(06.01.2014) அளித்துள்ள தீர்ப்பு முற்றிலும் எதிர்பாராத ஒன்று அல்ல என்ற போதிலும்.
தமிழர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் தீர்ப்பாகும். கடந்த 2009 ஆம் ஆண்டு
தமிழக அரசு சிதம்பரம் நடராசர் ஆலயத்தை தனது இந்து சமய அறநிலையத் துறையின்
கட்டுப்பாட்டில் கொண்டுவந்து அதற்கான நிர்வாக அலுவரையும் நியமித்தது. இதனை எதிர்த்து சிதம்பரம் தீட்சிதர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடுத்த வழக்கை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்து தமிழக அரசின் நிர்வாகம் தொடர ஆணையிட்டது.
இத்தீர்ப்பை எதிர்த்து தீட்சிதர்களும் சுப்ரமணியம்சாமியும் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். தமிழக அரசு இதனை உரிய
முறையில் கையாள அக்கறைக் காட்டவில்லை. மூத்த வழக்கறிஞர்கள் யாரையும் நியமித்து வாதாட முன்வரவில்லை. ஏனோதானோ என்று நடத்தி வேண்டும் என்றே இந்த வழக்கை குழப்பியதோஎன்று ஐயப்பட அடிப்படைகள் உண்டு.

BJP: ராமதாஸை விடுங்க, கேப்டனைப் பிடிங்க.. ! டென்ஷனில் ராமதாஸ் : குடிப்பதை ஆதரிப்பவர்.. அவருடன் எப்படி...



சென்னை: பாஜகவுடன் கூட்டணி சேரும் மூடில் பாமக இருந்து வந்த நிலையில் திடீரென அக்கட்சி பின்வாங்கியுள்ளதற்கு விஜயகாந்த்தை, பாஜக தலைவர்கள் போய்ச் சந்தித்து அளவளாவி விட்டு வந்ததே காரணம் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் விஜயகாந்த்தை அடுத்தடுத்து காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனும், பாஜக தலைவர்கள் பொன் ராதாகிருஷ்ணன், இல.கணேசன் ஆகியோரும் சந்தித்துப் பேசியதை பாமக ரசிக்கவில்லையாம். விஜயகாந்த்தே வேண்டாம் என்று நாங்கள் சொல்கிறோம். அப்படியும் மீறிப் போய் இவர்கள் சந்தித்தால் என்ன அர்த்தம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அதிருப்தியாகி விட்டாராம்.
டாக்டர் ராமதாஸ் உண்மையில் கடும் டென்ஷனில் இருப்பதாக சொல்கிறார்கள். அவரது போக்கைப் பார்த்தால் வரும் லோக்சபா தேர்தலில் யாருடனும் அவர் கூட்டு சேர வாய்ப்பில்லை என்றே தெரிவதாக பேச்சு அடிபடுகிறது.
சமீபத்தில் நடந்த பாமக பொதுக்குழுவில் கூட அத்தனைக் கட்சிகளையும் அவர் சரமாரியாக விமர்சித்துப் பேசினாராம். இதனால் அவர் யாருடனும் கூட்டணி சேர வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது.

திருட்டு தீட்சிதர்கள் – தோழர் ராஜூ உரை – ஆடியோ தில்லை கோயிலை காப்பாற்றுவோம்


தில்லைக் கோயில் மீதான தமிழ் மக்களின் உரிமையை நிலைநாட்டுவோம்!
தமிழ் வழிபாட்டுரிமையை நிலைநாட்டுவோம்!
கொலை வழக்கில் சங்கராச்சாரிகள் விடுதலை : நடந்தது என்ன?
என்ற தலைப்பில் நவம்பர் 30, 2013 – சனிக்கிழமை சென்னை தியாகராயநகர் செ.தெ.நாயகம் மேல்நிலைப்பள்ளியில் மனித உரிமை பாதுகாப்பு மையம் நடத்திய அரங்கக் கூட்டத்தில்,  சிதம்பரம் நடராசர் கோயிலை தீட்சிதர்கள் கைப்பற்றுவதற்கு உச்சநீதிமன்ற வழக்கில் சுப்பிரமணிய சாமியும் தமிழக அரசும் செய்யும் கூட்டுச் சதியைக் குறித்து வழக்கறிஞர் சி ராஜூ நிகழ்த்திய உரை.
எம்பி3 கோப்பு டவுன்லோட் – 39.9 MB
எம்பி3 கோப்பு டவுன்லோட் – 10 MB (குறைந்த பிட்ரேட்) vinavu.com 

கல்யாண சமையல் சாதம் ! வித்தியாசமான முறையில் திருமணத்தை எடுத்துக் காட்டியுள்ளது

சமீபத்தில் வெளியான தமிழ்த் திரைப்படமான 'கல்யாண சமையல் சாதம்' படம் பார்த்த அனைவரின் பாராட்டையும் பெற்றது. இந்தப் படம் புதிய இயக்குநர் ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கத்தில் நடிகர் பிரசன்னாவும், நடிகை லேகா வாஷிங்டனும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளிவந்திருந்தது. விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போகும் ஒரு ஜோடியினருக்கு ஏற்பட்ட ஒரு தனிப்பட்ட பிரச்சினையைக் கூறுவதாகப் படம் அமைந்திருந்தது.
இந்தப் படத்தைப் பார்த்த நடிகர் கமல்ஹாசன் அதன் தயாரிப்புக் குழுவினரைத் தனது வீட்டிற்கு வரவழைத்துப் பாராட்டினார். காதல் காமெடிப்படமான இதன் தயாரிப்பாளர்கள் தான்தான் அவர்களுக்கு திரையுலகில் பெரிய ஈடுபாட்டை அளித்தது என்று தெரிவித்திருந்தனர். இதனைக் கேட்டதும் எனக்கு இந்தப் படம் நன்றாக ஓடவேண்டுமே என்ற நடுக்கம் தோன்றியது. ஆனால் பலரது பாராட்டுகளையும் பெற்று இந்தப் படம் வெற்றியடைந்ததை என்னிடம் கூறிய தயாரிப்புத்தரப்பு இனி நான் இதுகுறித்து கவலை கொள்ள வேண்டாம் என்றும் கூறினர் என்று தான் பேசும்போது நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

கோயிலை தீட்சிதர்களின் தனிச்சொத்தாக்கியிருக்கிறது உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ! பார்பனர்களிடம் தோற்றுவிட்ட தமிழகம்

ஜெயலலிதா, தீட்சிதர்கள்
தீட்சிதர்களுடனும் சுப்பிரமணியசாமியுடனும் கள்ளக்கூட்டு வைத்துக் கொண்டு செயல்படுகிறது ஜெயலலிதா அரசு.சென்னை உயர்நீதிமன்ற அமர்வின் இறுதி தீர்ப்பின் படி 2009 –ம் ஆண்டில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட சிதம்பரம் நடராசர் கோவிலை மீண்டும் தீட்சிதர்களின் வசமே ஒப்படைக்கும் வண்ணம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. 40 ஏக்கர் பரப்பளவுள்ள கோயிலும், சுமார் 2,700 ஏக்கர் நிலமும், பல கோடி மதிப்புள்ள நகைகளும் கோயிலின் அர்ச்சகர்களான தீட்சிதர்களின் கட்டுப்பாட்டுக்குப் போய்விட்டது. தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கோயிலை, தீட்சிதப் பார்ப்பனர்களின் தனிச்சொத்தாக்கியிருக்கிறது உச்ச நீதிமன்றத் தீர்ப்பு. பார்பனர்களிடம் தோற்றுவிட்ட தமிழகம்

மன்சூர் அலிகானின்அதிரடி சாதனைகள் சாதனைகள் சாதனைகள் ! 50 முட்டை குடித்து, பீர் பாட்டில் உடைத்து வயிற்றின் மேல் பாறாங்கல் உடைத்து


பரபரப்பு, பப்ளிசிட்டிக்காக பல கோக்கு மாக்கு சமாச்சாரங்களைச் செய்வதில் மன்சூர் அலிகான், இன்னொரு ஹூஸைனி. தன் சொந்தப் படங்களுக்கு மன்சூர் அலிகான் வைக்கும் பெயர்களே ஏடாகூடமாகத்தான் இருக்கும்.
ராஜாதிராஜ ராஜ குலோத்துங்க ராஜமார்த்தாண்ட ராஜகம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன், ராவணன், வாழ்க ஜனநாயகம், வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு , என்னைப்பார் யோகம் வரும் மற்றும் லொள்ளுதாதா பராக் பராக்... -இவையெல்லாம் மன்சூர் அலிகான் இதற்கு முன் தன் சொந்தப் படங்களுக்கு சூட்டிய தலைப்புகள்
போனால் போகட்டுமென்று இந்த முறைதான் தனது சொந்தப் படத்துக்கு சிக்கனமாக அதிரடி என்று தலைப்பு வைத்துள்ளார். இந்தப் படத்தின் தொடக்க விழா நேற்று சென்னை ஆர்கேவி ஸ்டுடியோவில் நடந்தது. கலைப்புலி எஸ் தாணு , கலைப்புலி சேகரன் கலந்து கொண்டனர். மன்சூரலிகானின் மகன்களும் சிறப்பு விருந்தினர்களும் சேர்ந்து பைசா நகரத்து சாய்ந்த கோபுரம் வடிவில் பிரத்யேகமாகச் செய்யப்பட்ட கேக்கினை வெட்டினார்கள்.
இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் , பாடல்கள் எழுதி இசையமைப்பதுடன் இயக்கவும் உள்ளார் நடிகர் மன்சூர் அலிகான்.

சிதம்பரம் தீர்ப்பு ! தீட்சிதர்கள் கொண்டாட்டம்! தமிழ் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்!!

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலை தமிழக அரசு நிர்வகிக்க முடியாது என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்று தீட்சிதர்கள் வெடி, வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலை தமிழகஅரசு நிர்வகித்து வருகிறது. இதற்கு எதிராக தீட்சிதர்கள் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதனால் தீட்சிதர்கள் நிர்வாகத்தின் கீழ் போனது சிதம்பரம் நடராஜர் கோயில். தீர்ப்பு எதிரொலி- சிதம்பரம் தீட்சிதர்கள் கொண்டாட்டம்! தமிழ் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்!! இத்தீர்ப்பு வெளியானதையடுத்து சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் பொதுதீட்சிதர்களின் செயலாளர் காசிராஜன் தலைமையில் கோயிலுக்குள் வெடி, வெடித்து பக்தர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். அதேபோன்று இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினரும் கீழசன்னதியில் வெடி, வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். தீர்ப்பைக் கண்டித்து போராட்டம் அதே நேரத்தில் இத் தீர்ப்பை எதிர்த்து தீர்ப்பை சிதம்பரம் மேலவீதி பெரியார்சிலை அருகே மனித உரிமை பாதுகாப்பு மையம், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் முன்னணியினர் வழக்கறிஞர் செந்தில் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 58 பேரை டிஎஸ்பி ஆர்.ராஜாராம் தலைமையிலான போலீஸார் கைது செய்தனர். உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்த சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
tamil.oneindia.in

பார்ப்பன சதி வென்றது ! சிதம்பரம் கோவிலை மீண்டும் தீட்சிதர்கள் வசமே ஒப்படைக்க வேண்டும் .உச்சநீதிமன்றம்

சிதம்பரம் நடராசர் கோயில் 2009-ம் ஆண்டில் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. இதனை எதிர்த்து தீட்சிதர்கள் தொடுத்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தீட்சிதர்கள் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவை சந்தித்து முறையிட்டனர். உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடும் செய்தனர். இந்த வழக்கில் சிவனடியார் ஆறுமுகசாமி சார்பில் மனித உரிமைப் பாதுகாப்பு மையமும் முனைப்புடன் கலந்து கொண்டு போராடியது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதன்படி தில்லைக் கோவிலை மீண்டும் தீட்சிதர்கள் வசமே ஒப்படைக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
பார்ப்பன சதி வென்று விட்டது. நீதி தோற்று விட்டது. இது குறித்து மனித உரிமைப்பாதுகாப்பு மையத்தின் அறிக்கையை விரைவில் வெளியிடுகிறோம்..vinavu.com/

அழகிரி: வெளிப்படையாக பேசுவதே எனது பலவீனம்! அனைத்து மாவட்டங்களிலும் கோஷ்டிப் பூசல்கள் இருக்கின்றன.


திமுகவின் தென்மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி எம்.பி., தனியார் தொலைக்காட்சிக்கு ஞாயிற்றுக்கிழமை பேட்டி அளித்தார்.
அதில், காங்கிரஸ் கட்சியிடம் இருந்து திமுக விலகியதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. அதிமுவில் சேர மாட்டேன். திமுகவில்தான் தொடர்வேன். காங்கிரஸ் கட்சியில் நான் சேரப் போவதாக திமுக உறுப்பினர்களே நாடாளுமன்ற வளாகத்தில் என் முன்பே பேசினர். அதைப் போன்ற புரளிதான் இதுவும்.
ஒரு நாளும் நான் கட்சியில் பதவி கேட்டதே இல்லை. மதுரை மேற்கு, மதுரை மத்தி, திருமங்கலம் இடைத் தேர்தலில் திமுக பெரிய வெற்றி பெறும் அளவுக்கு உழைத்தேன். இதைப் பாராட்டி  தென்மண்டல அமைப்புச் செயலாளர் பதவியைக் கொடுத்தனர். ஆனால், இப்போது என் வளர்ச்சி சிலருக்குப் பிடிக்கவில்லை.
கடந்த மக்களவைத் தேர்தலில் தென் மண்டலத்தில் 10 தொகுதிகளில் 9 தொகுதிகளில் திமுக வெற்றிபெற்றது. இப்படித் தென்மண்டலத்தில் திமுகவை வளர்த்துள்ளேன்.
ஆனால் இப்போது தென்மண்டலம் தொடர்பாக என்னிடம் கலந்து ஆலோசிப்பதே இல்லை. திமுகவின் தலைவர் பதவிக்கு நான் ஆசைப்படவில்லை. அண்ணாவுக்குப் பிறகு நான் ஏற்கும் ஒரே தலைவர் கலைஞர்தான்நா.
விஜயகாந்த்தை அரசியல் தலைவராக நான் மதிக்கவில்லை. அவரிடம் அரசியல் நாகரிகம் இல்லை. கடந்த முறை தேர்தல் நேரத்தில் விஜயகாந்த்தை, "என் நண்பர், கூட்டணி தொடர்பாக நல்ல முடிவு எடுப்பார்" என்று கூறினேன்.
அதற்கு அவர், "என்கூட அழகிரி கோலி விளையாடினாரா, பட்டம் விட்டாரா' என்று கேட்டார். நண்பர் என்று கூறியதற்கு யாராவது இப்படிச் சொல்வார்களா? விஜயகாந்த், தற்போது எல்லாக் கட்சிகளுடனும் பேரம் பேசி வருகிறார்.
திமுக, அதிமுக கட்சி ஆரம்பித்து எவ்வளவு நாட்கள் ஆகிறது. இதுவரை டெல்லியில் போய் போட்டியிட்டதா. இவர் தேமுதிக பெரிய கட்சி என்று சொல்லி டெல்லியில் 11 இடங்களில் போட்டியிட்டு 2 ஆயிரம் ஓட்டு வாங்கியிருக்கிறார். இவர் கூட கூட்டணி வைத்தால் எப்படி உருப்படும்.
திமுக தனித்து நின்றால்கூட தேர்தலில் வெற்றி பெறும். விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இருக்கின்றன. இதைக் கொண்டே தேர்தலைச் சந்திக்கலாம். திமுகவில் அனைத்து மாவட்டங்களிலும் கோஷ்டிப் பூசல்கள் இருக்கின்றன.

பிரேமலதா:இத்துப்போன' நடிகரை வெச்சு கேப்டனை விமர்சித்த திமுக !

சென்னை: 'இத்துப்போன' நடிகரை வெச்சு கேப்டனை திமுக விமர்சித்ததை இன்னமும் மறக்கவில்லை என்று தேமுதிக பொதுக்குழுவில் விஜயகாந்த் மனைவி பிரேமலதா பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. லோக்சபா தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற தேமுதிக பொதுக்குழுவில் விஜயகாந்த் மனைவி பிரேமலதா திமுகவை கடுமையாக தாக்கி பேசினார். அவர் பேசியதாவது: கடந்த தி.மு.க., ஆட்சியில் எங்கள் திருமண மண்டபத்தை இடித்தனர். வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. இத்துபோன நடிகர் ஒருவரை வைத்து கேப்டனுக்கு எதிராக எவ்வளவு கொச்சையாக பேச வைக்க முடியுமோ அவ்வளவு கொச்சையாக பேச வைத்தனர். அதை தங்களின் டிவியில் நேரடியாக ஒளிபரப்பும் செய்து அசிங்கப்படுத்தினர். ஜெயலலிதாவும், இப்போது வழக்கு மேல் வழக்கு போட்டு வருகிறார். கட்சியை விட்டு எட்டு பேர் போனாலும் 80 லட்சம் தொண்டர்கள் இருக்கின்றனர். எட்டு கோடி தமிழக மக்கள் மனதில் தே.மு.தி.க. உள்ளது என்றா பெறமலத காட்டம் 
tamil.oneindia.in

இளம் நட்சத்திரம், பாகேஸ்வரி பாலகணேசன்.! பெண்களை நாதஸ்வரம் வாசிப்பதற்கு அனுமதிப்பது அரிய செயல்


அசுர வாத்தியமான நாதஸ்வரத்தைக் கையாள்வது மாபெரும் கலை. இந்தக் கலையை கைவரப்பெற்று பிரகாசித்த பெண்மணி, நம் தலைமுறையில் மதுரை பொன்னுத்தாய். ஷேக் சின்ன மௌலானாவின் பெயர்த்தி சுபாணி காலிஷா உள்பட இன்றைக்கு நாதஸ்வரம் வாசித்துக்கொண்டிருக்கும் பெண்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இந்த வரிசையில் பிரகாசித்துக்கொண்டிருக்கும் இளம் நட்சத்திரம், பாகேஸ்வரி பாலகணேசன். ஏழு வயதிலேயே நாதஸ்வரப் பயிற்சியை தன்னுடைய தந்தையிடம் தொடங்கியவர். இவரின் தந்தை பிரபல நாதஸ்வர வித்வான் சர்மா நகர் பி.வி.என். தேவராஜ். பத்து வயதிலேயே அரங்கேற்றத்தை நிகழ்த்தியிருக்கிறார் பாகேஸ்வரி.

ஏப்ரலில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டம்

நாடாளுமன்றத் தேர்தலை ஏப்ரல் மாதம் பிற்பாதியில் தொடங்கி மே மாதம் வரை 5 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் ஆயத்தமாகி வருவதாக தேர்தல் ஆணையத்தின் உயர் அதிகாரிகள் மட்டத்தில் கூறப்படுகிறது.
நாடே பெருமளவில் எதிர்பார்க்கும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்த அறிவிப்பு பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.
நாடாளுமன்றத் தேர்தலோடு, ஆந்திரம், ஒடிசா, சிக்கிம் ஆகிய 3 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலும் நடத்தப்படும் என தெரிகிறது.
இந்த அறிவிப்பிற்கு முன்னர் 2014-15 இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யும் வகையில் ஒரு முறை மக்களவை கூடும். தவிர, ஊழலுக்கு எதிரான சட்ட மசோதாக்கள் சிலவற்றை தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்றும் வகையில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் ஒன்று நடைபெறும் என கூறப்படுகிறது.
நடப்பு மக்களவையில் ஆயுள் காலம் ஜூன் 1-ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது என்பது கவனிக்கத்தக்கது. tamil.thehindu.com/

ஞாயிறு, 5 ஜனவரி, 2014

திருவாரூர் தங்கராசு மரணம்! ரத்தகண்ணீர் திரைப்படத்திற்கு வசனம் எழுதிய நவீன சிந்தைனை மரபின் மூத்த அறிவாளி

1521537_10203156494979543_1958554309_nதிருவாரூர் தங்கராசு திராவிடகழகத்தின் தூணாக பெரியார் காலத்தில் இருந்தவர். எம்.ஆர்.ராதா நடித்து புகழ்பெற்ற 'ரத்தகண்ணீர்' திரைப்படத்திற்கு வசனம் எழுதியவர்.
சென்னையில் வசித்து வந்த இவர் உடல்நலக்குறைவு காரணமாக ஞாயிற்றுக்கிழமை காலமானார் என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் நவீன சிந்தனையை பெரியாரே துவக்கி வைக்கிறார்.
2000 ஆண்டுகளாக நம்பிக்கொண்டிந்த புனிதங்களை இந்து மதத்தை பார்ப்பனியத்தை கடவுளை தலைகீழாக்கி நொறுக்கியவர் பெரியாரே. 1925 க்குப் பிறகு தமிழகத்தில் புதிய எதிர் சிந்தனை மரபை அவரே உருவாக்கினார். அதையே தொடந்து மக்களிடம் கல்லடியும், செருப்பு வீச்சையும் எதிர்கொண்டு அஞ்சாமல் தொடர்ந்து பிரச்சாரமும் செய்தார்.
ராமாயணம், மகாபாரதம், பெரிய புராணம் இதன் பெருமைகளும் அதனூடக பார்ப்பன மற்றும் பார்ப்பனரல்லாத ஆதிக்க ஜாதிக்கர்களின் ஜாதித் திமிருமே, தமிழகத்தின் கலை வடிவங்களாக இருந்தன.
திரும்பும் திசையெங்கும் தெருக்கூத்து, நாடகம், தமிழ் இசை, கர்நாடக சங்கீதம், கதாகாலட்சேபம் என்று எளிய மக்களின் கலைவடிவங்கள் முதல் ஆதிக்ககாரர்களின் கலை வடிவம் வரை இதே கதைதான்.

நர்சிங் மாணவி இறந்தது எப்படி? உடலில் காயங்கள் உள்ளதால் அவரை கொலை செய்து எரித்திருக்கலாம்.

திருச்சி: தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த வாரணாங்குடியை சேர்ந்தவர் ராஜேந்திரன். வல்லம் மின்வாரிய அலுவலகத்தில் லைன்மேனாக வேலை செய்கிறார். இவரது மகள் கீதா (21). திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் தங்கி 3ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை கீதாவை, பலத்த தீக்காயங்களுடன் அரசு மருத்துவமனையில் கல்லூரி நிர்வாகத்தினர் சேர்த்தனர். கீதா மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டதாக கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
இதுகுறித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். மாணவி கீதா, செவிலியர் தேர்வில் தோல்வி அடைந்ததால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார் என்றும், கீதாவுக்கும் அவரது உறவினர் துரைராஜ் என்பவருக்கும் 6 மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்ததும், குடும்ப பிரச்னையில் அவர் தற்கொலை செய்து கொண் டார் எனவும் இரு வேறு தகவல்கள் வெளியாயின.

திருமணத்துக்கு முன் ‘செக்ஸ்’ உறவு நீதிக்கு புறம்பானது: டெல்லி கோர்ட்டு தீர்ப்பு


 கற்பழிப்பு குற்றம் சாட்டப்பட்ட வாலிபர் விடுதலை செய்யப்பட்டார்.

புதுடெல்லி, ஜன. 5–
‘‘திருமணத்துக்கு முன் ‘செக்ஸ்’ உறவு வைப்பது நீதிக்கு புறம்பானது. இதை எந்த மதமும் ஏற்காது’’ என டெல்லி கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
பஞ்சாபை சேர்ந்த இளம் பெண் ஒருவர் அலுவலகத்தில் பணிபுரிந்தார். அப்போது தன்னுடன் வேலை பார்த்த 29 வயது வாலிபருடன் நட்புடன் பழகினார். அப்போது திருமணம் செய்வதாக வாலிபர் அளித்த உறுதி மொழியின் பேரில் அவருடன் அப்பெண் பல முறை ‘செக்ஸ்’ உறவுவைத்துக் கொண்டார்.
அதன் பிறகு அப்பெண்ணை திருமணம் செய்ய வாலிபர் மறுத்து விட்டார். எனவே, அப்பெண் போலீசில் அளித்த புகாரின் பேரில் அவர் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இச்சம்பவம் கடந்த 2011–ம் ஆண்டு மே மாதம் நடந்தது. 

ஆம் ஆத்மி 300 இடங்களில் லோக்சபா தேர்தலில் போட்டியிட முடிவு..


டெல்லி சட்டசபைத் தேர்தலில் கிடைத்த நல்ல வரவேற்பைத் தொடர்ந்து அடுத்து ஹரியானா மாநில சட்டசபைத் தேர்தலிலும் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடுகிறது ஆம் ஆத்மி கட்சி. அதேபோல வருகிற லோக்சபா தேர்தலில் 300 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தவும் அது தீர்மானித்துள்ளது. ஹரியானா சட்டசபைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக கட்சியின் மூத்த தலைவரும், அரசியல் கொள்கை வகுப்புப் பிரிவுத் தலைவருமான யோகேந்திர யாதவ் அறிவிக்கப்படவுள்ளார். 300 இடங்களில் லோக்சபா தேர்தலில் போட்டியிட ஆம் ஆத்மி முடிவு.. ! ஆம் ஆத்மி கட்சியின் செயற்குழுக் கூட்டம் நேற்று தொடங்கி இன்று வரை நடந்தது. இதில் லோக்சபா தேர்தல் வியூகம் குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் யாதவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாடு தழுவிய அளவில் ஆம் ஆத்மி கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தவுள்ளோம்.

கார்ப்பரேட் பிரபலங்கள் ஆம் ஆத்மியில் சேர காரணம் ?

புதுடில்லி : டில்லி சட்டமன்ற தேர்தலுக்கு பின் ஆம் ஆத்மி கட்சியில் உறுப்பினர்களாக இணைபவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வருகிறது. குறிப்பாக கார்ப்பரேட் நிறுவனங்களைச் சேர்ந்த பணியாளர்களும், முக்கிய பிரமுகர்களும் ஆம் ஆத்மியில் அதிகளவில் இணைந்து வருகின்றனர்.

இன்போசிஸ் முன்னாள் இயக்குனர் பாலகிருஷ்ணன் ஜனவரி 01ம் தேதியன்று ஆம் ஆத்மியில் இணைந்தார். முன்னதாக டிசம்பர் 31ம் தேதி ராயல் பேங்க் ஆப் ஸ்காட்லாந்து நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஓ., மீரா சன்யாலும் ஆம் ஆத்மியில் சேர்ந்துள்ளார். கார்ப்பரேட் நிறுவனங்களைச் சேர்ந்த மக்கள் ஆம் ஆத்மி கட்சியை அதிகம் விரும்புவது ஏன் என பாலகிருஷ்ணனுடன் பணியாற்றிய மோகன்தாஸ் பாய் தனியார் டிவி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார். பேட்டியில் அவர் கூறியதாவது : அவர்கள் ஆம் ஆத்மியில் சேர்ந்து வருவதற்கு மிக முக்கியமாக காரணம் உள்ளது;

சிறீரங்கத்தில் தீண்டாமைக் கொடுமை! அக்கிரகாரப் பகுதியில் தாழ்த்தப்பட்ட பெண் அஞ்சல் ஊழியராகப் பணியாற்றக்கூடாதா?


சிறீரங்கம், ஜன.4- சிறீரங்கம் அஞ்சல் அலுவலகத் தில், அஞ்சல் பணியாளராகப் பணியாற்றிய தாழ்த் தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை - அக்கிரகாரப் பகுதியில் பணியாற்றக் கூடாது - ரெங்கநாதர் கோவில் இருக்கும் பகுதியில் தாழ்த்தப்பட்ட பெண் பணியாற் றுவதா? என்று கூறிப் பார்ப்பனர்கள் எடுத்த முயற்சி வெற்றி பெற்றுள்ளது. அந்தத் தாழ்த்தப்பட்ட பெண் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். இது சிறீரங்கம் திருச்சி மாவட்டத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி நவல்பட்டு அண்ணாநகரைச் சேர்ந்தவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சரஸ்வதி (36). கணவரை இழந்த இவர் கடந்த 28.7.2012 ஆம் ஆண்டு  சிறீரங்கம் சாத்தார வீதியில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்தில் அஞ்சல் பட்டுவாடா ஊழியராக பணியில் சேர்ந்துள்ளார். அப்பணியில் சேர்ந்த சரஸ்வதியை, பீட் எண் ஒன்றில் பணி செய்யும்படி அஞ்சல் அலுவலக அதிகாரி கூறியிருக்கிறார். அவரும் பணியில் ஈடு பட்டு வந்தார். தீண்டாமை வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் என்ன செய்கிறது?

மாற்று எரிபொருளாக எத்தனால் வருமா? கமிஷன் பெற்றுக்கொண்டு இந்தியாவில் முட்டுக்கட்டைபோடுகிறதா நிறுவனங்கள் ?

ஆண்டுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலை உயர்வையே அதிர்ச்சியோடு பார்த்தவர்களுக்கு இப்போது வழக்கமாகி விட்டது. குறைந்தபட்சம் மாதத்திற்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பான அறிவிப்பு ஊடகங்களில் பிரதான செய்தியாக இடம் பிடிக்கிறது. அன்றாடம் வேலைக்கு செல்ல இரு சக்கர வாகனம் அல்லது கார் பயன்படுத்துபவர்களாக இருந்தால் எரிபொருளுக்கென தனியாக பட்ஜெட் போட்டு முன் கூட்டியே சேமிக்க பழகி விட்டனர். மற்ற பொருட்களின் விலைவாசி உயர்வுக்கும் அடிப்படை காரணமாக டீசல் விலை உயர்வு அமைந்து விடுகிறது.
கடந்த 2010ம் ஆண்டு ஜூன் மாதம் ரூ.47.93க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல் தற்போது ரூ.74.74க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப உள்நாட்டில் விலையை உயர்த்திக்கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. இதை சாதகமாக பயன்படுத்தி ஒரு ஆண்டுக்குள் 9 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. ஒருபுறம் எதிர்க்கட்சிகள், பல மாநில முதல்வர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதை கடமையாக கொண்டுள்ளனர்.

அழகிரி ஆதரவாளர்கள் கூண்டோடு நீக்கம் ஏன்?


 மதுரை:மதுரையில் தி.மு.க., தென் மண்டல அமைப்பு செயலாளர் அழகிரியின் பிறந்த நாளுக்கு, 25 நாட்கள் இருக்கும் நிலையில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் விவகாரம் எதிரொலியாக, அவரது ஆதரவாளர்கள் கூண்டோடு நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்காக நகர் அமைப்பையே கலைத்து புதிய பொறுப்புக்குழுவை தலைமை நியமித்துள்ளது.தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி இன்று(ஜூன் 5) பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனால் அவரது ஆதரவாளர்கள் பல நகரங்களில் தி.மு.க.,வின் இலக்கியமே, இலக்கணமே, எங்கள் தலைவியே, ஜான்சி ராணியே என போஸ்டர்களை அச்சிட்டு ஒட்டினர். இதனால் அதிர்ச்சியுற்ற அழகிரி ஆதரவாளர்கள், அவரது (அழகிரி) பிறந்த நாளுக்கு 25 நாட்கள் இருக்கும் நிலையில் மதுரை முழுவதும் வாழ்த்து போஸ்டர்களை ஒட்டினர்.