செவ்வாய், 17 ஜூலை, 2012

கார்த்தியின் சம்பளம்14 கோடி

நடிகர் கார்த்தியின் சம்பளம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ரூ.14 கோடிக்கு சம்பளம் தருவதாக தயாரிப்பாளர் ஒருவர் கார்த்தியிடம் பேசியுள்ளாராம்.பருத்தி வீரன், ஆயிரத்தில் ஒருவன், நான் மகான் அல்ல, பையா, சிறுத்தை, சகுனி ஆகிய 6 படங்கள்தான் கார்த்தி நடித்தவை.
 இவற்றில் ஆயிரத்தில் ஒருவன் மற்றும் சகுனி பாக்ஸ் ஆபீஸில் சுமாராகப் போயின. பருத்தி வீரன் க்ளாஸிக் என்ற அந்தஸ்தைப் பெற்றது. நான் மகான் அல்ல நல்ல பெயரைக் கொடுத்தது.சிறுத்தை ஒரு ரீமேக். ஆனாலும் நல்ல வசூல். கடைசியாக வந்த சகுனிக்கு நல்ல ஓபனிங். ஆனாலும் எதிர்ப்பார்த்த மாதிரி படம் இல்லாததால், அந்த ஓபனிங்கை தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை.
அடுத்து அலெக்ஸ் பாண்டியன், பிரியாணி என பெரிய படங்களைக் கையில் வைத்துள்ள கார்த்திக்கிடம் அடுத்த பட கால்ஷீட்டுக்கு ரூ 14 கோடி பேசியுள்ளாராம் ஒரு தயாரிப்பாளர். கார்த்திக் மேலும் யோசித்தால், மேலும் ஒரு கோடி தரவும் தயார் என்கிறாராம். விஜய், அஜீத்  போன்றோர் பல படங்களில் நடித்த பிறகுதான் ரூ 10 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கினார்கள்

கால்வாயில் உடல் தோண்டி எடுப்பு: உறவினர்கள் கதறல் : பேராசிரியருக்கு பல பெண்களுடன் தொடர்பு

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
பூந்தமல்லி :சென்னை பேராசிரியரால் கொன்று புதைக்கப்பட்ட இளம் மனைவியின் உடல் கிருஷ்ணா கால்வாய் அருகே இன்று தோண்டி எடுக்கப்பட்டது. 
உடலை பார்த்ததும் உறவினர்கள் கதறி அழுதனர். பேராசிரியர் நடராஜனுடன் தொடர்பு வைத்திருந்த பேராசிரியைகள், மாணவிகள் உள்பட பலரிடமும் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதால், மாணவிகள் பீதியடைந்துள்ளனர்.  நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்த காளிபாளையத்தை சேர்ந்தவர் நடராஜன் (32). சென்னை அடுத்த படப்பையில் தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி விஜயலட்சுமி (23). மனைவியை சொந்த ஊரான காளிபாளையத்திலேயே விட்டுவிட்டு, பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கத்தில் வாடகை வீட்டில் தங்கி, கல்லூரிக்கு நடராஜன் சென்று வந்துள்ளார். கடந்த மாதம் 6,ம் தேதி சேலத்தில் தோழி வீட்டு திருமணத்துக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற விஜயலட்சுமி வீடு திரும்பவில்லை. Ôமனைவியை காணவில்லை என பரமத்திவேலூர் போலீசில் நடராஜன் புகார் கொடுத்தார். அதேநேரம், வரதட்சணை கேட்டு நடராஜன் மற்றும் குடும்பத்தினர் விஜயலட்சுமியை கடத்தியதாக அவரது தந்தை சுப்பிரமணியனும் புகார் அளித்தார். 3 தனிப்படை அமைத்து விஜயலட்சுமியை போலீசார் தேடி வந்தனர். நடராஜனிடமும் விசாரித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 11,ம் தேதி நாமக்கல் கோர்ட்டில் நடராஜன் சரணடைந்தார். அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது, மனைவியை கொன்று புதைத்துவிட்டதாக திடுக்கிடும் தகவலை நடராஜன் தெரிவித்தார்.

மாணவியின் முடியை வெட்டிய ஆசிரியைக்கு 1 மாதம் சிறை, ரூ.1,000 அபராதம்

கோவை: பள்ளிக்கு இரட்டை சடையில் வராததால் மாணவியின் முடியை வெட்டிய ஆசிரியைக்கு ஒரு மாத சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை சாய்பாபா காலனியைச் சேர்ந்தவர் சாந்தி (15)( பெயர் மாற்றப்பட்டுள்ளது).அவர் கடந்த 2008ம் ஆண்டு தடாகம் ரோட்டில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். அப்போது அவர் ஒரு நாள் பள்ளிக்கு இரட்டை சடை போடாமல் சென்றுவிட்டார்.
அவர் மற்ற மாணவிகளைப் போன்று இரட்டை சடையில் வராததைக் கண்டுபிடித்த விளையாட்டு ஆசிரியை ஷோபனா சாந்தியை அழைத்துச் சென்று முட்டிபோட வைத்தார். மேலும் அவரது முடியையும் வெட்டிவிட்டார். நெடுநேரம் முட்டி போட்டிருந்ததால் சாந்தியால் வீட்டிற்கு தானாக நடந்து செல்ல முடியவில்லை. இதையடுத்து அவர் தோழிகளின் உதவியுடன் வீட்டிற்கு சென்றார்.

ஹெலன் டேவிட்சனின் சித்தியைக் கொன்றது கூலிப்படையா?

 Gangsters Killed Dmk Mp S Relative
 குமரி அருகே திமுக எம்.பி. ஹெலன் டேவிட்சனின் சித்தியைக் கொன்று நகைகளை கொள்ளையடித்த சம்பவத்தில் கூலிபடையினருக்கு தொடர்பு இருக்குமா என்பது குறித்து எஸ்.பி. தீவிரமாக விசாரித்து வருகிறார்.
குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள குமாரபுரம் தோப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜார்ஜ் எட்வர்ட். பஹ்ரைனில் வேலை பார்க்கிறார். அவரது மனைவி பேபி(50). அவர்களுக்கு சகாய மேபிள்ஷா என்ற மகளும், சகாய எக்ஸ் விபன் என்ற மகனும் உள்ளனர். பிள்ளைகள் இருவருக்கும் திருமணமாகி அவர்கள் வேறு ஊரில் வசிக்கின்றனர். குமாரபுரம் தோப்பூரில் உள்ள பங்களாவில் பேபி தனியாக வசித்து வந்தார். அவர் கன்னியாகுமரி மக்களவை தொகுதி எம்.பி. ஹெலன் டேவிட்சனின் சித்தி ஆவார். நேற்று முன்தினம் பேபி வீட்டில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். பேபியின் காது அறுக்கப்பட்டு கம்மல் உள்ளிட்ட ரூ.3 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக 4 தனிப்படையினர் விசாரித்து வருகின்றனர்.
நள்ளிரவில் தான் கொலை நடந்து இருக்கிறது. பேபி படுக்கை அறைக்கு செல்லும் முன்பே கொள்ளையர்கள் வீட்டுக்குள் புகுந்துள்ளனர். பேபிக்கு தெரி்ந்த நபர்களுக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மமதா:பிரணாப்பை ஆதரிக்கிறோம்

கொல்கத்தா: குடியரசுத் தலைவர் தேர்தலில் பல திருப்பங்களை ஏற்படுத்தி வந்த மமதா பானர்ஜி தமது இறுதி முடிவில் அதிரடியாக ஒரு பல்டி அடித்திருக்கிறார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் பிரணாப் முகர்ஜியை திரிணாமுல் காங்கிரஸ் ஆதரிக்கும் என்று அதிரடியாக அறிவித்திருக்கிறார். 
குடியரசு துணைத் தலைவர் தேர்தல் பற்றி பின்னர் அறிவிப்பதாகவும் மமதா கூறியுள்ளார்.
கொல்கத்தாவில் தமது கட்சியினருடனான ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மமதா கூறியதாவது:
குடியரசுத் தலைவர் தேர்தலில் அப்துல்கலாமைத்தான் நிறுத்த விரும்பினேன்.ஆனால் இதர கட்சிகளின் ஆதரவு அதற்கு கிடைக்கவில்லை. தேர்தலில் வாக்களிக்காமல் இருந்தாலும் திரிணாமுல் காங்கிரஸின் வாக்குகள் வீணாகிவிடும்.
பிரணாப் முகர்ஜியை ஆதரிக்குமாறு பிரதமர் மன்மோகன்சிங்கும் கேட்டுக் கொண்டார்.பிரணாப்புக்கு வாக்களிக்க விருப்பம் இல்லை. இருப்பினும் மக்களின் விருப்பத்துக்காக பிரணாப் முகர்ஜியை ஆதரிக்கிறோம். மேலும் கூட்டணி நெருக்கடியால் இந்த முடிவை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது என்றார் அவர்.

அரக்கோணம் .ஒரே வீட்டில் பெண் கொலை இருவர் வெட்டுக்காயங்கள்

கழுத்தை அறுத்து பெண் படுகொலை: 2 பேர் உயிர் ஊசல் அரக்கோணம் அதாவுல்லா தெருவைச் சேர்ந்தவர் தீனதயாளன், ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். இவரது மகள் ஷர்மிளா (24), இவருக்கு மாப்பிள்ளை பார்க்க அவரது பெற்றோர் வெளியூர் சென்றி ருந்தனர். இந்நிலையில் நேற்று மாலை 5.30 மணிக்கு இவரது வீட்டு பாத்ரூம் வென்டிலேட்டரில் இருந்து புகை வந்தது. இதை மேல்மாடியில் வசித்து வரும் ஷர்மிளாவின் உறவினர் பார்த்து கீழே ஓடி வந்து பார்த்த போது ஷர்மிளா கழுத்து மற்றும் தலையில் பலத்த வெட்டு காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். 

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் வீட்டின் மற்றொரு அறைக்குள் சென்று பார்த்ததில் ஒரு ஆணும், பெண்ணும் படுக்கையில் நிர்வாண நிலையில் கழுத்து தலையில் வெட்டு காயம் மற்றும் தீக்காயங்களுடன் கிடந்தனர். இது குறித்து அரக்கோணம் டவுன் போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.எஸ்.பி. சீத்தாராமன், இன்ஸ்பெக்டர் பொன்னம்பலம், சப்- இன்ஸ்பெக்டர் சங்கர், தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயக்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தீயணைப்புத்துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுப்படுத்தினர். பின்னர் படுகாயங்களுடன் கிடந்த 2 பேரையும் மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத் திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

Dubai தமிழக மீனவர் சுட்டுக் கொலை அமெரிக்க தூதர் வருத்தம் தெரிவித்தார்

டெல்லி: துபாயில் அமெரிக்க கடற்படையினரால் தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நான்சி பெளல் வருத்தம் தெரிவித்துள்ளார்.
துபாயில் தமிழக மீனவர்கள் மீதான அமெரிக்க கடற்படையினரின் துப்பாக்கிச் சூடு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று காலை இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் ரஞ்சன் மத்தாயை அமெரிக்க தூதர் நான்சி பெளல் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது துபாய் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததற்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் இச்சம்பவம் தொடர்பாக முழு விசாரணை நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக அபு தாபியில் உள்ள தூதரகமும் ஜபேல் அலியில் உள்ள தற்காலிக தூதரும் முழு ஒத்துழைப்பும் வழங்குவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நம்புவோமாக:அந்த கதைக்கும் மாற்றான் கதைக்கும் சம்பந்தம் இல்லை

தமிழ் சினிமாவில் இதெல்லாம் சகஜமப்பா!

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா மாறுபட்ட இருவேடங்களில் நடித்துள்ள படம் ‘மாற்றான்’. மாற்றான் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அந்த டிரெய்லரில் வரும் காட்சிகளில் சூர்யாவின் பெருமுயற்சி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது. படத்தின் மேக்கிங் பிரம்மிப்பை ஏற்படுத்தியது.>மாற்றான் படத்தின் டிரெய்லர் வெளியிட்டபோது பேசிய கே.வி.ஆனந்த் ”நான் ஷங்கர் சாருடன் விமானத்தில் வரும்போது, ஒட்டிப்பிறந்த இருவரைப் பற்றி ஒரு புத்தகத்தில் படித்தேன். அதை அடிப்படையாக வைத்து தான் இந்த படத்தில் வரும் சூர்யாவின் கதாபாத்திரத்தை தேர்வு செய்தேன்” எனக் கூறினார். ஆனால் மாற்றான் படத்தில் வரும் சூர்யாவின் கதாபாத்திரங்கள் 2003-ஆம் ஆண்டு ஹாலிவுட் இயக்குனர்களான ஃபெரெல்லி பிரதர்ஸ் எனப்படும் இரட்டையர்களால் இயக்கப்பட்ட ‘ஸ்டக் ஆன் யூ’ என்ற படத்தின் கதாபாத்திரங்களை போலவே காட்சியளிக்கிறது.

குழந்தைகளை அனாதையாக்கும் பெற்றோருக்கு 7 ஆண்டு சிறை

மதுரை, ஜூலை 16- குழந்தைகளை ஆபத்தான வகையில், அனாதையாக விட்டுச் செல்வது கொலைக்கு சமமானது. இதற்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும்,''
 என, மதுரை எஸ்.பி., பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார். மதுரை அவனியாபுரம் வல்லானந்தபுரத்தில் நேற்று முன் தினம் மாலை 5 மணிக்கு, சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது முட்புதருக்குள் குழந்தை அழும் சத்தம் கேட்டது. அங்கு சென்று பார்த்த போது, தொப்புள் கொடியுடன், பிறந்து ஒரு மணி நேரமே ஆன பெண் குழந்தை கிடந்தது. பின், காவல்துறையினர் மீட்டு, 108' ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தமிழ்த் தேசியத்தின் பெயரால் பாசிச இனவெறி! பாகம் -3

Tamilnadu சரக்கு வாங்கனால் பிரியாணி இலவசம்

கோவை:எதற்குத் தான் ஆடித் தள்ளுபடி என்றில்லை... "மூணு பீர் வாங்கினா, ஒரு பீர்; ஒரு பிளேட் பிரியாணி இலவசம்...' என, "குடிமகன்'களையும் வசீகரம் செய்து, கவர்ந்திழுக்கத் துவங்கி விட்டனர் மது பான விற்பனையாளர்.

ஆடி மாதத்தில், சுபமுகூர்த்த நிகழ்ச்சிகள் இருக்காது. அதனால், ஆடி மாதத்தில் ஜவுளி, எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை, "டல்' அடிக்கும். எனவே இம்மாதத்தில், வியாபாரத்தை இலக்காகக் கொண்டு, ஆடித் தள்ளுபடி விற்பனையை, வர்த்தகர்கள் அறிமுகம் செய்தனர்.
ஜவுளி கடைகளில் துவக்கம்:ஆடித் தள்ளுபடி விற்பனை, முதலில் ஜவுளிக் கடைகளில் துவங்கியது. துணி வகைகளுக்கு, ஐந்து முதல், 50 சதவீதம் தள்ளுபடி அறிவித்து, வியாபாரத்தில் அதிரடியைப் புகுத்தி வருகின்றனர்.

வயதான தம்பதியை மலம் சாப்பிட வைத்த பஞ்சாயத்தார்

லதேகர்:பில்லி, சூனியம் செய்ததாக குற்றம் சாட்டி, வயதான தம்பதியை மலத்தை சாப்பிட வைத்ததோடு, சிறுநீரையும் குடிக்க வைத்த சம்பவம், ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் லதேகர் மாவட்டம் புரோ கிராமத்தைச் சேர்ந்தவர் ராபர்ட் லக்ரா, 65. இவரது மனைவி கொலஸ்டினா, 60. இவர்கள் பில்லி, சூனியம் செய்ததாகவும், அதனால், கிராமத்தில் உள்ள பசுக்கள், எருமைகள் மற்றும் ஆடுகள் திடீர் திடீரென இறந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதனால், கடந்த 8ம் தேதி, இந்த வயதான தம்பதியர், கிராம பஞ்சாயத்தார் முன் நிறுத்தப்பட்டனர்.
"தாங்கள் பில்லி, சூனிய வேலைகளில் ஈடுபடவில்லை' என, தம்பதியர் மறுத்தும், அதை ஏற்க, கிராம பஞ்சாயத்தார் மறுத்து விட்டனர். மலத்தை சாப்பிடுவதோடு, சிறுநீரையும் குடிக்க வேண்டும் என, தண்டனை விதித்தனர். கட்டாயப்படுத்தி அவர்களை மலத்தை சாப்பிட வைத்தனர் மற்றும் சிறுநீரை குடிக்க வைத்தனர்.சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். 11 பேரை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். இத்தகவலை, லதேகர் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் கிரந்தி குமார் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.

கேரளாவில் இளம் பெண்கள் விற்பனை. திருமணம்? விற்கப்படுவது?

மூணாறு:கேரளாவில் தோட்டத் தொழிலாளர்களின் வறுமையை பயன்படுத்தி, இளம் பெண்கள் கொத்தடிமையாக வீட்டு வேலையில் ஈடுபடுத்தப்படுவதும், திருமணம் என்ற பெயரில் விற்கப்படுவதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

கேரளா, பீர்மேடு தாலுகாவில் ஏராளமான தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. பல தோட்டங்கள் நஷ்டத்தால் முடங்கியுள்ளன. இதை நம்பி இருந்த தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். வறுமையால், குழந்தைகள் படிப்பை தொடர முடியவில்லை. வண்டிபெரியார் பகுதியில் சீருடை வாங்க வசதியில்லாததால், பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், இதற்கு உதாரணம். வேலை தேடி, ஏராளமானோர் வெளி மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

கொத்தடிமை:தொழிலாளர்களின் வறுமையை பயன்படுத்தி, பாம்பனார், ஏலப்பாறை, வண்டிபெரியார் பகுதிகளில் இளம் பெண்களை குறிவைத்து ஏஜன்ட்கள் செயல்படுகின்றனர். குடும்பத்தினருக்கு பண ஆசை காட்டி, பெண்களை, "வீட்டு வேலைக்கு' என, வெளிமாநிலங்களுக்கு அனுப்புகின்றனர். பீர்மேடு தாலுகாவில் கடந்த ஆறு மாதங்களில் 12 க்கும் மேற்பட்ட பெண்கள் இதுபோல அனுப்பப்பட்டுள்ளனர். "மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பளம்; மாணவிகளாக இருந்தால் தொடர்ந்து படிக்கலாம்' எனக்கூறி அழைத்துச் செல்கின்றனர். இதற்காக பெண்களின் பெற்றோருக்கு, 5000 ரூபாய் வரை கொடுக்கின்றனர். இதுபோல பல பெண்கள், தமிழக வீடுகளில் வேலைக்கு உள்ளனர். இதற்காக, ஏஜன்ட்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை கமிஷன் வழங்கப்படுகிறது.

திங்கள், 16 ஜூலை, 2012

விலையில்லா ஆடு, மாடு, மிக்ஸிக்கெல்லாம் ஜெய்ராம் ரமேஷா பணம் கொடுப்பார்?

ஜெயலலிதா ஆவேசம்: பன்னீர்செல்வத்தை ஃபாலோ பண்ணினாரா ஜெய்ராம் ரமேஷ்?

Viruvirupu,
“தமிழக குடிநீர் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியை முறையாக செலவு செய்யவில்லை என்பதால், அடுத்த கட்ட நிதி ஒதுக்க முடியாது” என மத்திய அரசு கை விரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் ஜெயலலிதா, கொடநாட்டில் இருந்து டில்லிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், “ஜூன் 1-ம் தேதி நிலவரப்படி ஏற்கனவே ரூ.236 கோடியே 59 லட்சத்தை தமிழக அரசு செலவிடவில்லை. எனவே தற்போது ஒதுக்க வேண்டிய தவணைத் தொகை ரூ.138.58 கோடியை ஒதுக்க இயலாது. செலவிடப்படாமல் உள்ள தொகையை செலவிட்ட பின்னரே அடுத்த கட்ட நிதி ஒதுக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு கொடநாட்டில் இருந்து ஆட்சி புரியும் முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தில், “தமிழகத்துக்கு 2012 மார்ச் மற்றும் ஏப்ரல் வரை ஒதுக்கப்பட்ட தொகை ரூ.168.77 கோடி. தேசிய ஊரக குடிநீர் திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.87.45 கோடியை தமிழக அரசு செலவிட்டுள்ளது. அதாவது, கிடைத்த நிதியில் பாதியளவுக்கு மேலாக செலவு செய்திருக்கிறோம்.

பில்லா 2 - என்ன சொல்றாங்க ஜனங்க...?


Billa 2 Public Opinion
அஜீத்தின் பில்லா 2 படத்துக்கு அவரது ரசிகர்கள், பொதுவான மக்கள் மத்தியிலிருந்து கலவையான கருத்துகள் வெளியாகிவருகின்றன.
அஜீத்தின் தீவிர ரசிகர்கள், இந்தப் படத்தை மங்காத்தாவை விட சூப்பராக இருக்கு என்று தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாட, சாதாரண ரசிகர்கள், இதெல்லாம் ரொம்ப ஓவர் என்கிறார்கள்.
படம் வெளியான இரு தினங்களுக்குள் பத்திரிகை, ஊடக விமர்சனங்கள் வெளியாகிவிட்டன. 99 சதவீதம் எதிர்மறையாகத்தான் வந்திருக்கின்றன.
அதேநேரம், படத்துக்கு முதல் மூன்று தினங்களுக்கான டிக்கெட்டுகள் முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதால், ஓபனிங்குக்கு குறைச்சலில்லை.

Obama:அன்னிய முதலீட்டை இந்தியா தடை செய்யக்கூடாது:

வாஷிங்டன்:நேரடி அன்னிய முதலீட்டை, இந்தியா தடை செய்யக்கூடாது என, அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
இந்தியா குறித்து, அதிபர் ஒபாமா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:சில்லறை வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில், இந்தியா நேரடி அன்னிய முதலீட்டை தடை செய்கிறது. இதனால், இந்தியாவில், முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறைவதாக, அமெரிக்க வர்த்தகர்கள் என்னிடம் கவலை தெரிவித்துள்ளனர்.

சிறுமி கற்பழிப்பை மறைக்க பெற்றோரிடம் பேரம்

மூணாறு:கேரள சிறுமி கற்பழிக்கப்பட்டதை மறைக்க அவரது பெற்றோரிடம், தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., தரப்பில் பல லட்ச ரூபாய் பேரம் பேசியது, விசாரணையில் தற்போது தெரிய வந்துள்ளது.
கேரளா, பம்பனார் லான்ட்ரம் எஸ்டேட்டைச் சேர்ந்த சந்திரன் - சுசிலா தம்பதி மகள் மேகலா, 15 (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பெரம்பலூர் தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ராஜ்குமார் வீட்டில், வேலை செய்து வந்தார். சில நாட்களுக்கு முன், அங்கு கற்பழித்து கொல்லப்பட்டார்.இது தொடர்பாக ராஜ்குமார், உதவியாளர் அன்பரசன், மகேந்திரனை, கேரள போலீசார் கைது செய்துள்ளனர்.

கலைஞர் சிதம்பரம் திடீர் சந்திப்பு ....அதிருப்தி?

சென்னை:தி.மு.க., தலைவர் கருணாநிதியை, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், நேற்று சந்தித்து பேசினார். ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தல் குறித்து, இருவரும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
அடுத்த மாதம் 7ம் தேதி, துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. நேற்று முன்தினம், டில்லியில் பரதமரின் இல்லத்தில், ஐ.மு., கூட்டணி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில், துணை ஜனாதிபதி வேட்பாளராக, ஹமீது அன்சாரி அறிவிக்கப்பட்டார். அக்கூட்டத்தில், தி.மு.க., சார்பல், பார்லிமென்ட் நிலைக்குழுத் தலைவர் டி.ஆர்.பாலு பங்கேற்று, தனது கட்சியின் ஆதரவை தெரிவித்தார்.
அதிருப்தி:ஜனாதிபதி தேர்தலில், ஐ.மு., கூட்டணி சார்பல் போட்டியிடும் வேட்பாளர் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு கேட்டு, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் இல்லத்திற்கு, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி ஏற்கனவே வந்தார். ஆனால், துணை ஜனாதிபதி தேர்தலில், ஐ.மு., கூட்டணி சார்பல் போட்டியிடும் வேட்பாளர் குறித்து, தன்னிடம் காங்கிரஸ் மேலிடம் கலந்து ஆலோசிக்கவில்லை என்ற அதிருப்தி, கருணாநிதிக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஞாயிறு, 15 ஜூலை, 2012

அஜித்தை தவிர வேறொன்றும் இல்லை! பில்லா 2


       முதல் விஷயம், படத்தில் அஜித் அகதியாகவே இருக்கிறாரே தவிர அவர் இலங்கை அகதி என்று எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை. ( ரொம்ப சாமர்த்தியமாக நடந்துகொண்டதாக இயக்குனர் நினைத்துக் கொள்ளலாம்! ) இரண்டாவது அவர் அகதிகளுக்கு எந்த உதவிகளும் செய்யவில்லை. 
பில்லா படத்தில் எவ்வளவு தூரம் நடந்தாரோ, அதைவிட அதிக தூரம் பில்லா-2 வில் நடந்திருக்கிறார். சண்டை, கொலை, கொள்ளை என படம் முழுக்க ஒரே ரத்தத் தெரிப்பு தான். குருவி சுடுவது மாதிரி ஆட்களை சுடுவது, காய்கறி வெட்டுவது மாதிரி மனிதர்களை வெட்டுவது என படம் முழுக்க டுமீல் டுமீல்!  சதக் சதக்! சத்தங்கள் தான். படத்தின் ஹைலைட்டாக நிற்பது ஒரே ஒரு விஷயம், அது அஜித்தின் உழைப்பு!

பரபரப்புக்காக டிவி நிருபர் செய்த வேலையா?

 Guwahati Molestation Two More Arrested Si Suspended

அசாம் இளம்பெண்ண சிகரெட்டால் சுட்டுக் கொடூரம்: பரபரப்புக்காக டிவி நிருபர் செய்த வேலையா?

கவுகாத்தி: அசாம் தலைநகர் கவுகாத்தியில் 20-க்கும் மேற்பட்ட குடிகார கும்பல் ஒன்றிடம் இளம்பெண் சிக்கி சீரழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தேசிய பெண்கள் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
அசாமில்
டெல்லியில் இருந்து சனிக்கிழமையன்று கவுகாத்தி வந்த பெண்கள் ஆணையக் குழு அந்த இளம்பெண்ணை நேரில் சென்று சந்தித்தது. குடிகார கும்பலில் இருந்த காட்டுமிராண்டி ஒருவன் அந்த பெண்ணை சிகரெட்டால் சுட்டு காயப்படுத்தியதும் தற்போது தெரியவந்துள்ளது.

முன்பே இறந்து விட்டாரா சில்வஸ்டர் ஸ்டாலோன் மகன்?

Sylvester Stallone S Son Dead Days Reports
சில்வஸ்டர் ஸ்டாலோனின் மகன் சேஜ், பல நாட்களுக்கு முன்பே இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சில்வஸ்டர் ஸ்டாலோனின் மகன் சேஜ் தனது லாஸ் ஏஞ்சலெஸ் வீட்டில் இறந்து கிடந்தார். அவரது உடல் 13ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடலை மீட்ட போலீஸார் தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சேஜின் உடல் 13ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டாலும் கூட அதற்கு முன்பே அவர் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனால்தான் வழக்கமான பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பாமல், தடயவியல் சோதனைக்கு போலீஸார் உடலை அனுப்பியிருப்பதாக கூறுகிறார்கள்.
மேலும் உடலைப் பரிசோதிக்க வந்த டாக்டர்களும் கூட வந்த வேகத்தில் அங்கிருந்து கிளம்பிப் போயுள்ளனர். எனவே உடல் அழுகிய நிலையில் இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

1 லட்சம் செலவில் பிரம்மாண்ட பூமாலை! தல ரசிகர்கள் கொண்டாட்டம்

அஜீத்குமார் நடிப்பில் சக்ரி டொலட்டி இயக்கியுள்ள பில்லா-2 திரைப்படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸானது. சென்னையில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் ரிலீஸான அஜீத் படத்தை பார்க்க அஜீத்தின் ரசிகர்கள் பெருமளவில் குவிந்தனர். 

தனது ரசிகர் மன்றத்தை கலைத்தாலும் ரசிகர்களின் ஆதரவு அஜீத்திற்கு குறையவில்லை. பல தியேட்டர்களில் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், பல விதமான பேனர்களும் வைத்திருந்தனர். இதில் விசேஷமாக பெங்களூரைச் சேர்ந்த “பிளாட்டினம் அஜீத் ரசிகர்கள்’ என்ற பெயரில் இயங்கும் ரசிகர்கள் சென்னை ஆல்பட் தியேட்டரில் பிரம்மாண்ட்ட கட்-அவுட் வைத்து, அந்த கட்-அவுட் அளவிற்கு பெரிய மாலையும் அணிவித்திருந்தனர்
அவர்களிடம் கேட்டபோது ”பெங்களூர்ல இது மாதிரி செய்யுறது வழக்கம் தான். பெங்களூர்ல அஜீத் ரசிகர்கள் அதிகம். பில்லா-2 ஷூட்டிங் பெங்களூர்ல நடந்த போது அஜீத் ரசிகர்கள் எப்படியாவது அவர் கூட பேசிடனும்னு ஆர்வத்துல கூட்டம் சேந்துட்டாங்க. அதனால கோவப்பட்டு தல அங்கிருந்து ஷூட்டிங் கேன்ஸல் பண்ணிட்டு கெளம்பிட்டாரு.  
அப்பறம் ஒரு முறை பெங்களூர்ல அவர் கார் சிக்னல்ல இருந்தபோது கூட ரசிகர்கள் அவர பார்க்க முயற்சி பண்ணாங்க. ஆனா அவர் இறங்கல. அவர் மேல உள்ள பாசத்துல காருக்கே பாலாபிஷேகம் செஞ்சிட்டாங்க” என்று கூறினார். தீபாராதனை, தேங்காய் உடைத்தல், பூசணிக்காய் உடைத்தல் என அமர்க்களமாக இருந்தது பில்லா-2 முதல் காட்சி. 
அந்த பிரம்மாண்ட்ட கட்-அவுட் மற்றும் பூமாலை பெங்களூருவில் இருந்து ரயிலில் வரவழைக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. 
இனி என்ன நாம சீக்கிரமே வல்லரசாவோம்லே  

நிலக்கரி ஊழல்... சொல்ல வார்த்தைகள் இல்லை

ஸ்பெக்ட்ரம் ஊழல், வரலாறு காணாத ஊழல் என்று சித்தரிக்கப்பட்டது. நிலக்கரி ஊழலின் பரிமாணத்தை சொல்வதற்கோ உண்மையிலேயே வார்த்தைகள் இல்லை. மன்மோகன் சிங் அரசு ‘கோல் இந்தியா‘ என்ற பொதுத்துறை நிறுவனத்துக்குச் சொந்தமான பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலக்கரி வயல்களை கார்ப்பரேட் முதலாளிகளுக்குச் சொந்தமாக்கியிருக்கிறது. இந்த பகற்கொள்ளையைத்தான் ‘நிலக்கரி ஊழல்‘ என்று ஊடகங்கள் அழைக்கின்றன. மத்திய கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் இந்த ஊழல் குறித்த செய்தி இடம் பெற்றிருப்பதை டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடு (மார்ச் 22, 2012) அம்பலப்படுத்தியது. 2004 முதல் 2009 வரையிலான காலத்தில் நடந்திருக்கும் இக்கொள்ளையில் ஜிண்டால், டாடா, அனில் அகர்வால், ஆதித்ய பிர்லா, எஸ்ஸார், அதானி, ஆர்செலார்மிட்டல், ஜெய்ஸ்வால், அபிஜித் குழுமம், எலெக்ட்ரோ ஸ்டீல் காஸ்டிங் லிமிடெட், பூஷன் பவர் அன்ட் ஸ்டீல் லிமிடெட் போன்ற பன்னாட்டுதரகு முதலாளிகளுக்கு நாட்டின் பொதுச்சொத்தை அறுத்து கறிவிருந்து வைத்திருக்கிறார் மன்மோகன் சிங்.

தமிழக காங்கிரசில் சிதம்பரம் அணி கரைகிறது

ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் வேட்பாளரான பின், மத்திய அரசில் சிதம்பரத்தின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. ஆனால், மாநில அரசியலில் அவரது கோஷ்டியில் இருந்த பிரமுகர்கள், நெல்லிக்கனிகள் போல சிதறி ஓட்டம் பிடிப்பதால், வலு குறைந்து வருகிறது.
நாட்டின் பாதுகாப்பு பிரச்னைகள், மத்திய அரசின் கொள்கை முடிவுகள், முக்கிய திட்டங்கள் குறித்த முடிவுகளை எடுக்கும் போது, சிதம்பரத்தின் ஆலோசனையை பிரதமரும், சோனியாவும் கேட்கும் அளவுக்கு, முக்கிய தலைவராக டில்லியில், அவர் வலம் வருகிறார். தமிழக காங்கிரசில்  மத்திய அமைச்சர் வாசன் அணிக்கு அடுத்த அணியாக, சிதம்பரம் அணி திகழ்கிறது.
அரசியலில் கவனம்: வாசன் அணிக்கு இணையாக, தமிழகம் முழுவதும் சிதம்பரத்தின் அணியை பலப்படுத்தும் வகையில், அவரது ஆதரவாளர்கள் ஒரு சிலர், மூளையாகச் செயல்பட்டனர்.

அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுக்கு அமைச்சர் பதில் அளிப்பாரா?

சென்னை: ""கோவையில் நுழைய விடாமல் தடுத்த, அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ.,வுக்கு, அமைச்சர் முனுசாமி முதலில் பதில் சொல்ல வேண்டும்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவர், நேற்று வெளியிட்ட அறிக்கை: அம்பத்தூர் பகுதியில், குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுவதாகவும், ஒரு குடம் தண்ணீர், ஐந்து ரூபாய்க்கு விற்பனையாகிறது என்றும், பத்திரிகையில் செய்தி வெளியாகியிருந்தது.
மக்கள் அறிவார்கள்: அதுகுறித்து, அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என, நான் கேட்டேன். பத்திரிகை செய்திக்கு பதில் கூறாமல், அமைச்சர் முனுசாமி என்னை விமர்சிக்கிறார். எனக்கு பதில் சொல்வதை விட, கோவைக்கு சென்ற அவரை நுழைய விடாமல் தடுத்த, அவர் கட்சியின் எம்.எல்.ஏ., வுக்கு, முதலில் பதில் சொல்ல வேண்டும்.