கழுத்தை அறுத்து பெண் படுகொலை: 2 பேர் உயிர் ஊசல்
அரக்கோணம் அதாவுல்லா
தெருவைச் சேர்ந்தவர் தீனதயாளன், ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். இவரது மகள்
ஷர்மிளா (24), இவருக்கு மாப்பிள்ளை பார்க்க அவரது பெற்றோர் வெளியூர் சென்றி
ருந்தனர். இந்நிலையில் நேற்று மாலை 5.30 மணிக்கு இவரது வீட்டு பாத்ரூம்
வென்டிலேட்டரில் இருந்து புகை வந்தது.
இதை மேல்மாடியில்
வசித்து வரும் ஷர்மிளாவின் உறவினர் பார்த்து கீழே ஓடி வந்து பார்த்த போது
ஷர்மிளா கழுத்து மற்றும் தலையில் பலத்த வெட்டு காயத்துடன் உயிருக்கு
போராடிக் கொண்டிருந்தார்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் வீட்டின் மற்றொரு அறைக்குள் சென்று பார்த்ததில் ஒரு ஆணும், பெண்ணும் படுக்கையில் நிர்வாண நிலையில் கழுத்து தலையில் வெட்டு காயம் மற்றும் தீக்காயங்களுடன் கிடந்தனர். இது குறித்து அரக்கோணம் டவுன் போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.எஸ்.பி. சீத்தாராமன், இன்ஸ்பெக்டர் பொன்னம்பலம், சப்- இன்ஸ்பெக்டர் சங்கர், தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயக்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தீயணைப்புத்துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுப்படுத்தினர். பின்னர் படுகாயங்களுடன் கிடந்த 2 பேரையும் மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத் திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
அதன் பின்னர் போலீசார் விசாரணை நடத்தியதில் படுகாயமடைந்தவர் பள்ளூரைச் சேர்ந்த மாசிலாமணி மகன் மாதவன் (35), அரக்கோணம் அகன் நகரைச் சேர்ந்த ஆஷா (27), என்பது தெரியவந்தது. ஆஷா திருமணமாகி அகன் நகரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். படுகாயமடைந்த ஆஷா, ஷர்மிளா ஆகியோர் சென்னை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆஷா இறந்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக