குமரி அருகே திமுக எம்.பி. ஹெலன் டேவிட்சனின்
சித்தியைக் கொன்று நகைகளை கொள்ளையடித்த சம்பவத்தில் கூலிபடையினருக்கு
தொடர்பு இருக்குமா என்பது குறித்து எஸ்.பி. தீவிரமாக விசாரித்து
வருகிறார்.
குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள குமாரபுரம்
தோப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜார்ஜ் எட்வர்ட். பஹ்ரைனில் வேலை
பார்க்கிறார். அவரது மனைவி பேபி(50). அவர்களுக்கு சகாய மேபிள்ஷா என்ற
மகளும், சகாய எக்ஸ் விபன் என்ற மகனும் உள்ளனர். பிள்ளைகள் இருவருக்கும்
திருமணமாகி அவர்கள் வேறு ஊரில் வசிக்கின்றனர். குமாரபுரம் தோப்பூரில் உள்ள
பங்களாவில் பேபி தனியாக வசித்து வந்தார். அவர் கன்னியாகுமரி மக்களவை
தொகுதி எம்.பி. ஹெலன் டேவிட்சனின் சித்தி ஆவார். நேற்று முன்தினம் பேபி
வீட்டில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். பேபியின்
காது அறுக்கப்பட்டு கம்மல் உள்ளிட்ட ரூ.3 லட்சம் மதிப்புள்ள நகைகள்
கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக
4 தனிப்படையினர் விசாரித்து வருகின்றனர்.நள்ளிரவில் தான் கொலை நடந்து இருக்கிறது. பேபி படுக்கை அறைக்கு செல்லும் முன்பே கொள்ளையர்கள் வீட்டுக்குள் புகுந்துள்ளனர். பேபிக்கு தெரி்ந்த நபர்களுக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இது தொடர்பாக எஸ்.பி. பிரமேஷ் குமார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தார். 2 பெண்கள், உள்ளூர் ரவுடிகளிடம் விசாரணை நடந்து வருகிறது. ஒரு வேளை பேபியைக் கூலிப்படையினர் கொன்றிருக்கலாமோ என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக