மதுரை, ஜூலை 16- குழந்தைகளை ஆபத்தான
வகையில், அனாதையாக விட்டுச் செல்வது கொலைக்கு சமமானது. இதற்கு ஏழு ஆண்டுகள்
சிறை தண்டனை கிடைக்கும்,''
என, மதுரை எஸ்.பி., பாலகிருஷ்ணன்
எச்சரித்துள்ளார். மதுரை அவனியாபுரம் வல்லானந்தபுரத்தில் நேற்று முன் தினம்
மாலை 5 மணிக்கு, சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது முட்புதருக்குள்
குழந்தை அழும் சத்தம் கேட்டது. அங்கு சென்று பார்த்த போது, தொப்புள்
கொடியுடன், பிறந்து ஒரு மணி நேரமே ஆன பெண் குழந்தை கிடந்தது. பின்,
காவல்துறையினர் மீட்டு, 108' ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனையில்
சேர்த்தனர்.
மாவட்ட எஸ்.பி., பாலகிருஷ்ணன் தெரிவித்ததாவது:
சிறுவர்கள் உடனடியாக
பார்த்திருக்காவிட்டால், இக்குழந்தை நாய், எலி அல்லது எறும்பு கடிக்கு
ஆளாகியிருக்கும். கள்ளத்தொடர்பு அல்லது திருமணம் ஆகாத பெண்ணுக்கு பிறந்ததா
என விசாரிக்கிறோம். இதுதொடர்பாக, திருப்பரங்குன்றம் மகளிர்
காவல்நிலையத்தில் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 317ன்கீழ் (12 வயதுக்குட்பட்ட
குழந்தையை அபாயகரமாக விட்டுச் செல்லுதல்) வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்
ளது.இதற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும். பலநூறு இணையர்கள் குழந்தையை
தத்தெடுக்க காத்திருக்கும்போது, இதுபோன்ற செயல் கொலைக்கு சமமானது.
இதுகுறித்து கிராமங்களில் காவல் துறையினர் மற்றும் தொண்டு நிறுவனங்கள்
மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம், என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக