கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருதகிரீஸ்வரர் கோவிலில் கடந்த 5 வருடங்களாக ஆருத்ரா தரிசனம் உள்ளிட்ட விழாக்காலத்தின் போதும், தினசரி இரவு 8.30 மணி அர்த்த ஜாம பூஜையின் போதும் பழம்பெரும் இசைக்கருவிகளான உடன், கொம்பு, சங்கு, நெடுந்தாரை, எக்காலம், உடுக்கை போன்ற கைலாய இசைக்கருவிகளை வாசித்து சிறுவர்கள் இளைஞர்கள் ஆன சிவனடியார்கள் இறைவனை வழிபட்டு வந்தனர்.
இந்த இசையின் காரணமாக இரவில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. சாதாரண உழைக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. இது அர்ச்சகர்களான கோயில் சிவாச்சாரியார்கள் கண்ணை உறுத்தியது. ஊர் பெரிய மனிதர்கள் சிலரின் மூலம் கோயில் நிர்வாக அதிகாரியிடம் அதிக சத்தமாக இருப்பதால் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கிறது என்று கொடுத்த புகாரின் மூலம் மேற்படி சிவனடியார்கள் இசைக்கருவிகளை வாசிக்க கூடாது என 13.07.2011 தடை விதிக்க பட்டது.