திங்கள், 7 நவம்பர், 2011

44 நிகர்நிலை பல்கலை.களில் தேவையான தகுதிகள் குறைவு

மத்திய அரசால் அங்கீகாரம் ரத்து செய்யப்படவிருந்த 44 நிகர்நிலை பல்கலைக்கழங்களில், யு.ஜி.சி (பல்கலைக்கழக மானிய குழு)  வரையறைப்படி தேவையான தகுதிகள் குறைவாக உள்ளது என உச்சநீதிமன்றம் நியமித்த குழுவும் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் வர்த்தக ரீதியில் செயல்படுவதாகவும், இதனால் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.
இது குறித்து ஆய்வு செய்த டாண்டன் குழு, நாட்டில் உள்ள 44 நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் யு.ஜி.சி விதித்த வரையறை இல்லை, தனிப்பட்ட நபர்களின் ஆதிக்கத்தால் நிர்வகிக்கப்படுகிறது.

அமைச்சர்கள் தங்களை அமைச்சர்கள் என்று சொல்லவே பயப்படுகிறார்கள்: வைகோ


கோவை வி.கே.கே.மேனன் ரோட்டில் உள்ள ம.தி.மு.க. அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்துரையாடினார். இந்த கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசியதாவது;
தற்போது தமிழக அமைச்சர்கள் அனைவரும் தங்களை அமைச்சர்கள் என்று சொல்லவே பயப்படுகிறார்கள். காரணம் அவர்களது பதவி எப்போது வேண்டும் என்றாலும் பறிக்கப்படலாம்.
ம.தி.மு.க.வில் உள்ள ஒரு நிர்வாகியை கட்சியை வீட்டு நீக்க வேண்டும் என்றால் ஒரு ஆண்டுவரை யோசிப்பேன். அந்த பதவியை பறிப்பதால் அவர்களது குடும்பம் எந்த அளவுக்கு பாதிக்கும் என உணர்ந்து அதன்பிறகு நடவடிக்கை எடுக்கப்படும். கட்சியை பணியை சரிவர செய்யவில்லை என்றால் நீக்கப்படுவார்கள்.
சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கவுரமான இடத்தில் நாம் இருக்கிறோம் என்பதை நாம் நிரூபிக்க இந்த தேர்தலில் போட்டியிடுகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.<

தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக- 2வது இடத்திற்குப் போன 'சன்' நியூஸ்!


Puthiya Thalaimurai and Sun News Logo
சென்னை: சன் டிவி குழும வரலாற்றிலேயே முதல் முறையாக அந்த நிறுவனத்தின் சானல் ஒன்று, 2வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
தூர்தர்ஷன் மட்டுமே இருந்து வந்த காலத்தில் மக்கள் விடிவு தேடி அலைந்தபோது விடிவெள்ளியாக வந்தது சன் டிவி. சன் டிவியின் புதுமையான மற்றும் புதுப் பொலிவுடன் கூடிய, வித்தியாசமான நிகழ்ச்சிகள் மக்கள் மனதை சட்டென்று கவர்ந்தன. அன்று முதல் இந்த நிமிடம் வரை தமிழ் மக்களின் ஏகோபித்த வரவேற்புக்குரிய தொலைக்காட்சியாக சன் டிவி விளங்கி வருகிறது.தொடர்ந்து முதலிடத்திலேயே சன் குழுமத்தின் சானல்கள் அத்தனையும் இருந்து வருவது உண்மையிலேயே மிகப் பெரிய சாதனையாக கருதப்படுகிறது. நிகழ்ச்சிகளை வழங்கும் விதம், துல்லியம், மக்கள் மனதைப் படித்து அதற்கேற்ப நிகழ்ச்சிகளை வழங்குவது, அனைவரிடமிருந்தும் தனித்துவத்துடன் தனித்து நிற்பது என பல பிளஸ் பாயிண்டுகள் இதற்குக் காரணம்.
ஆனால் முதல் முறையாக சன் நியூஸ் சானல் 2வது இடத்திற்குப் போயுள்ளது. அதுவும் நேற்று புதிதாக பிறந்த புதிய தலைமுறை சானல், சன் நியூஸ் சானலை முந்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆதரவு வழங்கும்படி மனோ கணேசனிடம் -ரணில் விக்கிரமசிங்க எழுத்து மூலம் கோரிக்கை!

கொழும்பு மாநகரசபையில் நாளை (08-11-2011) நடைபெறவுள்ள பலப்பரீட்சையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்கும்படி ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனிடம் ஐதேக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்கிரமசிங்க எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்கவின் இன்றைய (07-11-11)திகதியிடப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது கொழும்பு மாநகரசபையில் நாளை (08-11-2011) நடைபெறவுள்ள பலப்பரீட்சையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்கும்படி ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனிடம் ஐதேக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்கிரமசிங்க எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்கவின் இன்றைய (07-11-11)திகதியிடப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

2,250 ஆண்டு முன்பு உயிரை பறித்த கேன்சர் : ‘மம்மி’ சோதனையில் கண்டுபிடிப்பு!

கெய்ரோ: எகிப்தில் 2,250 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் ப்ராஸ்டேட் கேன்சரால் பாதிக்கப்பட்டு இறந்தது தெரியவந்தது. பதப்படுத்தப்பட்ட ‘மம்மி’ உடலை சிடி ஸ்கேன் செய்து பார்த்ததில் இது தெரியவந்துள்ளது. எகிப்து மம்மிகள் தொடர்பான ஆராய்ச்சி தொடர்ந்து நடந்து வருகிறது. எகிப்தில் பதப்படுத்தி புதைக்கப்பட்ட ‘மம்மி’ உடல் ஒன்று போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் உள்ள தேசிய தொல்பொருள் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. ‘எம்1’ என்று இதற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த மம்மி பற்றி தெரிந்துகொள்வதற்காக டிஜிட்டல் எக்ஸ்ரே, மல்ட்டி டிடெக்டர் கம்ப்யூட்டரைஸ்டு டோமோகிராபி, சிடி ஸ்கேன் உள்பட பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆய்வில் தெரியவந்த தகவல்கள் பற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறியிருப்பதாவது:

44 இலங்கையர்களை விரைவில் நாட்டிற்கு அனுப்பிவைக்க சுவிஸ்

குடியேற்றவாசிகளாக தங்கியுள்ள 44 இலங்கையர்களை விரைவில் நாட்டிற்கு அனுப்பிவைக்க சுவிஸ் அரசாங்கம் தீர்மானித்துள்ளது!

குடியேற்றவாசிகளாக தங்கியுள்ள 44 இலங்கையர்களை விரைவில் நாட்டிற்கு அனுப்பிவைக்க சுவிஸ் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
குடியேற்றவாசிளாக ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் சுவிட்ஸர்லாந்தில் தங்கியிருப்பதாகவும் அவர்களை விரைவில் திரும்பியனுப்புவதற்கு அந்நாட்டு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் சுவிட்ஸர்லாந்துக்கான இலங்கை தூதுவர் சட்டத்தரணி சரத் கோன்கஹகே குறிப்பிட்டார்.
குடியேற்றவாசிகளாக தமது நாட்டில் தங்கியுள்ளவர்களை மீண்டும் தாயகத்திற்கு திருப்பி அனுப்புவதற்கான சூழ்நிலை நிலவுகின்றதா என சுவிட்ஸர்லாந்து அதிகாரிகள் தம்மிடம் வினவியதாக அவர் தெரிவித்தார்

திருப்பூரில் கன மழை: ஆற்றில் வெள்ளப் பெருக்கு : சிறுமி உள்பட 14 பேர் வெள்ளத்தில் சிக்கி பலி!

திருப்பூர்: திருப்பூரில் கொட்டித் தீர்த்த கன மழையால் நொய்யல் ஆறு மற்றும் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் 10 ஆயிரம் வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தாய், மகள் மற்றும் கல்லூரி மாணவி பரிதாபமாக இறந்தனர். இதனையடுத்து இதுவரை வெள்ளத்தில் சிக்கி மொத்தம் 14 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு பெண் உள்பட 5 பேரின் கதி என்ன என்று தெரியவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வங்கக் கடலில் தொடர்ச்சியாக உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் கடந்த 2 வாரமாக பலத்த மழை பெய்தது. கோவை, திருப்பூர் மாவட்டங்களிலும் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மழை பெய்து வருகிறது. நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

சபாஷ் சரியான போட்டி! சீமானுக்கு ஒரு வில்லன்!சசிகுமார்!

சபாஷ் சரியான போட்டி! சீமானுக்கு ஒரு வில்லன்!!
-எஸ்.எஸ்.குகநாதன்:-

தனது படங்களை இலங்கைக்கு இனி விற்கமாட்டேன் என்று இயக்குநரும் நடிகருமான சசிகுமார் அறிவித்திருக்கிறார்.இலங்கையில் தமிழ்ப்படங்களை வெளியிடுகின்றபோது அவற்றை இலங்கை அரசு தணிக்கை செய்வதாகவும், தமக்கு ஒப்பில்லாத விடயங்களை குறிப்பாக ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான வசனங்களை வெட்டி எடுத்துவிட்டே வெளியிடுவதாகவும் குற்றம்சாட்டும் சசிகுமார். அதனால் இனி தனது படங்களை இலங்கையில் வெளியிட அனுமதிக்கமாட்டேன் என்றும் அறிவித்திருக்கிறார்.
ஒரு சுயாதீனமுள்ள நாடு தனது சட்டதிட்டங்களுக்கு அமைய திரைப்படங்களை வெளியிடவேண்டும் என்று நினைப்பதில் என்ன தவறை அவர் கண்டிருப்பாரோ தெரியவில்லை.சிங்கப்பூரில் வெளியிடப்படும் தமிழ்ப்படங்களில் மிக கோரமான வன்முறைக்காட்சிகள் வெட்டி எடுக்கப்படுகின்றனவே, அதற்காக அவர் இனி சிங்கப்பூருக்கும் தனது படத்தை விற்காமல் விட்டுவிடப்போகிறார்.

சகுனியில் அனுஷ்காவின் குத்தாட்டம்!

Anushka to dance single song in saguni
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை அனுஷ்கா, கார்த்தி நடித்து வரும் சகுனி படத்தில் ஒரு குத்தாட்டம் போட்டுள்ளாராம். "அருந்ததி" படம் மூலம் உச்சத்திற்கு சென்றவர் நடிகை அனுஷ்கா. தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் நம்பர்-1 நாயகியாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். கூடவே கைநிறைய படங்களும் வைத்துள்ளார். ஆரம்பத்தில் கவர்ச்சி காட்டி நடிக்க ஆரம்பித்த அனுஷ்கா, சமீபகாலமாக இதுபோன்ற வேடங்களில் நடிக்க சம்மதிப்பது இல்லையாம். அதுதானே உங்களது பெரிய பலமே என்று இயக்குநர்கள் கூறினால் சிரித்து சமாளித்து விடுகிறாராம்.

தினமலர் கொஞ்சி மகிழ்கிறதா? கருணாநிதி ஆவேசம்

சென்னை: ""கண்ணனைக் கொல்ல வந்த பூதகி போல, தினமலர் பாசமொழி பேசுவதைக் கேட்டு உடன்பிறப்புகள் யாரும் ஏமாற மாட்டார்கள். எச்சரிக்கையாகவே இருப்பர்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி ஆவேசப்பட்டிருக்கிறார்.

"உயிரினும் மேலான தலைவர் கலைஞர் அவர்களுக்கு' என்ற தலைப்பில், தி.மு.க., நிர்வாகிகளிடையே எட்டு பக்கங்கள் கொண்ட கடிதம் வினியோகிக்கப்பட்டு வந்தது. இக்கடிதத்தின் சில பகுதிகள், கடந்த 6ம் தேதி(நேற்று) வெளியான, "தினமலர்' நாளிதழின் இரண்டாம் பக்கத்தில், "உடன்பிறப்புகள் கடிதம்' என்ற தலைப்பில் செய்தியாக வெளியிடப்பட்டிருந்தது.

அந்த செய்தி தொடர்பாக, தி.மு.க., தொண்டர்களுக்கு கருணாநிதி நேற்று எழுதிய கடிதம்:"தினமலர்' நாளிதழ், தி.மு.க.,வை இடித்துச் சிதைத்து, குறுகலாக்குவதற்காக எடுக்கும் முயற்சிகளின் தொடர்ச்சியாக, உடன்பிறப்புகள் என்ற பெயரில் ஒரு கற்பனைக் கட்டுரையை வெளியிட்டுள்ளது.

SRM பஸ் விபத்து நடந்தது எப்படி? ( படங்கள் )



பெங்களூரில் இருந்து கோவைக்கு நேற்றிரவு 10.15 மணிக்கு எஸ்.ஆர்.எம். என்ற தனியார் ஆம்னி பஸ் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. குளு-குளு வசதி கொண்ட அந்த பஸ்சில் 32 பயணிகள் இருந்தனர். 
இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3.30 மணிக்கு அந்த ஆம்னி பஸ் ஈரோடு மாவட்டம் சித்தோடு என்ற ஊரில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குழிழாம்பரப்பு என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது.
நான்கு வழி சாலை என்பதால் ஆம்னி பஸ் மிக வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது பஸ்சுக்கு முன்னால் பெட்ரோல் டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.

கடற்றொழிலாளர்களது அத்துமீறல்களுக்கு நடவடிக்கை

இந்திய கடற்றொழிலாளர்களது அத்துமீறல்களுக்கு நடவடிக்கை

இந்தியஅத்துமீறிய மீன்பிடி தொடர்பில் இந்திய கடற்றொழிலாளர்களது பிரதிநிதிகளுக்கும் யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பொன்றுக்கு விரைவில் ஏற்பாடு செய்யப்படுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதிமொழி வழங்கியுள்ளார்.

அமைச்சரின் யாழ்.அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
சீரானதொரு சிறந்த நிர்வாகத்தை கட்டியெழுப்புவதனூடாகவே தொழிற்துறையை மட்டுமல்லாது அதுசார்ந்த சமூகத்தையும் வளர்த்தெடுக்க முடியும் என்பதுடன், கடற்றொழில் மேம்படுத்துவதற்காகவே எமது அமைச்சின் கீழான வடகடல் நிறுவனத்துடன் வீரவில மற்றும் நுணுவில மீன்வலை உற்பத்தி தொழிற்சாலைகளும் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

யாழ் அரச ஊழியர்களுக்கு வீடு

மாதம் 25,000 ரூபாவுக்குட்பட்ட வருமானம் பெறும் அரச ஊழியர்களுக்கு அரசின் வீட்டுத்திட்டம் வழங்குவதற்கான புதிய திட்டமொன்றை அரசாங்கம் அமுல்ப்படுத்தியுள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.
இந்த திட்டத்தின் மூலமாக வருங்காலங்களில் முன்னுரிமை அடிப்படையில் யாழ்.மாவட்டத்தில் வீட்டு வசதி செய்து கொடுக்கப்பட வேண்டிய 60,500 குடும்பங்களின் தேவையைப் பூர்த்தி செய்ததன் பின்னர் இவர்களுக்கான அரச வீடு பெற்றுக்கொடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பி்ட்டார்.
இதுவரை சுமார் 27,000 குடும்பங்களுக்கான வீடுகளை அமைத்துக் கொடுக்கவே ஒதுக்கீடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும், கொடுப்பனவு மற்றும் பிரயாணப்படி அடங்கலாக 25,000 ரூபாவிற்கு உட்பட்ட வருமானம் பெறும் அரச ஊழியர்கள் இந்தத் திட்டத்திற்குள் உள்வாங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பெற்ற பிள்ளைகளுடன் சேர விடாமல் தடுக்கும் தந்தை, நயனதாரா- தவிக்கும் பிரபுதேவா!

பெற்றெடுத்த பிள்ளைகளுடன் சேர வேண்டாம், பழைய மனைவியைப் பார்க்க வேண்டாம், பழைய வீட்டுக்குப் போக வேண்டாம் என்று தந்தை சுந்தரமும், புது மனைவியாகப் போகும் நயனதாராவும் கூறி வருவதால் பிள்ளைகளைக் காண முடியாவில் பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளாராம் பிரபுதேவா.

புலி வால் பிடித்த நாயர் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் பிரபுதேவா. எலியிடமிருந்து சிக்கி புலியிடம் போய் மாட்டியுள்ளார். நயனதாராவின் மீது மோகம் மறறும் காதலால் மனைவி ரமலத்தையும், பி்ள்ளைகளையும் விட்டுப் பிரிந்த பிரபுதேவா, ரமலத்தை விவாகரத்தும் செய்தார். அவர்களை செட்டில் செய்து விட்ட அவரால் உணர்வுகளையும், பாசத்தையும் செட்டில் செய்ய முடியவில்லையாம்.

ஞாயிறு, 6 நவம்பர், 2011

அஜித் அளவுக்குத் தான் யாரையுமே பார்த்ததில்லை என்றார்.

 
அவர் ஒருத்தர்தான் சார் மனுஷனை மனுஷனா மதிக்கிறவர். மத்தவங்க மோசம்னு எல்லாம் சொல்லலை சார். ஆனா என்னவோ அஜித் ஒருத்தர மட்டும்தான் சார் இந்த மாதிரி நான் பார்த்திருக்கேன். அவர மாதிரி இன்னொருத்தர் இனிக் கிடைப்பாரான்னு தெரியலை சார். முந்தி ஜெனரேஷன்ல ஆக்டருங்க எப்படி இருந்தாங்கன்னு எனக்குத் தெரியாது சார். ஆனா இந்த ஜெனரேஷன்ல அஜித் மாதிரி ஒரு நல்ல மனிதர் யாருமே கிடையாதுன்னு சொல்வேன் சார்!’
நேற்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான ஷூட்டிங் இருந்தது. பொதுவாக லைவ் தொலைக்காட்சிக்குச் செல்லும்போது ஒப்பனையெல்லாம் செய்ய மாட்டார்கள். ஆனால் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒப்பனை அறை ஒன்று உள்ளது. ஒப்பனைக் கலைஞர்களும் உள்ளனர். நமக்கு மேக்கப் போடாமல் விடமாட்டார்கள்.

சமச்சீர் கல்வியில் தீர்ப்பு அண்ணா நூலகத்திற்குப் பொருந்தும்!

சென்னை, நவ.6- சமச்சீர் கல்வி தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் வரிகள் அண்ணா நூலகத்தை இடமாற்றும் தமிழக அரசின் நடவடிக்கைக்கும் பொருந்தும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள்.
சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர். ராதாமன்றத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றுவதா? என்ற தலைப்பில் (நேற்று 5.11.2011) நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் தமது உரையில் குறிப்பிட்டதாவது:
அ.தி.மு.க.வின் சட்ட விரோத நடவடிக்கை
ஆட்சி என்பது ஒரு தொடர்ச்சி, குறிப்பாக சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை   குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது.
இந்தத் தடை நீடிக்கும் என்பது மட்டுமல்ல. அ.தி.மு.க. அரசு உச்சநீதிமன்றம் சென்றால்கூட ஏற்கெனவே உச்சநீதிமன்றம் சமச்சீர் கல்வியில் கொடுத்த தீர்ப்பின்படி இந்திய அரசியல் சட்ட விதிகளின்படி நூலக இடமாற்ற அறிவிப்பு நடவடிக்கை சட்ட விரோதமான நடவடிக்கை நியாய விரோதமான நடவடிக்கை என்பதற்கு உச்சநீதிமன்ற தீர்ப்புகள் இருக்கின்றன.

பல்லவ காலத்து கோவிலில் புதையல்? ரகசிய அறையை உடைக்க முடிவு

கும்மிடிப்பூண்டி : ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த, பல்லவ காலத்து சிவன் கோவிலில், முழுவதும் அடைக்கப்பட்ட ரகசிய அறை இருப்பது கண்டறியப்பட்டது. வரும் 8ம் தேதி, இந்து அறநிலையத் துறை உதவி ஆணையர் முன்னிலையில், ரகசிய அறையை உடைத்துப் பார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கும்மிடிப்பூண்டி அருகே, புது கும்மிடிப்பூண்டி கிராமத்தில், பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட தெய்வநாயகி உடனுறை சந்திரசேகரேஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலின் பல பகுதிகள் சிதிலமடைந்ததால், புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், 2010 ஆகஸ்டில், புது கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ., சின்னராஜன், கோவிலில் வழிபடச் சென்றார்.

இந்தியா கிழக்கு மாகாணத்திற்கு1200 கம்பியுட்டர்கள் அன்பளிப்பு



கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் வேண்டுகோளுக்கமைய இந்திய அரசினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட 1,200 கணணிகள் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்காக முதலமைச்சரினால் பகிர்ந்தளிக்கப்பட்டன
மேற்படி பாடசாலைகளுக்காக வழங்கி வைக்கப்பட்ட கணணிகள் உரிய வகையில் மாணவர்கள் பயன்படுத்துகிறார்களா என கண்காணிக்கும் பொருட்டு மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயதரப் பாடசாலைக்கு நேற்று முன்தினம் திடீர் விஜயம் செய்த முதலமைச்சர் மாணவர்கள் கணணிப் பயிற்சியில் ஈடுபடுவதனைப் பார்வையிடுவதனையும் குறித்த பாடசாலையின் அதிபர் ஆசிரியரோடு உரையாடுவதனையும் படத்தில் காணலாம்.



TNA பாராளுமன்ற உறுப்பினர் ஹெரோயின் போதைப் பொருள் கடத்தலில்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஹெரோயின் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக-லக்பிம தகவல் வெளியிட்டுள்ளது!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஹெரோயின் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
போதைப் பொருள் கடத்தலுடன் n;தாடர்புடைய சில நபர்களை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்திய போது இந்த தகவல் அம்பலமானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
போதைப் பொருள் வர்த்தக நடவடிக்கை குறித்து தலைமன்னார் காவல்துறையினர் தகவல்களை திரட்டியுள்ளனர்.
குறித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் நீண்ட காலமாக போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்தியாவிலிருந்து தலை மன்னார் வழியாக குறித்த பாராளுமன்ற உறுப்பினர் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கலைஞர் டி.வி.இயக்குனர் சரத்குமார்: ரூ.200 கோடி கடன் பெற்றதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை

வங்கி மூலம் பணபரிமாற்றம் நடந்தது: ரூ.200 கோடி கடன் பெற்றதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை; கலைஞர் டி.வி.இயக்குனர் சரத்குமார் ஜாமீன் மனுவில் தகவல்!

புதுடெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களை விடுவிக்க சி.பி.ஐ. கோர்ட்டு மறுத்துவிட்டது. கனிமொழி எம்.பி. உள்பட யாருக்கும் சலுகை காட்ட இயலாது என்று சி.பி.ஐ. கோர்ட்டு உறுதிபட அறிவித்தது.
இதையடுத்து கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார், மற்றும் ஆசிப் பல்வா, ராஜீவ் அகர்வால் ஆகிய 4 பேரும் மீண்டும் டெல்லி ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளனர். அவர்கள் தங்கள் மனுவில் ஜாமீனில் விடுவிப்பதற்கு அவசியமான காரணத்தை கூறியுள்ளனர்.
சரத்குமார் தன் அப்பீல் மனுவில் கூறி இருப்பதாவது:-
கலைஞர் தொலைக்காட்சியில் நான் இயக்குனராக மட்டுமே இருக்கிறேன். நான் தலைமை செயல் அதிகாரியோ அல்லது நிர்வாக இயக்குனரோ கிடையாது.

புலிகளின் ஆலேசகர்களாக முன்னாள் இலங்கை அரச அதிகாரிகள்: மாதாந்த ஓய்வூதியக் கொடுப்பனவை நிறுத்துவது குறித்து இலங்கை அரசு கவனம்!

இலங்கை அரச சேவையில் கடமையாற்றி ஓய்வு பெற்ற நிலையில் தற்போது வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களில் புலிகளுக்கு உதவிகளை வழங்கி வருவோரின் மாதாந்த ஓய்வூதியக் கொடுப்பனவை நிறுத்துவது குறித்து இலங்கை அரசு கவனம் செலுத்தி வருவதாக தெரிய வருகிறது.
அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா, கனடா, பிரித்தானியா போன்ற நாடுகளில் வாழும் இலங்கை அரச சேலையிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு இலங்கை அரசாங்கம் வருடாந்தம் ஐந்து மில்லியன் டாலருக்கும் அதிகமான பணத்தை ஓய்வூதியமாக வழங்கி வருகிறது என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடங்குளம் அணு மின் நிலையம் வரப்பிரசாதம்-அப்துல்கலாம்!

கூடங்குளம் அணு மின் நிலையம் சிறப்பானது, பாதுகாப்பானது, வரப்பிரசாதம்-அப்துல்கலாம்!

வள்ளியூர்: கூடங்குளம் அணு மின் நிலையம் சிறப்பானது, சிறந்த பாதுகாப்பு வசதிகளுடன் கூடியது, இது தமிழகத்திற்குக் கிடைத்துள்ள வரப் பிரசாதம் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியுள்ளார்.

கூடங்குளத்தில் கட்டப்பட்டு வரும் அணு மின் நிலையத்தை நிரந்தரமாக மூடக்கோரி நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மீனவர்களும், சமூக ஆர்வலர்களும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கொழும்பில் தனது கிளையைத் திறந்தது எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம்!

இந்தியாவின் பிரபலமான தனியார் பல்கலைக்கழகமான எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் தனது கிளையை கொழும்பில் திறந்துள்ளது. இத்தகவலை அந்த நாட்டு தொழில்துறை அமைச்சர் ரிஷாத் பத்யுதீன் தெரிவித்துள்ளார்.

எஸ்.ஆர்.எம். லங்கா என்ற பெயரில் இந்த பல்கலைக்கழகம் கொழும்பில் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க விழா கொழும்பில் உள்ள காலாத்ரி ஹோட்டலில் அக்டோபர் 30ம் தேதி நடைபெற்றுள்ளது.

கலைஞருக்கு உண்மை தொண்டனின் கடிதம்

தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, கட்சியின் உண்மையான உடன்பிறப்பு' என்ற பெயரில், எட்டு பக்க கடிதம், அனுப்பப்பட்டுள்ளது. அதன் சுருக்கம்:"உடன் பிறப்பே' என நீங்கள் அழைக்கும் பாசச் சொற்களைக் கேட்டவுடன், எங்கள் உடம்பில் மயிர்க்கால்கள் எழுந்து நிற்கும். உங்கள் கடிதங்களைப் பார்த்தாலே, உணர்வுப்பூர்வமான தெம்பு உண்டாகும்.

இதெல்லாம் பத்தாண்டுகளுக்கு முன், நாங்களெல்லாம் அவசரநிலை காலத்திலும், எம்.ஜி.ஆர்., ஆட்சியிலும், குடும்ப நன்மை எதையும் கவனிக்காமல், கழகம், கலைஞர் என, பல போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றவர்கள். இன்று நாங்கள், தி.மு.க.,வில் அன்னியப்பட்டுள்ளோம்.வேலு, ஜெகத்ரட்சகன், சாத்தூர் ராமச்சந்திரன், சேடப்பட்டி முத்தையா, முத்துசாமி, சின்னசாமி, ரகுபதி, சத்தியமூர்த்தி, செல்வகணபதி, கருப்பசாமிபாண்டியன், கம்பம் செல்வேந்திரன், அழகு திருநாவுக்கரசு, தென்னவன், மைதீன்கான், இந்திரகுமாரி, கே.பி.ராமலிங்கம், அனிதா ராதாகிருஷ்ணன், சேகர்பாபு என, அ.தி.மு.க.,விலிருந்து வந்தவர்களுக்குத் தான் இன்று தி.மு.க.,வில் முதல் மரியாதை.

வாழ்வை கேள்விக்குரியாக்கிய புலிகள்


ltte cadre051111
 மனித வாழ்வு பல பருவங்களை கொண்டிருப்பினும், அதில் சிறுவர் பருவமும், இளமைப்பருவமும் ஏனைய பருவங்களை விட அனைவராலும் விரும்பப்படும் பருவங்களாகும்.

எவ்வித மன சஞ்சலங்களும் இன்றி, பெற்றோரது அரவணைப்பில் ஆடிப் பாடி விளையாடி தமது சிறுவர் பருவத்தை மகிழ்ச்சியாக கழிப்பது அனைத்து உலக நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறுவர்களது உரிமையாகும். இதை எவராலும் தட்டிப்பறிக்க முடியாது.

அதேபோல் அனைவராலும் மறக்கமுடியாத பல குதூகல நிகழ்வுகளுடன் கூடியது, இளமைப் பருவமாகும். இளைஞர்கள், தமது எதிர்காலத்தை பற்றி சிந்தித்து, தனக்கென ஒரு சுயகௌரவத்தை ஏற்படுத்தும் நோக்கில் அறிவுத்திறனை வளர்த்தபடி, மிகுந்த மகிழ்சியுடன் காலம் கழிப்பர். இம் மனித உரிமையையும் எவராலும் பறிக்கமுடியாது.