திங்கள், 23 மே, 2011

சித்தார்த்துடன் குடித்தனம்: 'அது என் தனிப்பட்ட வாழ்க்கை' - ஸ்ருதி ஹாஸன்

சித்தார்த்தை நான் காதலிக்கிறேனா, அவரும் நானும் ஒன்றாக வசிக்கிறோமா என்பது பற்றியெல்லாம் பொதுவில் விவாதிக்க நான் தயாராக இல்லை. இதைக் கேட்க யாருக்கும் உரிமையில்லை, என்று நடிகை ஸ்ருதிஹாஸன் கூறியுள்ளார்.

தெலுங்கில் அனகனகா ஓ தீருடு படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்தார் ஸ்ருதிஹாஸன்.

இந்தப் படம் மூலம் இருவருக்கும் மிக நெருங்கிய தொடர்பு ஏற்பட்டு, இப்போது இருவரும் ஹைதராபாதில் தனிக் குடித்தனம் நடத்துவதாக தெரியவந்துள்ளது.

இந்த செய்தியை இருவருமே மறுக்கவில்லை. மாறாக இதையெல்லாம் ஏன் கேட்கிறீ்கள்? அது என் தனிப்பட்ட வாழ்க்கை என்று கூறி வருகிறார் ஸ்ருதி.

இந்த நிலையில், நேற்று ஹைதராபாத்தில் ஸ்ருதியிடம் சித்தார்த் விவகாரம் பற்றிக் கேட்டனர்.

அதற்கு அவர், "மீண்டும் சொல்கிறேன், இது எனது தனிப்பட்ட வாழ்க்கை. என் சினிமா பற்றி கேளுங்கள். சந்தோஷமாக பதில் சொல்கிறேன். நானும் சித்தார்த்தும் காதலிப்பது, ஒன்றாக வசிப்பது பற்றியெல்லாம் உங்களுக்கு எதற்கு? இது முழுக்க முழுக்க தனிமனித வாழ்க்கை. அதனால் இதுபற்றிக் கேட்க வேண்டாம்," என்றார்.
T
English summary
Actress Sruthi Hassan refused to answer for a question on her love and living in life with actor Sidharth. "It is purely my private issue, dont ask it again," the actress said.

ஜெ.வுக்கு கி. வீரமணி கண்டனம்:விடுதலை’’க்கு தடையா?

விடுதலை’’க்கு தடையா? : ஜெ.வுக்கு கி. வீரமணி கண்டனம்;திராவிட இயக்கப் போர் வாளான “விடுதலை” நாள் ஏட்டை ஆட்சிப் பொறுப்பேற்ற அன்றைக்கே அவசர அவசரமாக ஆணை பிறப்பித்து அரசு நூலகங்களில் இடம் பெறுவதற்குத் தடை விதிக்கப்பட்டதைக் குறிப்பிட்டு   “விடுதலை” ஆசிரியர் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில்,’தமிழர்களின் “கெசட்” என்றால் அது “விடுதலை” என்பது சுவர் எழுத்தாகும். நம் ஆயுதம் “விடுதலை” என்று சுருக்கமாகச் சொன்னார் அதன் உரிமையாளரான தந்தை பெரியார்.  தமிழன் வீடு என்பதற்கு அடையாளம் “விடுதலை” என்றார் தவத்திரு குன்றக்குடி அடிகளார்.< “ஒரு காலத்தில் நீ உன்னத நிலையில் இருந்தாய்;  இந்நாட்டு ஆட்சி உன்னுடையதாய் இருந்தது. ஆனால், இன்று! நீ ஆண்டியாய்க் கிடக்கிறாய். வீரனாய் விறல் வேந்தனாய் இருந்த நீ கோழையாய் பூனையைக் கண்டஞ்சும் பேதையாகிக் கிடக்கிறாய். சிம்மாசனத்தில் சிறப்போடு இருந்தநீ, இன்று செங்கை ஏந்திக் சேவடி காத்து நிற்கிறாயே! இப்படி நீ ஆனதன் அடிப்படையை உணரவில்லையே! என்று கூறி விளக்கமும், விழிப்பும் உண்டாக்கி வருகின்றது ‘விடுதலை’. “இவ்வாறு செய்வது மாபெரும் குற்றம் என்று மக்கள் சார்பில் அரசியலை நடத்தும் சர்க்கார் கூறுகின்றது. ஜாமீன் கேட்கின்றது. இது நேர்மையா?” (திராவிட நாடு 27.6.1948) என்று “விடுதலை” சார்பில் நின்று விவேகக் குண்டுகளை  வீசினார் அண்ணாந்தை பெரியார் அவர்களின் அறிக்கைகளும், தலையங்கங்களும், பெட்டிச் செய்திகளும் தமிழ்நாடு சட்டப் பேரவையில் மட்டுமல்ல; நாடாளுமன்றத்திலும்கூட பெரும் புயல்களைக் கிளம்பியதுண்டு. 1939ஆம் ஆண்டிலேயே ஈழத் தமிழரைப்பற்றி எழுதியது “விடுதலை”; இந்தி எதிர்ப்புப் போரில் இணையற்ற தளபதியாகக் களத்தில் நின்று வெற்றி வாகைசூடிய விவேக சிந்தாமணி விடுதலை.< குலக்கல்வித் திட்டத்தை ஓட ஓட விரட்டியடித்து, ஆச்சாரியாரை ஆட்சியை விட்டு அகலச் செய்து, கர்ம வீரர் கல்வி வள்ளல் காமராசரை அரியாசனத்தில் அமர வைத்ததில் “விடுதலை”யின் பங்கு என்ன என்பதை வரலாறு வாழ்நாள் எல்லாம் பேசிக் கொண்டே இருக்கும். சமூக நீதிக்களத்தில் அதன் பங்களிப்பு சாதாரணமானதா? இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டு வருவதற்காக முழு மூச்சாகப் பாடுபட்ட பேராயுதம் எது? “விடுதலை” தானே? 31 (சி) சட்டத்துக்குக் கருத்துரு கொடுத்தது “விடுதலை”யே! ஏன்? இன்றைய முதல் அமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா அவர்கள் 31(சி) சட்டத்தினைக் கொண்டு வந்து 69 சதவிகிதம் இடஒதுக்கீட்டைக் காப்பாற்றியதற்கு கருத்துரு கொடுத்ததும் “விடுதலை”யன்றோ! ஆட்சிகள் போகலாம் - வரலாம்; அதற்காக அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு நடந்து கொள்ளத் தேவையில்லை. மே.16ஆம் தேதி, முதல் அமைச்சராக செல்வி ஜெயலலிதா பதவி ஏற்கிறார் என்றால் அவசர அவசரமாக அன்றைய தினமே அரசு நூலகங்களில் “விடுதலை” ஏட்டை நிறுத்தும் ஆணை பிறப்பிக்கப்படுகிறது என்றால் இதன் பொருள் என்ன? 2012 மார்ச்சு வரை அரசு நூலகங்களில் “விடுதலை” இடம் பெறுவதற்கான அரசு ஆணை ஏற்கெனவே இருக்கும் நிலையில், திடீரென்று அந்த ஆணையை ரத்து செய்ய வேண்டிய அவசியம் - அவசரம் ஏன்? ஏன்? மாறுபட்ட கருத்துகள் - விளக்கங்கள் கூடவே கூடாது என்று நினைப்பது ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு உகந்ததுதானா?  ‘விடுதலை’யைப் பொறுத்தவரையில் ஆதரிக்க வேண்டியதை ஆதரித்தும், எதிர்க்க வேண்டியதை எதிர்த்தும் நடைபோடும் பகுத்தறிவு ஏடு. பகுத்தறிவு கொள்கையோடு உலகிலேயே  வீரநடை போடும் ஒரே ஏடு “விடுதலை”யே! இந்திய அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் 51(ஏ)வில் கண்டுள்ள விஞ்ஞானம், சீர்திருத்த மனப்பான்மையை அன்றாடம் வளர்க்கும் ஒரே ஏடும் விடுதலையே! இதற்காக திராவிட இயக்கங்கள் பெருமைப்பட வேண்டாமா? அரசு என்பது அனைத்து மக்களுக்கும் கருத்துரிமை என்ற அடிப்படைக் கோட்பாடு கொண்டதல்லவா! அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன், நான் எப்பொழுதும் செயல்படுவதில்லை என்று கூறும் முதல் அமைச்சர் திடீரென்று “விடுதலை”யை நிறுத்தியது எந்த அடிப்படையில்?  அல்லது அவர் அறியாமல் “அதி விசுவாசிகளான’’ அதிகாரிகளின் வேலையா இது? பெண்கள் உரிமைக்காக வாழ்நாள் எல்லாம் குரல் கொடுப்பதை குருதியோட்டமாகக் கொண்ட “விடுதலை” ஏடு பெண் ஒருவர் முதல் அமைச்சராக இருந்த ஒரு கால கட்டத்தில் அரசு நூலகங்களுக்குச் செல்லாமல் நிறுத்தப்பட்டது என்ற பழியைச் சுமக்கலாமா? அதிமுக அரசின் இந்தச் செயல்பாடு - காலா காலத்துக்கும் குற்றச் செயல் என்று பேசப்படாதா?எப்படிப்பட்ட “விடுதலை?” தந்தை பெரியார் அவர்களின் போராயுதம் மட்டுமல்ல, அறிஞர் அண்ணா, டி.ஏ.வி. நாதன், பண்டித எ. முத்துசாமிப்பிள்ளை, அ. பொன்னம்பலனார், சாமி சிதம்பரனார், குத்தூசி குருசாமி, அன்னை மணியம்மையார் போன்றவர்களை ஆசிரியர்களாகக் கொண்ட அரும் பெரும் வரலாற்றுப் பெருமைக்குரிய ஏடாயிற்றே! அண்ணாவின் பெயரையும் “திராவிட” என்ற இன அடையாளத்தையும் கொண்ட ஒரு கட்சி ஆட்சி நடத்தும் ஒரு கால கட்டத்தில், திராவிட இயக்கத்தின் ஆணிவேரான - அதன் தாய் என்று சொல்லத்தக்கதான “விடுதலை” ஏட்டைப் புறக்கணிக்கும் வகையில் ஆணை பிறப்பது வரலாற்றுக் குற்றம் ஆகாதா? புதிய புதிய சட்டங்கள் உருவானதற்கும், தமிழர்களைப் பாதிக்கச் செய்யும் சட்டங்கள் பின் வாங்கப்படுவதற்கும், புதிய புதிய திட்டங்கள் கருக் கொள்வதற்கும், பிற்போக்குத்தனமான திட்டங்கள் குதிகால் பிடரியில் இடிபட ஓட்டம் பிடிப்பதற்கும் காரணமாக இருந்தது ‘விடுதலை’ அல்லவா! ‘விடுதலை’ வெறும் காகிதமல்ல - தமிழர்களைப் பழைய நிலையிலிருந்து விடுதலை செய்த வீரவாள்! - போர் வாள்!!>கடலூர், மதுரை சிறைகளில் “விடுதலை”க்குத் தடை போடப்பட்டது - சிறை அதிகாரிகளால்; அந்த நேரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் “ரிட்” மனு ஒன்றைத் தாக்கல் செய்தோம். உள்துறை தனிச் செயலாளர் அந்தத் தடை ஆணையை விலக்கிக் கொண்டதால் (27.11.1987) வழக்கு விசாரணை தேவையில்லை என்று நீதியரசர் சத்யதேவ் தீர்ப்பு அளித்தது உண்டே!
பழியைத் தேடிக் கொள்ள வேண்டாம்!<
1935இல் தொடங்கப்பட்டு, பவள விழாவும் கண்ட திராவிட இயக்க மூச்சுக் காற்றான “விடுதலை” ஏட்டை நூலகங்களில் நீக்கிய பழியை முதல் அமைச்சர் ஏற்க வேண்டாம் என்பது நமது வேண்டுகோள்.

நெருக்கடி நிலை என்னும் நெருப்பாற்றை எல்லாம் நீந்திக் கரை சேர்ந்த வரலாறு “விடுதலை”க்கு உண்டு; இப்பொழுது நடப்பது நெருக்கடி நிலை ஆட்சியல்லவே!
முதல் அமைச்சர் பரிசீலிக்கட்டும்!

முதல் அமைச்சர் அவர்கள் நிதானமாகக் கருத்து செலுத்தி, நல்லது நடக்க  ஆவன செய்வார் என்று எதிர்பார்க்கிறோம்.
கழகத் தோழர்களே, தமிழ் இன உணர்வாளர்களே விடுதலை சந்தாக்களைக் குவியுங்கள்!
பணிகளை உடனே துவக்குங்கள்!!’’ என்று தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை மீளாய்வது குறித்து அரசாங்கம் ஆலோசனை: சட்டமா அதிபர்

பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் அவசரகால சட்டத்தை மீளாய்வு செய்வது தொடர்பாக அரசாங்கம் தீவிரமாக ஆலோசித்து வருவதாக சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் நேற்று டெய்லி மிரருக்குத் தெரிவித்தார். இது தொடர்பாக எவ்வித இறுதித் தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என அவர் கூறினார். அவசரகாலச் சட்டத்தின் எந்த சரத்துக்களை நீக்கலாம் எவற்றை மேலும் தக்க வைத்திருக்கலாம் என்பது குறித்து நாம் ஆராய்கிறோம் என அவர் கூறினார். வசரகாலச் சட்டத்தை நீக்குமாறு இலங்கை அரசாங்கத்தை இந்தியா கடந்த 16 ஆம் திகதி கோரியமை குறிப்பிடத்தக்கது. பயங்கரவாத தடைச்சட்டம் 1978 ஆம் ஆண்டு தற்காலிக ஏற்பாடாக அறிமுகப்படுத்தப்பட்டது. 6 மாதத்திற்கு ஒரு தடவை அது நாடாளுமன்றத்தால் நீடிக்கப்பட்டது. எனினும 1982 ஆம் ஆண்டு இந்த நீடிப்பை கோரும் சரத்து நீக்கப்பட்டு நிரந்தர சட்டமாக ஏற்படுத்தப்பட்டது. பயங்கரவாத செயல்களுடன் தொடர்புடையவர்ளென சந்தேகிக்கப்படுவர்களை கைது செய்வதற்கு அரசாங்கம் இதை பயன்படுத்தியது. இதேவேளை, 2005 ஆம் ஆண்டு அப்போதைய வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்டதையடுத்து அவசரகால நிலையை அரசாங்கம் மீண்டும் கொண்டுவந்தது. அப்போதிருந்து அவசரகால நிலை, நாடாளுமன்றத்தால் மாதாந்தம் நீடிக்கப்படுகிறது. கடந்த வருடம் அதன் சில விதிகளை அரசாங்கம் தளர்த்தியது. யுத்த காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மாத்திரம் அவசரகாலநிலை நீடிப்பு எதிராக வாக்களித்தது. யுத்தம் முடிந்தபின் ஐ.தே.க. மற்றும் ஜே.வி.பியும் எதிர்த்து வாக்களித்து வருகின்றன.

திஹார் சிறையில் மகள் கனிமொழியை சந்தித்தார் கருணாநிதி

டெல்லி: திமுக தலைவர் கருணாநிதி இன்று டெல்லி வந்து சேர்ந்தார். திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மகள் கனிமொழியை அவர் இன்று மாலை சந்தித்துப் பேசினார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டி, முன்னாள் அமைச்சர் ராசா ஆகியோரையும் கருணாநிதி சந்தித்துப் பேச முடிவுசெய்து டெல்லிக்கு வந்துள்ளார் கருணாநிதி.

இன்று காலை டெல்லி வந்து சேர்ந்த கருணாநிதி விமான நிலையத்திலிருந்து நேராக தாஜ் ஹோட்டலுக்குப் புறப்பட்டுச் சென்றார். பின்னர் மாலையில் அவர் தனது துணைவியார் ராசாத்தி அம்மாளுடன் திஹார் சிறைக்கு வந்தார்.

அங்கு முதலில் மகள் கனிமொழியை சந்தித்தார். தந்தையைப் பார்த்ததும் கனிமொழி உணர்ச்சிவசப்பட்டு அழுது விட்டதாக தகவல்கள் கூறுகின்றன. கருணாநிதியும் கண் கலங்கியபடி தனது மகளுக்கு ஆறுதல் கூறினார்.

சி.பி.ஐ : சிரிப்புப் போலீஸ் ஆப் இந்தியா !

சி.பி.ஐ என்றழைக்கப்படும் மத்தியப் புலனாய்வுத் துறை பற்றி நீங்கள் கேள்விப்படாமல் இருக்க முடியாது. ஊர் நாட்டில் ஓட்டுக் கட்சித் தலைவர்கள் வீட்டிலிருந்து காணாமல் போன ஜிம்மியில்  ஆரம்பித்து லோக்கல் போலீசால் ‘கண்டு’ பிடிக்க முடியாத கோழி களவாணி வரை துப்புத் துலக்கிக் கண்டு பிடிக்கும் சூராதி சூரர்களாக இவர்களை ஊடகங்கள் உங்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கலாம். கருணாநிதி வீட்டில் சி.பி.ஐ விசாரணை ரெய்டு என்றும் ஏதோ இந்த சூரப்புலிகளைப் பார்த்து கருணாநிதி குடும்பமே நடுநடுங்கி வீட்டின் மூலையில் குந்த வைத்து உட்கார்ந்திருப்பது போல தினமலர் அடிக்கடி குதூகலிப்பதையும் கூட நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
தமிழ்த் திரையுலகின் தீவிரவாத ஒழிப்புப் பிரிவின் சூப்பர் கமாண்டோவான கேப்டன் விஜயகாந்த் பல படங்களில் டில்லி சி.பி.ஐ அதிகாரியாகத் தோன்றி பாகிஸ்தான் தீவிரவாதியிடம் தங்கத் தமிழில் லெச்சர் அடித்தே டயர்டாக்கி மடக்கிப் பிடிப்பதைப் பார்த்திருப்பீர்கள். மலையாளத் திரைப்படங்களிலும் கூட மம்மூட்டி மோகன்லால் வகையறாக்கள் சி.பி.ஐ அதிகாரிகளாகத் தோன்றி உள்ளூர் போலீசால் கண்டே பிடிக்கமுடியாத பல்வேறு சிக்கலான வழக்குகளைத் தீர்த்துக் கொடுத்திருக்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன் ஏதோ கோழியோ ஆடோ களவு போன மேட்டரில் சி.பி.ஐ விசாரணை கோரி தொடுக்கப்பட்ட ஒரு வழக்கில் “அட விடுங்கப்பா… இவங்க எத்தனை ஊர் பஞ்சாயத்தைத் தான் தீர்க்க முடியும்” என்று சி.பி.ஐயின் மேல் கருணையோடு ஒரு நீதிபதி தீர்ப்பு கூட வழங்கியிருந்தார்.
இப்படியாக சி.பி.ஐ பற்றிய ஒரு பயங்கரமான இமேஜும், அவர்களின் விசாரணையின் மேல் மக்களிடையே ஒரு நம்பிக்கையையும் பல ஆண்டுகளாகவே திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எதுக்கு இத்தனை பில்டப் என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது. இப்படி ஊடகங்களாலும் சினிமா உலகத்தாலும் ஷெர்லக் ஹோம்சுக்கு இணையான துப்பறிவாளர்களாக ஜாக்கி வைத்து தூக்கிப் பிடிக்கப்பட்ட சி.பி.ஐ, சமீப நாட்களாக மக்கள் நினைத்துக் கொண்டிருப்பது போல் அல்லாமல் எதார்த்தத்தில் சீரியஸான காமெடி பீஸ்களாகத் தான் இருக்கிறார்கள் என்கிற உண்மை இப்போது அம்பலமாகியிருக்கிறது.


கிம் டேவி, புரூலியா, பீட்டர் ப்ளீச், ஆனந்த மார்க்கம் போன்ற பெயர்களை நீங்கள் மறந்திருக்கலாம்; எனவே ஒரு சிறிய நினைவூட்டல். 1995-ம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் மேற்குவங்க மாநிலம் புரூலியா மாவட்டத்தில் திடீர் என்று ஒரு மர்ம விமானத்தில் வந்த சிலர் ஆயுத மூட்டைகளைப் போட்டனர். அப்போது அது தேசிய அளவில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. அந்த சமயத்தில் அம்மாநிலத்தில் அதிகாரத்திலிருந்த சி.பி.எம் கட்சியை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்த ஆனந்த மார்க்கம் என்கிற தீவிரவாத சாமியார் கும்பலுக்குத் தான் இந்த ஆயுத மூட்டைகள் போடப்பட்டதாக சொல்லப்பட்டது. பின்னர் ஆயுதத்தைப் போட்ட விமானம் திரும்பும் வழியில் மடக்கிய சி.பி.ஐ அதிகாரிகள், அதில் பயணம் செய்த விமானக் குழுவினரையும் ஆயுத வியாபாரி பீட்டர் ப்லீச் மற்றும் ஆயுதக் கடத்தலின் சூத்ரதாரியான நீல்ஸ் க்ரிஸ்டியன் நீல்ஸன் என்கிற கிம் டேவியையும் கைது செய்தது.
கைது செய்யப்பட்டவர்களில் கிம் டேவி ‘மர்மமான’ முறையில் தப்பியோடி விட்டான் என்று சொன்ன சி.பி.ஐ, அவனைத் தேடி உலகெல்லாம் ஆட்களை அனுப்பிக் கொண்டிருந்தது. சரி. அடுத்து கையிலிருக்கும் பீட்டர் ப்ளீச்சையாவது விசாரித்து தண்டித்திருக்கும் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம் – மன்னிக்கவும். அவருக்கு ஜனாதிபதியின் மன்னிப்பை வாங்கிக் கொடுத்து பத்திரமாக வழியனுப்பி வைத்தது.
இதற்கிடையே இப்போது திடீர் ஞானோதயம் பெற்று டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் ‘தலைமறைவாக’ இருக்கும் கிம் டேவியைப் பிடிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக உதார் காட்ட ஆரம்பித்தது சி.பி.ஐ. இதைக் கேள்விப்பட்ட கிம் டேவி, கடந்த மாதம் இந்திய செய்தித் தொலைக்காட்சிகளில் தோன்றி, தான் மறைந்து வாழவில்லையென்றும், பல ஆண்டுகளாக கோபன்ஹேகனில் தான் வாழ்ந்து வருவதாகவும், அங்கே பத்திரிகைகளுக்கு பேட்டியளித்துக் கொண்டும் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்து கொண்டும் வெளிப்படையாகவே செயல்பட்டுக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்தார். மேலும், தான் கோபன் ஹேகனில் இருப்பது சி.பி.ஐக்குத் தெரியும் என்றும் அப்படியிருந்தும், சி.பி.ஐ அதிகாரிகள் இந்திய மக்களின் வரிப்பணத்தில் தன்னைத் ‘தேடி’ இத்தனை ஆண்டுகளாக உலகச் சுற்றுலா போய்க் கொண்டிருந்தாரத்கள் என்று இந்திய துப்பறியும் புலிகளின் டவுசரைக் கிழித்தார்.
இன்னும் ஒரு படி மேலே போய், தான் ஒன்றும் தப்பிக்கவில்லையென்றும், தன்னை பாதுகாப்பாக நேபாள எல்லைக்கு அழைத்துச் சென்று வழியனுப்பி வைத்ததே சி.பி.ஐ தான் என்றும் உண்மையை போட்டு உடைத்தார். ஏனெனில் அப்போது மத்தியிலிருந்த காங்கிரசு அரசு மேற்கு வங்கத்திலிருக்கும் சி.பி.எம் அரசைக் கலைப்பதற்கு ஒரு முகாந்திரம் வேண்டுமென்று, திட்டமிட்டே இந்த ஆயுதக் கடத்தலை நடத்தியதாகவும், அவர்கள் எதிர்பார்த்தது போல் நடவாமல் மொத்த திட்டமும் சொதப்பலாகி விட்டதால், தன்னை நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரிக்க பயந்து கொண்டு தான் தன்னை பாதுகாப்பாக தப்ப விட்டனர் என்றும் சொல்கிறார்.
இதற்கு மேல் இவனை விட்டால் மிஞ்சியிருக்கும் கோவணத்தையும் உருவி விடுவான் என்று முடிவு கட்டிய சி.பி.ஐ, உடனடியாக கிம் டேவியை டென்மார்க்கிலிருந்து கைது செய்து அழைத்து வர ஒரு குழுவை அனுப்புகிறது. உடனே உங்களுக்கு காஷ்மீருக்குள் புகுந்து தீவிரவாதியை தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு வரும் விஜயகாந்த் நினைவுக்கு வரலாம் – முதலில் அந்தக் கற்பனைகளை எல்லாம் ரப்பர் வைத்து அழித்து விடுங்கள். இங்கேயிருந்து விமானம் ஏறி இன்னொரு நாட்டுக்கு பயங்கரமான தீவிரவாதியைப் பிடித்து வரப் போன சூரப்புலிகள் போகும் போது அதற்குத் தேவையான வாரன்டை எடுத்துப் போக ‘மறந்து’  விட்டார்களாம். ஏதோ ஹால் டிக்கட்டை மறந்து விட்டு பரீட்சைக்குப் போன அப்பாவி மாணவன் போல அங்கே  டென்மார்க் அதிகாரிகள் முன் பல்லைக் காட்டிக் கொண்டும் பின் மண்டையைச் சொறிந்து கொண்டும் இப்போது நின்று கொண்டிருக்கிறார்கள்.
இதுக்குப் பேசாமல் விஜயகாந்தையே அனுப்பியிருக்கலாம். டென்மார்க் காவல் துறையினரிடம் தமிழில் வாதாடி தீவிரவாதியை மட்டுமல்ல எக்ஸ்ட்ரா பிட்டிங்காக அந்த நாட்டு பிரதமரையே கூட தூக்கி வந்திருப்பார். இப்ப பாருங்க வட போச்சு. 
ஊரெல்லாம் தேடிவிட்டு தன் தொப்பைக்குக் கீழே குனிந்து பார்க்க மறந்த கதை
சமீபத்தில் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட உடன், பாகிஸ்தானில் தான் உலகத்துத் தீவிரவாதிகளெல்லாம் இருப்பது போலவும் ஒரு சீன் போட்டது இந்திய வெளியுறவுத்துறை. இதற்காக பாகிஸ்தானில் பதுங்கிக் கிடக்கும் ‘அதிபயங்கரமான ஐம்பது தீவிரவாதிகள்’ பட்டியல் ஒன்றைத் தயாரித்த உள்துறை அமைச்சகம், அதைப் பாகிஸ்தான் அரசிடம் கொடுத்து இவர்களைப் பிடித்துக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. அதைத் தொடர்ந்து களத்திலிறங்கிய இந்திய முதலாளித்துவ ஊடகங்கள், தமது பஜனையை ஆரம்பித்து சிறப்பாக நடத்தி வந்தது.
இந்நிலையில், பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாகச் சொல்லப்பட்ட மேற்படி தீவிரவாதிகள் பட்டியலில் இருக்கும் வாஜுல் காமர் கான் என்பவர், மும்பையின் அருகே உள்ள தானேவில் தான் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார் என்கிற உண்மை ஊடகங்களில் அம்பலமானது. உடனே இதற்கு விளக்கமளித்த மத்திய உள்துறை அமைச்சர் செட்டிநாட்டுச் சிதம்பரம், இது ஏதோ சின்னத் தவறு தான் என்றும், தெரியாமல் நடந்து விட்ட இத்தவறைப் பற்றி தீவிரமாக விசாரித்து சம்பந்தப்பட்டவர்களைத் தண்டிப்பதாகவும், நடந்ததற்குத் தானே பொறுப்பேற்றுக் கொள்வதாகவும் அறிவித்தார்.
அவர் சொல்லி வாய் மூடவில்லை. அதற்குள் அதே பட்டியலில் இருக்கும் இன்னொரு தீவிரவாதியான பெரோஸ் அப்துல் ரஷீத் கானும் இந்தியாவில் தான் இருக்கிறார் என்கிற உண்மை அம்பலமாகிறது. முதல் நபராவது ஒளிந்து வாழும் நபர். இரண்டாவது நபரோ ஏற்கனவே இந்த வழக்கில் கைதாகி சிறையில் இருப்பவர்.
ஏற்கனவே கைதான பெரோஸ் கான் மீது சர்வதேச போலீஸில் சொல்லி ஒரு பிடி வாரண்ட்டையும் வாங்கி வைத்துக் கொண்டு உலகமெல்லாம் தேடியலைந்துள்ளது சி.பி.ஐ. அது மட்டுமல்லாமல், இந்தியச் சிறையிலிருக்கும் இந்த நபர் பாகிஸ்தானில் ‘ஒளிந்து’ கொண்டிருப்பதாகவும், பாகிஸ்தான் அரசு இந்தத் தீவிரவாதியைப் பிடிக்க ஒத்துழைக்கவில்லை என்றும் எனவே பாகிஸ்தான் தீவிரவாத நாடு என்றும் தீவிரமாக பிரச்சாரமும் செய்து வந்தது.
தேடப்படுவது யார் பிடிபட்டது யார் என்கிற சாதாரண விவரத்தைக் கூட சரிபார்க்கத் துப்பில்லாத இந்த விசாரணை அமைப்பு தான் ஸ்பெக்ட்ரம், ஆதர்ஷ் உள்ளிட்ட பல்வேறு ஊழல் முறைகேடுகளை விசாரித்து வருகிறது என்பதை வாசர்களுக்கு நினைவூட்டுகிறோம். தீவிரமான போலீஸ் பயிற்சி, ஒற்றறிவதிலும், உளவுத் தகவல்களைச் சேகரிப்பதிலும், விசாரணை முறைகளிலும் உலகத்தரமான பயிற்சி, என்று சகல வகைகளிலும் தேர்ச்சி பெற்ற தொழில் முறை நிறுவனமே இந்த லட்சணத்தில் இருக்கும் போது, அண்ணா ஹசாரே உருவாக்க நினைக்கும் ஜன் லோக்பால் விசாரணை அமைப்பு எந்த லட்சணத்தில் இருக்கும் என்பதை வாசகர்கள் முடிவுக்கே விட்டு விடுகிறோம்.
சி.பி.ஐ, ஐ.பி, என்.ஐ.ஏ உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளும் உளவுப் பிரிவும் உண்மையில் குற்றத்தடுப்பு, உண்மையைக் கண்டறிதல் என்கிற மக்கள் நல நோக்குக்காக இல்லாமல் வெறும் ஆளும் வர்க்க சேவைக்கென்றே வளர்த்தெடுக்கப்பட்டிருப்பதன் விளைவு தான் இப்போதைய இந்த அவமானங்களுக்குக் காரணம். ஃபோபார்ஸ் முதல் ரிலையன்சு வரை பல்வேறு ஊழல் வழக்குகளில் குற்றவாளிகளையும், முதலாளிகளையும் காப்பாற்றிய நிறுவனம்தான் இந்த சி.பி.ஐ.
ஆட்சிக்கு எதிரானவர்களைக் கண்காணிப்பது, மிரட்டுவது என்பதற்காகவே பயன்படுத்தப்படும் இந்தக் கருவிகள், என்ன தான் பயிற்சியளிக்கப்பட்டாலும் கடைசியில் இப்படி காமெடிப் பீஸுகளாக சீரழிந்து போவது தவிர்க்க முடியாது என்பதே நிதர்சனம். லோக்கல் போலீசு சரியில்லை, சி.பி.ஐதான் உலகத்தரம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் மிடில்கிளாஸ் மாதவன்கள் இனியாவது உண்மை என்ன என்பதை தெரிந்து கொள்ளட்டும்.

ஓஷோ: கிறித்தவ மதமும் , சூனியகாரிகளும்(witch women)

கேள்வி :“Witch woman சூனியகாரி “என்பவள் யார் ? சூனியக்காரியும் நீங்கள் சொல்லும். “ புதிய மனைதரும்” ஒன்றெதானா ?

ஓஷோ :“சூனியக்காரி (witch woman )“என்பது மிகவும் மரியாதிக்குரிய ஒர் சொல் அதைக் கிறிஸ்தவம் கேவலப்பாடுத்தியிருக்கிறது. அதன் மூல அர்த்தம் “ஞானப்பெண்( wise woman ) என்பதே. ஆனால் கிறிஸ்தவ மதம் அதற்க்கு மிகவும் திரிபான அர்த்தத்தைக் கொடுத்தது. ஏனேன்றால் கிறிஸ்த்தவ மதத்தின்படி , சாத்தான் முதலில் ஏவாளின் மனத்தைக் கெடுத்தான் அன்றிலிருந்து அவன் பெண்னுடன் சேர்ந்து கூட்டு சதி செய்து வருகிறான் . ஆகவே அவள் ஞானமுள்ளவளாக இருக்க முடியாது . ஏனேன்றால் அவளுடைய ஞானம் கடவுளிடமிருந்து வரவில்லை . சாத்தானிடமிருந்தே வருகிறது . இந்த அர்த்தத்தை அவர்கள் ஏற்றியதுமே பெண்ணை அதிகமாக சபிப்பதற்க்கான வழி செய்ததாகிறது. உண்மையில் ஞானமுள்ள பெண்கள் இருக்கவே செய்தார்கள். குறிப்பாக சித்தர் மரபில்/ ரசவாத மரபில் இருந்தார்கள்-இது மறைஞான மரபின் கிளைகளில் ஒன்றாகும்.

கிறித்தவ பாதிரிகளின் கண்களுக்கு இந்த ரசவாத பெண்கள் அவர்களின் போட்டியாளர்களாக தெரிந்தார்கள் . எனவே அவர்களை ஒழித்துக்கட்டவேண்டியதானது . அவர்களை அழிக்க ஒரு நியாயப்பாடு தேட வேண்டியதாயிற்று; அவர்களின் நியாயவாதம் இதுதான் ; அந்த பெண்கள் சாத்தானுடன் உடலுறவு கொள்கிறார்கள். ஒரு சிறப்பு நீதிமன்றத்தை போப் நியமித்தார். “மகா புலன் விசாரனை “ ஆரம்பமானது. இதன் ஒரெ வேலை எல்லா சூனியக்காரிகளையும் கண்டுபிடித்து உயிரோடு கொளுத்துவதுதான் . அவ்ர்களை கண்டுபிடிக்க பயன்படுத்தமுறை இதுதான்- எந்த ஆண் வேண்டுமானாலும் குறிப்பிட்ட பெண் சூனியாக்காரியாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக நீதிமன்றத்திடம் தெரிவித்தால் போதுமானது- அவளை கைது செய்துவிடலாம்.

அவ்ளை சித்திரவதை செய்ய சில முறைகளை புதிதாக கண்டுபிடித்தார்கள். அவை மிகவும் அசிங்கமாக இருந்த்தது ; அதை சகித்து கொள்வது பெண்ணால் இயலாத அளவுக்கு கொடுமையாக இருந்தது . சாத்தானுடன் உடலுறவு கொண்டதாக அவள் அறிக்கையிடாதவரை வாரக்கணக்கில் சித்திரவதை நீடித்தது. அதை ஒத்துக்கொண்டபின் அவள் மகா புலன் விசாரணை மன்றத்தின் முன்னிலையில் அதை ஒத்துக்கொள்ள வேண்டியிருந்தது. கர்தினால்களும் பேராயர்களும் உயர் அந்தஸ்துள்ள பாதிரிகளும் அம்மன்றத்தில் உறுப்பினர்களாகி இருந்தார்கள் . அவர்கள் இந்த பெண்களை சாத்தானுடன் தாங்கள் உடலுறவு கொண்டதாக அறிக்கைவிடும்படி பலவந்தப்படுத்தினார்கள் . அதுமட்டுமல்ல , சாத்தானின் ( ஆண்) குறியானது கவைபோல் இரு கூர் உள்ளதாக உள்ளது ; எனவே ஒரே சமயத்தில் பெண்ணுள் இருபுறமிருந்தும் அதனல் ஊடுருவ முடிந்தது என்றும் சபைமுன் சொல்லும்படி அவர்கள் பலவந்தப்படுத்தப்பட்டார்கள், இந்த பெண்களை உயிருடன் கொளுத்த நீதிமன்றத்துக்கு இதுவே போதுமானதாக இருந்தது. இவ்வாறு முற்றிலும் குற்றமற்ற பெண்கள் ஆயிரக்கண்க்கில் உயிரோடு எரிக்கப்பட்டார்கள்.

கிறிஸ்தவ சாமியார்களைவிட அவர்கள் அதிக ஞானமுள்ளவர்களாக இருந்தார்கள். இதுதான் அடிப்படையான காரண்ம் . ஆகவே அவர்களை முற்றிலுமாக இல்லாமலாக்க வேண்டியிருந்தது.அப்போதுதான் எந்த போட்டியாளரும் மிச்சமிருக்க மாட்டார்கள்.

வருங்கால மனிதர் சூனியக்காரராக இருப்பார் என்று சொல்லமாட்டேன். பாதிரி எப்பட்ய் கடந்த காலத்தின் ஒரு பகுதியோ அப்படித்தான் சூனியகாரியும், புதிய மனிதருக்கும் இயற்க்கைக்கும் இடையில் மத்தியஸ்தராக பூசாரிகள்/ சாமியார்கள்- ஆண்களிலும் சரி- பெண்களிலும் சரி - இருக்கமாட்டார்கள். இயற்க்கையுடம் ஆன அவரது தொடர்பு உடனடியானதும் நேரடியானதும் ஆகவே இருக்கும் . வருங்காலத்தில் எந்த ஒழுங்கமைக்கப்பட்ட மதத்துக்கும் இடமில்லை.

-பெண் விடுதலை; ஒரு புதிய தரிசனம்

தலித் மக்களின் நடைபாதையை மறித்து தீண்டாமைச் சுவர்

விருதுநகர் அருகே உள்ள வ.புதுப்பட்டியில் தலித் மக்கள் நடைபாதையை மறித்து சுவர் கட்டப்பட்டுள்ளதற்கு சிபிஎம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம், வ.புதுப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்டது சாலியர் தொடக்கப்பள்ளி. இப்பள்ளிக்கு மேல்புறம் தலித் மக்கள் வசித்து வருகின்றனர்.

இவர்களும், பிற சமூகத்தினரும் பள்ளிக்கு செல்வதற்கும், காட்டு வேலைகளுக்கு செல்வதற்கும் பாதை இருந்தது. சுமார் 100 ஆண்டுகளாக இதே பாதையைத்தான் அனைவரும் பயன்படுத்தி வந்தனர்.

முன்னதாக பள்ளிச் சுற்றுச் சுவர் கட்டும்போது நடைபாதையை விட்டுவிட்டு கட்டியுள்ளனர். இந்த நிலையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி நிர்வாகம், அரசு அதிகாரிகளின் துணையோடு இந்த பாதையை பள்ளியின் பெயரில் பட்டா பெற்றுள்ளது.

பின்பு, நடை பாதையை மறித்து சுவர் எழுப்ப பலமுறை முயற்சி செய்துள்ளனர். தலித் மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் சுவர் கட்டவில்லை என்று கூறப்படுகின்றது. இதன் அடிப்படையில் பேரூராட்சி செயல் அலுவலர் சுவர் கட்டக் கூடாது என உத்தரவிட்டுள்ளார்.

ஆனால் கடந்த 19-ம் தேதி அன்று ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த சிலர் காவல்துறை துணையோடு நடைபாதையை மறித்து சுவரை கட்டியுள்ளதாக கூறப்படுகின்றது. இதற்கு அப்பகுதி தலித் மக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். ஆனால் காவல்துறை அவர்களை கடுமையாக மிரட்டியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

போலீசாரின் இந்த செயலுக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் எஸ். ஞானகுரு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ். பாலசுப்பிரமணியன் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும், பொது நடை பாதையில் கட்டப்பட்டு வரும் தீண்டாமைச் சுவரை உடனடியாக மாவட்ட நிர்வாகம் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அந்த இடத்திற்கு வழங்கப்பட்ட பட்டாவை உடனே ரத்து செய்ய வேண்டும் என்றும், தீண்டாமை கொடுமைக்கு துணை போவோர் மீது அரசு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

English summary
Some people have constructed a wall blocking the path used by the Dalits in V. Pudupatti, Virudhunagar district. CPM has condomned this action and wants immediate demolition of the wall.

வியாழன், 5 மே, 2011நாம் அன்று எழுதிய இந்த கருத்துக்கள் இன்று உண்மையாகி விட்டன

எந்த கூட்டணி ஆட்சி அமைக்கப்போகிறது?

பரம்பரை பரம்பரையாக திமுகமீதும் கலைஞர் மீது வெறுப்பின் உச்சியில் நின்று கொண்டு விஷம் கக்கி வரும் உயர் ஜாதி அரசியல்வாதிகள் அலைக்கற்று வரிசை விவகாரத்தை பயன் படுத்தி சேறு வாரி தூற்றி வருகின்றனர். இந்த ஒன்றை வைத்து கனிமொழியை கைது செய்து அவமானப்படுத்தி விடலாம் என்று மனப்பால் குடிக்கின்றனர்.
சுப்பனும் குப்பனும் வாழ்வில் முன்னேறுவதை சகிக்க முடியாதவாள் எல்லாம் ஒண்ணு சேந்துட்டா பாருங்கோ. குடிசை வீட்டிலும் கம்பியுட்டர் டிவி மற்றும் உயர் கல்வியை காண பொறுக்காதவர்கள் எல்லாரும் ஒண்ணா பஜனை பாட ஆரம்பிச்சிட்டா. ராஜாவின் நிர்வாகத்தில் முறைகேடு நடந்ததாக கூறப்படுவதும் அதை தமிழக தேர்தல் நேரம் பார்த்து கையில் எடுத்ததும் சந்தேகம் வரத்தானே செயும்? யார் மீது ? ஆதிக்க சக்திகள் என்று கலைஞர் அடிக்கடி குறிப்பிடுவது யார் என்று அவா எல்லோருக்கும் புரியும்.
தேர்தல் கமிஷன் வேறு மாநிலங்களுக்கு ஒரு நீதி தமிழ்நாட்டுக்கு ஒரு நீதி என்பது ஏற்புடையதா?
தேர்தல் நடைபெற்று ஒரு மாதம் கழித்துதான் எண்ணுவோம் என்பது எதற்காக?
விஜயகாந்த், அதிமுக, காங்கிரஸ், சி பி ஐ மற்றும் தேர்தல் கமிசன் போன்றவர்களை சற்று ஒரே வரிசையில் வைத்து பாருங்கள் ஒரு கண்ணுக்கு புலப்படாத சாதிக்கூட்டணி ஒன்று உருவாகிவருவதாக ஒரு தோற்றம் எழுவதை மறுப்பது கடினம். 
நாம் அன்று எழுதிய இந்த கருத்துக்கள் இன்று உண்மையாகி விட்டன

போஸ்டர்களால் அழுகுணிப்போர் நடத்தும் அழகிரிக்கு எதிரான கிண்டல் போஸ்டர்

மு.க.அழகிரிக்கு எதிராக தமிழகத்தை ஒரு போஸ்டர் கலக்கிக்கொண்டு இருக்கிறது.மதுரையில் வீடியோ கடை நடத்தியது முதல் மத்திய அமைச்சரானது வரை மு.க.அழகிரிக்கு பிடித்த விஷயம் போஸ்டர்தான்.இதனாலயே இவரது ஆதரவாளர்கள் கட்சியிலும்,அதிகாரத்திலும் இடம் பிடிக்க பெரிதாக எதுவும் செய்ய மாட்டார்கள்.

பெரிதாக என்று சொல்வது கூட சிறிய விஷயம் , பிரம்மாண்டமாக போஸ்டர் அடித்து மதுரை முழுவதும் ஒட்டுவார்கள்,அடித்த போஸ்டரில் 50 சதவீதத்தை அவர் குடியிருக்கும் மதுரை டி.வி.எஸ்.,நகர் பகுதியில் ஒட்டுவார்கள்.அவர் பார்வை படும்படியான சுவரானது, ஊருக்கு போக வழிகாட்டும் பெயர் பலகையாக இருந்தால் கூட அதைப்பற்றி கவலைப்படாமல் ஒட்டுவார்கள்.ஆனால் மறந்தும் கூட அவரது வீட்டு சுவரில் ஓட்டமாட்டார்கள்,காரணம் அண்ணன் கோவிச்சுக்குவார் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் அண்ணன் வீட்டு சுவர் மட்டும் பாழாகிவிடக்கூடாது என்ற கவலை ஒரு பக்கம்.

இப்படி போஸ்டர் ஒட்டுபவர்களை, கருணாநிதி முன்னிலையிலேயே துரைமுருகன் போன்றவர்கள் அரசு விழாவிலேயே, "போஸ்டர் கிங்' என்று பாராட்டி பட்டம் கொடுத்து வேறு மகிழ்வார்கள். இத்தயை பாராட்டிற் கு பிறகு மதுரையில் போஸ்டர் ஒட்டுவதற்கு கேட்கவேண்டுமா என்ன.?அதுவும் சமீபத்தில் நடந்த அவரது இல்ல திருமண விழாவின் போது, மதுரையில் போஸ்டர் இருந்ததா அல்லது போஸ்டருக்குள் மதுரை இருந்ததா என்று வித்தியாசப்படுத்திப்பார்க்க முடியாதபடி காணப்பட்டது.சரி ஏதோ "குழந்தைத்தனம்' மாறாமல் போஸ்டரில் சந்தோஷம் கொள்கிறார், இருந்துவிட்டு போகட்டும் என்ற நிலையில்; இவருக்கு பிடிக்காதவர்கள் யாராவது இருந்தால், அவர்களை அசிங்கப்படுத்தவும் இந்த போஸ்டர் கலாச்சாரத்தை, இவரது ஆதராவாளர்கள் கையில் எடுத்துக்கொண்டதுதான் மகா கொடுமை.இது மாதிரி போஸ்டர்களை இவர் ஒரு போதும் கண்டித்தது இல்லை.மாறாக மறைமுக ஊக்கப்படுத்துகிறார் என்று எண்ணும்படியாக முதல் நாள் நூற்றுக்கணக்கில் ஒட்டப்படும் போஸ்டர்கள் மறுநாள் ஆயிரக்கணக்கில் ஒட்டப்படும்.அடுத்தவரை களங்கப்படுத்தும், கண்ணியக்குறைவை ஏற்படுத்தும், கவலையை உண்டாக்கும் இது போன்ற போஸ்டர்களை மதுரை போலீசாரும் கண்டுகொள்வது இல்லை.

இப்படி போஸ்டர்களால் அழுகுணிப்போர் நடத்திய மத்திய அமைச்சர் அழகிரிக்கு எதிராக ஒரு போஸ்டர் தற்போது தமிழகம் முழுவதும் வலம்வருகிறது.அந்த போஸ்டரை ஒட்டியவர் அழகிரி ஆதராவாளர்கள் போல பொய், புனை பெயரில் ஒளிந்துகொள்ளவில்லை., தனது பெயர்,படம் மட்டும் மொபைல் எண்ணை போட்டு தைரியமாக ஒட்டியுள்ளார்.போஸ்டரில் உள்ள வாசகங்களில் கிண்டலும்,கேலியும் கொப்பளிக்கிறது.

காணவில்லை
2011 ம்ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அ.இ.அ.தி.மு.க.,என்ற கட்சியே காணமால் போய்விடும் என்று கூறிய ,மு.க.அழகிரியை காணவில்லை
விபரம்
பெயர் : மு.க.அழகிரி
அப்பா பெயர் :தட்சிணாமூர்த்தி(எ)கருணாநிதி
பிறந்தது :சென்னை,கோபாலபுரம்
வளர்ந்தது :மதுரை அவணியாபுரம்
வேலைபார்ப்பது :ஆங்கிலம்,இந்தி தெரியாத மத்திய அமைச்சர்


இவரைப் பற்றிய தகவல் தெரிவிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்
இவண்எம்.ஜி.ஆர்.வாசன்,பகுதிகழக செயலாளர்,திருவல்லிக்கேணி.9941172464

இப்படிப்பட்ட வாசகங்களுடன் வண்ணத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரை பலரும் நின்று படித்து செல்கின்றனர்,அதிலும் ஆங்கிலம்,இந்தி தெரியாத மத்திய அமைச்சர் வேலை என்ற வார்த்தையை படித்துவிட்டு சிரிக்கின்றனர்.எது,எப்படியோ தலைவலியோ,முதுகுவலியோ தனக்கு வந்தால்தான் தெரியும் என்பார்கள், அது போல மற்றவர்களை போஸ்டர் மூலம் புண்படுத்துவதால் ஏற்படும் வேதனை எப்படி இருக்கும் என்பதை இப்போது அழகிரி நிச்சயம் உணர்ந்து இருப்பார் என்று நம்பலாம்.-ஆனந்தி.

கொசுக்கடி, புழுக்கம், டாய்லெட் பிரச்சினை-திஹார் சிறையில் தவிக்கும் கனிமொழி


டெல்லி: சுதந்திரப் பறவையாக டெல்லிக்கும், சென்னைக்குமாக வந்து போய்க் கொண்டிருந்த கனிமொழி இன்று புழுக்கத்தில், தவிப்பில் திஹார் சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார்.

சென்னையில் உள்ள தனது வீட்டில் எவ்வளவு வசதியாக இருந்தாரோ அதற்கு அப்படியே தலை கீழாக மாறிப் போயுள்ளது கனிமொழியின் வாழ்க்கை. திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் குட்டியூண்டு அறைக்குள் சுருண்டு போய்க் கிடக்கிறார்.

இரவில் சரிவர தூக்கம் வராமல் தவிக்கிறார். ஒருபக்கம் கொசுக்கடி, மறுபக்கம் புழுக்கம், இன்னொரு பக்கமோ டாய்லெட்டுக்குப் பக்கத்திலேயே படுக்க வேண்டிய நிலை என்று தவித்து வருகிறார் கனிமொழி.

வெள்ளிக்கிழமை இரவு தனது முதல் நாளை திஹார் சிறையில் மிகவும் நெருக்கடியுடன் சமாளித்த கனிமொழிக்கு நேற்றும் நரகமாகவே அது கழிந்துள்ளது.

நேற்று காலை ஐந்தரை மணியளவில் தன்னை எழுப்ப வந்த சிறை வார்டனிடம், தயவு செய்து என்னை தொந்தரவு செய்யாதீர்கள். ராத்திரி சரியாக தூங்க முடியாமல் தவித்து இப்போதுதான் தூங்கினேன் என்று கூறினாராம் கனிமொழி. இருப்பினும் சிறை விதிப்படி நீண்ட நேரம் தூங்க முடியாது என்று வார்டன் சற்று கண்டிப்புடன் கனிமொழியிடம் கூறினாராம். இதையடுத்து எழுந்துள்ளார் கனிமொழி.

தனது சிறை அறைக்குள்ளேயே பெரும்பாலான நேரத்தைக் கழிக்கிறார் கனிமொழி. அறைக்குள் மிகவும் புழுக்கமாக இருக்கிறதாம். கொசுத் தொல்லை தாங்க முடியவில்லையாம். கொசுக்களிடமிருந்து தப்பிக்க கொசுவர்த்தி கொடுத்தால் தேவலாம் என்று சிறைக் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை வைத்துள்ளாராம் கனிமொழி. ஆனால் அது கிடைத்ததா என்பது தெரியவில்லை.

காலையில் எழுந்ததும் அவர் இரண்டு துண்டு பிரெட், சப்ஜி, காபி குடித்தார். நேற்று காலையில் எழுந்து காலை உணவைச் சாப்பிட்டு முடித்ததும் தான் அடைக்கப்பட்டுள்ள சிறைப் பகுதியை சுற்றிப் பார்த்தாராம் கனிமொழி. அங்கு அடைக்கப்பட்டுள்ள தமிழ்ப் பெண் கைதிகளிடமும் அவர் பேசினாராம்.

கனிமொழி அடைக்கப்பட்டுள்ள சிறை அறையில் டாய்லெட்வசதி சரியாக இல்லையாம். இதை சிபிஐ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டபோது நீதிபதியிடமே கூறினார் கனிமொழி.

நேற்று மாலை கோர்ட்டிலிருந்து சிறைக்குத் திரும்பியதும் அங்கிருந்த தமிழகத்தைச் சேர்ந்த சிறப்புகா காவல் படை போலீஸாரிடம் சிறிது நேரம் பேசினார். பின்னர் தனது அறையில் அமர்ந்து சில புத்தகங்களைப் படித்துள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை கோர்ட் விடுமுறை என்பதால் சிறைக்குள்ளேயே இன்றைய பொழுதைக் கழித்து வருகிறார் கனிமொழி. டிவி பார்ப்பதிலும், புத்தகம் படிப்பதிலும் தனது பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கிறார்.

Tata:அம்பானிக்கு எதுக்கு அவ்ளோ பெரிய வீடு? - தாக்கும் டாடா


டெல்லி: இந்தியாவின் இன்றைய தேவை, தன்னிடம் உள்ள செல்வத்தை சமூக நலனுக்காகவும் பயன்படுத்துபவர்களே. இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி பல கோடி மதிப்புள்ள 27 அடுக்கு மாளிகையில் வசிக்கிறார். இது மிகப்பெரிய தவறு. மற்றவர்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டிய இவர், செல்வத்தை இப்படி வீணாக்கலாமா?" என்று கடுமையாக விமர்சித்துள்ளார் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா.

ரிலையன்ஸ் குழும அதிபர் அம்பானி மீது இத்தனை வெளிப்படையான தாக்குதலை அவர் தொடுத்திருப்பது பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது.
சமீபத்தில் லண்டனில் 'தி டைம்ஸ்' பத்திரிகைக்கு பேட்டியளித்தார் ரத்தன் டாடா.
அப்போது அவரிடம், முகேஷ் அம்பானியின் மும்பை சொகுசு பங்களா குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த டாடா, "பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட 27 அடுக்கு மாளிகையில் வசிக்க முகேஷ் அம்பானி முடிவு செய்ததை அறிந்தபோது நான் மிகுந்த வருத்தப்பட்டேன்.

முகேஷ் மாதிரி இடத்திலிருப்பவர்கள் தங்களின் பெரும் செல்வத்தில் ஒரு பகுதியை தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தில் கஷ்டப்படும் மனிதர்களுக்காக ஒதுக்க வேண்டும். அதுதான் இன்றைய தேவை. அதை விட்டுவிட்டு 27 அடுக்கு மாடியில் சொகுசாக வசிப்பதில் என்ன இருக்கிறது. இதை அவரிடம் நான் எதிர்பார்க்கவே இல்லை. அவரது ஒரு குடும்பத்துக்கு எதற்கு இத்தனை பெரிய ஆடம்பர மாளிகை", என்றார்.
போர்ப்ஸ் இதழில் உலகில் 9வது பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்து முகேஷுக்கு தரப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமமான டாடா சன்ஸ் தலைவர் ரத்தன் டாடா இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முகேஷ் அம்பானியின் இந்த 27 அடுக்கு சொகுசு மாளிகை தெற்கு மும்பையில் உள்ளது. இதன் மதிப்பு கிட்டத்தட்ட ரூ 10000 கோடி, மாடியில் ஹெலிகாப்டரை நிறுத்தும் வசதியுண்டு இந்த பங்களாவில்.

ஜெயலலிதா முன்னிலையில் கிடா வெட்டு, கொடைநாடு அம்மன்

கோத்தகிரி: சட்டசபை தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றதை கொண்டாடும் பொருட்டு நேற்று கொடநாட்டில் கிடா வெட்டு நடந்தது.

சிறப்பு பூஜை

தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் கோடநாடு எஸ்டேட்டில் கிடா வெட்டு நடந்தது. எஸ்டேட்டில் உள்ள அம்மன் கோவிலில் ஜெயலலிதா பெயரில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் கிடா வெட்டப்பட்டது.

இதில் 200-க்கும் மேற்பட்ட எஸ்டேட் தொழிலாளர்கள், உள்ளூர் அதிமுகவினர், சுற்றுலாத்துறை அமைச்சர் புத்தி சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விருந்து

பூஜைகள் முடிந்ததும் தொழிலாளர்களுக்கும், கட்சியினருக்கும் பிரம்மாண்டமான விருந்து நடந்தது.
 

English summary
A grand feast was held in Kodanad to celebrate the victory of ADMK. Special pooja was performed in the temple inside the Kodanad estate. Estate workers, local ADMK functionaries and tourism minister participated in this.

ஞாயிறு, 22 மே, 2011

Dubai. டுபாயில் இலங்கைப் பெண் தற்கொலையா?



டுபாயில் இலங்கைப் பெண் தற்கொலையா? டுபாயில் பணிபுரிந்த வந்த தனது மனைவி (இலங்கை வீட்டுப்பணிப் பெண்) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கணவரொருவர் எமக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

மேலும், தனது மனைவி முன்னர் தான் அங்கு பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்துவருவதாகவும், தான் நாடு திரும்ப வேண்டும் எனவும் தெரிவத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

பணச்சிக்கல் காரணமாக நாடு திரும்ப முடியாத நிலையில் தனது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக, அவருடன் பணிபுரிந்த அதே தினத்தில் நாடு திரும்பும் இலங்கை வீட்டுப் பணிப் பெண்ணொருவர் தனக்கு அறியப்படுத்தியதாகவும், இலங்கை வந்ததும் அவர் எதுவித தொடர்பினையும் தன்னொடு ஏற்படுத்தி கொள்ளாததினால் தனக்கு சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தனது மனைவியின் சடலத்தினை இலங்கைக்கு கொண்டுவர சுமார் 5 லட்சம் ரூபா தேவைப்படும் என அந்நாட்டவர்கள் தனக்கு தெரியப்படுத்தியதாகவும், தனது இயலாமையினை கருத்திற் கொண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு மற்றும் உதவிக் கோரிக்கை முன் வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமச்சீர் கல்வி குறித்து மறு பரிசீலனை-ஜூன் 15ம் தேதி பள்ளிகள் திறப்பு-அமைச்சரவை முடிவு

சென்னை: சமச்சீர் கல்வித் திட்டம் மாணவர்களின் தரத்தை உயர்த்துவதாக இல்லை என்று தெரிவித்துள்ள தமிழக அமைச்சரவை இதுகுறித்து மறு பரிசீலனை செய்ய முடிவெடுத்துள்ளது. இதன் காரணமாக ஜூன் 1ம் தேதி திறப்பதாக இருந்த பள்ளிக்கூடங்களை ஜூன் 15ம் தேதி திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையின் முடிவைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஜூன் 15ம் தேதியன்றுதான் பள்ளிகள் திறக்கப்படும்.

முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று நடந்தது. இன்றைய கூட்டத்தில் பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

தலைமைச் செயலாளர், பல்துறைச் செயலாளர்கள் இதில் கலந்து கொண்டனர். இதில் சமச்சீர் கல்வித் திட்டம் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது. அப்போது தற்போதைய சமச்சீர் கல்வித் திட்டம் மாணவர்களின் தரத்தை உயர்த்தும் வகையில் இல்லை என்பதால் இதை மறு பரிசீலனை செய்ய தீர்மானிக்கப்பட்டது.

இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வாக்காளர்களுக்கு நன்றி

- அமைச்சரவைக் கூட்டத்தின் முதல் தீர்மானமாக ஜெயலலிதா மீது நம்பிக்கை வைத்து அவரது தலைமையில் ஆட்சி அமைய வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மே 6ல் மேட்டூர் அணை திறப்பு

- காவிரி டெல்டா பாசன விவசாயிகள் குறுவைப் பாசனத்தை உரிய காலத்தில் மேற்கொள்ள மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 6-ம் தேதி தண்ணீர் திறந்துவிட அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

இந்தியா குடியரசு ஆன பின்னர் ஜூன் 12-ம் தேதிக்கு முன்னதாக தண்ணீர் திறந்துவிடப்படுவது இதுதான் முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

சமச்சீர் கல்வித் திட்டம் நிறுத்தம்

தற்போதைய சமச்சீர் கல்வி பாடத்திட்டம் ஒட்டுமொத்த கல்வித் தரத்தை உயர்த்த வழிவகை செய்யாது என்பதால் அதை உயர்த்துவது குறித்து ஆராய வல்லுநர் குழு ஒன்றை அமைக்க அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.

ஜூன் 15ல் பள்ளிகள் திறப்பு

எனவே பழைய பாடபுத்தகங்களையே பின்பற்றலாம் என்றும், பாட புத்தகங்களை அச்சிட சிறிது கால அவகாசம் தேவைப்படும் என்பதால் பள்ளிகளை ஜூன் 15-ம் தேதி திறக்கலாம் என்றும் அமைச்சரவை முடிவெடுத்தது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமச்சீர் கல்வித் திட்டத்தை இந்த ஆண்டு முதல் அனைத்து வகுப்புகளுக்கும் அறிமுகப்படுத்த கடந்த திமுக அரசு உத்தரவிட்டிருந்தது. இதற்காக பாடப் புத்தகங்களும் அச்சடிக்கப்பட்டிருந்தன. அதில் கருணாநிதி குறித்த பாடங்களையும் சேர்த்திருந்தனர். இந்த நிலையில் ஆட்சி மாறி விட்டதால் தற்போது அவற்றை மாணவர்களுக்கு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டு சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைக்க அதிமுக அரசு தீர்மானித்துள்ளது.
English summary
TN govt had decided to postpone the reopening of schools till June 15. And also the cabinet meeting, which was held under the leadership of CM Jayalalitha today, has decided to stop the uniform education system for 2011-12 education year.Cabinet has decided to review the system. The cabinet meeting also decided to open the Mettur dam on June 6.

மூத்த பத்திரிக்கையாளர் சின்னகுத்தூசி காலமானார்

திராவிட இயக்கதின் ஆற்றல் மிக்க சிந்தனையாளர், நாத்திகச் செம்மல் பத்திரிக்கை ஜாம்பவான் எழுத்துலகின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்த திரு.சின்னகுத்தூசி(எ) இரா.தியாரகராஜன் அவர்கள் 22.5.2011 அன்று காலை 7.50 மணிக்கு சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 77.
கடந்த ஓராண்டு காலமாக சென்னை பில்ராத் தனியார் மருத்துவமனையில் உயர்சிகிச்சைப் பெற்றுக்கொண்டிருந்த நிலையிலும், அனல் பறக்கும் அரசியல் கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வந்தார். தன் உடல்நிலை மிகவும் நலிவுற்ற நிலையில் இருந்தபோதிலும் தன்னை சந்தித்திட வருகை தந்த பத்திரிகை நண்பர்கள், அரசியல் நண்பர்களிடம் நாட்டுநிலைமை, அரசியல் நிலைமை, பற்றியெல்லாம் மணிக்கணக்கில் அழுத்தம் திருத்தமாக விவாதித்து வந்தார். என்பது குறிப்பிடத்தக்கது.

(முதல்வர்) கலைஞர் அவர்கள் தனது அரசாங்க நிகழ்வுகள், சட்டமன்ற நிகழ்வுகள், தேர்தல் நிகழ்வுகள் என்று பல்வேறு அயராதப் பணிகளுக்கு மத்தியிலும பில்ராத் மருத்துவமனைக்கு பலமுறை நேரில் வருகைதந்து திரு. குத்தூசி அவர்களுடன் கலந்துரையாடி அவரது உடல்நலனில் அக்கறை காட்டியதன் மூலம் அவர்கள் இருவரிடையே இருந்த நட்பு எத்தகைய வலிமை மிக்கது என்பதை உணரமுடியும்.இதேபோல் (துணை முதல்வர்) மு.க.ஸ்டாலின்  அவர்களும் தமிழகம் முழுவதும் சுற்றிச் சுழன்று ஆட்சிப்பணி, கட்சிப்பணிகளில் ஈடுபட்டிருந்த நிலையிலும் பல முறை நேரில் வருகைதந்து  சின்னகுத்தூசியின் உடல்நலனை அக்கறையுடன் விசாரித்தார். அதுமட்டுமின்றி, அமைச்சர்கள், தி.மு.கழக முன்னணியினரிடம் குத்தூசியின் எழுத்துப்பணியை பாராட்டிப் புகழ்ந்து புளகாங்கிதம் கொள்வார்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மற்றும் தி.மு.கழக மத்திய-மாநில அமைச்சர்கள் கழக முன்னணியினர் தொடர்ந்து மருத்துவமனைக்கு வருகை தந்து சின்னக்குத்தூசியின் உடல் நலத்தில் அக்கறை காட்டினர்.;நக்கீரன் குடும்பத்தினர், சின்னகுத்தூசியைப் பிதாமகனாகப்  தந்தெடுத்துக்கொண்டதுடன், திரு.நக்கீரன் கோபால் அவர்கள் இரவு பகல் பார்க்காமல் கண்துஞ்சாமல்-ஒரு தந்தைககு மகன் என்னென்ன கடமைகளைச் செய்வாரோ அத்தனை கடமைகளையும் கடந்த 15 ஆண்டுகளாக செய்து வந்ததோடு, கடந்த ஓராண்டு காலம் பில்ராத் மருத்துவமனையில் அரண்மனை வைத்தியத்தை திரு.சின்னகுத்தூசிக்கு வழங்கினார். ;மறைந்த திரு.சின்னக்குத்தூசியின் உடல் இராயப்பேட்டை ஜானிஜான்கான் தெருவில் உள்ள நக்கீரன் பத்திரிகை அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. தி.மு.க. கழகத் தலைவர் கலைஞர், பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக வந்து மலரஞ்சலி செலுத்திய வண்ணமுள்ளனர். ;இன்று (மே 22) மாலை 4 மணியளவில் மயிலாப்பூரில் அன்னாரது உடல் தகனம் செய்யப்படுகிறது. சின்னகுத்தூசியின் வாழ்க்கை நிகழ்வுகள் வருமாறு:;சின்னக்குத்தூசி என்றழைக்கப்படும் இரா.தியாகராஜன் அவர்கள் 15.06.1934ல் திருவாரூரில் பிறந்தார். தந்தை ராமநாதன். தாயார் கமலா அம்மையார். திருவாரூர் கழக உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்ற சின்னக்குத்தூசி, பள்ளியில் படிக்கும்போதே திருவாரூர் நகர திராவிட இயக்க முன்னோடிகளான சிங்கராயர், முத்துக்கிருஷ்ணன், வி.எஸ்.பி. யாகூப், 'தண்டவாளம்' ரங்கராஜன் ஆகியோருடன் ஏற்பட்ட தொடர்பால் திராவிட இயக்க கொள்கைகளின்பால் கவரப்பட்டார்.
பள்ளிப்படிப்பு முடிந்தபின், பயிற்சி பெறாத ஆசிரியராக பணியாற்றிய சின்னகுத்தூசி (எ) இரா.தியாகராஜன், ஆகிரியர் பயிற்சி பெறுவதற்காக, திருவாரூர் நகர மன்றத் தலைவராக இருந்த சாம்பசிவம் அவர்களிடம் பரிந்துரைக் கடிதம் பெற்று தந்தை பெரியாரை சந்தித்தார். பெரியாரின் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சிறப்பு அனுமதியின் அடிப்படையில் சேர்க்கப்பட்டு, ஆசிரியர் பயிற்சி பெற்றார். அதன்பின், பல்வேறு பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றினார். இவற்றில் குறிப்பிடத்தக்கது, குன்றக்குடி அடிகளார் அவர்களின் நிர்வாகத்தில் செயல்பட்ட குன்றக்குடி உயர்நிலைப்பள்ளியாகும். இப்பள்ளியில் பணியாற்றும்போது, குன்றக்குடி அடிகளாரின் அன்பைப் பெற்று, அவரிடம் நெருக்கமாக செயலாற்றினார்.
குன்றக்குடியில் பணியாற்றியகாலத்தில், தமிழ்த் தேசியக் கட்சியின் நிறுவனர் ஈ.வி.கி.சம்பத் அவர்களின் அழைப்பை ஏற்று, ஆசிரியர் பணியைத் துறந்துவிட்டு சென்னையில் நடந்த இந்தி எதிர்ப்பு போரில் பங்கேற்று சிறை சென்றார்.
திருவாரூரிலிருந்து வெளியான மாதவி வார இதழின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றிய சின்னக்குத்தூசி, பின்னர் தமிழ்த் தேசியக் கட்சியின் அதிகாரப் பூர்வ ஏடான தமிழ்ச் செய்தி வார இதழ், நாளிதழ் ஆகியவற்றின் பொறுப்பாசிரியராகவும் பணியாற்றினார். தமிழ்த் தேசியக் கட்சி, காங்கிரசில் இணைந்தபிறகு, பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் நடத்திய 'நவசக்தி'யில் தலையங்க ஆசிரியராக சிறிது காலம் பொறுப்பேற்றிருந்தார்.
நாத்திகம், அலைஓசை, எதிரொலி, முரசொலி உள்ளிட்ட நாளேடுகளிலும் நக்கீரன், ஜூனியர் விகடன் உள்ளிட்ட வாரமிருமுறை இதழ்களிலும் மற்றும் பல இதழ்கள், சிற்றிதழ்கள் ஆகியவற்றிலும் ஏராளமான அரசியல் விமர்சனக் கட்டுரைகளை எழுதிக் குவித்துள்ளார். வலுவான வாதங்கள், அசைக்க முடியாத ஆதாரங்கள், மறுக்க இயலாத புள்ளிவிவரங்கள், வரலாற்று நிகழ்வுகள் இவற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்படும் இவரது கட்டுரைகள் தமிழக அரசியல் களத்தில் பலரது கவனிப்பையும் பெற்றுவருகின்றன.
இவரது கட்டுரைகள் 'புதையல்', 'கருவூலம்', 'களஞ்சியம்', 'சுரங்கம்', 'பெட்டகம்', 'எத்தனை மனிதர்கள்', 'சங்கொலி', 'முத்தாரம்' 'வைரமாலை' உள்ளிட்ட பல தலைப்புகளில் நூல்களாக வெளிவந்துள்ளன. அமரர் ஜீவாவின் பொறுப்பில் வெளியான 'தாமரை' இதழிலும் இவரது சிறுகதைகள் வெளியாகியுள்ளன. நாராண துரைக்கண்ணன் அவர்கள் நடத்திய பிரசண்ட விகடன் இதழில் தொடர்கதை எழுதியுள்ளார். கலைஞர் அவர்களின் அன்பைப் பெற்ற சின்னக்குத்தூசி அவர்கள் முரசொலியில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவந்தார்.
சின்னக்குத்தூசி என்ற புனைபெயரில் இவர் பரவலாக அறியப்பட்டாலும் கொக்கிரகுளம் சுல்தான் முகமது, காமராஜ் நகர் ஜான் ஆசிர்வாதம், தெரிந்தார்க்கினியன், ஆர்.ஓ.மஜாட்டோ, திட்டக்குடி அனீஃப் ஆகிய புனைப் பெயரிகளிலும் பல அரசியல் விமர்சனக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
நடமாடும் திராவிட இயக்க களஞ்சியம் எனும்படி தமிழகத்தின் 60 ஆண்டுகால அரசியல் விவரங்களை விரல் நுனியில் வைத்திருக்கும் சின்னக்குத்தூசி அவர்கள் இந்திய அரசியல் குறித்தும் ஆழ்ந்த அறிவனுபவம் மிக்கவர். பொதுவாழ்க்கை - எழுத்துப்பணி இவற்றிற்றகாக திருமணம் செய்துக்கொள்ளாமல் வாழ்ந்து வந்த சின்னக்குத்தூசி அவர்கள் சென்னை திருவல்லிக்கேணி எண்.13 வல்லப அக்கிரஹாரம் தெருவில் தங்கியிருந்த சிறிய அறை, இன்றைய பத்திரிகையாளர்களின் வேடந்தாங்கலாக அமைந்திருந்தது. மனிதநேயம், பகத்தறிவு, சுயமரியாதை ஆகியவற்றை இலட்சியங்களாகக் கொண்டு திராவிட இயக்க நெறிகளின்படி வாழ்ந்து வந்தவர் திரு.சின்னக்குத்தூசி (எ) இரா.தியாகராஜன் அவர்கள்.

கலைஞர் டிவியின் பங்குதாரராக நான் கூறியதைக் கேட்டதுதான் கனிமொழி செய்த தவறு-கருணாநிதி

சென்னை: கனிமொழி விரும்பாவிட்டாலும் கூட, அப்பா சொல்கிறாரே என்று கலைஞர் டிவியில் ஒரு பங்குதாரராக இருக்க ஒப்புதல் அளித்த ஒரு குற்றத்தைத் தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை. எந்த ஒரு நிறுவனத்திலும் பங்குதாரர்களாக இருப்பவர்கள் லாபமோ, நட்டமோ அந்த இரண்டில் ஒன்றுக்கு பங்குதாரராக ஆகிவிடுவது பொதுவான விஷயம். ஆனால் அந்த நிர்வாகத்தின் ஒவ்வொருநாள் நடவடிக்கைக்கும் அனைத்து பங்குதாரரும் பொறுப்பாக ஆவதில்லை என்று கூறியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.

இதுதொடர்பாக தனது கட்சி உடன்பிறப்புகளுக்கு கருணாநிதி எழுதியுள்ள கடிதம்:

என்னைப் பற்றியும், என் குடும்ப வாழ்க்கை மற்றும் பொது வாழ்க்கைப் பற்றியும் நேரம் வரும்போதெல்லாம் பல முறை உனக்கும், உன் வாயிலாக ஊராருக்கும் சொல்லி இருக்கிறேன். இப்பொழுது சொல்லப்போவது அதைப்போன்ற "சுய புராணம்'' அல்ல. சுயபுராணத்தைத்தான் "நெஞ்சுக்கு நீதி'' என்ற தலைப்பில் ஐந்து பாகங்கள் எழுதி முடித்திருக்கிறேனே. இப்பொழுது நான் எழுதப்போவதை அடுத்த பாகத்தின் முன்னுரை என்று கருதிக்கொண்டாலும் சரி, அதற்கிடையே எழுந்துள்ள "மன ஓலம்'' என்று எண்ணிக் கொண்டாலும் சரி, இந்தச் சூழலில் இவற்றை நான் ஞாபகப்படுத்தியே தீர வேண்டும்.

நான் உயிரினும் மேலாக கருதும் நமது கழகம், பெரும் தோல்வியை சந்தித்து ஆட்சியை இழந்திருக்கும் கால கட்டம் இது. அந்த இழப்புக்கு எது காரணம்? இணைந்த கட்சிகளுக்கு வழங்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கையா? அல்லது அவர்கள் வலியுறுத்தி வாங்கிக்கொண்ட தொகுதிகளின் கணக்கா? தமிழ்நாட்டிற்கென்றே தனியான "ஜபர்தஸ்து''களை, ஜனநாயக விரோதச்செயல்களை, சாட்டைகளாக கொண்டு, சர்வாதிகார "பாட்டை'' வகுத்துக்கொண்ட தேர்தல் கமிஷன் எனும் பிரம்ம ராட்சத பூதமா? என்ற கேள்விகளுக்கு எல்லாம் நான் போக விரும்பவில்லை.

ஆனால் இந்தியாவிலேயே அல்லது தமிழ்நாட்டிலேயே அதிகார செல்வாக்கைப் பெருக்கி - "ஆயிரம் கோடி, பத்தாயிரம் கோடி, லட்சம் கோடி சம்பாதித்து மூட்டைகளாகக் கட்டி வைத்திருக்கிற குடும்பம், கருணாநிதியின் குடும்பம்'' என்று தேர்தல் நேரத்தில் பிரச்சாரம் செய்தவர்கள், மழை விட்டும் தூறல் விடவில்லை என்பதைப் போல, இப்போதும்கூட அந்த பிரச்சாரத்தை ஏடுகள் வாயிலாக, ஏனைய ஊடகங்களின் வாயிலாக கூறிக்கொண்டிருக்கிறார்களே, அவற்றை பொய்யுரை என்றும், புனைந்துரை என்றும், புளுகு மாயப்புழுதி மாயம் என்றும், என் தமிழ் மக்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்பதற்காக சிலவற்றைத் தொகுத்துச் சொல்ல விரும்புகிறேன்.

நான் செல்வச் செழிப்பான பெரும் தனவந்தர் குடும்பத்தில் நான் பிறந்தவன் அல்லன். தஞ்சை மாவட்டத்தில் (தற்போது நாகை மாவட்டத்தில்) திருவும் வளமும் கொண்ட திருக்குவளை கிராமத்தில் சுற்றிலும் சூழ்ந்திருந்த வயல்களில் கிடைத்த பயிரையும், நெல்லையும், அரிசியையும் பயன்படுத்தி கொண்டு, ஒரு ஓட்டுவில்லை வீட்டில் விவசாயியாகவும் இசைமேதைகளில் ஒருவராகவும் இருந்த - முத்துவேல நாதசுரக்காரருக்கு மூன்றாவது பிள்ளையாக பிறந்தவன் நான்.

நான் உருண்டும் புரண்டும் தவழ்ந்தும் தள்ளாடி நடந்தும் பின்னர் திருவாரூர் பள்ளியில் பயின்றும், அங்கு பெற்ற அறிவால் அந்த இளமையிலேயே அண்ணாவையும், பெரியாரையும் முறையே அரசியல் இயக்கத்திற்கும், அறிவு இயக்கத்திற்கும் வழிகாட்டிகளாக ஏற்றுக்கொண்டும், சூடு தணியாத சுயமரியாதை உணர்வோடு பொது வாழ்க்கையைத் தொடங்கியவன் நான்.

பதினான்கு வயதிலேயே "பனகல் அரசரை'' படித்து "படிக்க முடியாது கட்டாய இந்தியை'' என்று மொழிப்போரில் புகுந்து, அதற்கு அடுத்தடுத்த தொடர் களங்கள் பலவற்றைச் சந்தித்து ஐந்து முறை முதல்-அமைச்சராகவும், 12 முறை தமிழகச் சட்டப் பேரவை உறுப்பினராகவும் வெற்றி பெற்று - பொன்விழாக்கள், பவளவிழாக்கள் கொண்டாடியும்கூட, இலக்கியவேந்தர், கலை வேந்தர் என வேந்தர் பட்டங்களை பெற்றாலும்கூட, வேண நிலங்களுக்கு சொந்தக்காரன் என்றோ, வான்தொடும் மாளிகைகளுக்கு உரிமையாளன் என்றோ, அடுக்கி வைத்த பணப்பெட்டிகளுக்கு அதிபர் என்றோ என்னை நான் என்றைக்குமே ஆக்கிக்கொள்ள நினைத்ததும் இல்லை; அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டதும் இல்லை. அவற்றைத் தேடிக்கொள்ள திருட்டு வழியை தேடிக் கொண்டவனுமல்ல

அப்படியானால் இத்தனை ஆண்டுக்காலம் கட்சிக்கு பொருளாளராக, 42 ஆண்டு காலம் கட்சிக்குத் தலைவராக, 19 ஆண்டு காலம் ஆட்சிக்கு முதல்வராக இருந்த காலகட்டங்களில் எதுவுமே சம்பாதிக்க வில்லையா என்ற கேள்விக்கு நான் தரும் பதில் ஆம்; சம்பாதித்தேன், "தமிழுக்கு தொண்டு செய்வோன்'', "தமிழ் வாழ தலையும் கொடுக்கத்துணிவோன்'' என்ற பட்டப்பெயர்களை, புகழுரைகளை நிரம்ப சம்பாதித்தேன். என் எளிய வாழ்க்கையை நான் நடத்திட பொருளீட்டியதே இல்லையென்று புளுகிடும் துணிவு எனக்கில்லை, பொருளீட்டியது உண்டு. அந்தப்பொருளில் பெரும் பகுதியை வாழ்வின் இருளில் இருந்தோர்க்கு வழங்கியது உண்டு.

நான் முதலில் எழுதி, நானும் நடித்த "சாந்தா அல்லது பழனியப்பன்'' எனும் நாடகத்தை - 1940-களில் நூறு ரூபாய்க்கு விற்று, அந்தப்பணத்தை என் குடும்பச்செலவிற்கு மட்டுமல்லாமல், அடுத்த நாடகத்திற்கான முன் செலவுகளுக்கும் ஆரூர் நடிகர் கழக அமைப்புக்கும் அளித்தேன். அதைத்தொடர்ந்து, கோவை ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரித்த "ராஜகுமாரி'' படத்திற்கும், சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த "மந்திரி குமாரி'', "தேவகி'' போன்ற படங்களுக்கும் நான் வாங்கிய பணம் மாதச்சம்பளமாக இருந்ததால் அந்த ஊதியத்தை, வருமானவரி போக மிச்சப்பணத்தை தான் தந்தார்கள்.

பின்னர் "பராசக்தி'', "மனோகரா'', "மலைக்கள்ளன்'', "இருவர் உள்ளம்'', "மருதநாட்டு இளவரசி'' - "திரும்பிப் பார்'', "பணம்'', "நீதிக்குத் தண்டனை'', "இளைஞன்'' என்றெல்லாம் தொடர்ந்து தற்போது "பொன்னர்-சங்கர்'' வரையில் 76 படங்களுக்கு கதை வசனம் எழுதியிருக்கிறேன். சில படங்களுக்கு பாடல்களும் எழுதியிருக்கிறேன்.

பிரசாத் இயக்கத்தில் உருவான "தாயில்லா பிள்ளை'' மற்றும் "இருவர் உள்ளம்'' படங்கள் நூறு நாள் ஓடினால் மேலும் பத்தாயிரம் ரூபாய் தருவதாக பிரசாத் வாக்களித்து, அவ்வாறே நூறுநாள் அந்தப் படம் ஓடியதற்காக அவர் தந்த பத்தாயிரம் ரூபாயை கொண்டு என்னை பெற்றெடுத்த திருக்குவளையில் - "முத்துவேலர், அஞ்சுகம் தாய் சேய் நல விடுதி'' கட்டி அந்நாள் முதல்-அமைச்சர் பக்தவத்சலத்தைக் கொண்டு திறப்புவிழா நடத்தினேன்.

அப்பொழுது நான் எழுத்தாளர் மட்டுமல்ல சட்டமன்ற உறுப்பினரும் கூட (எதிர்க்கட்சி துணைத்தலைவராகவும் இருந்தவன்). இதே போல நான் எழுதிய படங்கள் அனைத்திலும் பெற்ற ஊதியத்தில் திருவாருக்கு அடுத்த காட்டூரில் சிறிதளவு நஞ்செய் நிலம் வாங்கவும் பயன்படுத்திக் கொண்டது போக மிச்சத்தை நலிந்தோருக்கே வழங்கினேன். காட்டூரில் ஆரம்பப் பள்ளிக்கூட கட்டிடத்திற்கு அப்போதே நிதியளித்து அந்தக் கிராமப்பகுதியில் கல்வி வளர்ச்சிக்கு உதவி புரிந்தேன்.

கட்சிக்குப் பொருளாளராக இருந்தபோது அண்ணாவின் ஆணைப்படி, தமிழகத்தில் ஊர்தோறும், நகர்தோறும், பட்டி தொட்டி, குக்கிராமம் என செல்லாத இடமில்லை என்ற அளவிற்குச் சென்று - கழகக் கொடியேற்ற, கழகத்தினர் இல்லத்தில் உணவருந்த என்பதற்கெல்லாம் கட்டணம் விதித்து - சென்னை விருகம்பாக்கம் கழக மாநாட்டில் அண்ணாவிடத்தில், மூதறிஞர் ராஜாஜி, கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத், சிலம்புச் செல்வர் ம.பொ.சி., பொதுவுடைமை வீரர் பி.ராமமூர்த்தி, பார்வர்ட் பிளாக் இயக்கத்தைச் சேர்ந்த பி.கே.மூக்கையா தேவர் ஆகியோர் முன்னிலையில் 11 லட்சத்தை தேர்தல் நிதியாக அளித்தேன். வெள்ள நிவாரண நிதி, புயல் நிவாரண நிதி, கைத்தறியாளர் கண்ணீர் துடைக்க நெசவாளர் நல்வாழ்வுக்காக நிதி, இப்படி எத்தனையோ நிதிகள் வழங்கியும்-வசூலித்து தந்தும் தொண்டாற்றியவன்தான் நான்.

2004-2005-ம் ஆண்டில் "மண்ணின் மைந்தன்'' திரைப்படத்திற்காக 11 லட்சம் ரூபாயும், "கண்ணம்மா'' திரைப்படத்திற்காக 10 லட்சம் ரூபாயும் கிடைத்ததை சுனாமி நிவாரண தொகையாக -அப்போதிருந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் மு.க.ஸ்டாலின் மூலமாக நேரடியாக கொடுக்க செய்தேன். 9-7-2008-ல் "உளியின் ஓசை'' திரைப்படத்திற்காக எனக்கு தரப்பட்ட 25 லட்சம் ரூபாயில் ஏழு லட்சம் ரூபாய் வருமானவரிபோக மீதத்தொகை 18 லட்ச ரூபாயை அன்று கலையுலகை சேர்ந்த நலிந்த கலைஞர்களுக்கு உதவிநிதியாக - கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் நேரடியாக வழங்கினேன்.

17-9-2009இல் "பெண் சிங்கம்'' திரைப்படத்திற்காக எனக்கு 50 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. அந்தத்தொகையினை அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவித்தொகையாக வழங்குவேன் என்று அறிவித்ததை யொட்டி, அப்படி வழங்கப்பட வேண்டிய தொகை 61 லட்சம் ரூபாய் என்று கூறிய போது என்னுடைய சொந்த கையிருப்பு நிதி 11 லட்சம் ரூபாயையும் சேர்த்து உதவி நிதியாக 29-10-2009 அன்று வழங்கினேன். 27-4-2010 அன்று "இளைஞன்'' திரைப்படத்துக்காக வருமானவரி போக 45 லட்சம் ரூபாய் எனக்கு வழங்கப்பட்டது. அந்த தொகையினை முதலமைச்சர் நிவாரண நிதியிலே சேர்த்து பிறகு மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வுக்காக அந்த தொகை உதவி நிதியாக வழங்கப்பட்டது.

"பொன்னர் -சங்கர்'' திரைப்படத்திற்காக 8-9-2009-ல் 10 லட்சம் ரூபாயும், 6-6-2010-ல் 121/2 லட்சம் ரூபாயும் எனக்கு வழங்கப்பட்டது. இந்த படத்திற்காக தரப்பட வேண்டிய 25 லட்சம் ரூபாயில் வரியாக 21/2 லட்சம் ரூபாய் போக எஞ்சியத்தொகை 221/2 லட்சம் ரூபாயாகும். இந்த தொகையிலிருந்து காவல் துறையிலே விளையாட்டுப்போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கம் பெற்ற வீரர்களுக்கு வழங்கச் செய்தேன். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் தொல். திருமாவளவன் வழங்கிய 50 ஆயிரம் ரூபாய் நிதியினை முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் சேர்த்துள்ளேன்.

கழகத்தை தோற்றுவித்த தலைவர்கள், தோன்றா துணைவர்களாக இருந்த தலைவர்கள், உயிரினும் மேலான உடன்பிறப்புகளாம் தொண்டர்கள் ஆகியோருக்கு குடும்ப நிதியாக, நல வாழ்வு நிதியாக அள்ளித் தந்தது ஆயிரம் ஆயிரம். அவை இன்றைக்கும் என்னுடைய பெயரால் அமைந்துள்ள அறக் கட்டளைகளின் சார்பில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. என்னுடைய ஒவ்வொரு பிறந்த நாள் நிகழ்ச்சிகளிலும், மாலைக்கு பதிலாகவும், பொன்னாடைகளுக்கு பதிலாகவும் வழங்கப்பட்ட நிதியினையும் முதல்-அமைச்சர் பொதுநிவாரண நிதியிலே சேர்த்திருக்கிறேன்.

ஈழத்தமிழர் நிவாரணத்திற்காக தமிழக அரசின் சார்பில் நிதி திரட்டப்பட்ட போது என்னுடைய சொந்தப் பொறுப்பில் 10 லட்சம் ரூபாயினை நன்கொடையாக வழங்கியிருக்கிறேன் "சன்'' தொலைக்காட்சி நிறுவனத்தில் பங்குதாரராக இருந்த என் மனைவி தயாளு அம்மையார் அதிலிருந்து பிரிந்து வந்த வகையில் கிடைக்கப்பெற்ற 100 கோடி ரூபாயில் எனக்கு கிடைத்த 10 கோடி ரூபாயில் ஐந்து கோடி ரூபாயினை பங்கீட்டுத் தொகையாக செலுத்தி, தி.மு.கழகத்தின் சார்பில் "கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை'' ஒன்றினை கழகத்திலே உள்ள நலிந்தவர்களுக்கு உதவி செய்வதற்காக தொடங்கப்பட்டது.

11-1-2007 அன்று நடைபெற்ற 30-வது புத்தக கண்காட்சி விழாவில் நான் பேசும்போது -இந்த 5 கோடி ரூபாயிலிருந்து தென்னிந்திய புத்தக விற்பனையாளர்-பதிப்பாளர் சங்கத்துக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கப்படும் என்று அறிவித்து, அவ்வாறே அந்த சங்கத்துக்கு அந்த தொகை வழங்கப்பட்டது. அந்த தொகையிலிருந்து கிடைக்கும் வட்டித்தொகையை கொண்டு-அந்த சங்கத்தின் சார்பில் ஆண்டு தோறும் நல்ல புத்தகங்களை, சமுதாய சீர்திருத்த கருத்துகள் தாங்கிய புத்தகங்களை எழுதும் சிறந்த எழுத்தாளர்கள், வெளியிடும் பதிப்பாளர்கள் ஐந்து பேரை தேர்வு செய்து, தலா ஒரு லட்சம் பொற்கிழி வழங்கிட கூறியுள்ளேன்.

இந்த ஒரு கோடி ரூபாய் நிதியைக்கொண்டு "கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி அறக்கட்டளை'' என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்று பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் நிறுவப்பட்டு இதுவரை 17 அறிஞர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் பொற்கிழிகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.

தி.மு.கழக சார்புடைய "கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை''க்கு நான் கொடுத்ததில் எஞ்சிய நான்கு கோடி ரூபாய்க்கு மாதந்தோறும் கிடைக்கின்ற வட்டித்தொகையிலிருந்து-கழகத்திலே உள்ள நலிந்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2005 நவம்பர் மாதம் முதல் இந்த ஆண்டு மேமாதம் வரை 2337 பேருக்கு மொத்தம் 2 கோடியே 1 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளன. இந்த உதவித்தொகை தற்போதும் ஒவ்வொரு மாதமும் தரப்பட்டு வருகிறது.

"சன்'' தொலைக்காட்சியிலிருந்து எனக்கென்று கிடைத்த 10 கோடி ரூபாயில்-"கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை''க்கு அளித்த 5 கோடி ரூபாய் போக எஞ்சிய 5 கோடி ரூபாய் வங்கியில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டுள்ளது. அந்த வைப்புநிதிக்கு கிடைத்த வட்டித்தொகையிலிருந்து ஒரு கோடி ரூபாயை நன்கொடையாக தமிழ்ச்செம்மொழி நிறுவனத்திற்கு 26-7-2008 அன்று வழங்கி அந்த தொகையிலிருந்து கல்வெட்டியல், தொன்மையியல், நாணயவியல் ஆகிய பிரிவுகளில் ஆராய்ச்சி செய்யும் சான்றோர்களுக்கு விருது வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறேன்.

கோவையில் நடைபெற்ற உலக தமிழ்மாநாட்டின்போது முதன் முறையாக இந்த விருது பின்லாந்து நாட்டு தமிழ்அறிஞர் அஸ்கோ பர்போலாவுக்கு பத்து லட்ச ரூபாய் பொற்கிழியாக நன்கொடையுடன் வழங்கப்பட்டது. இதற்கெல்லாம் மேலாக சென்னை கோபாலபுரத்தில் நான் தற்போது வாழ்ந்து வரும் என்னுடைய வீட்டைக்கூட ஏழை-எளியவர்களுக்கு பயன்படும் வகையில் ஒரு மருத்துவமனையாக மாற்றி அளிப்பேன் என்றும் அறிவித்து, அதற்கான முறையான பத்திரப்பதிவுகளும் செய்யப்பட்டுள்ளன.

"சன்'' தொலைக்காட்சி நிறுவனத்தில் தயாளு அம்மாள் பங்குதாரராக இருந்து பிரிந்ததையொட்டி - 18-10-2005 அன்று "சன்'' தொலைக்காட்சி நிறுவனத்தால் தரப்பட்ட தொகை 100 கோடி ரூபாயில் - 22.5 கோடி ரூபாய் வருமான வரியாக முறைப்படி செலுத்திய பின் எஞ்சிய தொகையான 77.5 கோடி ரூபாய் பகிர்ந்து கொள்ளப்பட்டபோது என் இளைய மகள் கனிமொழி தனக்குக் கிடைத்த 2 கோடி ரூபாயை பங்குத்தொகையாக செலுத்தி, கலைஞர் தொலைக்காட்சியில் ஒரு பங்குதாராக இருக்கச் சொல்லி நான்தான் வலியுறுத்தினேன்.

கனிமொழி அதை விரும்பாவிட்டாலும் கூட, அப்பா சொல்கிறாரே என்று அதற்கு ஒப்புதல் அளித்த ஒரு குற்றத்தைத் தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை. எந்த ஒரு நிறுவனத்திலும் பங்குதாரர்களாக இருப்பவர்கள் லாபமோ, நட்டமோ அந்த இரண்டில் ஒன்றுக்கு பங்குதாரராக ஆகிவிடுவது பொதுவான விஷயம். ஆனால் அந்த நிர்வாகத்தின் ஒவ்வொருநாள் நடவடிக்கைக்கும் அனைத்து பங்குதாரரும் பொறுப்பாக ஆவதில்லை.

டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் கனிமொழிக்காக வாதாடிய வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி, ஒரு நிறுவனத்தில் நடைபெறுகிற வரவு-செலவு, கொடுக்கல்-வாங்கல், இவற்றில் எல்லாம் அந்த நிர்வாகத்தின் பங்குதாரர்கள் பொறுப்பேற்க வேண்டியவர்கள் என்று விதிமுறை இல்லை என்பதை தெளிவாகச் சுட்டிக் காட்டிய பிறகும் கூட; கலைஞர் தொலைக்காட்சி நிர்வாகத்தின் நிர்வாகி தம்பி சரத் குமாரையும், என் மகள் கனிமொழியையும் ஜாமீனில் விட மறுத்து சிறைக்கு அனுப்பி இருக்கிறார்கள்.

என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலத்தை வஞ்சனையாளர்கள் சிலர்கூடி, வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ள போதிலும்கூட, அத்துடன் நிம்மதி அடையாது, நாங்கள் வாழ்ந்த இடம், வாழும் இடம், நம் இரு வண்ணக் கொடி பறக்கும் இடம் அனைத்தும் தரைமட்டமாகி - புல் முளைத்த இடமாகப் போக வேண்டும் என்று அதுவும் "தர்ப்பைப் புல்'' முளைத்த இடமாகப் போக வேண்டுமென்று குமரி முனையிலிருந்து இமயக் கொடுமுடி வரையிலே உள்ளவர்கள் தவம் கிடக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாமல் இல்லை.

உடன்பிறப்பே, உனக்கும் இந்த உண்மைகள் தெரிய வேண்டும் என்பதற்காகத் தான், உன் தமையன் நான் "சுயபுராணம்'' இது என்றாலும் சுயமரியாதைப் புதினமாக இதைக் கருதி இந்தக் கடிதத்தின் தொடக்கத்திலிருந்து முடிவு வரையில் ஒவ்வொரு வரியாக நீ படித்து, சிந்தித்து, புரிந்துகொண்டு, செயல்படுத்துவாயானால் தன்மானக் கழகமாம் தமிழர்நலம் தேடும் இந்தப் பாசறை அறப்போர்க் கணைகளை ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள் வடிவில், தம்பி தங்கைகள் உருவில் நடமாட விடுவார்கள் என்பது என் எண்ணம். அந்த அறப்போர் இறுதிப் போராகி நாம் வெல்வது திண்ணம் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
English summary
In a letter addressed to party workers, Karunanidhi had said sending Kanimozhi and Kalaignar TV Managing Director Sharath Kumar to jail is a violation of the law. He also said there's a vendetta against the DMK from Kanyakumari to the Himalayas, and that the party will win the war.

எலிகள் போல் மீடியாவை பின்தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறோம்

இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை கனிமொழியைச் சுழற்றி அடித்து திகாரில் தள்ளியிருக்கிறது.  நேற்று தொடங்கி இன்றுவரை ட்விட்டரில் கனியும் திகாரும் டாப் ட்ரெண்டிங். (தமிழகத்தில் கிடைக்காவிட்டால் என்ன, திகாரில் நாங்கள்தான் மெஜாரிட்டி). ஃபேஸ்புக்கிலும் கனிமொழியே நிறைந்திருந்தார். (முதலில், ஆ. ராசா. இப்போது, கனிமொழி. ஏக் 2ஜி கேலியே!) பர்கா தத் தொடங்கி இணையத்தில் நேற்று அக்கவுண்ட் ஆரம்பித்தவர்கள் வரை அனைவரும் கனிமொழியின் கைதை ஒருவித பரவசத்துடன் கொண்டாடித் தீர்த்துவிட்டார்கள்.
அன்னா ஹசாரேவுக்காக மெழுகுவர்த்தி ஏற்றியவர்கள் கனிமொழியின் கைதை ஊழலுக்கு எதிரான குறிப்பிடத்தக்க வெற்றி என்கிறார்கள். சட்டம் தன் கடமையைச் செய்திருக்கிறது. எத்தனை பெரிய அரசியல்வாதியாக இருந்தாலும், எவ்வளவு சக்தி வாய்ந்தவராக இருந்தாலும் சட்டத்தின் நீண்ட கரம் அவர்களை விட்டு வைக்காது. இது ஜனநாயகத்தின் வெற்றி. ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் வெற்றி. ஜனநாயகத்தின் வெற்றி. மீடியாவின் வெற்றி.  ஸோ அண்ட் ஸோ.
ஒன்று மட்டும்தான் உண்மை. இது மீடியாவின் வெற்றி. இந்தக் கொண்டாட்டத்துக்காக நம்மை கிட்டத்தட்ட ஒரு மாதமாக தயார் படுத்திக்கொண்டிருக்கிறது மீடியா. இன்று, நாளை, அடுத்த வாரம், தேர்தல் முடிந்த பிறகு என்று கனிமொழி கைதாகப்போவதை ஒரு த்ரில்லர் கதையாக மாற்றி ஒவ்வொரு நாளும் நம்மை இருக்கை நுனிக்கு தள்ளிக்கொண்டிருந்தார்கள். தேர்தல் முடிந்து, அதிமுக வெற்றி பெற்றதும் நேற்று க்ளைமேக்ஸ் அரங்கேறிவிட்டது. திரை.
இன்னும் கொஞ்ச காலம் மீடியா கனிமொழியைச் சுற்றிக்கொண்டிருக்கும். கருணாநிதி தயாளுவுடன் வந்து தன் மகளைப் பார்ப்பாரா, அப்படியே வந்தாலும் காங்கிரஸ் தலைவர்கள் யாரையாவது சந்திப்பாரா, அப்படியே சந்தித்தாலும் பேசுவாரா, அப்படியே பேசினாலும் ஏதாவது உபயோகம் இருக்குமா? அடுத்து யார்? தயாளுவா? அவருக்குப் பிறகு? வேறு பெரிய தலைகள் சிக்குமா?
குழல்  ஊதிக்கொண்டே செல்லும் பேக்பைப்பரைப் பின்தொடர்ந்து ஓடும் எலிகள் போல்  மீடியாவை நாம் பின்தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறோம். மீடியா எது பற்றியெல்லாம் கவலைப்படுகிறதோ அது பற்றியெல்லாம் நாமும் கவலைப்படுகிறோம். மீடியாவின் சந்தேகங்களும் கவலைகளும் எதிர்பார்ப்புகளும் நம் சந்தேகங்களாக, கவலைகளாக, எதிர்பார்ப்புகளாக மாறிவிட்டன.
இதோ உன் டார்கெட் என்று மீடியா நேற்று கனிமொழியை வட்டமிட்டு காட்டியது. உடனே ட்விட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் நாம் கத்தி எறிய ஆரம்பித்துவிட்டோம். ஈழத்தமிழர்களுக்காக அன்று நீ அழுதிருந்தால் இன்று நான் உனக்காக அழுதிருப்பேன். இது பழிக்குப் பழி வாங்கும் கத்தி. நேற்று வரை ஏஸியில் இருந்தவர், இனி எப்படிக் கஷ்டப்படப் போகிறாரோ? இது ஐயோ பாவம் கத்தி. ஜெயலலிதா விடமாட்டார், கருணாநிதியின் குடும்பம் முழுவதையும் திகாருக்கு அனுப்பிவிட்டுதான் ஓய்வார். இது கட்சி அனுதாபக் கத்தி.
இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவிலும் ஆ. ராசாவும் கருணாநிதியும் தயாளுவும் கனிமொழியும் கலைஞர் டிவியும் இன்று பிரபலமான பெயர்கள். உலகம் தழுவிய டாப் ஊழல்வாதிகள் பட்டியலில் நிக்ஸனுக்கு அடுத்து இரண்டாவது இடத்தை ஆ. ராசாவுக்கு வழங்கியிருக்கிறது டைம்ஸ் பத்திரிகை. இந்தியாவின் ஆகப் பெரும் ஊழல் என்பதாக 2ஜி உலக மீடியாவில் அலசப்பட்டுக்கொண்டிருக்கிறது.
 ஆ. ராசாவும் கனிமொழியும் மட்டுமல்ல இந்த ஊழலோடு சம்பந்தப்பட்ட அனைவரும் தண்டிக்கப்படவேண்டியவர்களே. ஆனால், மீடியாவின் நோக்கம் இதுதானா? யோசித்துப் பாருங்கள். மீடியா பிரச்னையின் அசலான மையப்புள்ளியை என்றாவது நேர்மையாக வெளிப்படுத்தியிருக்கிறதா? காஷ்மிரில் கல் வீச்சு நடந்தால் அது பரபரப்பு செய்தி. காஷ்மிர் பிரச்னையின் மையம் என்ன? பாகிஸ்தான் தீவிரவாதம் பரபரப்பு செய்தி. அதன் தோற்றுவாய் என்ன? ஒசாமா பின்லேடன் கொலை சென்சேஷன். ஒசாமாவை உருவாக்கியவர்களின் கதை? அவர்கள் நோக்கம்? இராக் யுத்தமும் ஆப்கனிஸ்தான் யுத்தமும் பல்லாயிரம் முறை செய்திகளாக வலம் வந்தன. ஆனால், எத்தனை முறை போர்க்காரணம் உண்மையாக அலசப்பட்டிருக்கிறது?
னிமொழியும் அவ்வாறே.  கருணாநிதியின் மகள். அரசியல்வாதி. திமுகவின் முக்கியப் புள்ளி. மக்களுக்குப் பரிச்சயமான முகம். அவர் ஒரு வழக்கில் மாட்டும்போது, முக்கியத்துவம் பலமடங்கு அதிகரிக்கிறது. பல கதைகளையும் யூகங்களையும் அவரை வைத்து பின்னமுடிகிறது. பத்திரிகைகளுக்குப் பல பக்கங்கள். தொலைக்காட்சிகளுக்குப் பல மணி நேர ஒளிபரப்பு. பரபரப்பு. பைசா.
கனிமொழியை அம்பலப்படுத்துவதிலும் ஆ. ராசாவை அம்பலப்படுத்துவதிலும் அடுத்து தயாளுவை கட்டம் கட்டுவதிலும் முனைப்புடன் இருக்கும் 24து7 மீடியா என்றாவது, 2ஜி பிரச்னையின் மையப்புள்ளியான தனியார்மயத்தை அம்பலப்படுத்தியிருக்கிறதா? நீரா ராடியா டேப் வெளிவந்த பிறகும்கூட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான ரகசிய உறவு போதுமான அளவு அம்பலப்படுத்தப்படவில்லை.
ஜெயலலிதாவின் வெற்றியையும் ஆட்சி மாற்றத்தையும் மட்டுமே மீடியா ஆரவாரமாக வெளிச்சம் போட்டு காட்டும். ஆனால், ஆட்சி மாற்றம் எந்தவித அடிப்படை மாற்றத்தையும் கொண்டு வரப்போவதில்லை என்பதையும், இந்தியாவின் அடிப்படை கொள்கைகளான தனியார்மயமும் தாராளமயமும் எந்த நிலையிலும் மாறப்போவதில்லை என்பதையும் மீடியா என்றும் அம்பலப்படுத்தப்போவதில்லை.
காரணம் அவர்கள் பிரச்னைகள் குறித்து கவலைப்படுவதில்லை. தேவை கவர்ச்சிகரமான, பரபரப்பான கதைகள் மட்டுமே. எனவேதான் ஆ. ராசாவும் கனிமொழியும் திகாரும் நமக்கு பிளேட்டில் வைத்து பரிமாறப்படுகின்றன.  மீடியா விரிக்கும் வலையில் நாம் அனைவரும் வலியச் சென்று சிக்கிக்கொள்கிறோம். கனிமொழி மீது கத்தி வீசி நம்மை ஆசுவாசப்படுத்திக்கொள்கிறோம். உப்பு தின்றவன் தண்ணீர் குடித்தே தீருவான் என்று தேற்றிக்கொள்கிறோம். கருணாநிதி குடும்பத்தின் ஆதிக்கத்தை நான் ஆணையிட்டால் பாணியில் சவுக்கைச் சுழற்றி ஜெயலலிதா முறியடிப்பார் என்று உள்ளுக்குள் மகிழ்ந்துபோகிறோம்.
சரி அடுத்து என்ன? பேக்பைப்பரின் குழலுக்காக நாம் காத்துக்கொண்டிருக்கிறோம்.

சத்யசாயி பாபா! இதை அப்பாவுக்கு (கலைஞர்) தாங்க’’ அப்டீன்னு சொல்லியிருக்கார்.



nakkeeran : அந்த மகானைப் பத்தி நினைக்கிறப்போ கண்ணு மட்டுமில்லே, மனசும்கூட தளும்புது! நம்ம தமிழ்நாட்டு மக்களோட பல நாள் தாகத்தைத் தீர்க்கிறதுக்காக கிருஷ்ணாநதி நீரை, ஆந்திராவிலிருந்து இங்கே கொண்டு வர, தானே முன் வந்து ஏற்பாடு செஞ்சு தந்த மாபெரும் நல்ல உள்ளம் படைச்ச மகான் அவர்!.. நான் மட்டுமில்லே, எங்க வீட்டுக்காரங்களும்கூட பாபா பேர்ல பயங்கர அன்பும் மரியாதையும் வச்சிருக்காங்க...

பாபா மறைஞ்ச செய்தி கேள்விப்பட்டதும் நம்ம தமிழக அரசு சார்பாகவும், தன் தனிப்பட்ட அன்பு காரணமாகவும் இவங்க, உடனே புட்டபர்த்தி போய் பாபாவுக்கு இறுதி அஞ்சலி பண்ணிட்டு வந்தாங்க... எனக்கும் எங்க வீட்டுகாரங்களோட கூடவே போய் பாபாவோட இறுதி நிகழ்ச்சியில் கலந்துக்கணும்னு ரொம்ப விருப்பமாத்தான் இருந்தது. ஆனா அப்பத்தான் என் மருமக கிருத்திகாவுக்கு குழந்தை பிறந்தது அப்பிடிங்கிறதாலேயும், இவங்க ரொம்ப அவசரமா கிளம்பிப் போயிட்டு வர வேண்டி இருந்ததாலேயும் என்னால அவங்ககூட போக முடியலே!

எங்க வீட்டுக்காரங்க அங்கே போயிருந்த அந்த நேரத்தில் நான் சாயிபாபாவை பத்திதான் ரொம்ப நினைச்சுட்டு இருந்தேன்.

எவ்வளவு விஷயங்களை ஜனங்களுக்காக,அவங்க நன்மைகளுக்காக செஞ்சிருக்கார் பாபா!

எவ்வளவு பேர் அவரை உணர்வுபூர்வமா அப்பிடியே கடவுளாகவே பார்த்துக் கும்பிட்டுட்டு இருக்காங்க!

எனக்கு சமீப சில வருஷங்களாத்தான் பாபாவைப் பத்தி நெருக்கமா தெரிஞ்சுக்க முடிஞ்சது.. அவரை நேரிலேயும் பார்க்க முடிஞ்சது!

அதுக்கு முன்னால எல்லாம் எனக்கு பாபா பத்தி பெரிய அபிப்ராயம் ஏதும் இருந்ததில்லை.

நான் கோயிலுக்குப் போவேன்... சாமி கும்பிடுவேன்... விரதம் இருப்பேன்.. ஆனால் ஆன்மிகத்தில் தனிப்ப ட்ட மனிதர்களை கொண்டாடறதில் எனக்கு அவ்வளவா ஆர்வமோ விருப்பமோ இருந்ததில்லை அப்பிடிங்கிறதால், சத்தியசாயிபாபா பத்தியும் எனக்கு பெரிய அபிப்ராயம் இல்லை. நான் ஷீரடியில் பாபா கோயிலுக்கு மட்டும் போயிருக்கேன். சென்னையில் இருக்கற பாபா கோயிலுக்கும் போவேன்.

ஆனா என் தங்கைகள் சாருமதி, ஜெயந்தி ரெண்டு பேருக்கும் சத்திய சாயி பாபான்னா அப்பிடியொரு பக்தி. என் தம்பியான டாக்டர் ராஜமூர்த்தியும், பாபா ‘இப்படிப் பண்ணார், அப்படிப் பண்ணார், இத்தனை பெரிய விஷயம் பண்ணியிருக்கிறார்’னு எப்போ பார்த்தாலும் சிலிர்ப்போட ஏதாவது சொல்லிட்டே இ ருக்கும்..

‘‘நீயும் வாயேன்!... பார்த்துட்டு வரலாம்’’னும் என்னையும் தம்பி கூப்பிடும்! ஆனா எனக்கு அவ்வளவு தூரம் மெனக்கெட்டு போய் நேரில் பாபாவை பார்க்கவோ, பேசவோ தோணினதில்லே!

அதான் டி.வி.யிலேயும்,புத்தகத்திலேயும் அவர்பத்தி நிறையப் பார்க்கிறோம், படிக்கிறோம்... நேரில் போய் பார்க்கிற அளவுக்கு என்ன இருக்குன்னு நான் அவங்க கூப்பிடறப்போ எல்லாம் பெரிசுபடுத்திக்காம விட் டுடுவேன்.

எது ஒண்ணையும் அதோட பக்கத்தில போயி உணர்ந்து பார்க்கிறப்போதான் அதோட உண்மையான மதிப்பு தெரியும்னு சொல்வாங்களே... பாபா பத்தியும் எனக்கு அதுபோலத்தான் தெரிய வந்தது.

கிருஷ்ணா நதி நீர் விஷயமா பேச பாபா கோபாலபுரம் வந்தப்போ கூட நானும், எங்க வீட்டுக்காரங்களும் அங்கே போக முடியாதபடி ஒரு சூழ்நிலை ஆயிடுச்சு!

காரணம்,அதுக்கு ரெண்டு வாரம் முன்னாடிதான் எங்க வீட்டுக்காரங்களுக்கு ஒரு சின்ன விபத்து ஏற்ப ட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தோம்.

வேறொண்ணுமில்லே... எங்க பையன் உதயாவும் மருமக கிருத்திகாவும் தங்களோட கைக்குழந்தை இன் பனை விட்டுட்டு அப்போ வெளியூர் போயிருந்தாங்க... குழந்தை முதன்முதல்ல அம்மாவைப் பிரிஞ்சு அ ழுதுட்டே இருந்தது. அந்த சமயம் மகாபலிபுரத்தில் நாட்டியாஞ்சலி விழாவுக்கு இவங்க போக வேண்டி இருந்தது. பேரனையும் தூக்கிகிட்டு முதல் நாள் ராத்திரியே போய் அங்கே தங்கியிருக்கலாமேன்னு அங்கே ஜி.ஆர்.டி. ஹோட்டல்ல தங்கினோம்.எங்க வீட்டுக்காரங்க பேரக்குழந்தையோட விளையாடறேன்னு ஜாலியா குழந்தையைத் தூக்கிட்டு ரெண்டு தென்னை மரத்துக்கு இடையில் கட்டப்பட்ட நெட் படுக்கையில் படுக்கலாம்னு ஏற, அது அப்பிடியே புரட்டி விடவும் கீழே குழந்தையோட அப்பிடியே விழுந்துட்டாங்க...

நல்லவேளை குழந்தைக்கு அடிபடலே... அது இவங்க பிடியில இவங்க மேலேயே பாதுகாப்பா விழுந்தி ருந்தது. இவங்கதான் மல்லாக்க அப்பிடியே பொத்துன்னு கீழே விழுந்து முதுகில் நல்ல அடி...

நான் குழந்தைக்கு ஏதும் அடிபட்டிருக்குமோன்னு பயத்தில் ஓடிப்போய் குழந்தையைத் தூக்கிட்டேன். இவங்களாலதான் எழுந்து நிக்க முடியலே... அப்புறம்தான் நானே இவங்களைப் பிடிச்சு தூக்கி நிறுத்தி அப்படியே படுக்கையில் படுக்க வச்சேன்.

வலிகிலி இருந்தாலும் நல்லா மசாஜ் பண்ணி விட்டா சரியாயிடும்னு ஓவரான் ஆயின்ட்மெண்ட் வச்சு ந ல்லா இவங்க முதுகில் அடிபட்ட இடத்தில் தேச்சு விட்டேன்.

அதுக்குள்ள என் பொண்ணு செந்துவும் மருமகனும் வந்துட்டாங்க. ராத்திரியெல்லாம் தூக்கமே இல்லாம வலி வலின்னு இவங்க கத்த ஆரம்பிச்சுட்டாங்க. பெயின் கில்லர் மாத்திரை கொடுத்தும் வலி குறையலே. அப்புறம்தான் சரி, இது ஃப்ராக்சரா ஏதாவது இருக்கும்னு தோணுச்சு!...

மறுநாள் காலையில நேரா ராமச்சந்திரா ஆஸ்பத்திரிக்கு இவங்களைக் கூட்டிட்டுப் போனாங்க, எங்க பொண்ணும் மாப்பிள்ளையும்.

முதுகெலும்பில் ஹேர் லைன் ஃப்ராக்சர்னு சொல்லிட்டாரு டாக்டர். மார்த்தாண்டம் டாக்டர் தான் பார்த்தார். இப்போ அவர் இல்லை. 2 நாள் அங்கேயே தங்க வச்சு ட்ரீட்மெண்ட் தந்தாங்க.அப்புறம் வீட்டுக்கு அனுப்பிச்சுட்டாங்க. ஆனா வீட்லேயும் இவங்க அப்படியே மல்லாக்க அசையாம படுத்திருக்கணும்... அதான் ட்ரீட்மெண்ட்னு சொல்லிட்டாங்க... அப்போ நாங்க அமைச்சர்கள் குடியிருப்பான ‘குறிஞ்சி’யில் கு டியிருந்தோம். அப்படி இவங்க அசையாம படுத்திருக்கற நிலையிலதான் கோபாலபுரம் வீட்டுக்கு சத் தியசாயிபாபா வந்திருக்கார்...

என் தங்கச்சிங்க ரெண்டு பேரும் கூட அத்தைகிட்டே பர்மிஷன் வாங்கிட்டு ‘நாங்களும் பாபாவைப் பார்க்க வர்றோம் அத்தே!’ன்னு கேட்டுட்டு போயி கோபாலபுரத்தில் அவரை அன்னிக்கு பார்த்திட்டு வந்தி ருக்காங்க.... அவங்க அந்த அனுபவம் பத்தி திரும்ப சொல்லச் சொல்ல எனக்கு ‘அடடா... அந்த சமயம் நாம வீட்ல இல்லாமல் போயிட்டோமே!’ன்னு ரொம்ப வருத்தமா இருந்தது.

பாபா, கோபாலபுரம் வீட்டுக்கு வந்துட்டுப் போனதுக்கு அடுத்த நாளே, அவர் தந்த கிருஷ்ணா நதிநீருக்காக தமிழகம் சார்பா நன்றி தெரிவிக்க ஒரு பெரிய பொதுக் கூட்டம் நடந்தது.

எங்க வீட்டுக்காரங்க அப்படி மட்ட மல்லாக்கக் கிடந்த நிலையிலும் ‘நான் அந்தக் கூட்டத்துக்குப் போய் பாபாவுக்கு நன்றி சொல்லியே ஆகணும்’னுட்டாங்க. அவரது அமைச்சக துறையின் கீழே தான் இந்த விஷயங்கள் வருது அப்டீங்கிறதால் நேரில் பார்த்து பாபாவுக்கு நன்றி சொல்லாம இருந்தா அது சரியான நடவடிக்கையா இருக்காதுன்னு எங்க வீட்டுக்காரங்க ரொம்ப ஃபீல் பண்ணினதாலதான் கட்டாயம் போகணும்னு துடிச்சாங்க.

டாக்டருங்க தடுத்தும் இவங்க கேட்கலே. அப்புறம் முதுகில் ஒரு பேடு வச்சு கட்டி இவங்களை பாதுகாப்பா அனுப்பிச்சாங்க. அப்பிடியேதான் இவங்க அந்தக் கூட்டத்துக்கும் வந்திருந்தாங்க.

இதுபோல அடிபட்ட விஷயம் சொல்லி மாமா இவங்களை பாபாவுக்கு அறிமுகப்படுத்த, ‘முதுகில வலி எப்படியிருக்கு’ அப்டீன்னு அன்பா விசாரிச்சிருக்கார் பாபா!அதுக்கப்புறம் ஒரு தடவை எங்க வீட் டுக்காரங்களும், அமைச்சர் துரைமுருகனும் புட்டபர்த்தி போனப்போவும் பாபா, எங்க வீட்டுக்காரங்களைப் பார்த்து ஞாபகமா ‘முதுகுவலி இப்போ சரியா போச்சா?’ அப்டீன்னு அன்பா விசாரிச்சிருக்கார்.

அதுக்கப்புறம் நாங்க ரெண்டு மூணு தடவை புட்டபர்த்தி போயிட்டு வந்தப்போகூட அதே அன்போட பேசுவார்! அதென்னவோ எங்க வீட்டுக்காரங்களை எப்போ பார்த்தாலும் பாபா ஸ்பெஷலா ஒரு புன்னகை பண்ணுவார்.

பாபா பத்தி எனக்கு நிறைய விஷயங்கள் எடுத்துச் சொன்னது மல்லிகா சீனிவாசன்தான். டி.வி.எஸ். நிறுவனத்தைச் சேர்ந்த வேணு சீனிவாசனோட மனைவிதான் இவங்க. சிம்சன், டஃபே நிறுவனங்களை நிர்வகிக்கிறாங்க. மெட்ராஸ் சேம்பர் ஆஃப் காமர்ஸோட பிரசிடெண்டா இருந்த முதல் பெண்மணியும்கூட.

மல்லிகா சீனிவாசன் பாபாவோட படு தீவிர பக்தை. அவங்க வீட்டுக்காரங்க வேணு சீனிவாசனும் பாபாவோட தீவிர பக்தர் இவங்க அடிக்கடி பாபாவை தரிசிக்க புட்டபர்த்தி போயிட்டு வருவாங்க.

எங்க வீட்டுக்காரங்களும் நானும் டி.வி.எஸ். நிறுவனத்துக்குச் சொந்தமான குட்டி விமானத்தில் இவங்களேடதான் கிளம்பி பாபாவை சந்திக்க புட்டபர்த்திக்குப் போனோம்.

‘நீயும் வா... வந்து நேர்ல அவர் செய்ற நல்ல விஷயங்கள் எல்லாம் பாரு. மல்லிகா சீனிவாசனும் வரு வாங்க.நீ அவங்களோட பேசிட்டே வரலாம்’னு எங்க வீட்டுக்காரங்க என்னையும் கூடவே கூப்பிட்டுப் போனாங்க.

போற வழியெல்லாம் மல்லிகா சீனிவாசன் பாபா பத்தி நிறைய விஷயங்கள் சொல்லிட்டே வந்தாங்க. கேட் கக் கேட்க மலைக்க வைக்கும்படியா இருந்தது. படிப்புல, தொழில்ல, நிர்வாகத்தில அவ்வளவு உயரத்தில இருக்கிற மல்லிகாவும், அவங்க வீட்டுக்காரங்களும் பாபா மேல இவ்வளவு உயரிய பக்தியும், அபிமானமும் வச்சிருக்கிறதைப் பார்த்து நான் பிரமிச்சுத்தான் போயிட்டேன்.

நேர்ல புட்டபர்த்தி போய் பார்த்தப்போ என் பிரமிப்பு பல மடங்காயிடுச்சு!
எத்தனை பேருக்கு மருத்துவ உதவிகள்! எத்தனை பேருக்கு படிப்பு! எத்தனை பேருக்கு வாழ்க்கை!! லட் சக்கணக்கில் பணம் வாங்கும் தனியார் மருத்துவமனையில்கூட இத்தனை சுத்தம் இருக்காது. இங்கே ஒரு பைசா செலவில்லாமல் மருத்துவம் செய்ற பாபாவோட ஆஸ்பத்திரி அப்படியே கண்ணாடி போல மின்னுது. ஆஸ்பத்திரி தரையும் சுவரும்கூட! ஆஸ்பத்திரி மட்டுமில்லை. அத்தனை லட்சம் பேர் கூடுற புட்டபர்த் தியில் பாபா சம்பந்தப்பட்ட ஒவ்வொரு இடமுமே பளிச்னு அத்தனை சுத்தமா இருக்கு! மெத்தப் படிச்சவங்ககூட விரும்பி வந்து சுத்தப்படுத்தற வேலையை செய்றாங்க. டாக்டருங்க விரும்பிப் போயி அங்கே இலவசமா மருத்துவம் பார்க்கிறாங்க!

எத்தனை பேருக்கு படிப்பு! அதுவும் எத்தனை வகையான உயரிய படிப்பு! பார்க்கப் பார்க்க பரவசமாகத் தான் இருந்துச்சு!

பாபாவோட தரிசனத்துக்காக லட்சக்கணக்கில் மக்கள் வந்து எப்பிடி கொஞ்சம்கூட சத்தம் இல்லாம உட்கார்ந்திருக்காங்க.எப்பிடி கொஞ்சம்கூட சத்தம் இல்லாம கலைஞ்சு போறாங்க அப்டீங்கிற ஒழுங்கே பார்க்க ஆச்சரியமூட்டுச்சு!

நாங்களும் பாபாவைப் பார்க்கிறதுக்காக அன்னிக்கு பிரசாந்தி நிலையத்தில் உட்கார்ந்திருந்தோம். அங்கே பெண்கள் தனி இடம், ஆண்கள் தனி இடம்... எங்க வீட்டுக்காரங்க மத்த ஆம்பளைங்களோட போயி உட்கார, நானும் மல்லிகா சீனிவாசனும் ஒண்ணா உட்கார்ந்தோம்.

பாபா ஒரு வீல் சேரில் உட்கார்ந்தபடி அப்படியே கூட்டத்தைப் பார்த்து புன்னகை செஞ்சுட்டு கையாட்டி ட்டே போனார்.

‘அவர் பேசமாட்டாரா?’ன்னு நான் மல்லிகாவைக் கேட்க,
‘‘அவர் அதிகம் பேச மாட்டார். எப்பவாவது தோணுச்சுன்னா சிலர் கிட்டே மட்டும் பேசுவார்.இவர் கருணைப் பார்வை தன் மேல் பட்டாலே போதும்னு நினைச்சுட்டு வர்றவங்கதான் இந்த லட்சக்கணக்கான பேரும்!’னு சொன்னாங்க அவங்க.

எங்க பக்கத்தில பாபா வரும்போது, மல்லிகா குனிஞ்சு, ‘‘ஒரு வேளை பாபா உங்ககிட்டே பேசினா பேசுங்க... என்ன கேட்கணும்னு தோணுதோ கேளுங்க!’’ன்னாங்க அவங்க.

‘‘எனக்கு அப்பிடி எதுவும் கேட்கணும்னு தோணலியே!’’ அப்டீன்னேன் நான்.உண்மையில் எனக்கு எது வுமே பேசணும்னு தோணலே... அப்பிடியே அவரைப் பார்த்துட்டு இருக்கலாம்னுதான் இருந்தது.

‘அப்படியில்லே, எதுவானாலும் கேளுங்க!’ன்னாங்க அவங்க. அதன்படியே பாபா எங்க பக்கத்தில வந்ததும் என்னை அடையாளம் காண்ற மாதிரி எம் மேல நின்னுச்சு அவர் பார்வை.மல்லிகா சீனிவாசன் என் னை அறிமுகப்படுத்த ‘தெரியும்’னு மென்மையா சொன்னபடி என்னை ஆசீர்வாதம் செஞ்சார் பாபா.

உடனே நான், என்னையும் அறியாம எழுந்து அவர் கால்ல விழுந்து கும்பிட்டேன்.‘‘எங்க வீட் டுக்காரங்க இந்த சமூகத்துக்காக சேவை செய்யணும்னு நினைக்கிறாங்க. அதுக்கு அவருக்கு நல்ல ஹெல்த் வேணும்’னு நான் பாபாவை மனசுக்குள்ள கேட்டுகிட்டேன்.ஒரு மனைவியா என் தேவை அவ்வளவுதான்!

அந்த சமயம் புதுவருஷப் பிறப்பு நாளும் அதுவுமா முதுகுத் தண்டில் அடிபட்டு எங்க வீட்டுக்காரங்க ஆஸ்பத்திரியில் இருந்தது... திடீர்னு லண்டனுக்கு இவங்க செக்கப்புக்காக போக நேர்ந்ததுன்னு இவங்க ஹெல்த் பத்தி அப்போ எனக்கு மனசு நிறைய கவலை இருந்தது. பாபாவிடம் கேட்டப்புறம் எனக்கு மனசு நிம்மதியான மாதிரி ஒரு ஃபீலிங்!
இரண்டாவது முறையும் நாங்க மல்லிகா சீனிவாசன் தம்பதியோட தான் புட்டபர்த்தி போனோம். எங்களேட என் தங்கை ஜெயந்தியும் வந்திருந்தது. அப்போ புட்டபர்த்தியில் அரசாங்க விஷயமா கூவத்தை சுத் தப்படுத்தறது சம்பந்தமா பாபாவோட உதவியைக் கோரி இவங்களை மாமா புட்டபர்த்தி போகச் சொல் லியிருந்தார். பாபாவைப் பார்க்கணும்னு நானும்கூட சேர்ந்துகிட்டேன்.

இந்த ட்ரிப், ஹாஸ்பிடல்கள் எல்லாம் சுத்திப் பார்த்தோம். இலவச ஹாஸ்பிடல்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க! அவ்வளவு சுத்தம்!
ஆஸ்பத்திரியில் ஒரு நாளைக்கே அத்தனை ஆபரேஷன்கள் நடக்குது... எல்லாமே ஃப்ரீதான். புட்டபர்த் திக்குள்ளே நுழைஞ்சா சாப்பிடற சாப்பாடு உட்பட எல்லாமே ஃப்ரீதான்.

அதுக்கப்புறம் ரெண்டு முறை நாங்க பாபாவைப் பார்க்க புட்டபர்த்தி போனோம். பாபாவோட 85வது பிறந்த நாள் விழாவுக்காக போயி 2 நாள் அங்கே தங்கியும் இருந்தோம்.

நான் பாபா பத்தி எங்க வீட்டுல ரொம்ப சிறப்பா சொன்னதைப் பார்த்துட்டு எங்க மருமகனும் நாங்க 2வது முறை புட்டபர்த்தி போனப்போ எங்களோட வந்தார்!

கெஸ்ட் அவுஸில் எங்களுக்கு சாப்பாடு பரிமாறினதுகூட பெரிய பெரிய இன்ஜினீயர்ஸ், டாக்டர்ஸ்! நாங்க ஆச்சரியப்பட்டு விசாரிச்சா, ‘‘பாபாவோட இடத்தில நாங்க சேவை செய்ய கொடுத்து வச்சிருக்கணும்’’ கிறாங்க. சிலிர்ப்பா இருந்துச்சு.

அன்னிக்கு நடந்த பட்டமளிப்பு விழாவுக்கு பிரதமர் மன்மோகன்சிங் கூட வந்திருந்தார்.

நம்ம தமிழ்நாட்டுக்கு ஆந்திராவிலிருந்து கிருஷ்ணாநதிநீர் கொண்டு வர உதவினது மாதிரி இந்தியாவோட பல மாநிலங்களுக்கும் பாபா பல உதவிகள் சத்தமில்லாம செஞ்சிருக்கார்!

அன்னிக்கு மேடையில் பாபா தங்களோட மாநிலத்துக்குப் பண்ணின உதவிகளைப் பத்தி அந்தந்த மாநில த்தைச் சேர்ந்தவங்க பேச, நம்ம மாநிலம் சார்பா சென்னை மேயர் மா.சுப்ரமணியன் பேசி நன்றி தெரிவிச்சாங்க.

பாபாவோட 85வது பிறந்தநாள் சமயம் இந்தியாவோட பல வி.ஐ.பி.கள் உட்பட பெரிய கூட்டமா பலர் பாபாவுக்கு மலர்க் கொத்து தர வரிசையில் நின்னாங்க. எங்க வீட்டுக்காரங்க மலர்க்கொத்து தந்த சமயம், பாபா எங்க வீட்டுக்காரங்களைப் பார்த்து அதே போல் ஸ்மைல் பண்ணிட்டு இவங்க கன்னத்தையும் தட்டிக் கொடுத்தாங்க.

உடனே மல்லிகா, ‘‘பாருங்க, பாபா உங்க வீட்டுக்காரர் கன்னத்தைத் தட்றாரு! அவ்வளவு சீக்கிரம் யாரையும் பாபா தொட்டு அல்லது கன்னத்தைத் தட்டி பேசறதில்லை. யாரையாவது அவருக்கு ரொம்பப் பிடிச்சாதான் நெருக்கமா வந்து கன்னத்தைத் தட்டி பேசுவாரு! உங்க வீட்டுக்காரரை பாபாவுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு!’’ அப்டீன்னு ரொம்ப சந்தோஷமா சொன்னாங்க.

எனக்கும் அப்பிடித்தான் தோணுச்சு.அவ்வளவு நல்ல ஒரு மகானோட மனசுல ஒரு இடம் பிடிக்க முடிஞ்சுது உண்மையில எங்களோட பாக்கியம்தான்.

நாங்க முதல் தரம் பார்க்கப் போனப்போ, பாபா எங்க வீட்டுக்காரங்களுக்கு ஒரு நவரத்தின மோதிரம் தந் தாரு.

பாபாவோட பிறந்த நாள் சமயம் நாங்க போனப்போ எங்க வீட்டுக்காரர் கையில ஒரு செயின் தந்து, ‘‘இதை அப்பாவுக்கு (கலைஞர்) தாங்க’’ அப்டீன்னு சொல்லியிருக்கார்.எங்க வீட்டுக்காரரும் அதைத் தன் அப்பாகிட்டே தந்தார்.மாமா செயின் எதுவும் போட்டுக்கமாட்டார் அப்டீங்கிறதால அந்தச் செயினை அப்புறம் அத்தை (தயாளு அம்மாள்) கிட்டே தந்துட்டாங்க இவங்க.

உண்மையில் பாபாவைப் பார்த்த பிறகு அவர் செய்ற பல நல்ல செயல்களைப் பார்த்த பிறகு, அடடா இவரை முதலிலேயே பார்க்காமல் போய்விட்டோமே என்று தோணுச்சு!

ஜாதி, மதம், பணம், அந்தஸ்துன்னு பேதமில்லாமல் அவர் எல்லோரையும் ஒரே மாதிரி நடத்துவதும் ஆச்சரியப்படுத்திடுச்சு.

பாபா இப்பிடி விபூதி வரவழைத்துத் தருவார், அப்படி அதை வரவழைத்துத் தருவார்ங்கிற கான் ட்ரோவர்சிகளை விடுங்க.ஆனா இவ்வளவு நல்ல மனசோடு, இவ்வளவு நல்ல நோக்கங்களோடு இத்தனை பேருக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவிய அந்த உயரிய மனசும்,அந்தக் கருணையும் இ ருக்கிறதே. அதை வைத்தே சொல்லலாம், இவர் மனித உருவில் வந்த தெய்வம்னு!

சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைப் பதவியைக் கைப்பற்றுவாரா யாழ். வம்சாவளித் தமிழர்?

சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைப் பதவியைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்பொன்று யாழ்.வம்சாவளித் தமிழரான சிங்கப்பூர் துணைப் பிரதமரை நாடி வந்துள்ளது.
சிங்கப்பூர் நாட்டு துணைப் பிரதமரும் நிதியமைச்சரான தர்மன் சண்முகரட்னத்தை சர்வதேச நாணய நிதியத்தின் தலைவராக நியமிக்க வேண்டும் என ஆசிய பசுபிக் நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.
யாழ்ப்பாணத்தை பிறப்பிடப்பிடமாக கொண்ட தமிழரான இவர் 2007ம் ஆண்டு முதல் சிங்கப்பூர் நிதியமைச்சராக உள்ளார். கடந்த வாரம் இவரை துணைப் பிரதமராகவும் அந்நாட்டு பிரதமர் லீ சென் லூங் நியமித்துள்ளார்.
இந்நிலையில் இவரை சர்வதேச நாணயநிதியத்தின் தலைவராக நியமிக்க வேண்டும் என்று பிலிப்பைன்ஸ், தாய்லாந்து நிதியமைச்சர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்நாட்டு முக்கிய அரசியல் பிரமுகர்களில் ஒருவராகவும் பொருளாதார நிபுணராகவும் உள்ள சண்முகரட்னம் சிங்கப்பூர் நிதி ஆணையத்தின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாலியல் குற்றச்சாட்டில் கைதானதைத் தொடர்ந்து ஐஎம்எப் தலைவர் பதவியிலிருந்து டோமினிக் ஸ்டிராஸ் கான் ராஜானாமா செய்துள்ள நிலையில் அப்பதவியை தர்மன் சண்முகரட்னத்துக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தெற்காசிய நாடுகளிலிருந்து எழுந்துள்ளது.
சர்வதேச நாணய நிதியம் உருவாக்கப்பட்ட 1946ம் ஆண்டிலிருந்தே அதன் தலைவராக ஐரோப்பியர்களே இருந்து வருகின்றனர். இப்போது பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், அவர்களை காக்க சண்முகரட்னம் போன்ற மிகச் சிறந்த பொருளாதார மூளைகளே உதவ முடியும் என்று பிலிப்பைன்ஸ் நிதித்துறைச் செயலாளர் சீசர் புருசிமா கூறியுள்ளார்.
இதற்கிடையே தர்மன் சண்முகரத்தினம் தற்போதைக்கு சர்வதேச நாணய நிதிய நிறைவேற்றுக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.
ஆனால் உலகின் முன்னணி பொருளியியல் வல்லூனர்கள், மத்திய வங்கிகளின் ஆளுநர்கள், நிதி அமைச்சர்கள் என பலரும் இப்பதவியை கைப்பற்ற முயற்சி செய்து வருகின்றனர். இந்தியா தென்னாபிரிக்க போன்ற நாடுகளில் உள்ளவர்களும் இந்த பதவியை பெறுவதற்கு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
அதே நேரம் சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைப் பதவியை எளிதாக விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்று சில ஐரோப்பியத் தலைவர்கள் ஏற்கனவே தெளிவு படுத்திவிட்டனர். ஜெர்மனி அதிபர் அங்கெலா மார்க்கல் ஐரோப்பியர் ஒருவர் தான் நாணய நிதியத்தின் தலைவராக வேண்டுமென்று தீவிரமாக செயற்படுகின்றார்.
இந்த பதவி ஐரோப்பிய நாடு ஒன்றிற்கே வழங்கப்பட வேண்டும் என ஐரோப்பிய தலைவர்கள் வலியுறுத்தி வருகின்ற போதிலும் இம்முறை இப்பதவிக்கு தென்னாபிரிக்கா, இந்தியா, எகிப்து, இஸ்ரேல் ஆகிய நாடுகளிலிருந்தும் போட்டி எழுந்துள்ளது.
அவ்வாறு செல்வாக்கு மிக்க நாடுகளின் தெரிவாகவுள்ள உலகத்தலைவர்களுடன் சிங்கப்பூர் துணைப்பிரதமர் தர்மன் சண்முகரத்தினத்தின் பெயரும் முன்மொழியப்படுகிறது. ஆயினும் நாணய நிதியத்தின் தலைமைத்துவப் போட்டியை அடையும் நோக்கம் தனக்கு கிடையாது என அவர் வலியுறுத்தியுள்ளார்..

வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலம் நிறைவேறியுள்ளது:கலைஞர்

சென்னை: "என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலத்தை வஞ்சனையாளர்கள் சிலர் கூடி வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர்,' என தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக, முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறியிருப்பதாவது: தனியார் தொலைக்காட்சி குழுமத்தில் இருந்து பங்கு பிரிக்கப்பட்டபோது, எனக்கு தரப்பட்ட 100 கோடி ரூபாயில் 22.5 கோடி ரூபாய் வருமான வரியாக முறைப்படி செலுத்தினேன். எஞ்சிய தொகையான 77.5 கோடி ரூபாய் பகிர்ந்து கொள்ளப்பட்டபோது, கனிமொழிக்கு கிடைத்த இரண்டு கோடி ரூபாயை, பங்குத் தொகையாக செலுத்தி, கலைஞர் டி.வி.,யில் ஒரு பங்குதாரராக இருக்கச் சொல்லி, நான்தான் வலியுறுத்தினேன். கனிமொழி அதை விரும்பாவிட்டாலும் கூட, அப்பா சொல்கிறாரே என ஒப்புக்கொண்ட குற்றத்தைத் தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை. எந்த ஒரு நிறுவனத்திலும் பங்குதாரர்களாக இருப்பவர்கள் லாபமோ, நஷ்டமோ அந்த இரண்டில் ஒன்றுக்கு பொறுப்பேற்பது பொதுவான விஷயம். ஆனால், அந்த நிறுவனத்தின் ஒவ்வொருநாள் நடவடிக்கைக்கும், அவர்கள் பொறுப்பாவதில்லை.

டில்லி சி.பி.ஐ., நீதிமன்றத்தில், கனிமொழிக்காக வாதாடிய பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி, ஒரு நிறுவனத்தில் நடைபெறுகிற வரவு, செலவு - கொடுக்கல், வாங்கல் இவற்றில் எல்லாம் அந்த நிர்வாகத்தின் பங்குதாரர்கள் பொறுப்பேற்க வேண்டியதில்லை என, தெளிவாகச் சுட்டிக் காட்டியுள்ளார். இருந்தும், கலைஞர் தொலைக்காட்சி நிர்வாகி சரத்குமாரையும், என் மகள் கனிமொழியையும் ஜாமினில் விட மறுத்து, சிறைக்கு அனுப்பியுள்ளனர். என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலத்தை வஞ்சனையாளர்கள் சிலர் கூடி வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். ஆயினும், நிம்மதி அடையாமல், நாங்கள் வாழ்ந்த இடம், வாழும் இடம், நம் இரு வண்ணக்கொடி பறக்கும் இடம் அனைத்தும் தரைமட்டமாகி, புல் முளைத்த இடமாகிட வேண்டும் என்றும்; அதுவும் தர்ப்பைப்புல் முளைத்த இடமாக மாற வேண்டுமென, குமரி முனையிலிருந்து இமயம் கொடுமுடி வரையிலும் உள்ளவர்கள் தவம் கிடக்கின்றனர். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

கலைஞர்: கன்னியாகுமரி முதல் இமயமலை வரை தி.மு.க., விற்கு எதிராக பழிவாங்கும்

சென்னை : 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மகன் கனிமொழி சிறையிலடைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக கட்சி தொண்டர்களுக்கு கருணாநிதி எழுதியுள்ள கடிதத்தில், கனிமொழி, சரத்குமார் ஆகியோர் சிறையிலடைக்கப்பட்டது சட்டத்திற்கு புறம்பானது. கன்னியாகுமரி முதல் இமயமலை வரை தி.மு.க., விற்கு எதிராக பழிவாங்கும் படலம் நடைபெறுகிறது. இந்த போரில் நிச்சயம் கருணாநிதி வெற்றி பெறும் என்று கூறியுள்ளா
கலைஞர் 

மட்டக்களப்பு சுவாமி அஜ்ராமத்மனந்த நேற்று இயற்கை எய்தினர்

மட்டக்களப்பு இராமகிருஸ்ண மிஷனின் சுவாமி அஜராத்மானந்தா ஜீ இன்று மாலை ஜீவசமாதியடைந்ததாக இராம கிருஸ்ண மிஷனால் அறிவிக்கப்பட்டுள்ளது. 62 வயதுடைய சுவாமி இன்று மாலை ஏற்பட்ட திடீர் சுகவீனத்தையடுத்து மட்டக்களப்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சமாதியடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சுவாமியின் உடலம் மட்டக்களப்பு இராம கிருஸ்ண மிஷனுக்கு கொண்டுசெல்லும் பணிகள் இடம்பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

காதல் தோல்வி காதலர்கள் இருவரும் தற்கொலை

காதலி இறந்த செய்தியைக் கேள்வியுற்ற காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று இன்று மாலை வேளையில் மத்தியமுகாம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 4ஆம் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவர் எல். மதன் எனும் 23 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து காதலி கே. சுமித்தா (வயது-21) என்பவர் நேற்றைய தினம் நஞ்சருந்தி ஆபத்தான நிலையில் மத்திய முகாம் வைத்தியசாலயில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டார்.

இவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை பயனின்றி இறந்து போன செய்தியைக் கேள்வியுற்றதுமே காதலன் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்தியமுகாம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

புலிகள் மீதான நோர்வே விசாரணைகளை இலங்கை அவதானிக்கிறது


சட்டவிரோத நிதி சேகரிப்பு தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்களில் ஒருவரான நெடியவன் எனும் பேரின்பநாயகம் சிவபரனுக்கு எதிராக நோர்வே நீதிமன்றமொன்றில் நடைபெறும் விசாரணை குறித்து இலங்கை அவதானம் செலுத்தி வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேலுப்பிள்ளை பிரபாரகன் 2 வருடங்களுக்கு இலங்கை அரசாங்கப் படைகளினால் கொல்லப்பட்டதையடுத்து எல்.ரி.ரி.ஈயின் தற்போதைய தலைவராக சிவபரன் விளங்குவதாக நம்பப்படுகிறது. பிரபாகரனுக்குப் பின்னர் தலைமைப் பொறுப்பை ஏற்ற குமரன் பத்மநாதன் பின்னர், இலங்கை அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார். வெளிநாடுகளிலுள்ள தமிழர்களை அச்சுறுத்தி எல்.ரி.ரி.ஈ. நிதி திரட்டிய குற்றச்சாட்டு தொடர்பாக விசாரிக்கும் நோர்வே நீதிமன்றமென்று கடந்த வாரம் சிவபரனை நீதிமன்றுக்கு அழைத்திருந்தது. (பி.ரி.ஐ.)