செவ்வாய், 3 மே, 2011

ஒசாமா பதுங்கிடம் முஷாரப்புக்கு தெரியும்?

லண்டன் : பாகிஸ்தான் மாஜி அதிபர் பர்வேஷ் முஷாரபுக்கு ஒசாமா பின் லாடன் பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் பதுங்கியிருந்தது தெரியும் என புதிய சர்ச்சை ஒன்று தற்போது கிளம்பியுள்ளது. கடந்த 2004ம் ஆண்டு பர்வேஷ் முஷாரப் எழுதிய சுயசரிதையில் ( இன் தி லைன் ஆஃப் ஃபயர் ) அபோதாபாத் மாளிகையில் அல்குவைதாவின் முக்கிய பிரமுகர் ஒருவர் வசித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். ஒசாமா பின் லாடன் இவ்வளவு நாளாக இங்கேயா பதுங்கியிருந்தான் என பாகிஸ்தான் ஆச்சர்யம் தெரிவித்துள்ள நிலையில், ஆறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட பர்வேஷ் சுயசரிதையில் அபோதாபாத் பற்றி எழுதப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பர்வேஷ் முஷாரப் : நான் பாகிஸ்தான் அதிபராக இருந்த போது எப்போது என்னிடம் ஒசாமா எங்கிருக்கிறான் என்ற கேள்வி கேட்கப்பட்டாலும் , அவன் இருப்பிடம் குறித்து எனக்கு தெரியாது என்று தான் கூறியிருக்கி‌றேன் என சூசகமாக பதில் அளித்தார். பாகிஸ்தானில் அமெரிக்க படைகள் நுழைந்து தாக்குதல் நடத்தியிருப்பது பாகிஸ்தான் இறையான்மைக்கு எதிரானது என்றும் கூறினார்.

புதிய தகவல்: ஒசாமா கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?

: ஒசாமா பதுங்கியிருந்த அபோதாபாத் இல்லத்தில் இருந்து அமெரிக்க படைகள் முக்கிய ஆவணங்கள், சி.டி.,க்கள், பென் டிரைவ் ஆகியனவற்றை பறிமுதல் செய்துள்ளன. அவற்றில் பல முக்கிய தகவல்கள் இருப்பதாகவும். அதன் அடிப்படையில் அல்குவைதா நெட்வொர்க்கை மேலும் நெருங்க முடியும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. அல்குவைதாவுடன் தொடர்பில் இருந்த தாலிபன். லஷ்கர் இயக்கங்கள் குறித்தும் தகவல்கள் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின், பத்து ஆண்டுகளாக அமெரிக்கா ராணுவம் ஒசாமா பின்லாடனை தேடி வந்தது. பிடிக்க முடியவில்லை. கடந்த ஜூலை மாதம் பெஷாவர் அருகே சி.ஐ.ஏ.,வுக்காக வேலை பார்த்த பாகிஸ்தானி ஒருவரின் வெள்ளை நிற காரைப் பின்தொடர்ந்து சென்று ரிஜிஸ்தர் நம்பரை தெரிந்து கொண்டனர். அந்த காரை சி.ஐ.ஏ., அதிகாரிகள் பல மாதங்களாக தொடர்ந்து கண்காணித்தனர். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து 52 கி.மீ., தூரத்தில் உள்ள இடத்தில், குப்பைகள் நிறைந்த நீளமான ரோடு இருந்தது. அதையொட்டி பெரிய பாதுகாப்பு காம்பவுண்டுடன் கூடிய கட்டடம், ஒரு குட்டி கிராமம் போல இருந்தது.

அரங்கேறிய தாக்குதல்: அந்த வீட்டையும் தொடர்ந்து கண்காணித்தனர். அங்கு ஒசாமா தங்கி இருப்பது உறுதி செய்யப்பட்டது. எட்டு மாதங்களுக்கு பிறகு நிலவில்லாத இரவில், நான்கு ஹெலிகாப்டர்களில் 79 அமெரிக்க கமோண்டே படையினர் காம்பவுண்டை சுற்றி வளைத்தனர். துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. ஒசாமா உள்ளிட்ட ஐந்து பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் விஷயம் பற்றி பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை. இறந்த ஐந்து பேரில் ஒருவர், உயரமாகவும், பெரிய தாடியுடன் தலையில் குண்டு காயம்பட்டு, ரத்தம் படிந்த உடலுடன் கிடந்தார். அமெரிக்க கப்பல்படையை சேர்ந்த ஒரு வீரர் அவரை படம் பிடித்து, உறுதி செய்வதற்காக அதிகாரிகளுக்கு அனுப்பினார்.

உலகிலேயே அதிக பொருட்செலவில் நடந்த ஒசாமா தேடல் வேட்டை முடிவுக்கு வந்தது. அமெரிக்காவின் முதல் எதிரியான ஒசாமாவின் உடல் ஹெலிகாப்டரில் எடுத்துச் செல்லப்பட்டு கடலில் வீசப்பட்டது. 10 ஆண்டுகள் அமெரிக்க உளவுத்துறையின் திட்டங்கள் தோல்வியில் முடிந்தாலும் இறுதியாக வெற்றி கிடைத்தது.

இந்த தாக்குதலை நடத்துவதற்கு முன், கடந்த ஓராண்டாக கிழக்கு ஐரோப்பாவில் உள்ள தனிசிறையில் அடைக்கப்பட்டிருந்த அல்-குவைதா பயங்கரவாதிகளிடம் உளவுத்துறையினர் பல்வேறு விதங்களில் விசாரணை செய்தனர். அபோதாபாத்தில் உள்ள ஒசாமா வீட்டின் செயற்கைகோள் படங்களை வைத்து ஆராய்ந்தனர்.

தீவிர ஆலோசனை : இந்த ஆப்பரேஷன் வெற்றியில் முடியுமா அல்லது ஆபத்தை உண்டாக்குமா என சி.ஐ.ஏ., அதிகாரிகள் பல கோணங்களில் ஆராய்ந்தனர். தாக்குதலை நடத்துவது குறித்து வெள்ளை மாளிகை அதிகாரிகள் இடையே வெவ்வெறு விதமான கருத்துகள் நிலவின. இன்னும் சிறிது காலம் காத்திருந்து உண்மையிலே ஒசாமா அங்குதான் இருக்கிறாரா என்பதை உறுதி செய்துகொள்ளலாம் அல்லது குண்டு போட்டு தாக்குதல் நடத்தலாம் என இருவேறு கருத்துகள் நிலவின. குண்டு போடும் திட்டத்தை ஒபாமா ஏற்கவில்லை. இதனால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என ஒபாமா கருதினார். இறுதியாக நேரடி தாக்குதல் நடத்த முடிவு செய்யப்பட்டது. இரண்டு ஹெலிகாப்டர் முன்னாடி செல்ல, பாதுகாப்புக்கு பின்தொடர்ந்து இரண்டு ஹெலிகாப்டர்கள் செல்ல வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

அதிபரின் "ரியாக்ஷன்' : அமெரிக்க நேரப்படி ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் வெள்ளை மாளிகையில் உள்ள அறையில் அதிபர் ஒபாமா, அவரது ஆலோசகர், ஹிலாரி கிளின்டன், பாதுகாப்பு தலைமை அதிகாரிகள் ஆகியோர் தாக்குதல் நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து கொண்டிருந்தனர். ஒபாமா இறுகிய முகத்துடன் உட்கார்ந்திருந்தார். பெரும்பாலான நேரம் அறை அமைதியாகவே இருந்தது. ஒவ்வொரு நிமிடமும், நாட்கள் போல நகர்ந்தன என வெள்ளை மாளிகை தலைவர் ஜான் பிரன்னன் தெரிவித்தார். சி.ஐ.ஏ., தலைமையகத்தில் இருந்து அதன் இயக்குநர் பெனாட்டா, பாகிஸ்தானில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை வீடியோ ஸ்கீரின் மூலம் அதிபருக்கு தெரிவித்துக்கொண்டிருந்தார்.

அவரது உரையாடல்: "இலக்கை நோக்கி முன்னேறுகிறார்கள்' நிமிடங்கள் செல்கின்றன"பின்லாடனை பார்க்கிறோம்' சில நிமிடங்களுக்கு பிறகு, "பின்லாடன் சுட்டுக்கொல்லப்பட்டார்' "தாக்குதலில் எதிரி கொல்லப்பட்டார்' அதன் பிறகும் அதிபர் அறையில் அமைதி நிலவுகிறது இறுதியாக, "அவனை கொன்று விட்டோம்' என அதிபர் ஒபாமா கூறியதும் அறையில் இருந்தவர்கள், ஆரவாரம் செய்தனர். உலகில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட "ஆபரேஷன்' முடிவுக்கு வந்தது.

காரமான 'தாரம்'!

தாரம் என்ற பெயரில் குண்டக்க மண்டக்க கதையுடன் தமிழுக்கு ஒரு திரைப்படம் வருகிறது - மலையாளத்திலிருந்து.

வித்தியாசமான கதை என்ற பெயரில் சர்ச்சையான கதைகளுடன் படம் எடுப்பது தற்போது பேஷனாகி விட்டது.

அந்த வரிசையில் இந்த தாரமும் இணைகிறது. இப்படம் மலையாளத்தில் வெளியான காயம் என்ற படத்தின் டப்பிங் ஆகும். ஸ்வேதா மேனன் நாயகியாக நடித்த படம் இது.

படம் முழுக்க கவர்ச்சிகரமாக வளைய வந்திருப்பார் ஸ்வேதா மேனன். படத்தின் கதை சற்றே காரமானது.

ஊர்ப் பண்ணையாரிடம் செக்ஸ் அடிமையாக சிக்கித் தவிக்கிறார் படத்தின் நாயகி. அவரை மீட்கிறான் நாயகன். தனது வீட்டில் அடைக்கலம் தருகிறான். திருமணமும் செய்து கொள்கிறார்கள். இந்த சமயத்தில் அவன் கொல்லப்படுகிறான்.

இதனால் மறுபடியும் நிர்க்கதியாகும் நாயகனுக்கு ஆறுதலாக இருக்கிறான் கணவரின் தம்பி. இதனால் அவன் மீது காதல் கொள்கிறாள் நாயகி. இது ஊரில் சலசலப்பை ஏற்படுத்துகிறது. மகன் ஸ்தானத்தில் உள்ளவன் மீது மோகம் கொள்வதா என்று பொங்குகிறது ஊர்.

அதற்கு நாயகி, மனைவி இறந்து விட்டால் அவளது தங்கச்சியை ஆண்கள் மணக்கலாம், ஆனால் நான் எனது கணவரின் தம்பியை மணக்கக் கூடாதா என்று கேட்கிறாள்.

அதன் பிறகு இருவரும் என்ன ஆகிறார்கள். கை பிடிக்கிறார்களா என்பது படத்தின் மீதிக் கதை.

படு காரமான கதையுடன் கூடிய இப்படம் மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடி, சலசலப்பையும், பரபரப்பையும் உருவாக்கியது. இதுதான் தற்போது தாரம் என்ற பெயரில் டப் ஆகி தமிழுக்கு வருகிறது.

படத்தில் அபர்ணாவும் நடித்துள்ளார். மனோஜ் கே ஜெயன் உள்ளிட்டோரும் படத்தில் உள்ளனர். நம்ம ஊர் பாலா, நாயகனின் தம்பி வேடத்தில் வருகிறார்.

ஏற்கனவே கணவரின் தம்பி மீது கள்ளத்தனமாக மோகம் கொள்ளும் பாத்திரத்தில் சங்கீதா நடித்த படம் சர்ச்சையைக் கிளப்பியது. பின்னர் மருமகள், மாமனார் இடையிலான முறை தவறிய காதலை வெளிப்படுத்திய படமும் சில மாதங்களுக்கு முன்பு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தாரம் படம் தமிழகத்தில் என்ன மாதிரியான சலசலப்பை ஏற்படுத்தப் போகிறது என்பது தெரியவில்லை.
English summary
Kaayam of Malayalam coming to Tamil as Thaaram. This dubbing movie has Swetha Menon as heroine. Manoj K Jayan, Aparna and Bala has acted in the movie.

துக்ளக்' சோவின் நயவஞ்சகப் போக்கு-கருணாநிதி தாக்கு

சென்னை: மாநிலத்திற்கொரு கெடுபிடி விதிக்கும் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.


அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் விவரம்:

கேள்வி: `துக்ளக்' சோ ராமசாமி, இந்தப் பொதுத்தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகதான் வெற்றிபெற வேண்டுமென்று ஆசைப்படுகிறாரே?

பதில்: ``திமுக கூட்டணி வெற்றி பெற்றால், அந்தத் தீர்ப்பை நீங்கள் முழுமனதுடன் ஏற்றுக் கொள்வீர்களா?'' என்ற கேள்விக்கு; ``ஏற்றுக் கொள்வேன். வேறுவழி? ஆனால் அந்த ஏற்பில், முழுமனது என்ன, கால் மனது கூட இருக்காது. மக்கள், மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறபோது, முடிவு வேறுவிதமாக அமைந்தால், அதை எப்படி முழுமனதாக ஏற்க முடியும்?'' என்று சோ மிகவும் ஆதங்கத்துடன் அங்கலாய்த்துப் பதிலளித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு, ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றில், தேர்தலுக்குப் பிறகு நடத்திய ஆய்வு, திமுக கூட்டணி முன்னணியில் இருப்பதைக் காட்டுவதாக விளக்கிய போது, சோ ராமசாமி, திமுக முன்னணியில் உள்ளது என்பதை ஏற்க மறுத்ததோடு; ஜெயலலிதா வெற்றிபெற வேண்டும் என்று ஜெயலலிதாவைப் பாராட்டிப் பதிலுரைத்தார்.

14.1.2002 அன்று சென்னையில் `துக்ளக்' ஆண்டு விழா நிகழ்ச்சியில், சோ ராமசாமி, ``இப்போது டான்சி உட்பட ஐந்து வழக்குகளில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். விடுதலை என்று தீர்ப்பு வந்து விட்டதாலேயே ஜெயலலிதா நிரபராதி என்று சொல்ல மாட்டேன். 1991-1996 ஆண்டுகளில் பதவி வகித்த அதிமுக ஆட்சியின்போது ஊழல் நடந்தது உண்மையே. திமுக ஆட்சிக்கு வந்ததும் போட்ட வழக்குகளை பொய் வழக்கு என்றும் கூறமாட்டேன். அதிமுக ஆட்சியில் அதிக அளவுக்கு ஊழல் நடந்தது என்பது மறுக்க முடியாது. அப்படி நான் குற்றம்சாட்டியதில் எந்த தவறும் இல்லை. குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். அவ்வளவுதான்'' என்று பேசியதை, இப்போது அவருக்கும், அவரது வாசகர்களுக்கும் நினைவுபடுத்துவது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

ஜெயலலிதா ஊழல் குற்றம் புரிந்தவர் என்றும், அதிமுக ஆட்சி ஊழல் ஆட்சி என்றும் சாடிய அதே சோ ராமசாமிதான், இன்றைக்கு ஜெயலலிதாவுக்கு வக்காலத்து வாங்கி, அதிமுக ஆட்சி வரவேண்டுமென்று எண்ணுகிறார். ``எண்ணங்கள் குதிரைகளானால், எண்ணிய நேரத்தில் காத தூரம் பறக்கலாம்'' என்பது பழமொழியல்லவா?

முழு மனதென்ன, கால் மனதென்ன - மனதையே காலால் மிதித்து நசுக்கி விட்டவர்களுக்கு; நாளொரு சிந்தனை - பொழுதொரு பேச்சு என்ற நயவஞ்சகப் போக்கு இருப்பதில் என்ன ஆச்சரியம்?

கேள்வி: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பிரச்சனை சம்மந்தமான பொதுக் கணக்குக் குழு அறிக்கையினை, நாடாளுமன்றத்தின் சபாநாயகருக்கு, முரளி மனோகர் ஜோஷி அனுப்பி வைத்துள்ளதாகச் செய்தி வந்துள்ளதே?

பதில்: இந்தப் பிரச்சனை சம்மந்தமாக பா.ஜ.கவின் முரளிமனோகர் ஜோஷி தலைமையிலான நாடாளுமன்ற பொதுக் கணக்குக்குழு விசாரணை செய்தது. இந்தக் குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்பே, பத்திரிகைகளுக்கு வெளியானது குறித்து ஏற்பட்ட சர்ச்சை இன்னும் முடிவுக்கு வரவில்லை. 21 உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் குழுவின் 11 உறுப்பினர்கள் அறிக்கையை நிராகரித்து விட்டனர். எனினும், பொதுக் கணக்குக்குழுவின் தலைவர் முரளி மனோகர் ஜோஷி, அறிக்கையை நாடாளுமன்றத் தலைவர் மீராகுமாருக்கு அனுப்பி விட்டார்.

முரளி மனோகர் ஜோஷி வகித்து வந்த பொதுக் கணக்குக்குழு தலைவர் பதவிக்காலம் 30.4.2011 உடன் முடிவடைந்துவிட்டது. அவருடைய பதவிக் காலம் முடிவடைந்தாலும், அவருக்குப் பிறகு, அவருடைய கட்சிக்காரர்தான் அந்தப் பொறுப்புக்கு வருவார் என்ற நாடாளுமன்ற நடைமுறையின்படி, முரளிமனோகர் ஜோஷியையே மீண்டும் பொதுக் கணக்குக்குழுவின் தலைவராக நியமனம் செய்து சபாநாயகர் மீரா குமார் அறிவித்துள்ளார்.

முரளி மனோகர் ஜோஷி அனுப்பி வைத்துள்ள அறிக்கை குறித்து பல்வேறு வகையான சர்ச்சைகளும், சந்தேகங்களும் எழுந்துள்ளன. குழுவின் வரைவு அறிக்கையின் நகல் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு, அதன் மீது பத்திவாரியாக உறுப்பினர்களின் கருத்து கேட்கப்பட்டிருக்க வேண்டும். அந்த அறிக்கையில் ஏதாவது ஒரு பகுதியோ அல்லது முழுவதுமோ தங்களுக்கு ஏற்புடையது இல்லை என்று உறுப்பினர்கள் கருதினால், அதைப் பற்றி தனித்தனியாக அதே அறிக்கையில் பிற்சேர்க்கையாக பதிவு செய்து கொள்ளலாம். குற்றம்சாட்டப்பட்டவர்களை அழைத்து பொதுக் கணக்குக் குழு விசாரித்திருக்க வேண்டும். குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் வைக்கப்பட வேண்டும் என்பதுதான் நடைமுறை. மாறாக, நாடாளுமன்றத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அறிக்கை மீது நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்து, அதனை ஏற்றுக் கொள்வதும், நிராகரித்து விடுவதும், பெரும்பான்மை உறுப்பினர்களைப் பொறுத்ததாகும்.

முரளி மனோகர் ஜோஷி பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது, ``பல உறுப்பினர்கள் வாக்கெடுப்பு வேண்டுமென்றார்கள். சிலர் அதை எதிர்த்தார்கள். எண்ணிக்கை முக்கியமானதல்ல; பின்பற்றக்கூடிய செயல் முறைதான் முக்கியமானதாகும். பெரும்பான்மை என்பதன் அடிப்படையில் என்னுடைய நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ள வேண்டியதில்லை. அறிக்கையினை பெரும்பான்மையினர் என்போர் நிராகரித்து விட முடியாது'' என்று சொன்னதாக, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பவன்குமார்பன்சால் தெரிவித்திருக்கிறார். முரளி மனோகர் ஜோஷி அப்படிச் சொல்லியிருந்தால், ஜனநாயகத்தின் மீது அவருக்கு எந்த அளவுக்கு நம்பிக்கை இருக்கிறது என்பதைக் காட்டும். ஜனநாயகம் என்பது எண்ணத்தை மட்டுமல்ல; எண்ணிக்கையையும் அடிப்படையாகக் கொண்டதாகும்.

அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில், நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பி, நாடாளுமன்ற நடவடிக்கைகளையே முடக்கியவர்கள் பா.ஜ.கவினர். அப்படிப்பட்டவர்கள் ஜனநாயக நெறிமுறைகளுக்கும், நாடாளுமன்ற மரபுகளுக்கும் மாறாக, பொதுக்கணக்குக்குழு விவகாரத்தில் நடந்து கொண்டது எப்படி என்பதைத்தான் நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள்.

இப்போது நடந்துள்ள நிகழ்ச்சிகளையெல்லாம் பார்க்கும்போது, நாடாளுமன்ற நடைமுறைகளைப் பின்பற்றுவதைவிட; அறிக்கையை வேகமாகத் தயாரித்து, அதிலுள்ள அம்சங்களை வெளியிடும் அவசரம் மட்டுமே தெரிகிறது. ``இந்த விவகாரத்தில், சபாநாயகர் முடிவெடுப்பார்; அவரது முடிவை அரசு ஏற்கும்'' என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் கருத்து தெரிவித்திருப்பதையும்; முரளி மனோகர் ஜோஷியே மீண்டும் பொதுக் கணக்குக்குழுத் தலைவராக நியமனம் செய்யப்பட்டிருப்பதையும் கவனத்தில் கொள்ளலாம். என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

கேள்வி: கேரளாவில், 90 வயதான மூதாட்டி ஒருவர் நான்காம் வகுப்பு தேர்வு எழுதியதாக வெளி வந்த செய்தியைப் பார்த்தீர்களா?

பதில்: கேரள மாநிலம், ஆலப்புழாவைச் சேர்ந்த 90 வயது மூதாட்டி பாத்திமா பீவி என்பவர், சிறுவயதில் கல்வி கற்க முடியாத நிலை இருந்ததால், தற்போது வயது முதிர்ந்து, 90ஐ எட்டிய நிலையிலும் நான்காம் வகுப்புத் தேர்வு எழுதியுள்ளார். குறைந்த பட்சம் நான்காம் வகுப்பு தேறியிருந்தால் மட்டுமே, அரசின் பல்வேறு சலுகைகளைப் பெற முடியும் என்ற நிபந்தனை உள்ளதால், அதுவும் தேர்வு எழுத அந்த மூதாட்டிக்கு உந்து சக்தியாக இருந்திருக்கிறது. இந்த வயதில் தேர்வு எழுத வேண்டுமென்ற ஆர்வம் காட்டிய பாத்திமா பீவியை நாம் பாராட்டி ஆகவேண்டும்.

அதனால்தான் திருவள்ளுவர், ``கற்றோர்க்கு எல்லா நாடுகளிலும் எல்லா ஊர்களிலும் சிறப்பு என்கிற போது, ஒருவன் சாகும் வரையில் கற்காமல் காலம் கழிப்பது ஏனோ?'' என்று கல்வியின் அரிய சிறப்பினை அழகாகச் சொல்லியிருக்கிறார்.

கேள்வி: 12வது ஐந்தாண்டுத் திட்டத்திற்கான வரைவினை தயாரிப்பதற்குரிய முயற்சிகள் தொடங்கி விட்டதாக செய்திகள் வருகின்றனவே?

பதில்: 2012-2017ம் ஆண்டுகளுக்கான 12வது ஐந்தாண்டுத் திட்டத்திற்குரிய பணிகள் தொடங்கி விட்டன. இந்தத் திட்டம் 2012ம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வர உள்ளது. அதற்கான அணுகுமுறை அறிக்கையைத் தயாரித்திடும் முயற்சியில் மத்திய திட்டக்குழு ஈடுபட்டிருக்கிறது. ஐந்தாண்டுத் திட்டங்களுக்கான வரைவுகளைத் தயாரிப்பதில், இதுவரை மேற்கொள்ளப்பட்ட அணுகுமுறைகளிலிருந்து சற்று விலகி, அனைவரும் பாராட்டத்தக்க ஒரு மாற்றத்தை மத்திய திட்டக்குழு உருவாக்கியிருக்கிறது. அதன்படி, தொடக்கம் முதலே மத்திய மாநில அரசுகளை மட்டுமல்லாமல், திட்டம் தயாரிப்பதில் ஈடுபாடும், அனுபவமும் உள்ள பொதுமக்கள், பேராசிரியர்கள், பொருளாதார நிபுணர்கள், அரசியல் பார்வையாளர்கள் என அனைவருடனும் கலந்தாலோசனை செய்யத் திட்டக்குழு முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்க ஒரு மாறுதலாகும். இப்படிச் செய்வதால் திட்டம் தயாரிப்பதில் அனைவரையும் இணைத்துக் கொள்ளவும், பல்வேறு வகையான கருத்துக்களை அறிந்து கவனத்தில் கொள்ளவும் வாய்ப்பு ஏற்படுகிறது.

கேள்வி: தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகளைப் பற்றி மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பேசியிருக்கிறாரே?

பதில்: ``தேர்தல் நடந்த 5 மாநிலங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். மற்ற மாநிலங்களில் கட்சித் தொண்டர்கள், கட்சியின் சின்னம் பொறித்த தொப்பி அணிந்திருந்தனர். மேலும், பிளக்ஸ் பேனர், பொதுக்கூட்டம் என அனைத்தும் நடந்தன. ஆனால், தமிழகத்தில் மட்டும் தேர்தல் கமிஷன் அதிக கெடுபிடி விதித்துள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதிமுறைகளை தேர்தல் கமிஷன் கடைப்பிடித்துள்ளது. இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும்'' என்று ப.சிதம்பரம் சிவகங்கையில் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். தமிழகத்தில் எத்தகைய கெடுபிடிகள் - காவல்துறை நடவடிக்கைகள், தேடுதல் வேட்டைகள், ஜனநாயக நடைமுறைகளை முறையாகப் பின்பற்றுவதில் விதிக்கப்பட்ட வரையறைகள் - தேர்தல் ஆணையத்தால் கடைப்பிடிக்கப்பட்டன என்பதை அனைவரும் அறிவர். தேர்தல் ஆணையம் இந்திய அரசமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு. தேர்தல் ஆணையம் என்பது விருப்பு வெறுப்புகளை அகற்றி, அனைவருக்கும் பொதுவாகவும், நடுநிலையோடும் செயல்பட வேண்டிய ஒரு அமைப்பாகும். ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு அளவு கோள்களை தேர்தல் ஆணையம் கடைபிடித்திடக் கூடாது என்பதே சிதம்பரத்தின் கருத்தாகும்.

தேர்தல் ஆணையத்திற்கான அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டு, முறைப்படுத்த வேண்டுமென்பதில், அரசியல் கட்சிகளுக்கிடையே கருத்து வேறுபாடு இருக்க முடியாது. ஒரே அமைப்பு, ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு நடைமுறையைப் பின்பற்றுவது என்பது ஜனநாயகத்தை வளப்படுத்துவதற்கு உதவாது. இந்திய அரசியல் சட்டத்தின்படி உருவாக்கப்பட்டுள்ள எந்தவொரு அமைப்பும், கடிவாளமின்றி ஓடுவதை அரசியல் சட்டம் அனுமதிக்கவில்லை.

ப.சிதம்பரம் சுட்டிக்காட்டி இருப்பதைப் போல நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிப்பதுடன், இது குறித்து அரசியல் சட்ட நிபுணர்களையும் கலந்தாலோசித்து முடிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஜனநாயகத்தின் மீதும், நமது அரசியல் சட்டத்தின் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ள அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். மத்திய உள்துறை அமைச்சரின் கருத்து; உதாசீனப்படுத்தக் கூடியதல்ல!.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

கனடாவில் முதல் இலங்கையர் பாராளுமன்றம் செல்கிறார்

கனடாவில் நேற்று இடம்பெற்ற தேர்தலில் புதிய ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ராதிகா சிற்சபைஈசன் வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்லும் முதல்  இலங்கையராக  இடம்பிடித்துள்ளார். மீண்டும் கன்சவேட்டிவ் கட்சி பெரும்பாண்மை அரசை அமைத்துள்ளது.

புதிய ஜனநாயகக் கட்சி 70 ஆசனங்களை மேலதிகமாக நாடாளுமன்றத்தில் பெற்று இரண்டாவது பெரும் கட்சியாக வந்துள்ளது தேர்தல் முடிவுகளின் படி கன்சவேட்டிவ் கட்சி 165 ஆசனங்களையும், புதிய ஜனநாயகக் கட்சி 104 ஆசனங்களையும், லிபரல் கட்சி 34 ஆசனங்களையும், புளக் கியூபெக்குவா 2 ஆசனங்களையும் பெற்றது. 

தேர்தல் கமிஷனின் அதிகாரங்களை முறைப்படுத்த வேண்டும்: கருணாநிதி

சென்னை:"தேர்தல் கமிஷன் கடிவாளமின்றி ஓடுவதை, அரசியல் சட்டம் அனுமதிக்கவில்லை. எனவே, அதன் அதிகாரங்ளை வரையறுத்து முறைப்படுத்த வேண்டும்' என, முதல்வர் கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.

அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு பிரச்னை சம்பந்தமாக, பா.ஜ.,வின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான பொதுக் கணக்குக் குழு விசாரித்தது. இக்குழுவின் அறிக்கை, பார்லிமென்டில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்பே, பத்திரிகைகளுக்கு வெளியானது குறித்து ஏற்பட்ட சர்ச்சை, இன்னும் முடிவுக்கு வரவில்லை. 21 உறுப்பினர்கள் கொண்ட இக்குழுவின், 11 உறுப்பினர்கள் அறிக்கையை நிராகரித்துவிட்டனர்.எனினும், முரளி மனோகர் ஜோஷி, அறிக்கையை லோக்சபா சபாநாயகர் மீராகுமாருக்கு அனுப்பி வைத்துவிட்டார். ஜோஷி வகித்த பொதுக் கணக்குக் குழு தலைவர் பதவி, கடந்த 30ம் தேதியுடன் முடிந்துவிட்டது. அவருக்கு பிறகு, அவரது கட்சிக்காரர் தான் அப்பொறுப்புக்கு வருவார் என்ற நடைமுறைப்படி, முரளி மனோகர் ஜோஷியையே மீண்டும் தலைவராக நியமித்து சபாநாயகர் மீராகுமார் அறிவித்துள்ளார்.

ஜோஷி அனுப்பிய அறிக்கை குறித்து, பல்வேறு சர்ச்சைகளும், சந்தேகங்களும் எழுந்துள்ளன. குழுவின் வரைவு அறிக்கையின் நகல், உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு, அதன் மீது பத்திவாரியாக உறுப்பினர்கள் கருத்து கேட்கப்பட்டிருக்க வேண்டும்.குற்றம் சாட்டப்பட்டவர்களை அழைத்து விசாரித்திருக்க வேண்டும். அறிக்கை மீது பார்லிமென்டில் விவாதம் நடந்து, அதை ஏற்றுக் கொள்வதும், நிராகரித்து விடுவதும், பெரும்பான்மை உறுப்பினர்களை பொறுத்ததாகும்.இப்போது நடந்துள்ள நிகழ்ச்சிகளை பார்க்கும் போது, பார்லிமென்ட் நடைமுறைகளைப் பின்பற்றுவதை விட, அறிக்கையை வேகமாக தயாரித்து, அதிலுள்ள அம்சங்களை வெளியிடும் அவசரம் மட்டுமே தெரிகிறது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.சட்டசபை தேர்தல் நடந்த, ஐந்து மாநிலங்களில் சுற்றுப் பயணம் செய்த, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், "ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு விதிகளை தேர்தல் கமிஷன் கடைபிடித்துள்ளது. இது குறித்து பார்லிமென்டில் விவாதிக்கப்படும்' என்று கூறியுள்ளார். இவரின் கருத்தை உதாசீனப்படுத்த முடியாது. தமிழகத்தில் தேர்தல் கமிஷன் கடைபிடித்த விதிமுறைகளை அனைவரும் அறிவர்.

தேர்தல் கமிஷன் அரசமைப்பு சட்டத்தால் உருவாக்கப்பட்டது. விருப்பு வெறுப்புகளை அகற்றி அனைவருக்கும் பொதுவாகவும், நடுநிலையோடும் செயல்பட வேண்டிய ஒரு அமைப்பு.இந்நிலையில், மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறியது போல, தேர்தல் கமிஷன் மாநிலத்திற்கு ஒரு அளவுகோலை கடைபிடிக்கக் கூடாது. தேர்தல் கமிஷனின் அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டு முறைப்படுத்த வேண்டும் என்பதில் அரசியல் கட்சிகள் இடையே வேறுபாடு இருக்க முடியாது. எனவே, தேர்தல் கமிஷனின் செயல்பாடுகளை பார்லிமென்டில் விவாதிப்பதுடன், அதன் அதிகாரங்களை வரையறுத்து முறைப்படுத்த வேண்டும்.கேரளாவில், 90 வயது மூதாட்டி பாத்திமா பீவி, நான்காம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளதை பாராட்டுகிறேன். அரசின் சலுகைகளை பெற குறைந்தபட்சம் நான்காம் வகுப்பு தேர்ச்சி அவசியம் என்பது, அவருக்கு உந்து சக்தியாக இருந்திருக்கிறது.இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

35 ஆயிரம் இலங்கையரின் இரட்டைப் பிரஜாவுரிமை மீளாய்வு "இரத்துச் செய்யும் அதிகாரம் பாதுகாப்பு அமைச்சுக்கு'

வெளிநாடுகளில் வசிக்கும் சுமார் 35 ஆயிரம் இலங்கையர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த விடயம் மீளாய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளது.
அதேசமயம், இரட்டைப் பிரஜாவுரிமை கோரி விண்ணப்பிப்போரின் விண்ணப்பங்களை கடுமையான முறையில் பரிசீலிப்பதற்கான திட்டங்களை அரச அதிகாரிகள் கொண்டுள்ளதாக சிரேஷ்ட அதிகாரியொருவர் கூறியுள்ளார்.

தாங்கள் பிறந்த நாட்டுக்கு விசுவாசமுள்ளவர்களும் தமது வரிகளைச் செலுத்துவதன் மூலம் நாட்டின் சட்டங்களுக்கு மதிப்பளிப்பவர்களுக்கு மட்டுமே இந்த வசதி வழங்கப்படுமென குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் டபிள்யூ ஏ.சூலானந்த பெரேரா கூறியுள்ளார் 1987 இல் இரட்டைப் பிரஜாவுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இத்திருத்தத்தின் மூலம் இரட்டைப் பிரஜாவுரிமையை இரத்து செய்வதற்கான அதிகாரத்தை பாதுகாப்பு அமைச்சு கொண்டுள்ளது. தனிப்பட்ட ஒருவர் இந்த வசதியை அனுபவிப்பதற்கு விசேடப்படுத்தப்பட்டுள்ள தேவைகளைக் கொண்டிராவிடின், எந்தத் தருணத்திலும் அவரின் இரட்டைப் பிராஜாவுரிமையை இரத்து செய்யும் அதிகாரம் பாதுகாப்பு அமைச்சுக்கு உள்ளதாக சூலானந்த பெரேரா கூறியுள்ளார்.

உதாரணமாக தமது பிள்ளைகளின் கல்வி அல்லது பாரிய வர்த்தகம் மற்றும் ஏனைய நலன்களுக்காக வெளிநாட்டில் வசிப்பதற்கான நிலைமையேற்பட்டிருக்கும் குடும்பங்களுக்கு இந்த வசதிகள் வழங்கப்படும். ஆனால், அதேசமயம் அவர்கள் இலங்கைக்குச் செலுத்த வேண்டிய தமது வரிகள் தொடர்பான கடப்பாடுகளை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால், பல்வேறு காரணங்களுக்காக நாட்டுக்குப் பாதிப்பையேற்படுத்தும் ஏனையோரும் இரட்டைப் பிரஜாவுரிமையை நாடுகின்றனர்.இந்த விடயம் தொடர்பாக தற்போது மீளாய்வு மேற்கொள்ளப்படும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

மறைமுக நிகழ்ச்சித் திட்டம் இல்லாமல் இலங்கைக்கு உதவுகின்ற ஆட்களை கவனமான முறையில் தெரிவு செய்வதே பிரதான நோக்கமென அவர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, இந்தப் பரிசீலனைகள் இன,மத ரீதியாக அமையாதெனவும் முற்றுமுழுதாக விசுவாசம்,ஈடுபாடு என்பவற்றின் அடிப்படையிலேயே அமையுமெனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

இரட்டைப் பிரஜாவுரிமைக்கான விசேட முன்னுரிமை சிரேஷ்ட பிரஜைகளுக்கும் தொழில்சார் நிபுணர்களுக்கும் வழங்கப்படுமெனவும் குறிப்பிட்ட அவர் இந்த வருட முற்பகுதியில் புதிய இரட்டைப் பிரஜாவுரிமைகளை வழங்குவதை அரசாங்கம் நிறுத்தி வைத்திருந்ததாகத் தெரிவித்துள்ளார். தற்போது இரட்டைப் பிரஜாவுரிமை கோரும் 3300 விண்ணப்பங்கள் இருப்பதாகவும் சுமார் 620 விண்ணப்பங்கள் தொடர்பாக ஜனாதிபதியிடமிருந்து இறுதி அங்கீகாரம் பெற அனுப்பப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முன்னர் இரட்டைப் பிரஜாவுரிமை பெறுவதற்கு இரண்டு இலட்சம் ரூபா செலுத்தப்பட வேண்டும். அல்லது 25 இலட்ச ரூபா பெறுமதியான சொத்து அல்லது 25 இலட்சம் ரூபா பெறுமதியான வங்கிக் கையிருப்பைக் கொண்டிருக்க வேண்டுமென்ற விதிமுறை இருந்து வந்தது
.

திங்கள், 2 மே, 2011

சுபாஷ்,ஞானம் ஹோட்டல் ஆகியன திறந்து வைக்கப்பட்டன

யாழ் நகரின் பிரபல உல்லாச ஹோட்டல்களான ஞானம் ஹோட்டல் சுபாஷ் ஹோட்டல் ஆகியன புனரமைப்பு செய்யப்பட்டு நேற்று முதல் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டன

ஒசாமா புண்ணியத்தால் அமெரிக்கர்களிடையே ஒபாமா செல்வாக்கு உயர்வு

பத்து வருடங்களாக கடுக்காய் கொடுத்து வந்த அல் கொய்தா நிறுவனர், ஒசாமா பின்லேடனை அமெரிக்கப் படையினர் முக்கால் மணி நேரத்தில் வீழ்த்தியதன் மூலம் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு அமெரிக்கர்களிடையே பெரும் செல்வாக்கு ஏற்பட்டுள்ளது. மீண்டும் ஒபாமா அதிபராக வேண்டும் என்று வெள்ளை மாளிகை முன்பு கூடிய அமெரிக்கர்கள் கோஷமிட்டனர்.
அதிபரான போது ஒபாமாவுக்கு பெரும் செல்வாக்கு இருந்தது. அவரது பதவி ஏற்பு விழாவின்போது திரண்ட மக்கள் கூட்டமே அதற்கு சாட்சி. அமெரிக்காவின் முதல் கருப்பர் இன அதிபர் என்ற பெருமையைப் பெற்ற ஒபாமாவுக்கு நாளடைவில் செல்வாக்கு மங்கத் தொடங்கியது. அதிலும் சமீப காலமாக அவருக்கு பெரும் சரிவு ஏற்பட்டது.

ஆனால் பின்லேடன் வேட்டை அப்படியே ஒபாமாவை தூக்கி உச்சாணியில் நிறுத்தி வைத்து விட்டது. அமெரிக்கர்களிடையே ஒபாமாவுக்கு பெரும் செல்வாக்கு ஏற்பட்டுள்ளது. மிகப் பெரிய சாதனையை ஒபாமாவின் நிர்வாகம் செய்து விட்டதாக அமெரிக்கர்கள் பூரிப்படைந்துள்ளனர்.

நேற்று வெள்ளை மாளிகையில் அதிபர் ஒபாமா, பின்லேடன் கொல்லப்பட்ட தகவலை வெளியிட்டுக் கொண்டிருந்த சமயத்தில், வெள்ளை மாளிகைக்கு வெளியே பெரும் திரளான அமெரிக்கர்கள் கூடி உற்சாகமாக கோஷமிட்டனர். அப்போது அவர்கள் மீண்டும் ஒபாமாவே அதிபர் என்றும் குரல் எழுப்பினர்.

அமெரிக்காவுக்கு பெரும் சவாலை ஏற்படுத்திய மிகப் பயங்கரமான தீவிரவாத தலைவர் வீழ்த்தப்பட்ட விதம் அமெரிக்கர்களிடையே பெரும் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது.

ஒபாமாவின் நிர்வாகத் திறமையே இந்த சாதனைக்குக் காரணம் என அமெரிக்கர்கள் கருதுகிறார்கள்.

ஜார்ஜ் புஷ்ஷால் சாதிக்க முடியாததை ஒபாமா சாதித்தது அமெரிக்கர்களிடையே, ஒபாமா மீதான நம்பிக்கையை பல மடங்கு அதிகரித்துள்ளது.

தீவிரவாதத்திற்கு எதிரான போரில் ஒபாமா பெரும் வெற்றி அடைந்திருப்பதாக அமெரிக்கர்கள் கருதுகிறார்கள்.

ஒபாமா நிர்வாகத்திற்கு பின்லேடன் மரணம் பெரும் பூஸ்டராக வந்து அமைந்துள்ளது. ஒபாமா அரசு மீது இருந்த அதிருப்திகளை அப்படியே இது துடைத்துப் போட்டு விட்டதாக அவர்கள் கருதுகிறார்கள்.

பொருளாதார சரிவு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களில் மாட்டி்யிருந்த அமெரிக்கர்கள், ஒபாமாவின் நிர்வாகம் மீது கடும் அதிருப்தி இருந்து வந்தது. தற்போது அத்தனையையும் அமெரிக்கர்கள் மறக்கடிக்கும் வகையில் பின்லேடனின் மரணச் செய்தி வந்து சேர்ந்துள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் ஒபாமா போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாகி விட்டன. மேலும் அவர் அடுத்த அதிபர் தேர்தலில் பெரும் வெற்றி பெறக் கூடிய வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன. அதேசமயம், ஒபாமாவுக்கு பெரும் சவாலாக விளங்குவார் எனக் கருதப்படும் ஹில்லாரி கிளிண்டன், பின்லேடன் தூசியில் மறைந்து போய் விட்டார்.

கடந்த மாதம் நியூயார்க் டைம்ஸும், சிபிஎஸ்ஸும் இணைந்து எடுத்த சர்வேயில் ஒபாமாவுக்கு 46 சதவீத ஆதரவே கிடைத்தது. தற்போது இது கிடுகிடுவென உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எப்படியோ, அமெரிக்க வரலாற்றில் ஒபாமா மீண்டும் ஒரு பக்கத்தை தனது பெயரால் நிரப்பி விட்டார் என்று நிச்சயமாக கூறலாம்.

கண்டுபிடித்தது எப்படி?ஒசாமாவை அமெரிக்க உளவுப் பிரிவினர்

வாஷிங்டன்: ஒசாமா பின் லேடன் பதுங்கியிருந்த கட்டடத்தை அமெரிக்காவின் சிஐஏ உளவுப் பிரிவு எப்படி கண்டுபிடித்தது என்பது குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஒசாமாவை தாராபோரா மலைத் தொடரின் குகைகளில் அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானங்கள் (un manned ariel vehicles) இரவு பகலாக தேடி வந்தன. இதற்கான 50க்கும் மேற்பட்ட உளவு விமானங்கள் இந்த மலைத் தொடரை சல்லடை போட்டு தேடின. ஆனாலும் ஒசாமா சிக்கவில்லை.

அதே போல சாட்டிலைட் தொலைபேசியில் ஒபாமா பேசுகிறாரா என்று அமெரிக்க ராணுவ செயற்கைக் கோள்கள் voice recognition software உதவியோடு உலகம் முழுவதும் இந்த ரக தொலைபேசிகளின் உரையாடல்களை கண்காணித்து வந்தன. ஆனால், ஒரு சத்தத்தையும் காணோம்.

இந் நிலையில் ஏராளமான உடல் உபாதைகளுடன் தவித்து வந்த ஒசாமா நிச்சயம் பாகிஸ்தானுக்குள் தான் பதுங்கியிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது அமெரிக்கா. இதனால் பாகிஸ்தானுக்குள் ஒசாமாவைத் தேடும் பணியை தீவிரமாக்கியது.

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவுப் பிரிவு தான் ஒசாமாவை பத்திரமாக பதுக்கி வைத்திருக்கிறது என்று தெரிய வந்தாலும், அதை பாகிஸ்தானின் ஆட்சியாளர்கள் மறுத்தே வந்ததால், கெஞ்சிப் பார்த்து ஓய்ந்து போன அமெரிக்கா, பாகிஸ்தான் ஆட்சியாளர்களை மிரட்டவும் ஆரம்பித்தது.

லிபியாவுக்குள் குண்டுவீசி அந் நாட்டு அதிபர் கடாபிக்கே குறி வைக்க ஆரம்பித்துள்ள அமெரிக்கா, இதே நிலைமை உங்களுக்கும் விரைவில் ஏற்படும் என்றும் மிரட்டியதையடுத்து ஒசாமா குறித்த சில தகவல்களை அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் தந்ததாகத் தெரிகிறது.

இந்த தகவல்களை முன் வைத்து சிஐஏ நடத்திய மாபெரும் உளவு-தேடுதல் வேட்டையில் தான் ஒசாமா கொல்லப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானில் கிடைத்த தகவல்களை வைத்து ஒசாமாவின் வளையத்துக்குள் உள்ள சிலரை அமெரிக்கா கண்காணிக்க ஆரம்பித்தது. இந்த வளையத்தில் சில சிஐஏ பிரிவினரையும் ஊடுருவ வைத்தது.

அவர்கள் மூலம் ஒசாமாவுக்கு கடிதங்கள் எடுத்துச் செல்லும் நபரை அடையாளம் கண்டது சிஐஏ. ஒசாமாவுக்கான அந்தக் கடிதங்கள் புனைப் பெயர்களில் செல்வதை அமெரிக்கா கண்டுபிடித்தது.

இந்த நபர் இஸ்லாமாபாத்திலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அப்போடாபாத் நகரில் உள்ள ஒரு வீட்டில் வசிப்பதை கடந்த ஜனவரியிலேயே சிஐஏ கண்டுபிடித்தது.

அந்த நபரிடம் விசாரணை நடத்தினால் கூட ஒசாமா அலர்ட் ஆகிவிடுவார் என்பதால், அவரிடம் எந்தவித பேச்சுவார்த்தையையும் வைத்துக் கொள்ளவில்லை அமெரிக்கா.

அந்த நபர் வசித்த வீடு 18 அடி உயரம் கொண்ட மிக உயர்ந்த சுற்றுச் சுவர்கள் கொண்ட 3 மாடிகள் கொண்ட வீடாகும். அந்த வீட்டைப் பார்த்தவுடனேயே அமெரிக்காவின் சந்தேகம் மேலும் வலுத்தது. அப் பகுதியில் உள்ள மற்ற வீடுகளை விட 8 மடங்கு மிக அதிகமான பரப்பளவில் அந்த வீடு கட்டப்பட்டுள்ளது. மேலும் 2005ம் ஆண்டில் அந்த வீடு கட்டப்பட்டுள்ளது.

பல கோடி மதி்ப்புடைய அந்த வீட்டின் தொலைபேசி எண்ணை அறிய அமெரிக்க உளவுப் பிரிவினர் முயன்றபோது அதிர்ச்சி காத்திருந்தது. அவ்வளவு பெரிய வீட்டில் தொலைபேசியே இல்லை. மிகப் பெரிய பங்களாவில் ஒரு தொலைபேசி இணைப்பு கூட இல்லாதது ஏன் என்ற சந்தேகம் வரவே, அந்த வீட்டில் இண்டர்நெட் இணைப்பாவது இருக்கிறதா என்று விசாரித்தபோது அதுவும் இல்லை என்று தெரியவந்தது.

மேலும் அந்த வீட்டினர் குப்பைகளைக் கூட வெளியில் கொட்டாமல், தங்களது காம்பவுண்டுக்குள்ளேயே எரித்து வந்ததையும் அமெரிக்க உளவுப் பிரிவினர் பல மாதங்களாக கண்காணித்தனர்.

அந்த வீட்டில் கடிதங்கள் கொண்டு சென்ற நபரும் அவரது சகோதரரின் குடும்பங்கள் தவிர இன்னொரு குடும்பமும் இருப்பதும் தெரியவந்தது. அந்தக் குடும்பம் பின் லேடனின் குடும்பம் என்ற முடிவுக்கு வந்த சிஐஏ, இந்த வீட்டை சோதனையிடுவது குறித்து முடிவு செய்தது. இது தொடர்பாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தலைமையில் 5 உயர் மட்டக் கூட்டங்களும் நடந்தன.

அதில், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்குத் தெரிந்துவிடாமல் இந்த ஆபரேசனை நடத்த முடிவு செய்யப்பட்டது. அவர்களுக்கு தகவல் கிடைத்தால் ஒசாமாவை காப்பாற்றிவிடுவார்கள் என்பதால் இந்த முடிவெடுக்கப்பட்டது.

இதனால் கொஞ்சம் காலதாமதம் ஆனாலும் கூட, இந்த ஆபரேசனை நாமே நடத்தி முடிப்பது என்ற முடிவுக்கு அமெரிக்கா வந்தது. இந்த வீட்டில் ஒசாமா தனது இளைய மனைவியோடு இருப்பதை அப்போடாபாத் நகரிலேயே முகாமிட்டிருந்த சிஐஏவின் உளவாளிகள் மீண்டும் திட்டவட்டமாக கடந்த வாரம் உறுதிப்படுத்தவே, அந்த வீட்டின் மீது தாக்குதல் நடத்தி ஒசாமைவைக் கொல்ல கடந்த வெள்ளிக்கிழமை ஒபாமா கையெழுத்து போட்டு அனுமதி தந்தார்.

இதையடுத்து நேற்று நள்ளிரவு 1.20 மணியளவில் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க விமானப் படைத் தளத்திலிருந்து சில ஹெலிகாப்டர்களில் கிளம்பிய அமெரிக்கப் படையினரும், இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திலிருந்து கிளம்பிய ஒரு படையும் இந்த வீட்டை முற்றுகையிட்டன.

மிகச் சிறிய அளவிலான இந்தப் படை தனது பயங்கர தாக்குதலைத் தொடங்க, ஒசாமா பின் லேடனின் பாதுகாவலர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இந் நிலையி்ல் ஒசாமா பின் லேடனே நேரடியாக அமெரிக்கப் படைகளுடன் மோதியுள்ளார்.

இதில் உடல் துளைக்கப்பட்டு ஒசாமா பின் லேடன் அந்த இடத்திலேயே பலியானார். இதில் ஒரு குண்டு ஒசாமாவின் கண்ணை துளைத்துக் கொண்டு மூளையை சிதறடித்தது. அவருடன் அவரது மகன், ஒரு பெண் உள்பட 5 பேரும் பலியாயினர்.

40 நிமிடத்தில் இந்த ஆபரேசனை முடித்துவிட்டு ஒசாமாவின் உடலை தூக்கிக் கொண்டு அமெரிக்க ஹெலிகாப்டர்கள் கிளம்பின.

இதில் ஒரு ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுவிட, அந்த ஹெலிகாப்டரை அங்கேயே விட்டுவிட்டு மற்ற ஹெலிகாப்டர்கள் பறந்தன. தரையில் நிறுத்தப்பட்டிருந்த அந்த ஹெலிகாப்டரை பாதுகாப்பு, உளவு காரணங்களுக்காக மற்ற ஹெலிகாப்டர்கள் குண்டுவீசித் தகர்த்துவிட்டு, ஒசாமாவின் உடலோடு ஆப்கானிஸ்தான் நோக்கிப் பறந்தன.

இந்தத் தாக்குதலை நடத்தியது எந்தப் படை என்பதை அமெரிக்கா தெரிவிக்கவில்லை. ஆனாலும் U.S. Navy SEALs அதிரடிப் படை தான் இந்த ஆபரேசனை நடத்தியதாகத் தெரியவந்துள்ளது.

இறந்தது ஒசாமா தானா என்பதை facial recognition மற்றும் டிஎன்ஏ சோதனைகள் மூலம் அமெரிக்கா உறுதி செய்துள்ளது.

இந்த முழு ஆபரேசனையும் அமெரிக்காவிலிருந்து ஒருங்கிணைத்த சிஐஏ குழுவுடன் அந் நாட்டு வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டனும் முழு அளவில் இணைந்து பணியாற்றியுள்ளார்.
English summary
After years of dead ends and promising leads gone cold, the big break came last August. A trusted courier of Osama bin Laden’s whom American spies had been hunting for years was finally located in a compound 35 miles north of the Pakistani capital, close to one of the hubs of American counterterrorism operations. The property was so secure, so large, that American officials guessed it was built to hide someone far more important than a mere courier.

காதல் கல்லூரி'யில் நமீதா!

அதீத கவர்ச்சிப் பாவையாக மட்டுமே பார்க்கப்பட்டு வந்த நமீதாவை வித்தியாசமான கோணத்திலும், வித்தியாசமான கேரக்டரிலும் ரசிகர்கள் காணும் நாள் நெருங்கி விட்டது.


தெலுங்கில் நமீதா நடித்து வரும் படம் லவ் காலேஜ். இப்படத்தில் யோகா ஆசிரியையாக நடிக்கிறார் நமீதா. கவர்ச்சிகரமான பாத்திரத்தில் மட்டுமல்லாமல், அதிரடி ஆக்ஷனிலும் பின்னி எடுத்திருக்கிறாராம் நமீதா.

இதற்காக மெனக்கெட்டு தனது உடல் பொலிவையும் கூட்டி, தேவையற்ற கொழுப்பைக் கைவிட்டு டிரிம்மாகி அசத்தலாக காணப்படுகிறார்.

இதுவரை தனக்குள் மறைந்திருந்த நடிப்புத் திறமையை மொத்தமாக இதில் வெளிக்காட்டி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கவுள்ளாராம் நமீதா.

இது கன்னடத்தில் வெளியான நமீதா ஐ லவ் யூ படத்தின் டப்பிங்தான் என்ற போதிலும், அது தெரியாத அளவுக்கு படத்தில் சில மாறுதல்களையும் செய்து சேர்த்து பொலிவேற்றியுள்ளனராம்.

விரைவில் இப்படம் தமிழிலும் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
English summary
Actress Namitha, who was seen in many glamorous roles, is keen to change her image. Now, she has decided to discard her oomph factor and is heading for a serious role thorugh Love College, a Telugu movie. Her body language and looks show that the actress wants to showcase her hidden talent. She plays the role of a yoga teacher in the film. The movie is a dubbed version of upcoming Kannada film Namitha I Love U.

புலிகளால் மறைக்கப்பட்ட வரலாறும் முஸ்லிகளால் மறக்கப்படவேண்டிய வரலாறும்


                       எஸ்.எம்.எம்.பஷீர்.

“நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி, வஞ்சனை செய்வாரடி! – கிளியே! வாய்ச் சொல்லில் வீரரடி.” (சுப்ரமணிய பாரதியார்)

அண்மையில் நான் பிரான்சில் இருந்து இயங்கும் பிரபல வானொலி ஒன்றில் அரசியல் கலந்துரையாடலில் பங்குகொண்டபோது, என்னிடம் விடுக்கப்பட்ட கேள்வி ஐரோப்பாவில் புலிகளினால் முடுக்கிவிடப்பட்டிருக்கும் முஸ்லிம் விரோத விசமப்பிரசாரம் பற்றியது. கிழக்கிலே இருந்து ஐரோப்பாவிலே குடியேறி புலிகளுக்காக பரப்புரை செய்யும் ஒரு புலியின் ஒலி(ளி)பரப்பாளர் ஒருவர் தமது தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கிழக்கிலே மீண்டும் பொருளாதார சமூக செயற்பாடு ஜனநாயக அரசியல் நடவடிக்கைகள் காரணமாகவும் திடமாகவும் தீர்க்கமாகவும் கட்டி எழுப்பப்படும் இன சௌஜன்யத்தை, சீர் குலைக்க, தமிழ் மக்களை முஸ்லிம் மக்களின் மீது பகைமை கொள்ளச்செய்ய பகீரத் பிரயத்தனம் செய்வதாகவும், அவர் ஒரு நிகழ்வொன்றில் முஸ்லிம்களின் மீது புலிகள் நடத்திய இனப்படுகொலைக்கும் இனச்சுத்திகரிப்ப்பிற்கும் காரணம் கண்டுபிடித்து நியாயம் கற்பிக்க முனைவதாக நான் அந்நபர் பற்றி முன்னரே அறிந்திருந்தேன்,

எனவே அத்தகைய விசமப்பிரச்சாரங்களை குறித்து கேள்வி எழுப்பிய நண்பரிடம் புலிகளின் முஸ்லிம் உறுப்பினர்கள் குறித்து, புலிகளின் வரலாறு எழுதிய புலி உறுப்பினரின் பதிவு ஒன்றினை விரைவில் வெளியிடுவேன் என்று குறிப்பிடிருந்தேன்; அவ்வண்ணம் இங்கு புலிகளின் வரலாற்று ஏட்டில் ஒரு பக்கத்தினை சான்றாக வைக்க விரும்புகிறேன். இதன் மூலம் புலிகளின் வலையில் விழுந்து மாண்டு போன ஒரு முஸ்லிம் புலியின் சரிதை மட்டுமல்ல இது; முஸ்லிம்கள் அன்று புலிகளுக்கு வழங்கிய உதவியையும் ஒத்தாசையையும் புலிகள் எவ்வாறு பயன்படுத்திக் கொண்டனர் என்பதுடன் பின்னர் முஸ்லிம் விரோதகொள்கையை கைக்கொண்டு மிலேச்சதனமாக முஸ்லிம்களை எவ்வாறு நடத்தினர் என்ற கேளவிக்கு இன்றைய பின்னணியில் பரிசீலிப்பதறகும் , பதில் சொல்வதற்கும் உதவும்; இது குறித்து கிழக்கு வாழ் தமிழ் முஸ்லிம் சமூகங்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்பதே இதனை பிரசுரிப்பதன் நோக்கமுமாகும்.
அண்மையில் இலங்கையில் முன்னாள் எம் பியும், பிரபல முஸ்லிம் சட்டத்தரணி தனது ஆங்கில கட்டுரையொன்றில் அக்கரைப்பற்றை சேர்ந்த அட்வொகேட் ஹாசிம் (Advocate Cassim ) என்பவரது மகனை புலிகள் அக்கரைப்பற்று பகுதி தலைவராக (Area leader) நியமித்ததை அவரால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை என்றும் அதனால் அவர் தன்னை வெறுதததாகவும் அவரால் அதை (தனது மகன் புலிகளில் சேருவதை) தடுப்பதற்கு எதுவும் செய்யமுடியவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். அவ்வாறு புலியில் சேர்ந்து தம்மை அழித்துக்கொண்ட சில முஸ்லிம் இளைஞ்ர்கள் எதிர்கால முஸ்லிம் சமூகத்திற்கும் எச்சரிக்கையாக இருக்கட்டும்.இனி புலிகளின் பதிவேட்டைப் பார்ப்போம்

 அக்கரையூர் தந்த அல்லி கப்டன் பாறூக்
அகமது லெவ்வை முஹம்மது ஹனிபா, அக்கரைப்பற்று -06 அம்பாறை
                               வீரஉயிர்ப்பு 06.12.1959. வீரச்சாவு 07.01.1987


தென்னை இளநீரும் தேங்கியோடும் வாய்க்காலின் அருகில் வளர்ந்திருக்கும் நாணல் பற்றைகளில் கூடுகட்டிவாழும் வயலான், தேனோடு பாலும், தெவிட்டாத அழகும; கலையோடு பின்னிப்பிணைந்து மாறாத வீரமும் கானான், கொக்குக் குருவிகள் ஒலிக்கும் ஒலியோடு சேர்ந்து இனியகானமாக தினம் ஒலித்து மெய்சிலிர்க்க வைக்கும் கவிகளும் வயல்களில் இருந்து பாட்டமாய் பறந்துவரும் வயல் குருவிகளை களிமண் உருண்டை கொண்டு கவிக்கு இசை சேர்க்குமாப்போல் கலைக்கும் ஆடவர்களும் அந்த அக்கறைப்பற்று வயலுக்கும், நகருக்கும் தனியழகைத் தரும்
சுற்றி வளைக்க விரும்பாமல் சுருக்கமாகச் சொல்லப்போனால் விடுதலை வேண்டிப் புறப்பட்டு இருந்த இடம் தெரியாமல் தமிழீழத்திலிருந்து சிதறிப்போன விடுதலை இயக்கங்கள் முப்பத்தெட்டு என்றாலும் அக்கரைப்பற்று மண்ணில் மிக ஆழமாக முளைத்ததில் வியப்பில்லையல்லவா.
நீண்டுயர்ந்து நிற்கும் பெரியதொரு ஆலமரம். அதில் பல விழுதுகள் அங்கே ஒரு விழுதுதான் இந்த முகமது கனிபாவை 06.12.1959 தனில் ஈன்றெடுத்த அகம்மது லெவ்வை எனும் பெரு விருட்சம்.வாணிபத்தால் மட்டுமல்லஇ கமத்தொழிலிலும் சிறந்து விளங்கிய தனிப்பெரும் குடும்பம் இது. 1985ம் ஆண்டு இறுதிமாதப் பகுதியில் விடுதலைப் புலிகள் பற்றிய கருத்துகளை மக்கள் மனங்களில் விதைப்பதற்காக அம்பாறை மாவட்ட அரசியல் வேலைக்கென்று தேசியத் தலைவர் அவர்களால் யாழ் மண்ணிலிருந்து தென் தமிழீழ மண்ணுக்கு அனுப்பட்டவர்தான் மேஜர் டயஸ்.
“தங்கத் தமிழீழத் தானைத் தலைவனின்” கருத்துகளை மிக உன்னிப்பாக கேட்ட மேஜர் டயஸ் அப்படியே அம்பாறை வாழ் தமிழ் பேசும் இளைஞர்களின் மனங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாறு பற்றிய கருத்துக்ககளை மிக ஆழமாக விதைத்தான்.
முத்தமிழை மிக முதன்மையாகப் பேசியும் அதற்கு விழாவெடுத்தும், கவி, கதைகள் அடங்கிய நூல்கள் பலதை வெளியிடுவதிலும் மிக முக்கிய இடத்தைப் பிடித்திருந்த அந்த அக்கரைப்பற்று மண்ணிலிருந்து விடுதலை வேண்டிப் புறப்பட்ட முஸ்லிம் புலிவீரர்கள் பலர். அதில் முதன்மையானவன்தான் இந்த முகம்மது கனிபா. ஏனென்றால் இவரது சகோதரன் விடுதலைப் புலிகளில் இணைந்து வீரச்சாவைத் தழுவிக் கொண்டதன் பின் தானும் இயக்கத்தில் இனைந்து தனது சகோதரனின் பெயரையே தனக்கு வைக்க வேண்டும் என்று கூறி அதன்படியே செயற்பட்டு வந்தவன் இந்த கனிபா என்னும் பாறுக்
மாண்பில் முஸ்லிம் என்றாலும் மேஜர் டயசின் கனல் கக்கும் கருத்துகளைக் கேட்டு இந்த கதாநாயகன் மேஜர் டயஸ், மேஜர் அன்ரனி, கப்டன் டேவிட் ஐயா, நியூட்டன்,கப்டன் நகுலன் இன்னும் பல விடுதலை வீரர்கள் தனது உம்மா வாப்பா உறவினர்களுக்கு அறிமுகம் செய்துவைத்து இன்னமுதூட்டிப் பொருளுதவிகளும் தன் வாப்பாவால் உதவச் செய்த இஸ்லாமியத் தமிழனிவன்.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதற்கொப்ப இந்த கப்டன் பாறுக்கின் குணாதிசையங்களை நன்கு புரி;ந்துகொண்ட விடுதலைப் புலிவீரர்கள் இவன் தம்பியின் பெயரான பாறுக் எனப் பெயரிட்டனர்.
அதுஇ அம்பாறை கஞ்சிகுடிச்சாறு விடுதலைப் புலிவீரர்களின் பயிற்சிமுகாம், இருந்தாலும் சில புலிவீரர்கள் யாழ் மண்ணை நோக்க வேண்டியிருந்தது. பாறுக் படிப்பிலும் மிக கவனம் செலுத்தியவன். அக்கரைப்பற்று முஸ்லிம் மகாவித்தியாலயம் க.பொ.த.சாதாரணதரம் வரை படித்தவன; பரிச்சைக்காலவேளை இருந்தும் இவனது யணம் யாழ்ப்பாணத்தை நோக்கிச் செல்ல வேண்டியிருந்தது.
யாழ் மண்ணில் முதலாவது பயிற்சிப் பாசறையில் இந்த பாறுக் புகுந்தான். சுருண்டிருக்கும் கொறுக்காய் போன்ற தலைமுடி, பூரண சந்திரனையும் மிஞ்சிவிடுமாப்போன்ற அழகிலும் அழகான வட்டமுகம் கரியவிழிகள், அரும்பு மீசை குறும்புப் பார்வை கம்பீரமான தோற்றம் எத்தனை அழகு எப்படிச் சொல்வது.பயிற்சி என்ன பாராட்டுகள்தான் அதிகம் சோர்வையே காட்டிக் கொள்ளாத சிவந்த மேனி அந்த ஏ.கே 47 துப்பாக்கியை தூக்கிக் கொண்டு சிங்கநடைபோட்டுவரும் அழகைக் கண்டு லெப். கேணல் ராதா அவர்களே பாராட்டிய பைந்தமிழ் வேங்கையன்றோ.
இவனது வீரச் செய்தி கேட்டு மட்டக்களப்பு அம்பாறை மக்கள் தும்பக் கடலில் மூழ்கியது, ஆனாலும் வீரச்சாவுச் செய்தி மட்டக்களப்பு அம்பாறை மண்ணில் குறிப்பாக அக்கரைப்பற்றை எட்டியதும் கப்டன் டேவிட் ஐயாவால் வெளியிட்ட சுவரொட்டிகள் அக்கரைப்பற்று மதிற் சுவர்களை அலங்கரித்ததும் மாவிலைத் தோரணங்களும் வாழை மரங்களும் வீரப்புலிகளின் அரைக்கம்ப கொடிகளும் அக்கரைப்பற்றுவாழ் முஸ்லிம் மக்களின் கண்களைக் குளமாக்கத் தவறவில்லை.
உண்மைதான்! யாழ் மண்ணில் முதலாவது பயிற்சிப் பாசறையை தன் விடாமுயற்சியினால் சிறப்பாகச் செய்து ஒன்பது மாத காலத்துக்குள் முடித்தவன். அன்று நடந்த சிறுசிறு தாக்குதல்களில் கலந்துகொண்டவன். பாறுக் ஒரு முஸ்லிம் இளைஞன் என்று சொல்லாது தன் குடும்ப உறவினன் என்றே அனைவரும் அழைத்தனர். அதைவிட மேலான அன்பையும், பாசத்தையும் அண்ணன் (தலைவர்) மீது பொழிந்தவன் அதனால் தேசியத் தலைவர் அம்பாறை மண்ணைப்பற்றியும் அங்கு போராட்ட நிகழ்வு பற்றியும் வழிமுறைகளைச் சொல்லக் கேட்டுத் தெரிந்து கொண்;டவன்.
யாழ் மண்ணில் தனது போராட்ட வாழ்க்கையை ஆரம்பித்தாலும; மட்டு – அம்பாறையில் இருந்து போராடிய புலிவீரர்கள் இந்த வீரனின் இல்லம் செல்லத் தவறுவதில்லை. அப்படி தவறும் பட்சத்தில் தந்தை அகமது லெவ்வை புலிவீரர்கள் யாரையாவது அக்கரைப்பற்று நகரினுள் கண்டால் உடனே தன் இல்லம் அழைத்துச் சென்று அன்னமிட்டு பல உதவிகளையும் வழங்கி வழியனுப்பத் தவறுவதில்லை. அந்த பாசமழையில் நனைந்த புலிவீரர்கள் யாராக இருந்தாலும் வாப்பா உம்மா தங்கச்சி தம்பி போறன் வாறன் என்று சொல்லிப் புறப்படுவார்கள்
வந்து போய்ப் பழகிச் சென்ற வீரர்களின் வீரச்சாவுச் செய்தி கேட்டாலும் இந்த பைந்தமிழ் உரைக்கும் வாப்பா உம்மாக்களின் கண்களும் குளமாகும். பல களங்களைப் பல முனைகளில் இவன் யாழ் மண்ணில் கண்டாலும் தன் தாய் மண்ணில் காலூன்றி களங்காணப் பல முஸ்லிம் இளைஞர்கள் திரட்ட தங்கத் தலைவனிடம் கேட்டுப் பதில்வரும் நாளையும் பார்த்துக் கிடந்தான். 07.01.1987ம் ஆண்டு காலை பத்து முப்பது மணிபோல் யாழ் கோட்டையில் குடிகொண்டிருந்த சிங்களக் கூலிப் பட்டாளங்கள் யாழ் மண்ணை அழிக்க படைகொண்டு வந்தனர். விடுதலைப் புலிவீரர்கள் எதிர்கொண்டனர். துப்பாக்கி ரவைகளும் எறிகணைகளும்தான் அன்று பொழிந்தது. புலிவீரர்கள் எதிர்த்தனர். எதிரிகளை அழித்தனர். அவன் போட்டுவந்த திட்டத்தினை முறியடித்தனர். பகைவன் கோட்டையை நோக்கி ஓடினான்.
வீறுகொண்ட வேங்கை கப்டன் பாறுக்கின் விரிந்த நெஞ்சிலிருந்து சுதந்திரம் தேடிய குருதி பெருக்கெடுத்தது. “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம” என்று அவனது நாவிலிருந்து வார்த்தைகள் வெளிவந்தன. ஆனால் அந்தக் கப்டன் பாறுக் என்றும் எங்கள் தானைத் தலைவனின் மனங்களில் வாழ்கிறான்.


( இவ்வாக்கத்தின் அம்சங்கள் குறித்து நான் “பொழிப்புரை” எழுத தேவையில்லை. இக்கட்டுரையினை வேறு இணையத்தளத்தில் அல்லது பத்திரிகையில் மீள் பிரசுரம் செய்பவர்கள் அல்லது மொழி பெயர்பவர்கள் தயவுசெய்து கட்டுரையின் மூலத்தை குறிப்பிடவும்-எஸ்.எம்.எம்.பஷீர். . )
– thenee -

புதையலில் கிடைத்த ஐந்தரை கிலோ தங்கத்தினாலான கிரீடம், தங்க மாம்பழம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது









புதையலொன்றில் இருந்து கிடைத்த ஐந்தரைக் கிலோ எடைகொண்ட தங்கத்திலான கிரீடம் மற்றும் தங்க மாம்பழம் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அம்பாறையின் இங்கினியாகலை பிரதேசத்தில் வைத்து வைரங்கள் பதிக்கப்பட்ட தங்கக் கிரீடம் மற்றும் தனியிலையைக் கொண்ட காம்புடனான தங்க மாம்பழம் என்பன உள்ளடங்கிய பிரஸ்தாப தங்கப் புதையல் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஆயினும் அவை சொக்கத்தங்கத்தில் செய்யப்பட்டதா அல்லது தங்க முலாம் பூசப்பட்டதா என்பது குறித்து உறுதிப்படுத்த முடியவில்லை என்பதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

தங்கக் கிரீடமானது ஒரு கிலோகிராமும் நானூற்றி எண்பது கிராம்களும் எடைகொண்டுள்ளது. தங்க மாம்பழம் மூன்றரைக் கிலோகிராம் அளவிலான எடைகொண்டது. தற்போது அவையிரண்டும் பொலிசாரினால் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதுடன், சந்தேகத்தின் பேரில் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்

புலிகளை தோற்கடித்த என்மீது போர்க் குற்றமா'? மேதின ஊர்வலத்தில் மஹிந்த கேள்வி

விடுதலைப் புலிகளைத் தோற்கடித்தமை எவ்வாறு போர்க்குற்றமாகும் என்று இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கேள்வியெழுப்பியுள்ளார். தன்னை மின்சார நாற்காலிக்கு அனுப்ப சிலர் முயற்சிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தலைநகர் கொழும்பில் மாநகரசபை மைதானத்தில் நடைபெற்ற ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு அரசாங்கத்தின் மேதின நிகழ்வில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். 

தற்கொலை செய்துகொள்ள தயாராக இருந்த ஒரு சந்ததிக்கு வாழ வழி ஏற்படுத்திக்கொடுத்தமை மனித உரிமை மீறலாகுமா என்றும் மகிந்த ராஜபக்ஷ மேதின உரையில் கேள்வியெழுப்பினார். இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதாக அறிக்கை தயாரிப்பவர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டுமென்றும் ஜனாதிபதி கூறினார்.

நாட்டில் மனித உரிமை மீறல் இடம்பெற்றுள்ளதாக பொய்க்குற்றச்சாட்டு கொண்டுவருவதன் மூலம் நாட்டு மக்கள் மத்தியில் மீண்டும் குழப்பம் ஏற்படுத்த முனைய வேண்டாம் என்றும் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.  வடக்கு கிழக்கில் மட்டுமன்றி நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணிகளை இதன் மூலம் சீர்குலைக்க வேண்டாம் எனவும் அவர் தனது உரையில் தெரிவித்துள்ளார். 

இதேவேளை, தனியார் துறையினர் மற்றும் வெளிநாடுகளில் தொழில் புரிவோருக்காக விசேட ஓய்வூதிய திட்டமொன்றைக் கொண்டுவரும் அரசாங்கத்தின் முயற்சியை எந்தத் தடைகள் வந்தாலும் நிறைவேற்றியேத் தீருவேன் என்றும் ஐனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது மே தினச் செய்தியில் சூளுரைத்தார்.

எதிரியாகட்டும் காங்கிரஸ்: தி.மு.க.,வினரிடம் பெருக்கெடுக்கும் ஆத்திரம்

தேர்தலுக்கு முன், தி.மு.க., கூட்டணியில் சட்டசபை தொகுதிப் பங்கீடு பேச்சு துவங்கிய போது, தமிழகத்தில், தொண்டர் செல்வாக்கு இல்லாத காங்கிரஸ், அதன் தகுதிக்கு மீறி, சீட் கேட்கிறது என்ற கோபம் தி.மு.க.,வுக்கு ஏற்பட்டது. "காங்கிரஸ் கேட்கும் தொகுதிகளைக் கொடுத்தால், அக்கட்சியால் வெற்றி பெற முடியாது. காங்கிரஸ் போட்டியிடும் இடங்கள், எதிரணிக்கு சாதகமாகி விடும்' என்று, காங்கிரஸ் கேட்கும் இடங்களை கொடுக்காமல், "மந்திரி சபையிலிருந்து வெளியேறுகிறோம்' என்று வெளிப்படையாக மிரட்டும் அளவுக்கு, தி.மு.க., சென்றது.

தி.மு.க., தலைமையின் முடிவை, பெரும்பாலான, தி.மு.க.,வினர் ஆதரித்தனர். "காங்கிரசின் மிரட்டலுக்கு பயப்பட வேண்டாம். "மிசா' காலத்தை எல்லாம் கடந்து தான், தி.மு.க., வளர்ந்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி இல்லாமல், தேர்தலை சந்திப்போம்' என்று தலைமைக்கு தெரிவித்தனர்.இதே மனநிலை, தேர்தலிலும் வெளிப்பட்டது. வேட்பாளர் தேர்வு, தங்கபாலு வேட்பாளர் ஆன விதம் ஆகியன, தி.மு.க.,வின் கோபத்தை மேலும் அதிகரித்தன. தி.மு.க.,வினர் எதிர்பார்த்தது போலவே, தேர்தல் வேலைகளிலும் காங்கிரஸ் பின்தங்கியே இருந்தது.

காங்கிரஸ் வேட்பாளர் நிறுத்தப்பட்ட தொகுதிகளில் கூட, அனைத்து வேலைகளையும் தி.மு.க.,வே இழுத்துப் போட்டு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதை, கட்சித் தலைமைக்கு அறிக்கையாகவே, தி.மு.க., நிர்வாகிகள் கொடுத்துள்ளனர். "காங்கிரசால், நமக்கு சுமை தான் அதிகரித்துள்ளது. இவர்களைத் தூக்கிக் கொண்டு செல்வது இயலாத காரியம். இவர்களால் நமக்கு பாதகமே ஏற்படும். எனவே, காங்கிரஸ் உறவு அறவே வேண்டாம்' என்று, அந்த அறிக்கையில் கூறியுள்ளதாகத் தெரிகிறது.இந்த கோபத்தை மேலும் அதிகரிப்பதாக, "ஸ்பெக்ட்ரம்' இரண்டாவது குற்றப்பத்திரிகை வந்துவிட்டது. இந்த விவகாரத்திற்குப் பின், தி.மு.க.,வின் பல மட்டங்களில் இருந்து, தலைமைக்கு நிர்பந்தங்கள் அதிகரித்துள்ளன.

கீழ்மட்டத்தில் இருந்து தலைமைக்கு தெரிவிக்கப்படும் கருத்துக்கள்: காங்கிரசை ஆட்சி பீடத்துக்கு நாம் கொண்டு வந்தோம். எந்த நெருக்கடியும் கொடுக்காமல் ஐந்தாண்டுகள் ஆட்சி செய்ய உறுதுணையாக இருந்தோம். இரண்டாவது முறையாக காங்கிரஸ் ஆட்சி வர, தமிழகத்தில் பெரும்பாலான எம்.பி., தொகுதிகளை வென்று கொடுத்தோம். அதற்கு, தமிழகத்தில், நாம் நிறைவேற்றிய நலத் திட்டங்கள் தான் காரணம். சென்ற முறை போல, 40க்கு, 40 தொகுதிகளை வெல்ல முடியாததற்கும் காங்கிரஸ் தான் காரணம். கூட்டணியிலிருந்து, பா.ம.க., வெளியேறிய போதும், அவர்கள் நமக்கு எதிராக போட்டியிட்ட இடங்களை கைப்பற்றி, அவர்களை மண்ணைக் கவ்வச் செய்தோம். ஆனால், காங்கிரசின் தலைவர்கள் தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மணிசங்கர் அய்யர், கார்வேந்தன், பிரபு உள்ளிட்ட அனைவரும் தோற்றுப் போயினர். சிதம்பரம் கூட மிகச் சொற்ப ஓட்டுகளில் தான் வெற்றி பெற்றார்.இதற்கெல்லாம் காங்கிரஸ் தான் காரணம். அவர்களுக்கு தமிழக மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லை.

ஆனால், "ஸ்பெக்ட்ரத்தை' வைத்து மிரட்டுகின்றனர். மத்தியில் தொடரும் ஆட்சிக்கு நாம் அவசியம் என்பதை மறந்து விட்டு, அவர்கள் செயல்படுவதை ஏற்க முடியாது. "ஸ்பெக்ட்ரம்' விவகாரத்தில் காங்கிரசுக்கு தெரியாமல் எதுவும் நடக்கவில்லை. நமக்கு, "செக்' வைப்பதாக நினைத்துக் கொண்டே அவர்களுக்கே குழிபறித்துக் கொள்கின்றனர். எப்படியாவது தமிழகத்தில் ஆட்சியில் பங்கு வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில், அவர்கள் காய் நகர்த்துகின்றனர். அவர்களுக்கு, ஆட்சியில் பங்கு கொடுத்தால், ஆட்சி முடியும் வரை நமக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டுதான் இருப்பர். நம்மைப் போல் அவர்கள் நட்புடன் இருக்க மாட்டார்கள். அவர்களால் தான் இந்த ஆட்சியே நடப்பது போல தோற்றத்தை உருவாக்குவர். பெரியண்ணன் மனோபாவத்தில் அவர்களது செயல்பாடு இருக்கும்; இதற்கெல்லாம் இடம் கொடுக்கக் கூடாது."ஸ்பெக்ட்ரம்' விவகாரத்தில் அவர்களால் நாம் பட்ட பாடு போதும். அவர்கள் நமக்கு நண்பனாக இருந்து தொந்தரவு தருவதை விட, எதிரியாக இருந்து அவர்களை நாம் சந்திப்பதே சரியாக இருக்கும். காங்கிரஸ் எதிர்ப்பில் தான், தி.மு.க., உருவானது; வளர்ந்தது. இதை, அவர்களுக்கு திரும்பவும் நினைவுபடுத்த வேண்டிய நிலை உருவாகி உள்ளது.

நம் துணை அவர்களுக்கு தான் அவசியம். அவர்களது உறவை துண்டித்துக் கொள்வது தான் சரி. ஈழப் பிரச்னையில், துரோகம் இழைத்து விட்டோம் என்ற கெட்ட பெயர், இவர்களால் ஏற்பட்டுள்ளது. அதைப் போக்க இப்போதைக்கு முடியாது. இருந்தும், இலங்கை அரசுக்கு இன்னும் மத்திய அரசு ஆதரவாகத் தான் இருக்கிறது.போர் குற்றங்களை இலங்கை அரசு செய்துள்ளது என்று, ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சாட்டியுள்ளது. சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை அரசை குற்றவாளியாக விசாரிக்க வேண்டும் என்று, உலக நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையிலும், மத்திய அரசு இன்னும் வாய் திறக்காமல், இலங்கைக்கு ஆதரவுக் கரம் நீட்டி வருகிறது. இனியும், காங்கிரசுடனான உறவைத் தொடர்வதில் அர்த்தம் இல்லை.இவ்வாறு, தி.மு.க., தொண்டர்கள் தலைமைக்கு வலியுறுத்தி வருகின்றனர்.

Sai baba trust தலைவர் தேர்வு பிரச்சினை: சாய்பாபா அறக்கட்டளை நிர்வாகிகளிடையே மோதல்

Sai Baba Passed Awayதலைவர் தேர்வு பிரச்சினை: சாய்பாபா அறக்கட்டளை நிர்வாகிகளிடையே மோதல்
தலைவரை தேர்வு செய்யும் பிரச்சினையில், சாய்பாபா அறக்கட்டளை நிர்வாகிகளிடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. ஸ்ரீ சத்ய சாய் சென்டிரல் டிரஸ்ட் அறக்கட்டளைக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. சத்ய சாய்பாபா மரணம் அடைந்ததை தொடர்ந்து, அந்த சொத்துக்களை நிர்வகிப்பது, வரவு-செலவு அதிகாரத்தை தீர்மானிப்பது தொடர்பாக அறக்கட்டளையின் உறுப்பினர்கள் ஆலோசித்து வருகிறார்கள். அறக்கட்டளையில் வேணு சீனிவாசன், பகவதி, நாகானந்த், சக்கரவர்த்தி, எஸ்.வி.கிரி, இந்துலால்ஷா மற்றும் சாய்பாபாவின் சகோதரர் மகன் ரத்னாகர் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
சாய்பாபாவின மறைவை தொடர்ந்து, அறக்கட்டளையின் புதிய தலைவரை தேர்ந்து எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.சாய்பாபாவின் சகோதரர் மகன் ரத்னாகர், சாய்பாபாவின் நெருங்கிய சீடரான சத்யஜித் ஆகியோருக்கு இடையேதான் தலைவர் பதவியை பிடிப்பதில் கடும் போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அறக்கட்டளையின் உறுப்பினர்கள் கூட்டம் நேற்று புட்டபர்த்தியில் நடைபெற்றது. ஆனால் தலைவரை தேர்வு செய்யும் பிரச்சினை தொடர்பாக உறுப்பினர்களிடையே மோதல் ஏற்பட்டதாலும், ஒருமித்த கருத்து ஏற்படாததாலும் நேற்றைய கூட்டம் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே, சத்யஜித்தை சமாதானப்படுத்தும் முயற்சியில் அறக்கட்டளை நிர்வாகிகள் ஈடுபட்டு உள்ளனர். அவருக்கு, கடந்த ஆண்டில் தொடங்கப்பட்ட ஸ்ரீ சத்ய சாய் வாகினி டிரஸ்ட் பொறுப்பை ஒப்படைக்க அவர்கள் தீர்மானித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சத்யஜித் எந்த பதவியையும் விரும்பவில்லை என்றும், அறக்கட்டளை நிர்வாகிகள் சிலர் அவருக்கு இந்த பொறுப்பை வழங்க முன்வந்து இருப்பதாக பிரசாந்தி நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த ஸ்ரீ சத்ய சாய் வாகினி டிரஸ்ட் இந்தியா முழுவதும் 99 பள்ளிக்கூடங்களையும், 33 நாடுகளில் உள்ள தலா ஒரு பள்ளிக்கூடத்தையும் நிர்வகித்து வருகிறது.
சாய்பாபா அறக்கட்டளைக்கு உள்ள சொத்துக்களின் மதிப்பு பற்றி மாறுபட்ட தகவல்கள் வெளியாகி வருவதால், சொத்துக்கள் பற்றிய தஸ்தாவேஜுகளை ஐகோர்ட்டிலோ அல்லது சுப்ரீம் கோர்ட்டிலோ தாக்கல் செய்வது பற்றி அதன் நிர்வாகிகள் தீவிரமாக பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

அப்படி தாக்கல் செய்து விட்டால் அந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும், பொதுமக்களுக்கு பகிரங்கமாக தெரிவிக்க வேண்டிய அவசியம் ஏற்படாது என்றும் அவர்கள் கருதுவதாக தெரிகிறது.

ஞாயிறு, 1 மே, 2011

ரசிகர் மன்றங்களைக் கலைத்தார் அஜித்

தன் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் ரசிகர் மன்றங்களை கலைப்பதாக அறிவித்தார் நடிகர் அஜித். தனிப்பட்ட கருத்துகளுக்காக நற்பணி இயக்கத்தை பயன்படுத்துவது எனது எண்ண ஓட்டத்துக்கு உகந்ததாக இல்லை என ரசிகர் மன்ற கலைப்புக்கு காரணமும் தெரிவித்துள்ளார்.  அவரது 40-வது பிறந்தநாள் மே 1-ஆம் தேதி வருகிறது. இதையொட்டி வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:  இத்தனை நாள் திரைப் பயணத்தில் எனக்கு ஊக்கமும் ஆக்கமும் தந்த அனைவருக்கும் நன்றி. என்னை நீண்ட நாள்களாகவே சிந்திக்க வைத்த கருத்தை சொல்ல இது உகந்த நேரம் என நினைக்கிறேன். நான் என்றுமே ரசிகர்களை சுயநலத்துக்காகப் பயன்படுத்தியதில்லை. என் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புக்காக அவர்களை கேடயமாக பயன்படுத்திக் கொண்டதும் இல்லை.  என் படங்களின் தரம் குறித்து அவர்களுக்கு விமர்சிக்க உரிமை உண்டு. என் படத்தை ரசிக்கும் அனைவரும் என் ரசிகர்கள் இல்லை என்பதை நான் அறிவேன். ரசிகர்களில் நான் வித்தியாசங்களை பார்ப்பதில்லை. கோஷ்டி பூசல், ஒற்றுமையின்மை, தலைமையின் கட்டுப்பாட்டுக்கு இயங்காமல் தன்னிச்சையாக செயல்படுவது, தங்களது தனிப்பட்ட அரசியல் கருத்துக்காக நற்பணி இயக்கத்தைப் பயன்படுத்துவது என்ற பல்வேறு காரணங்கள் என் எண்ண ஒட்டத்துக்கு உகந்ததாக இல்லை.  சமுதாய பணிகளில் ஈடுபடுவது கூட யாருக்கும் இடையூறு இல்லாமல் குறிப்பாக தங்களது குடும்பத்துக்கு சுமையாக இல்லாமல் செய்ய வேண்டும் என்பதையே நான் வலியுறுத்தி வருகிறேன். நலத் திட்டங்கள் செய்வதற்கு இயக்கம் என்ற அமைப்பு வேண்டாம். நல் உள்ளமும் எண்ணமும் போதும் என்பதே என் கருத்து.  அதனால் இன்று முதல் என் தலைமையின் கீழ் கட்டுப்பட்டு வந்த அஜித்குமார் நற்பணி இயக்கத்தை கலைக்கிறேன். மாறி வரும் காலக்கட்டத்தில் பொது மக்கள் எல்லோரையும் உன்னிப்பாக கவனிக்கிறார்கள். அதனால் திரைப்படத்துக்கு அப்பாற்பட்டு பொது மக்களின் கண்ணோட்டத்தில் கண்ணியமாக தென்பட்டால் மட்டுமே ஒரு நடிகனுக்கும் அவருடைய ரசிகர்களுக்கும் ஒரு கௌரவம் கிட்டும் என்பதே என் நம்பிக்கை. அந்த கௌரவமும், எனது இந்த முடிவுக்கு ஆதரவு அளிக்கும் எனது உண்மையான ரசிகர்களின் கருத்தும் மட்டுமே என் பிறந்த நாள் பரிசாகும் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார் நடிகர் அஜித்.  கடந்த ஆண்டின் தொடக்கத்தில் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு "பெப்ஸி' அமைப்புகள் சார்பில் நடத்தப்பட்ட "பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா'வில் கலந்து கொண்ட அஜித், திரைப்பட அமைப்புகள் தன்னிச்சையாக செயல்படுவது குறித்து வெளிப்படையாகப் பேசினார்.  ""ஒவ்வொரு பாராட்டு விழாவின் போதும் கலந்து கொள்ளுமாறு சிலர் மிரட்டுகிறார்கள். கலந்து கொள்ளவில்லை என்றால் தமிழன் இல்லை என்று பச்சை குத்துகிறார்கள். அரசியலுக்கு வரவும் விட மாட்டர்கள். வந்தாலும் மிரட்டுகிறார்கள்'' என விழாவில் அவர் பேசிய பேச்சுக்கு வார்த்தைக்கு வார்த்தைக்கு அரங்கம் அதிரும் கைத்தட்டல். ரஜினியே எழுந்து நின்று கைத்தட்டும் அளவுக்கு அவர் பேச்சு அமைந்தது. அதன் பின் பொது விழாக்களில் கலந்து கொள்வதை அஜித் தவிர்த்து வந்தார். இப்போது தன் 50-வது படமான "மங்காத்தா' படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் அஜித்.

இலங்கைக்கு எதிரான செயற்பாடுகளில் தொடர்பில்லாதவர்களுக்கு மட்டுமே இனிமேல் இரட்டைக் குடியுரிமை


இலங்கைக்கு எதிரான செயற்பாடுகளில் தொடர்பில்லாதவர்களுக்கு மட்டுமே இனிவரும் காலங்களில் இரட்டைக் குடியுரிமை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சுமார் முப்பத்தி ஐயாயிரம் பேருக்கு மேல் தற்போதைக்கு இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ள நிலையில் அண்மைக்காலமாக அரசாங்கம் இரட்டைக்குடியுரிமை வழங்கும் செயற்பாட்டைத் தற்காலிகமாக இடைநிறுத்தி வைத்துள்ளது.
மேலும் 1987ம் ஆண்டின் அரசியலமைப்பின் பிரகாரம் இரட்டைக்குடியுரிமை அந்தஸ்தை பாதுகாப்பு அமைச்சு தனக்கு நினைத்த நேரத்தில் இரத்துச் செய்ய முடியும் என்ற விதியும் உள்ளடக்கப்பட்டுள்ளதால் இதுவரை அதனைப் பெற்றுக்கொண்டவர்கள் எதிர்காலத்தில் தமது இரட்டைக் குடியுரிமை அந்தஸ்தை இழக்கும் நிலையேற்படவும் கூடும் என்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் எதிர்காலத்தில் வெளிநாடுகளில் வாழும் இலங்கையருக்கு இரட்டைக்குடியுரிமை வழங்கப்படும்போது அவர்களின் கடந்த கால செயற்பாடுகளில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான செயற்பாடுகளில் பங்குபற்றியிருக்காமை முக்கிய நிபந்தனையாக கவனத்திற்கொள்ளப்படவுள்ளது.
அத்துடன் இலங்கை அரசாங்கத்தின் கொள்கைகளுடன் இணங்கிப் போகும், வெளிநாடுகளில் இருந்தவண்ணம் தாய்நாட்டின் பிரசாரங்களுக்கு உதவியளிக்கும் நபர்களுக்கு மட்டுமே இரட்டைக் குடியுரிமை வழங்கப்படும் என்றும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஊர்காவற்றுறை வயோதிப தாய் கம்பியால் நெரித்துக் கொலை; இரு மகன்களும் கைது

யாழ். ஊர்காவற்றுறை பகுதியில் வயோதிப தாயொருவரை கொலை செய்ததாக தெரிவிக்கப்படும் சந்தேகத்தின் பேரில் அந்தத் தாயின் இரு மகன்களும் நேற்றிரவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தங்களது வயோதிப தாயை கழுத்தில் கம்பியால் நெரித்து பாழடைந்த கிணற்றுக்குள் வீசிய சம்பவமொன்று யாழ். ஊர்காவற்றுறை இரண்டாம் வட்டாரத்தில் கடந்த 26ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. விஸ்வலிங்கம் இராசம்மா (வயது 85) என்ற வயோதிப தாயே இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் ஆவர். இவர்கள் இருவரும் குறித்த தாயை கொலை செய்து விட்டு ஊர்காவற்றுறை பகுதியிலுள்ள வீடொன்றில் மறைந்திருந்தபோது கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக சந்தேக நபர்கள் இருவரிடமும் ஊர்காவற்றுறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

3 நிமிஷம்... 3 லட்சம்! - இது தமன்னா ரேட்!!


மூணு நிமிஷன்தான் ஆடுவேன். ஆனா மூணு லட்சம் ரேட் ஆகும் பரவாயில்லையா/ என்று கேட்டு அதிர வைக்கிறாராம் நடிகை தமன்னா.


தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகை தமன்னாவின் சம்பளம், நாட்டின் விலைவாசியை விட படுவேகமாக ஏறிக் கொண்டே போகிறது.

படத்துக்கான சம்பளத்தை இப்போது கோடிகளில் கேட்கும் தமன்னா, நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் பெரிய தொகை வேண்டும் என்கிறாராம். நிகழ்ச்சிகளில் மேடையில் 3 நிமிடம் பாட ரூ.3 லட்சம் சம்பளம் வாங்கிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தெலுங் கில் '100 சதவீதம் லவ்' என்ற படத்தில் தமன்னாவும் நாக சைதன்யாவும் ஜோடியாக நடிக்கின்றனர். இதன் பாடல் சி.டி. வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடந்தது. அதற்காக சிறப்பு மேடை அமைத்திருந்தனர். ஹீரோ நாக சைதன்யா விழாவுக்கு வரவில்லை. தமன்னா மட்டும் பங்கேற்றார்.

மேடையில் ஒரு பாட்டுக்கு ஆடும்படி தமன்னாவிடம் கேட்டு கொண்டனர். தமன்னாவும் ஆடினார். 3 நிமிடமே நடந்த இந்த நடன நிகழ்ச்சிக்கு தமன்னா ரூ.3 லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டாராம்!

படம் தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்க நடிகர் நடிகைகள் பணம் வாங்கக் கூடாது என்று கூறிவரும் நிலையில் தமன்னா 3 நிமிஷத்துக்கு ரூ 3 லட்சம் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
English summary
Tamanna, leading actress in Tamil and Telugu has charged Rs 3 lakh for a 3 minute song performance at an audio release function held recently in Hyderabad.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் போட்டிருந்த சதித்திட்டம் கொஞ்சம் கொஞ்சமா

அம்பலமாயிடிச்சின்னு அரசியல் நடுநிலையாளர்கள் சொல்றாங்கப்பா...

காங்கிரசோட ப்ளான் இதுதான்ங்கிறது எங்களைப் போன்ற கட்சிக்காரங்களுக்கு முன்னாடியே தெரியும்னு மத்திய அரசில் முக்கிய பொறுப்பு வகிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரின் வாரிசு தனக்கு நெருக்கமான வட்டாரத்தில் சொல்லிக்கிட்டிருக்காராம். 6 மாசத்துக்கு முன்னாடியே தமிழ்நாட்டு அரசியல் பிரமுகர்களோடு ராகுல் காந்தி டிஸ்கஷன் பண்ணிக்கிட்டிருந்தப்ப, ஜெ.வை எந்த நேரத்திலும் நம்மால் கீழே தள்ளி, அ.தி.மு.க.வை வீழ்த்திவிட முடியும். ஆனா, தி.மு.க.ங்கிறது வலுவான அமைப்பா இருக்கு. அதை முதலில் பலமிழக்கச் செய்துவிட்டால், அதற்கப்புறம் அ.தி.மு.க.வை ஈஸியா ஹேன்டில் பண்ணிடலாம்னு சொல்லியிருந்தாராம்

தி.மு.க., உயர்நிலை செயல் திட்டக் குழுவில் நடந்தது என்ன?

முதல்வர் கருணாநிதியின், 70 வயது பொது வாழ்க்கையில், ஸ்பெக்ட்ரம் விவகாரம் போல ஒரு நெருக்கடியை அவர் சந்தித்ததில்லை. ஸ்பெக்ட்ரம் வழக்கில் இரண்டாவது குற்றப்பத்திகை தாக்கல் செய்யும் வரை தனது குடும்பத்தினரின் பெயர் அதில் சேர்க்கப்படாது என்று நம்பிக்கையில் அவர் இருந்தார்.

அதற்கு முன்தினம், தலைமைச் செயலகத்தில், நிருபர்கள் சந்திப்பின் போது, ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழியின் பெயர் சேர்க்கப்படுமா என்று ஒரு பெண் நிருபர் கேட்டதற்கு, "ஒரு பெண்ணாக இருந்து இதயம் இல்லாம் இப்படி கேட்கலாமா?' என்று கருணாநிதி கூறினார். கனிமொழியின் பெயர் சேர்க்கப்படுமா என்று கேள்வி கேட்பது கூட அவர் மனதை புண்படுத்துவதாக நினைத்தார். ஆனால், ஸ்பெக்ட்ரம் வழக்கில் மனைவி தயாளுவின் பெயர், அரசு சாட்சியாகவும், கனிமொழியின் பெயர், குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டதில் நிலை குலைந்து விட்டார். காங்கிரசின் மீது அவருக்கு கடும் கோபம் ஏற்பட்டது. கூட்டணி தேவையில்லை என்று முடிவு செய்யும் அளவுக்குப் போனார்.

அவருக்கு ஏற்பட்ட கோபத்தை ஸ்டாலின் போன்றவர்கள் எதிர்பார்க்கவில்லை. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, அப்பாவை சாமாதனப்படுத்தி, "கோபத்தில் அவசர முடிவை எடுத்து விடாதீர்கள்' என்று கூறும் நிலை ஸ்டாலினுக்கு ஏற்பட்டது. இருந்தாலும், கோபத்தை காங்கிரசுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்பதில் கருணாநிதி உறுதியாக இருந்தார். அது ஒரு புறம் இருக்க, மகளை தைரியப்படுத்துவதில் அதிகம் செலவிட்டார். இதை, உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தில் அவர் தெரிவித்தார். "இந்த கூட்டத்துக்கு வருவதற்ரு கனிமொழி தயக்கம் காட்டினார். அதனால், நானே நேரில் சென்று, அவரை அழைத்து வந்தேன்' என்றார். மேலும், குடும்பத்தினர், "படாது பாடுபடுகின்றனர்' என்று வெளிப்படையாக் கூறினார்.

ஸ்பெக்ட்ரம் வழக்கு இதற்கு முழுக் காரணமாக இருந்தாலும், தனது குடும்பத்தில், ஸ்டாலினைத் தவிர, தயாளு, அழகிரி குடும்பத்தினர் கனிமொழியின் வீட்டுக்கு வந்து ஆறுதலாக இல்லாமல் இருந்தது பெரும் மன வருத்தத்தை அவருக்கு ஏற்படுத்தியது. குடும்பத்துக்கு ஏற்பட்ட நெருக்கடிக்காக, கட்சியைப் பயன்படுத்துகிறோம் என்று பேசிவிடக் கூடாது என்றும் கருதினார். அதை, "எனக்குள்ள சங்கடத்தை பெரிதுபடுத்தி, என்றைக்கும், யாருக்கும் கட்சியை காட்டிக் கொடுக்க மாட்டேன்' என்று உயர்நிலை செயல் திட்டக் கூட்டத்தில் தெரிவித்தார். மேலும், கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் கருத்தைப் பெறுவதில் அவர் கவனமாக இருந்தார். உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டத்தில் இதை கவனிக்க முடிந்தது. கூட்டம் கூடியதும், சிறிது நேரம் யாரும் பேசவில்லை. இந்த மவுனத்தைக் கலைக்க, "யாராவது பேசுங்க' என்று அவரே முன்வந்தார்.

"காரோட்டி' என்று அழைக்கப்படும் முன்னாள் அமைச்சர் கண்ணப்பன், கூட்டத்தின் மவுனத்தைக் கலைத்துப் பேசினார். இவரைத் தொடர்ந்து நெல்லை மேயர் ஏ.எல்.சுப்ரமணியம் பேசினார். "வழக்கை எளிதில் வென்றுவிடலாம். குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள பிரிவுகள் வலுவாக இல்லை' என்றார். இது, கருணாநிதிக்கு தைரியம் கொடுத்தது. ஆனால், அழகிரி போன்ற குடும்ப உறுப்பினர்கள் வாய் திறக்காமல் இருந்தது அவருக்கு சங்கடத்தை அதிகப்படுத்தியது. கட்சியினர் கொடுத்த தைரியத்தால், கொஞ்சம் தெம்பானாலும், காங்கிரசின் மீதான அவரது கோபம் பதிலடி கொடுக்காமல் போகாது என்பதை தெளிவாகத் தெரிந்தது. "தனக்கு வந்த சிக்கலை சட்டரீதியாக சந்தித்து வெளிவருவேன்' என்று தீர்மானமாக அதைத் தெரிவித்தார். கூட்டம் முடிந்து, அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் நிருபர்களிடம் சகஜமாக பேசிக்கொண்டு இருந்தபோது, "தலைவரின் மனநிலை எப்படி இருக்கிறது' என்று கேட்டபோது, கட்டை விரலை உயர்த்தி நாங்கெல்லாம் இருக்கும்போது அவர், "கிங்' என்றார்.

யாழ்.பல்கலை மாணவர் பகிஷ்கரிப்பு துணைவேந்தர் விளக்கமளிப்பு

யாழ்.பல்கலை மாணவர் பகிஷ்கரிப்பு துணைவேந்தர் விளக்கமளிப்பு
vasanthiயாழ் .பல்கலைக்கழகத்தில் நேற்று மாணவர்கள் நடத்திய பகிஷ்கரிப்பு போராட்டம் குறித்து யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரத்தினம் நிலைமைகளை விளக்கும் வகையில் செய்திக் குறிப்பொன்றை இன்று சனிக்கிழமை ஊடகங்களுக்கு விடுத்துள்ளார்.அச்செய்திக் குறிப்பில்,  '29.04.2011 ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சிலரால் பகிஷ்கரிப்புப் போராட்டம் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி நடத்தப்பட்டது. இது தொடர்பில் பல்கலைக்கழக சபா மண்டபத்தில் துணை வேந்தர், பீடாதிபதிகள் மற்றும் ஒழுக்காற்று அதிகாரிகள் முன்னிலையில் மாணவர் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் உரிய முன்னறிவித்தல் இன்றி பல்கலைக்கழக சட்டதிட்டங்களுக்கு முரணான விதத்தில் மறியலில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றம் என்பது எடுத்துரைக்கப்பட்டது. பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் கல்விசார், கல்விசாரா உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை மேற்கொள்ள வருவதற்கு தடைகளை ஏற்படுத்தியிருந்தமை மிகவும் பாரதூரமான குற்றம் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது. பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்திற்கு பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படாமையே தமது போராட்டத்திற்கான பிரதான காரணம் என மாணவர் பிரதிநிதிகள் கூறியதை ஏற்றுக் கொண்டு எதிர்வரும் 06.05.2011 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தேர்தல் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. மாணவர்கள் தமது கோரிக்கைகளை உரிய முறையிலும் ஒழுக்க நடைமுறைகளுக்கு அமைவாகவும் பல்கலைக்கழக மாணவர் என்ற ரீதியில் சமூகத்திற்கு முன்மாதிரியான முறையிலும் முன்வைக்க வேண்டும் என்றும் அவற்றை தகுந்த முறையில் பரிசீலித்து உரிய முறையில் நிறைவேற்றுவதற்கு பல்கலைக் கழக நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் பீடங்களின் கல்விச் செயற்பாடுகள் வழமைபோல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.' எனக் குறிப்பிடப்பட்டுள்து. இவ் ஊடக அறிக்கையில் யாழ்.ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம் எதனையும் அவர் குறிப்பிட வில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கை அகதிகள் இந்தியாவில் உண்ணாவிரம்

இலங்கை அகதிகள் இந்தியாவில் உண்ணாவிரம்
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் 27 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அகதிகள் 40 பேர் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் தங்க வைக்கப்படுள்ளனர். தங்கள் மீதுள்ள வழக்குகளை விரைந்து முடித்து தங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ வைக்கக்கோரி கடந்த புதன்கிழமை 17 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர். அவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் பலன் ஏதும் இல்லாத நிலையில் கடந்த வியாழக்கிழமை மேலும் 10 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் 27 இலங்கை அகதிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இந்திய ஊடகங்கள் கூறியுள்ளன.

எஸ்.சபாலிங்கம் அவர்களின் 17 ஆவது நினைவு தினம்

எஸ்.சபாலிங்கம் அவர்களின் 17 ஆவது நினைவு தினம்
sabalingam1பிரான்சில்  விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல அரசியல் விமர்சகரும் மூத்த போராளியும் புலம்பெயர் தேசங்களில் தொடர்ந்து நடைபெற்றுவரும் இலக்கியச் சந்திப்புக்களின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவருமான எஸ்.சபாலிங்கம் அவர்களின் 17 ஆவது நினைவு தினம் இன்று பாரிஸிலுள்ள அவரது நண்பர்களால் நினைவுகூரப்படுகின்றது. பாரிஸ் நகரின் புறநகர்ப்பகுதியான கார்ஜ் லே கோணேஸ் நகரிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து  1994ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி விடுதலைப் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் ஆசியா பதிப்பகம் மூலம் பல நூல்களை வெளியிட்டு வந்த வேளையில் தமிழ் இளைஞர் பேரவையின் ஸ்தாபகரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரும் தமிழீழ விடுதலைப் போராட்ட ஆரம்பகால முக்கியஸ்தருமான திரு.சி.புஸ்பராசா அவர்களால் பின்னாளில் வெளியிடப்பட்ட ஈழவிடுதலைப் போராட்டத்தில் எனது சாட்சியம் என்ற நூலை ஆசியா பதிப்பகத்தின் மூலம் 1994 ஆம் ஆண்டு வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட தருணத்திலேயே விடுதலைப் புலிகளால் இந்தக் கொலை நிகழ்த்தப்பட்டது என நம்பப்படுகின்றது. இவர் பிரான்சில் வாழ்ந்த காலத்தில் மனித உரிமை அமைப்புக்களுடன் தொடர்புகளை பேணி இருந்தார். அந்த வகையில் யாழ். பல்கலைக்கழக மாணவியும்  கவிஞரும் கவிதைக்காக சர்வதேச விருதைப் பெற்றவருமான செல்வி விடுதலைப்புலிகளால் கடத்தப்பட்டு காணாமற் செய்யப்பட்டது தொடர்பாகவும் மற்றும்  விடுதலைப் புலிகளின் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாகவும் உலகிலுள்ள மனித உரிமை அமைப்புக்களுக்கு அறிக்கைகளை சமர்ப்பித்திருந்த காரணத்தால் விடுதலைப்புலிகள் இவர் மீது சீற்றம் கொண்டிருந்தனர் ஐரோப்பிய நாடுகளில் விடுதலைப் புலிகள் நடத்திய முதலாவது படுகொலை இது என்பது குறிப்பிடத்தக்கது.