கொச்சி:நாட்டிலேயே தனி நபர் வருமானத்தில், முதல் இடத்தில் இருக்கும் கேரள மாநிலத்திலும், அரசியல் கட்சி தலைவர்கள் போட்டி போட்டு கொண்டு, "ஒரு கிலோ அரிசி 1 ரூபாய்க்கு தருகிறோம், 2 ரூபாய்க்கு தருகிறோம்' என, அறிவித்து வருகின்றனர்.கேரளாவில் ஆளும் இடதுசாரி கூட்டணி, அரசு வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பவர்களுக்கு ஒரு கிலோ அரிசி, 2 ரூபாய் வீதம், 25 கிலோ அரிசி திட்டத்தை கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகப்படுத்தியது. இது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியின் கண்களை உறுத்தியது. "ஓட்டுகளை கவரவே இது போல் ஆளும் கட்சி அறிவித்துள்ளது' என்று குற்றம்சாட்டினர்.
இதை எதிர்த்து தேர்தல் கமிஷனும் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது."தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பு அறிவிக்கப்பட்ட திட்டம் இது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்' என்று இடதுசாரி எம்.எல்.ஏ., மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து தேர்தல் கமிஷன் சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.இந்நிலையில், ஆளும் கட்சியை வசைபாடிய எதிர்க்கட்சி ஒரு கிலோ அரிசி, ஒரு ரூபாய் வீதம், 25 கிலோ அரிசி என்று தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளது. "குறைந்த விலையில் அரிசி விற்க, கேரளா ஒன்றும் ஏழ்மை மாநிலம் கிடையாது' என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.
இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம், நாட்டிலேயே தனி நபர் வருமானத்தில், கேரளா முதல் இடத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளது. 2009ம் ஆண்டு கணக்கின்படி, கேரளாவில் தனி நபர் வருமானம் 63 ஆயிரம். இரண்டாம் இடத்தில் உள்ள டில்லியில், இது, 55 ஆயிரம் ரூபாயாகவும், 3ம் இடத்தில் உள்ள பஞ்சாபில், இது 42 ஆயிரம் ரூபாயாகவும் உள்ளது."கேரள ரேஷன் கடைகளில் 100 சதவீதம் அரிசி விற்கப்படுகிறது. தரமான அரிசி குறைந்த விலையில் போடுவதால் ரேஷன் கார்டுதாரர்கள் வாங்க தவறுவதில்லை. அன்றாடம் தேவைப்படும் உணவு பொருட்களின் மீது மானியம் வழங்கினால், குடும்ப பட்ஜெட்டில் செலவினங்கள் குறையும்' என, கேரள உணவு துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ரஜினிகாந்த்தை திமுக வேட்பாளர்கள் தொடர்ந்து சந்தித்து ஆசியும், வாழ்த்தும் பெற்று வருகின்றனர். திமுக வேட்பாளர்களை மட்டும் தொடர்ந்து சந்திக்க அனுமதித்து வருவதன் மூலம் தனது ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் மறைமுகமாக வாய்ஸை பாஸ் செய்து வருவதாக கூறப்படுகிறது.
நடிகர் ரஜினிகாந்த்தை விட அவரது ரசிகர்களின் வாக்கு வங்கி மீதுதான் அரசியல் கட்சியினருக்கு முக்கிய ஆர்வம். குறிப்பாக திமுகவினர், இந்த வாக்கு வங்கியை சமீப காலமாக தங்களுக்கு சாதகமாக திருப்பி வருகின்றனர். இதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளனர் எனலாம்.
ரஜினியை அரசியலுக்கு அழைத்து அழைத்து சலித்துப் போய் விட்டனர் அவரது ரசிகர்கள். ஆனால் அவருக்குப் பின்னால் அரசியலுக்கு வந்த விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து, இன்று அரசியல் சக்தியாகவும் மாறி நிற்கிறார். சரத்குமாரும், அதிமுகவுடன் இணைந்து புதிய அவதாரம் எடுக்க ஆயத்தமாகி விட்டார்.
ஒவ்வொரு தேர்தலிலும் ரஜினியின் ஆதரவு யாருக்கு என்ற கேள்வி எழும். அவரும் ஆரம்பத்தில் வாய்ஸ் கொடுத்துப் பார்த்தார். பி்ன்னர் அதை விட்டு விட்டார்.
இந்த சட்டசபைத் தேர்தலிலும் ரஜினியின் ஆதரவு யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் இந்த முறையும் அமைதி காக்க ரஜினி முடிவு செய்ததாக கூறப்பட்டது.
ஆனால் சமீபகாலமாக நடப்பதைப் பார்க்கும்போது ரஜினிகாந்த் மறைமுகமாக வாய்ஸ் கொடுத்துக் கொண்டிருப்பதாக அறிய முடிகிறது.
கடந்த சில நாட்களாக திமுகவைச் சேர்ந்த வேட்பாளர்கள் அடுத்தடுத்து ரஜினிகாந்த்தை சந்தித்து வருகின்றனர். முதலில் ஆயிரம் விளக்கு தொகுதி திமுக வேட்பாளர் அசன் முகம்மது ஜின்னா சந்தித்தார். பின்னர் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். நேற்று சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி திமுக வேட்பாளர் ஜே. அன்பழகன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தொடர்ந்து திமுக வேட்பாளர்களாக ரஜினியை சந்தித்து வருவதும், அவர் அதை அனுமதிப்பதையும் பார்க்கும்போது திமுகவுக்கு ரஜினிகாந்த் மறைமுக வாய்ஸ் தருகிறாரோ என்ற கேள்விகள் அரசியல் அரங்கில் எழுந்துள்ளன.
தி.மு.க.,வையே ஜீவனாக, வாழ்வாக, உயிராக நினைத் திருந்தவன் நான். என் மீது கொலைப் பழி சுமத்தப்பட்டு, 1993ம் ஆண்டு தி.மு.க., விலிருந்து வெளியேற்றப் பட்டேன். இதனால், 1994ம் ஆண்டு ம.தி.மு.க., உதய மானது. 1996 தேர்தலில் தனித்துப் போட்டியிட்டோம். வெறும், 316 ஓட்டு வித்தியாசத்தில் நான் தோல்வியடைந்தேன். 1998 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டோம்.
அடுத்த ஆண்டு, நாங்கள் இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தி.மு.க., வந்தது. அந்தக் கட்சியுடன் நாங்கள் கூட்டணி அமைக்கவில்லை; அவர்கள் தான் எங்கள் அணிக்கு வந்தனர். 2006 சட்டசபை தேர்தலில், தி.மு.க., தலைவர் கருணாநிதி எங்கள் கட்சியை அவமதித்தார். 22 இடங்களுக்கு மேல் பெறுவதற்கு அவர்களுக்குத் தகுதியில்லை எனக் கூறினார். ஒட்டுமொத்தத் தொண்டர்களின் விருப்பத்திற்கிணங்க, அந்த சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க., வுடன் கூட்டணி அமைத் தோம். 35 தொகுதிகளில் போட்டி யிட்டு, ஆறு தொகுதி களில் வெற்றி பெற்றோம். ஏழெட்டு தொகுதி களில், சொற்ப ஓட்டு களில் வெற்றி வாய்ப் பை இழந்தோம். அடுத்து வந்த உள்ளாட்சித் தேர்தலில், நாங்கள் தனித்து வென்ற நகராட்சிகளிலேயே எங்களுக்கு குறைவான வார்டுகள் ஒதுக்கப்பட்டன; பொறுத்துக்கொண்டோம். எங்கள் எம்.எல்.ஏ., வீர.இளவரசன் இறந்த திருமங்கலம்தொகுதியை அ.தி.மு.க., வலியுறுத்திக் கேட்டது; விட்டுக்கொடுத்தோம். எங்கள் வேட்பாளர் வென்ற கம்பம் இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக ஜெயலலிதா கூறினார்; ஏற்றுக் கொண்டோம். கொள்கைகளைத் தவிர, மற்ற எல்லா விஷயங்களிலும் அ.தி.மு.க.,வுடன் அனுசரித்தே நடந்துகொண்டோம்.
இந்தத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான உடன், எங்களை அல்லவா முதலில் அழைத்துப் பேசியிருக்க வேண்டும். சரி... புதிய கட்சிகள் வருகின்றன... நாம் தான் ஏற்கனவே இருக்கிறோமே என, அமைதி காத்தோம். தொகுதிப் பங்கீடு குறித்து நடந்த முதல் பேச்சுவார்த்தையில், "கடந்த முறை கொடுத்த 35 கொடுத்துவிடுங்கள்' என்றோம். "நிறைய கட்சிகள் வருகின்றன; கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள்' என்றனர். அடுத்த முறை, 30 தொகுதி கேட்டோம். இன்னும் குறைக்கக் கூறினர். பிப்ரவரி 28ம் தேதி, "25 இடங்களாவது வேண்டும்' என்றோம். மார்ச் 8ம் தேதி போயஸ் தோட்டத்திற்கு அழைத்தனர். பேச்சுவார்த்தையில், "நீங்கள் ஆறு இடங்களில் தானே வெற்றி பெற்றிருக்கிறீர்கள். அவற்றையே எடுத்துக்கொள்ளுங்கள்' என்றனர். இதை என் தோழர்கள் வந்து சொன்னபோது, இதயத்தில் ஈட்டி பாய்ச்சியது போல இருந்தது. ஆனாலும், அமைதியாக இருந்தேன். மறுபக்கம், கம்யூனிஸ்டுகளுக்கு 10, மார்க்சிஸ்டுக்கு 12, இன்னொரு கட்சிக்கு 41 என, ஒதுக்கீடுகள் முடிந்தன. மார்ச் 12ம் தேதி, கூட்டணிகளுக்கு 74 தொகுதி ஒதுக்கியது போக, 160 தொகுதிகளுக்கான அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப் பட்டுவிட்டது. அதிருப்தியடைந்த மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் தலைவர்கள் அன்றே, தே.மு.தி.க., அலுவலகத் துக்குச் சென்றனர். அவர்கள் பேச்சு நடத்த வேண்டுமென்றால், அ.தி.மு.க., அலுவலகத்துக்கு அல்லவா சென்றிருக்க வேண்டும்?
மார்ச் 13ம் தேதி, அ.தி.மு.க., அலுவலகத்திலிருந்து எங்களைத் தொடர்புகொண்டனர். எட்டு "சீட்' ஒதுக்குவதாகக் கூறினர். நான் பதில் ஏதும் ஏதும் சொல்லவில்லை. மறு நாள் காலை, 11 மணிக்கு பன்னீர் செல்வமும், செங் கோட்டையனும் என் வீட்டுக்கு வந்தனர். அரை மணி நேரம் அமைதியாக இருந்துவிட்டு, "எப்படி சொல்வதென்றே தெரியவில்லை. என்ன நடக்கிறதென்றும் புரியவில்லை. நேற்று ஒரு எண்ணிக்கையில் "சீட்' தருவதாகக் கூறினார்களாம். அது கொடுக்க முடியாத நிலையாம். ஒன்றை குறைத்துக்கொண்டு ஏழு சீட் தான் தர முடியும் எனக் கூறுகின்றனர்' என்றனர். "கூட்டணியை விட்டு வெளியே போ' என்பதைத் தவிர, இதற்கு வேறென்ன அர்த்தம் இருக்க முடியும்? நான், "தேர்தலில் வெற்றி பெற்று, நல்ல பதவிகளுக்கு வாருங்கள்' என வாழ்த்துச் சொல்லி அனுப்பிவிட்டேன். அதேசமயம், எங்களுக்கு 18 தொகுதி தருவதாகவும், 19 தொகுதி தருவதாகவும், வைகோ மறுக்கிறார் என்றும், அ.தி.மு.க., தரப்பிலிருந்து மீடியாக்களுக்கு தகவல்கள் தரப்பட்டன.
மார்ச் 15ம் தேதி இரவு, அ.தி.மு.க.,விலிருந்து பூங்குன்றன் தொடர்புகொண்டு, "அம்மா இரண்டு பேரை உங்களுடன் பேச்சு நடத்த அனுப்பி வைக்கிறார்' என்று சொன்னார். வீட்டுக்கு வந்தவர்கள், ஒன்பது தொகுதிகள் தருவதாகக் கூறினர். "போயஸ் கார்டனுக்கு வாருங்கள்' என்றனர். "நான் வரவில்லை. வந்தால் வாக்குவாதம் செய்ய வேண்டியதிருக்கும். மனச் சங்கடம் வந்துவிடும். நான் கேட்ட, 23 தொகுதிகளில் இரண்டு இடங்களை குறைத்துக்கொண்டு, 21 தொகுதிகள் கொடுப்பதாக இருந்தால் சொல்லுங்கள், வருகிறேன்' என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டேன்.
மொத்தமுள்ள 234 தொகுதிகளில், கூட்டணி கட்சிகளில், இரண்டு கம்யூனிஸ்ட் மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு, 74 இடங்கள் போக, ம.தி.மு.க.,வுடன் கூட்டணி பேச்சு முடியாத நிலையில், அ.தி.மு.க., 160 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்தால், ம.தி.மு.க.,வை பிடரியைப் பிடித்து, நெட்டித் தள்ளியது தவிர வேறென்ன? "இந்தப் பட்டியல், ஜெயலலிதாவுக்கு தெரியாமல் வேறு நபர்கள் மூலம் மாற்றப்பட்டுவிட்டது. இதனால் தான் கூட்டணிக் கட்சிகள் கேட்ட சீட்டுகள் வழங்கப்படுவதில் மாற்றம் ஏற்பட்டுவிட்டது' எனச் செய்திகள் வெளியாயின. பட்டியல் மாற்றப்பட்டது, கட்சியின் பொதுச் செயலருக்கே தெரியாது என்றால், அவர் செயல் இழந்துவிட்டாரா? அவரை யாரும் ஆட்டிப் படைக்கின்றனரா? தொகுதி கொடுப்பதிலேயே இவருக்கு பங்கில்லை என்றால், இப்படிப் பட்டவரிடம் நாட்டை கொடுத்தால் என்ன ஆகும்? இப்படிப்பட்டவர்கள் திருந்த மாட்டார்கள். ஜெயலலிதாவே செய்துவிட்டு மற்றவரின் மீது பழிபோடுவதாக நான் குற்றம்சாட்டுகிறேன். இவ்வாறு, அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து நாங்கள் தூக்கியெறியப்பட்டோம்.
மார்ச் 19ம் தேதி, ம.தி.மு.க.,வின் உயர்மட்டக் கூட்டம் தாயகத்தில் நடந்தது. 56 நிர்வாகிகள் பேசினர். 48 பேர் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வேண்டாம் என்றனர். இரண்டு பேர் மட்டும், 20 தொகுதி வாங்கிக்கொண்டு, அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்கலாம் என்றனர். ஆறு பேர், தேர்தலைப் புறக்கணிப்போம் என்றனர். அனைவரும் ஒரு மனதாக முடிவெடுத்து, இந்தத் தேர்தலில் மட்டும் பங்கேற்பதில்லை என்று முடிவு செய்து அறிவித்தோம். காலம் சில படிப்பினையைத் தந்ததால் ஜெயலலிதா மனதில் மாற்றம் ஏற்பட்டிருக்கும் என நினைத்தேன். அவரின் எதேச்சிகாரத்திலும், ஆணவத்திலும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை; இனியும் ஏற்படாது. என் முடிவுக்கு வருத்தம் தெரிவித்து ஜெயலலிதா கடிதம் எழுதியது, அரசியல் ஆதாயம் கருதித் தான். அவர் எப்படிப்பட்டவர் என்று கணினியில் பணி செய்பவர்கள் முதல், கழனியில் வேலை செய்பவர்கள் வரை அனைவருக்கும் தெரியும்.
மீண்டும் அ.தி.மு.க.,வுடன் சேர்வதற்கு, ம.தி.மு.க., ஒருபோதும் நினைக்காது. மக்கள் மத்தியில் ஜாதி, மத பேதம், ஊழல் ஒழிக்கப்பட வேண்டும்; தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு மாற்றாக, ம.தி.மு.க., திகழ வேண்டும். தமிழகத்தை ஆளவேண்டும் என்ற குறிக்கோளுடன், 10 ஆண்டுகளுக்கு முன் ம.தி.மு.க., தீர்மானம் போட்டது. இதே முடிவுடன் கட்சி மீண்டும் நடைபோட தற்போதைய சூழ்நிலை உருவாகியுள்ளது; இது, காலம் தந்த அருட்கொடை. அ.தி.மு.க.,விலிருந்து விலகியது, நாங்கள் விரும்பி எடுத்த முடிவல்ல; காலத்தால் ஏற்பட்ட முடிவு. இந்த முடிவில் ஒரு சதவீதம் கூட, மறு பரிசீலனை செய்ய இடம் கிடையாது. அ.தி.மு.க., கூட்டணியில் ம,தி.மு.க.,வுக்கு, 35 இடங்கள் கொடுத்தால் கூட மறுபரிசீலனை என்ற பேச்சுக்கே இடமில்லை. நன்றி: இமயம் "டிவி'
வைகோ பொதுச் செயலர், ம.தி.மு.க.,
இயற்பெயர் : வை.கோபால்சாமி
வயது : 67
சொந்த ஊர் : கலிங்கப்பட்டி, நெல்லை மாவட்டம்.
ஆரம்பகாலம் : தி.மு.க.,வின் முன்னணித் தளபதி
நிறுவனர் : மறுமலர்ச்சி தி.மு.க.,
ஆண்டு : 1994
பதவி : பொதுச் செயலர்
அனுபவம் : தொடர்ந்து 18 ஆண்டுகள் ராஜ்யசபா எம்.பி.,
குறிப்பு : சுதந்திரத்துக்குப் பிந்தைய தமிழக அரசியல்வாதிகளில், மிக அதிக காலம் சிறைவாசம் இருந்தவர்.
அன்புள்ள அண்ணா, நீங்கள் செய்தது மிகச்சரி. எதைசெய்தாலும் முழுமையாக செய்யவேண்டும். தற்போது நமது எதிரி மட்டுமல்ல, அனைத்து தமிழ்மக்களின் எதிரியும் மேடம் செல்வி ஜெயலலிதாதான். உங்கள் ஒருத்தரை மட்டும் அவர் அவமானபடுத்த வில்லை. நம் அனைவரையும் கேவலபடுத்திவிட்டார். தயவுசெய்து, உங்கள் பலம் என்ன என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். உண்மையை சொல்லபோனால், நாம் மேடம் கூட கூட்டணியில் இருந்தாலும், திமுக தான் வெல்லும். எம்.ஜி.ஆருக்கு கிராமங்களில் இருந்த செல்வாக்கு இன்று திமுகவின் மக்கள் நலதிட்டத்தினால், திமுகவுக்கு இருக்கிறது. எனவே, நாம் இனிமேல் எப்போதும் ஜெயிக்கும் அணியில் தான் இருக்க வேண்டும். யாருக்கும் உபயோகம் இல்லாமல் இருப்பதை விட, நம்மால் முடிந்த வரைக்கும் நாட்டை வளப்படுத்த வேண்டும். அதற்கு நமக்கு இருக்கும் ஒரே வழி, திமுகதான். இது என்னுடைய வேண்டுகோள் மட்டுமல்ல, என்னை மாதிரி ஹாஸ்டலில் இருக்கும் பலரின் எதிர்பார்ப்பும் இதுதான். பள்ளிக்கூட நாட்களில் இருந்தே எங்களுக்கு மேடம் தான் பிடிக்கும். ஆனால் கடந்த சில வருடங்கள் அவருடைய நடவடிக்கை சுத்தமில்லை. அதிலும் நம்பிக்கையாக இருந்த உங்களை வெளியேற்றியது எங்கள் யாருக்கும் பிடிக்க வில்லை. நல்ல அரசியல்வாதியான நீங்கள், தயவுசெய்து முடிவெடுத்து திமுகவுக்கு ஆதரவு கொடுங்கள்.
இனி யாரோடும் கூட்டு வேண்டாம்...அனைத்தும் அட்டை பூச்சிகள்...மதிமுக தமிழகத்தை ஆள வேண்டும் என்பது கட்டாயம் இல்லை..மக்கள் பிரச்சனைகளுக்கு ஒலிக்கும் உங்கள் தன்னலம் அற்ற குரல் போதும்...ஸ்டெர்லைட் ஆலையின் விபரீதம் பற்றி அறிந்தும் உங்களை தவிர இன்றுவரை எந்த அரசியல்வாதியும் போராடவில்லை...மக்களின் மனதில் உங்களுக்கு சராசரி அரசியல்வாதிகளை விட மிக சிறந்த மதிப்பு உள்ளது..தயவு செய்து எதிர் வரும் காலங்களில் தேர்தல்களை புறக்கணிக்காதீர்கள்...அது மக்களுக்கும் உங்களுக்குமான இடைவெளியை அதிகரிக்கும்,உங்கள் மீதுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்த மக்களுக்கு வாய்ப்பே இல்லாமல் செய்துவிடும்.வெற்றி மட்டுமே குறிக்கோளாய் இருக்க நீங்கள் ஒன்றும் ஜாதி கட்சி நடத்தவில்லை ..20 ஆண்டுகளாக தோல்விகள் தானே அதிகம்..ஆனால் இன்றும் வரை மக்கள் உங்கள் மீது ஒரு குறையும் சொல்லவில்லை ...பின் ஏன் புறக்கணிப்பு ? தனியாகவோ, பஜகவுடனோ சேர்ந்து தேர்தலை சந்திக்கலாமே!
தமிழ் மாநில காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியோடு இணையலாம். அதிமுக ஜானகி அணியும், அதிமுக ஜெயா அணியும் இணையலாம், ஆனால் மதிமுக திமுகவோடு இனைய கூடாதோ? பிரிந்து சென்றது மீண்டும் இணைவது நல்ல விஷயமே. மக்கள் திலகம் கூட அதிமுகவை திமுகவோடு இணைத்து விட வேண்டும் என்றுதான் நினைத்தார். சில விஷமிகளால் அது நடக்க வில்லை.
இந்தப் பட்டியல், ஜெயலலிதாவுக்கு தெரியாமல் வேறு நபர்கள் மூலம் மாற்றப்பட்டுவிட்டது. இதனால் தான் கூட்டணிக் கட்சிகள் கேட்ட சீட்டுகள் வழங்கப்படுவதில் மாற்றம் ஏற்பட்டுவிட்டது' எனச் செய்திகள் வெளியாயின. பட்டியல் மாற்றப்பட்டது, கட்சியின் பொதுச் செயலருக்கே தெரியாது என்றால், அவர் செயல் இழந்துவிட்டாரா? அவரை யாரும் ஆட்டிப் படைக்கின்றனரா? தொகுதி கொடுப்பதிலேயே இவருக்கு பங்கில்லை என்றால், இப்படிப் பட்டவரிடம் நாட்டை கொடுத்தால் என்ன ஆகும்? இப்படிப்பட்டவர்கள் திருந்த மாட்டார்கள். ஜெயலலிதாவே செய்துவிட்டு மற்றவரின் மீது பழிபோடுவதாக நான் குற்றம்சாட்டுகிறேன்.
சார் வணக்கம். ஐயா அப்துல் கலாம் சொன்னது போல " நாட்டின் வளர்ச்சிக்காக அரசியலில் சேருங்கள், அரசியலை வளர்பதற்காக அல்ல". நீங்க ஒரு நல்ல பொருளாதாரம் பேச கூடியவங்க. வெறும் அரசியல் வியாபாரிகள பத்தி எதிர்த்தோ, அவர்களுடைய யூகம், வாதம், முடிவுக்கு எல்லாம் தலை சாய்காதீங்க!!! பாருங்க.........தேர்தல் அறிக்கையினு எதோ ரெண்டுபேரும் குட்டிசுவரவிட கேவலமான கண்ணோட்டம். எங்களை வெறும் போராட்டம் அது இதுன்னு கூப்பிடாம (மொழி, இனம் சார்ந்த ஒரு போர்வை உங்களுக்கு வேறு இலக்கணம் தருகிறது, இது சார்ந்த போராட்டம், நடுத்தர வர்க்கத்துக்கு சரிபட்டு வராத ஒரு போக்கு). உழைக்கும் மக்களை உருவாக்க, உழைக்கும் மக்களை போற்ற, வேலை இல்லா மக்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்த கூடிய, எங்களை நல்வழி படுத்தக்கூடிய, ஊக்கபடுத்த கூடிய நல்ல தலைவர் (ஜப்பான் மக்களை வழி நடத்துற மாதிரி) எங்களுக்கு தேவை!!!!!!!!. எங்களோட முன்னேற்றத்துக்கு ஊக்கபடுதுங்க, உதவி பண்ணுங்க, திட்டம் தீட்டுங்க, செயல் படுத்துங்க!!! . எங்களோட சோம்பேறித்தனமாக இருக்ககூடிய எங்கள் மனதுக்கு உத்வேகம் (குறைந்த பட்சம் ஊக்கபடுதுதல்) என்கிற உற்சாக டானிக் கொடுங்க!!!! மாசத்துல வெறும் நூறு- இருநூறு இளைஞனுக்கு முன்னேற்றத்துக்கு ஏதாவது வழி பண்ணி விடுங்க. அத பற்றி பொது கூட்டங்களில் இதுக்கு முக்கியதுவம் கொடுங்க. இலவச திட்டங்கள், விவசாய நலன் மற்றும் முன்னேற்றம், சிறுதொழில், இப்படின்னு பொது படியான விசயங்கள...... எப்படி வருது, அதனுடைய பொருளாதார பின்னணி என்ன?. இது போன்ற கருத்துள்ள செய்திகள பாமரனுக்கு கொண்டுபோய் சேருங்க. உழைப்பு, முன்னேற்றம், வருங்கால தமிழினம் ஒரு உழைப்பாளிகள் ஒருகினைந்த ஒரு மண்டலமா உலகம் போற்றனும் (ஜப்பான போல). நாங்க உழைக்கிற உழைப்பு, ஊக்கமில்லாமலும், தெளிவின்மையாலும் மனம் போகிற போக்கில பல இளைஞர்கள் டாஸ்மார்க் கடைகளில் காலங்களை கழிக்கிறோம். எங்களை சீர்படுத்த உங்களால மட்டும் தான் முடியும். வாழ்க உங்கள் பொது பணி!!!!!!!!!!!
அய்யா வைகோ அவர்களே, திமுக தலைவர் கொடுத்த இருபத்தி இரண்டு சீட்டுக்காக வீராவேஷதுடன் சாக்கடையில் போய் விழுந்தீர்கள். ஆனால் சாக்கடையில் விழுந்து சாதித்தது வெறும் ஆறு இடங்கள். கொஞ்சமாவது புத்தி இருந்தால், திமுக கொடுத்த இருபத்தி இரண்டு சீட்டுகளில் நின்று குறைந்த பட்சம் இருபது தொகுதிகளில் வென்றிருக்கலாமே? இதுவல்லவா ராஜ தந்திரம்? ஆனால் திமுவின் 22 இடததை குறைகூறிய நீங்கள், இப்போது, 35 கேட்டு, 25 வந்து, 23, 21, 20, 19, 18 என்று தன்மானத்தை விட்டுகொடுத்து, கெஞ்சிபார்த்து, கடைசியில் 12வது கிடைக்கும் என்று காத்திருந்து, காத்திருந்து, 7 அல்லது 8 தான் என்றவுடன் வேறுவழியே தெரியாமல், புறகணிப்பு என்ற முடிவுக்கு தள்ளப்பட்டீர்கள். அதாவது, திமுக கொடுத்த 22 என்ற சீட்டுக்கு வீம்பு காட்டிய நீங்கள், இப்போது 7, 8 என்று ஏலமிட்டதை பார்த்து வெந்து, நூலாகி, நூடுஸ்லாகி, இப்போது புலம்பிதவிக்கிறீர். இதிலிருந்து என்ன தெரிகிறதுவென்றால், பரமசிவன் கழுத்தில் இருந்தால் தான் பாம்பிற்கே மரியாதை, அதைவிட்டு, பரமசிவன் கழுத்துக்கே சொந்தம் கொண்டாடினால், அந்த பாம்பு இருக்கும் இடம் இல்லாமல், பஞ்சம் பிழைக்க வந்தவரும், பயாஸ்கோப்பு காட்டியவரும் அடித்து கொன்றுவிடுவார்கள். ஒன்றுமட்டும் புரிந்துகொள்ளுங்கள். தமிழகம் என்றுமே திமுகவையோ அல்லது அதிமுகவையோதான் அரியணையேற்றும். இடையில் சிறிது நேர விளம்பரம்மாதிரி, காங்கிரசைப்போல, உங்களைபோல சிலர் நொடி இடைவெளியில் வந்து, பொழுதுபோக்குவீர்களே தவிர, வேறொன்றும் உங்களால் செய்ய முடியாது. நீங்கள் முதலில் நல்லவராக இருந்து, இடையில் கெட்டுபோய், இப்போது வேறு வழியில்லாமல் நல்லவராக ஆக்கபட்டுகொண்டிருக்கீறீர்கள். ஆனால், மூன்றாவது, நான்காவது என்றெல்லாம் யோசிக்காமல், திமுகவில் சேருங்கள். ஏனென்றால், உங்களை பெற்றது மட்டுமே உங்கள் தாய். அதன்பிறகு, வளர்த்து, ஆளாக்கி, முகவரிகொடுத்து, 18வருடம் எம்.பி.ஆக்கி அழகுசெய்தது உங்களின் தாய்கழகம்தான். திமுக என்ற ஆலமரத்தில் இருந்து தோன்றிய விழுது நீங்கள். ஆலமரத்துக்கு நீங்கள் பலம். உங்களுக்கு ஆலமரம் பலம். அதைவிட்டு விட்டு, பட்டுபோன வேதாளத்துக்குரிய முருங்கைமரத்தில் கூட்டணிவைத்துகொண்டால், பட்டுபோன மரமே, உங்களையும் பட்டுபோக செய்துவிடும். கலைஞர் என்றுமே உங்கள் மீது கொலைபழி சுமத்தியதில்லை. டெல்லியில் இருந்துவந்த செய்தி என்றுசொல்லி, உங்களை வஞ்சித்து வழியனுப்பிய தலைவி(தி)யின் குறுக்குபுத்தியில் வந்த சூழ்ச்சித்தான் என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ளதான் வேண்டும். ஆயிரம்தான் சொன்னாலும், உங்களை சார்ந்து நிற்பவர்கள் அனைவரும் ஒருகாலத்தில் திமுகவில் இருந்தவர்கள் தான். அடுத்தகட்சிக்காரன், முன்னாள் அதிமுக காரன் ஒருவனையாவது உங்கள் கட்சியில் காட்டமுடியுமா? இந்த உண்மை புரிந்துகொண்டால், புறப்படுங்கள், செய்த தவறுக்கு பிரயாசித்தமாய், தலைவர் கலைஞரிடம் சேருங்கள். தமிழகம் வளமாகும். வயிராற உண்டு, பசியாறும் ஏழை தாய்மார்கள் பசி போக்கும் ஒரு ருபாய் அரிசி திட்டம் காப்பாற்றப்படும்.
மதிமுகவை கூட்டணியை விட்டு ஜெயலலிதா விரட்டியதில் கர்நாடகம் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த இரு நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு இருப்பதாகப் பேசப்படுகிறது.
முதலில் நாடாளுமன்றத் தொகுதிக்கு ஒரு சட்டமன்றத் தொகுதி என்ற கணக்கில் அதிமுகவிடம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிய இடங்கள் மொத்தம் 39. இப்படித்தான் அவருக்கு்ம் இரு கட்சிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை ஆரம்பித்தது.
ஜெயலலிதாவின் முன்னாள் உட்கார்ந்து இருக்கிறார்களா.. இல்லை நின்று கொண்டிருக்கிறார்களே என்று யூகிக்க முடியாத அளவுக்கு ‘எஸ் டைப் சேர்’மாதிரியே உட்கார்ந்து தரையை மட்டுமே பார்க்கும் அதிகாரம் கொண்டவர்களான ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் தான் வைகோவிடம் இந்த 39 தொகுதி பட்டியலை வாங்கிச் சென்றனர். போனவர்கள் போனது தான். அதிமுகவிடமிருந்து அடுத்த 20 நாட்கள் எந்த பதிலும் வரவில்லை.
21வது நாள் திரும்பி வந்த இருவரும் வைகோவிடம், அம்மா உங்களுக்கு 8 தொகுதிகள் தருவதாக சொல்கிறார்கள் என்று சொல்லிவிட்டு, வைகோவிடம் திட்டு விழும் என்று பயந்து அதே வேகத்தில் திரும்பி ஓடிவிட்டனர்.
இதையடுத்து 25 தொகுதியாவது வேண்டும் என்று பதில் அனுப்பினார் வைகோ. அடுத்த இரு நாட்களில் திரும்பி வந்த இந்த இருவரும் ”அண்ணே.. 8 தான் தர முடியும்னு அம்மா சொல்லச் சொன்னாங்க” என்று பழைய ராகம் பாடினர்.
அடுத்த இரண்டு நாட்களில் மீண்டும் வைகோவை சந்திக்க வந்த இந்த இருவரும் நீண்ட நேரமாக பேசாமல் தரையையே பார்த்து தவித்துக் கொண்டிருக்க.. அவர்களைப் பார்த்து பரிதாபப்பட்ட வைகோ.. ”உங்கள் தலைவி என்ன சொன்னார்னு சும்மா சொல்லுங்க.. நான் உங்க மேலே எரிச்சல் பட்டு என்ன ஆகப் போகுது” என்று தைரியம் தந்ததோடு, காபியும் தந்தார்.
காபி டம்ளரை கையில் கூட எடுக்காமல், அண்ணே, அண்ணே என்று தயங்கிய இருவரும்.. மொதல்ல 8 தொகுதினு சொன்ன அம்மா இன்னிக்கி காலைல எங்களை கூப்பிட்டு 7 இடம் தர முடியும்னு உங்கிட்ட சொல்லிட்டு வரச் சொன்னாங்க என்று கூறிவிட்டு, அதே வேகத்தில் அந்த இடத்திலிருந்து வேகமாக வெளியே காரில் ஏறிப் பறந்துவிட்டனர்.
அவர்கள் போய் பல மணி நேரம் ஆகியும் அவர்கள் சொன்ன தகவல் தந்த அதிர்ச்சியிலிருந்து வைகோ மீளவில்லை என்கிறார்கள். இது குறித்து தனக்கு நெருக்கமான நிர்வாகிகளிடம் மட்டும் வைகோ பகிர்ந்து கொண்டார். அப்போது அவர்கள், ”நம்மை கூட்டணியை விட்டு வெளியே போகுமாறு ஜெயலலிதா மறைமுகமாகச் சொல்கிறார்” என்பதை யூகித்து வைகோவிடம் சொல்ல, நானும் அதே தான் நினைக்கிறேன் என்றிருக்கிறார்.
மீண்டும் மீண்டும் 9,8,7,8,7,9,7 என்று அதிமுக தரப்பிலிருந்து தொகுதிகளின் எண்ணிக்கை ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை மாறிக் கொண்டே இருக்கவே வைகோ என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார். இப்படி அவரை அதிமுக டார்ச்சர் செய்ததற்குக் காரணம், அவர் கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும் என்பது தான். ஆனால், அவரோ கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாகப் போய்க் கொண்டுள்ளதாக தனது கட்சி நிர்வாகிகள் மூலம் அறிவிப்பு வெளியிட்டு ஜெயலலிதாவை கடுப்பாக்கினார்.
சரி.. இனியும் வைகோ தானாகவே போக மாட்டார் என்பதால் தான் 160 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை ஜெயலலிதா வெளியிட்டார். இதற்கு முக்கிய காரணம் இரு தொழிலதிபர்கள் அதிமுகவுக்கு நீட்டியுள்ள ‘உதவி’ தான் என்கிறார்கள்.
தூத்துக்குடியில் ஒரு ஆலைக்கு எதிரான வைகோ நடத்திய போராட்டமும் இதனால் பாதிக்கப்பட்ட அந்த ஆலையினர் அதிமுக தரப்பை சந்தித்துப் பேசியதாகவும் சொல்கிறார்கள்.
இன்னொருவர் ஜெயலலிதாவுக்கு அவ்வப்போது ஹெலிகாப்டர், விமானம் தந்து
உதவும் கர்நாடக தொழிலதிபர். விடுதலைப் புலிகள் ஒடுக்கப்பட்ட நிலையில், இவர் தனது நிறுவனத்தை இலங்கையில் விரிவாக்கவுள்ளார். இதற்காக இவருக்கு உதவிகள் செய்ய முன் வந்துள்ள இலங்கை அதிபர் ராஜபக்சே தரப்பு, இந்தத் தொழிலதிபர் மூலமாக ஜெயலலிதாவுக்கு நெருக்கடி தந்து வைகோவை கூட்டணியிலிருந்து வெளியே விரட்டிவிட்டுவிட்டது என்கிறார்கள்.
வைகோவை கூட்டணியிலிருந்து வெளியேற்றினால் திமுகவின் பண பலத்தை எதிர்கொள்வதற்கான ‘சக்தியை’ இவர்கள் அதிமுகவுக்கு நீட்ட முன் வந்துள்ளனர்.
திருவாரூர்: முதல்வர் கருணாநிதி தலைமையில் திருவாரூரில் நேற்று நடந்த திமுக பிரசாரக் கூட்டத்தில் நடிகர் வடிவேலு, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தை ஒருமையில் விளித்து, குடிகாரன், லூசு என்றெல்லாம் தாறுமாறாக விமர்சித்துப் பேசினார்.
நேற்றைய கூட்டத்தில் வடிவேலுவும் பேசுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால் அவர் யாரைக்குறி வைத்து இதில் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. விஜயகாந்த்தை குறி வைத்து அவர் கடுமையாக பேசப் போகிறார் என்ற பேச்சும் எழுந்தது.
அதற்கேற்ப நேற்று அத்தனை பேர் முன்னிலையிலும் விஜயகாந்த்தை இந்த சொல் தான் என்றில்லாமல் பாரபட்சம் பார்க்காமல் கடுமையாக திட்டிப் பேசினார் வடிவேலு. அவர் பாணியில் சொல்வதென்றால் நிச்சயம் விஜயகாந்த் காதில் ரத்தமே வந்திருக்கும். அவ்வளவு மோசமாக விமர்சித்துப் பேசினார் வடிவேலு.
குடிகாரன், லூசு என்றெல்லாம் விஜயகாந்த்தை கடுமையாக தாக்கினார் வடிவேலு. மேலும் விஜயகாந்ததை அவன், இவன் என்று ஒருமையிலேயே அவை அடக்கின்றி வடிவேலு பேசியதால் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்டவர்கள் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தனர். அதேசமயம், வடிவேலுவின் பேச்சை அமைச்சர் மு.க.அழகிரி குலுங்கிக் குலுங்கி சிரித்து ரசித்தார். கூட்டத்தினரும் வடிவேலு பேச்சை சிரித்துக் கேட்டனர்.
வடிவேலு பேச்சிலிருந்து சில பகுதிகள் (தாறுமாறாக பேசிய வார்த்தைகளைத் தவிர்த்து):
இந்த பூமிக்குள் வரும்போது இந்த மண்ணை எடுத்து என் நெற்றியில் பூசிவிட்டுதான் வந்தேன். அப்படி ஒரு மண். இந்த மண். நான் திரையில் காமெடி செய்து அனைவரையும் சிரிக்க வைக்கிறேன். ஆனால் என்ன செய்தாலும் ஒரு மனிதனுக்கு எது தேவைப்படுகிறது.
உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம் இவை கண்டிப்பாக தேவைப்படுகிறது. நான் மக்களில் ஒருவனாக பேசுகிறேன். கலைஞர் போட்ட திட்டங்களை கேட்டபோது, கண்ண கட்டுது. எதிர் அணி மிரண்டு கிடக்கிறது. எல்லா பக்கமும் அணைகட்டி வைத்துவிட்டார் கலைஞர்.
கர்ப்பிணி பெண்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். கருவில் உள்ள குழந்தையும் பயன் அடைகிறது. நான் 25 வயதுக்கு மேல்தான் சம்பாதிக்க ஆரம்பித்தேன். ஆனால் கருவில் உள்ள குழந்தை மாதம் மாதம் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறது.
இப்போது நான் மேட்டருக்கு வருகிறேன். ஒருவர் முந்தாநாள் கட்சியை ஆரம்பித்துவிட்டு, நாளைக்கு முதல் அமைச்சர் என்று சொல்லிக்கொண்டு திரிகிறார். என்னவென்றால் அவர் கல்யாண மண்டபத்தின் இடையில் இரண்டு தூண் வந்துவிட்டதாம். இதுக்காக ஒரு கட்சியை ஆரம்பித்து, நான் அடுத்த முதல் அமைச்சர் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
நான் கேட்கிறேன் முதல் அமைச்சர் பதவி என்ன மியூசிக்கல் சேரா. அந்த பதவி என்ன சாதாரண பதவியா. கல்யாண மண்டபத்தில் இரண்டு தூண் வந்ததற்கு, உடனே கட்சியை ஆரம்பித்து முதல் அமைச்சர் என்று சொல்லிக் கொள்கிறீர்களே.
இப்ப நான் சொல்கிறேன், நீ முதல் அமைச்சர் என்றால் நான் பிரதமர் (கருணாநிதியைப் பார்த்து) அய்யா, தப்பா நினைச்சுக்கக் கூடாது. நீ பிரதமர் என்றால் நான் ஜனாதிபதி. நீ ஜனாதிபதி என்றால் நான் ஒபாமா.
ஒருத்தர் என்னிடம் கேட்டார். ஏங்க அவர எதிர்த்து நிற்க போறேன் என்று சொன்னீர்களே, நிற்க போறீங்களா என்றார். அவரை எதிர்த்து நின்றால் எனக்குத்தான் கேவலம். அதனால நான் அந்த கேள்வியை ரிஜக்ட் செய்து விட்டேன். இப்ப மொத்த டீமையும் காலி செய்வதுதான் என் வேலை.
இந்த இடத்துல அவரைப் (விஜயகாந்த்) பத்தி பேசக் கூடாது. காரணம், அதற்கு அவருக்கு தகுதி இல்லை. இருந்தாலும் சொல்ல வேண்டியதை சொல்லித்தானே ஆகனும்.
முதல் அமைச்சர் என்று சொல்லிக்கொண்டு 41 சீட் வாங்க போனீர்களே. அங்க என்ன முதல் அமைச்சர் பதவி கொடுப்பார்களா. மிகப்பெரிய வீராப்பா பேசினீங்க.
அந்த கட்சி பெயர் கூட வாயில் வரமாட்டேங்குது. ஏதோ நாக்கு மூக்காவா, தேக்கு மூக்காவா, ஏதோ சொல்றாங்க. முதல் அமைச்சர் என்று சொல்லிக்கொள்வதோடு அல்லாமல், 2 ரூபாய்க்கு ஒரு தொப்பியை வாங்கி தலையில் மாட்டிக்கொண்டு, அதேபோல் கண்ணாடி, கர்சிப் வாங்கி மாட்டிக்கிட்டு போஸ் கொடுக்கிறார். கருப்பு எம்ஜிஆர் என்று சொல்லிக்கொள்கிறார். நீங்கள் கருப்பு எம்ஜிஆர் என்றால் நான் கருப்பு நேரு.
நான்தாங்க கருப்பு நேருன்னு சொல்லிக்கிட்டு சோனியா காந்தி கிட்ட போய் பேசினா, என்ன வெளக்குமாத்தாலேயே அடிக்க மாட்டாங்க. பள்ளிக்கூடத்தில மாறுவேடப் போட்டியில போட வேண்டிய வேஷத்தையெல்லாம் பப்ளிக்காப் போட்டுக்கிட்டு பேசினா எப்படி.
கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துறாங்களாம். இதுகுறித்து செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு, முதல் ரவுண்டு முடிஞ்சிருக்கு, ரெண்டாவது ரவுண்டு முடிஞ்சிருக்குன்னு சொல்லிக்கிட்டே இருந்தாங்க. கடைசிலதான் அது தண்ணி அடிக்கிற ரவுண்டுன்னு எல்லோருக்கும் புரிஞ்சது.
நான் இந்த அணிக்கு வர காரணம் அண்ணன் அழகிரி மற்றும் அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களும்தான். இரண்டு பேரும் சிங்கக்குட்டி மாதிரி. கலைஞர் ஆட்சிக்கு வந்தால் அவர் சொன்னதை செய்வார். சொல்லாததையும் செய்வார். இன்னும் வேணும்னு போய் கேட்டா அதையும் செய்வார் என்றார் வடிவேலு.
வடிவேலுவின் பேச்சில் விஜயகாந்த்தை மட்டும் அவர் கடுமையாக தாக்கிப் பேசினார். அதேசமயம், ஜெயலலிதா குறித்தோ, கூட்டணியின் மற்றவர்கள் குறித்தோ அவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
நாகர்கோயில்: இந்தத் தேர்தலுக்குப் பின், வைகோவின் நிலைதான் விஜயகாந்துக்கும் ஏற்படும் என்றார் இயக்குநரும் நடிகருமான கே பாக்யராஜ்.
குமரி மாவட்டத்தில் தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் பாக்யராஜ் நேற்று பிரசாரம் செய்தார். நாகர்கோவில் வடசேரி அண்ணா சிலையிலிருந்து பிரசாரத்தை தொடங்கிய அவர் நாகர்கோவில் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஆர்.மகேசை ஆதரித்து பேசினார். அவர் பேசுகையில், “இந்தியாவில் படித்தவர்கள் நிறைந்த மாநிலமாக கேரளா திகழ்கிறது. தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்கள் படித்தவர்கள் நிறைந்த பகுதிகளாக உள்ளன. ஆகவே தி.மு.க. சார்பில் முதல்வர் கருணாநிதி வெளியிட்ட தேர்தல் அறிக்கையையும், எதிர் அணியினர் வெளியிட்ட தேர்தல் அறிக்கையை யும் நீங்கள் படித்து இருப்பீர்கள். தி.மு.க. தேர்தல் அறிக்கையை கருணாநிதி வெளியிட்டதும், எதிர் அணியினர் என்ன தேர்தல் அறிக்கை கொடுப்பது என்று கூட யோசிக்கவில்லை. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சில மாற்றங்களை செய்து தேர்தல் அறிக்கையாக அறிவித்துள்ளனர். ஏழைகளுக்கு 35 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று கருணாநிதி அறிவித்தார். உடனே அந்த அம்மா 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்றார். கருணாநிதி கிரைண்டர், மிக்சி கொடுப்போம் என்றதும், கிரைண்டர், மிக்சியுடன், மின்விசிறி கொடுப்போம் என்றார். திருமண உதவித் திட்டத்தை நிறுத்தியவரே இந்த அம்மையார்தான். திருமண நிதி உதவியாக ரூ.30 ஆயிரம் வழங்கப்படும் என்று கருணாநிதி அறிவித்தார். அவர் திருமண நிதி உதவியாக ரூ.25 ஆயிரத்துடன் 4 கிராம் தங்கம் தருவோம் என்று கூறி உள்ளார். கருணாநிதி வெளியிட்ட தேர்தல் அறிக்கையை சிறிது மாற்றி ஏட்டிக்கு போட்டியாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உள்ளனர். வைகோ 5 ஆண்டுகளாக உடன் இருந்தவர், அவரையே கழற்றி விட்டார். அதனால் வைகோ தேர்தலில் நிற்கவில்லை என்று போய் விட்டார். அந்த கூட்டணியில் சேர்ந்துள்ள விஜயகாந்துக்கும் அதே நிலைதான் வரும். அ.தி.மு.க.-தே.மு.தி.க. கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. மக்கள் இதைப் புரிந்து கொண்டுள்ளனர். தேர்தல் நேரத்தில் எந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியுமா அதை மட்டுமே கருணாநிதி அறிவித்துள்ளார். ஞ2006-ம் ஆண்டு ஒரு கிலோ அரிசி ரூ.2-க்கு கொடுப்போம், டி.வி. வழங்குவோம் என்று அறிவித்தார். இது எப்படி செய்ய முடியும் என்று கேட்டனர். ஆனால் தற்போது ஒரு கிலோ அரிசி ரூ.1-க்கு வழங்கப்படுகிறது. தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் ஒரே தலைவர் கருணாநிதி தான். எப்போதும் மக்களை பற்றியே நினைப்பவர் அவர். அதனால்தான் தன் தேர்தல் அறிக்கையில் முதியோர்கள், இளைஞர்கள், பெண்களை எண்ணி தயாரித்துள்ளார். ஆனால் சிலருக்கு தேர்தல் வரும் போதுதான் மக்கள் மீது பாசம் வருகிறது. ஆகவே இந்த தேர்தலில் தி.மு.க. கூட்ட ணியினரை வெற்றி பெறச் செய்து கருணாநிதியை 6-வது முறையாக முதல்வராக்க வேண்டும். அதற்கு நாகர்கோவில் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் மகேஷை வெற்றி பெற செய்ய வேண்டும்,” என்றார்.
நேற்று வள்ளுவர் கோட்டத்தில் அய்யன் திருவள்ளுவர் விழாவுக்கு வாழும் வள்ளுவப் பெருந்தகை வந்திருந்தார். ஆனால் அவர் வாய்திறந்து குறளோவியத்தை அள்ளித் தெளிப்பதற்குள் நான் புத்தகக் கண்காட்சிக்குப் புறப்பட்டுவிட்டேன். அப்போது தன்னை ‘வாழும் வள்ளுவன்’ என்றெல்லாம் வாழ்த்தக்கூடாது என்று கருணாநிதி கடிந்துகொண்டதாகக் கேள்வி.
மிக்க நல்லது.
ஆனால் கலாசார மாற்றம் அப்படியெல்லாம் ஓரிரவில் நடந்துவிடக்கூடியதா என்ன? கடந்த சில பத்தாண்டுகளில் தமிழகத்தில் நடந்திருப்பது என்ன? மேடைகளில் நடப்பது சாதாரணப் புகழ்ச்சியா என்ன? காதுகள் இரண்டும் வலிக்க வலிக்க, கதற்கக் கதற நிகழ்த்தப்படும் வன்புகழ்ச்சி. அப்படி காது குளிரப் புகழ்ந்தால் நமக்கும் நாலு நல்லது நடக்கும் என்று நம்பத்தொடங்கும் காக்கைகள் கா கா என்று கரைவது இயல்பே. இதன் விளைவாக மேடையில் ஏற்றப்படும் நிஜமான அறிஞர்கள்மீது சுமத்தப்படும் அழுத்தம் கொஞ்சம் நஞ்சமல்ல. அவர்களும் புகழ்ந்து தள்ளவேண்டும். இல்லாவிட்டால் என்ன ஆகிவிடுமோ என்ற பயம்.
இதில் சொந்தத் தொலைக்காட்சிகள் செய்யும் ஆபாசம் கொஞ்சநஞ்சமல்ல. கலைஞரின் உடலில் அதிகப் புண்ணியம் செய்திருப்பது இடதுகைக் கட்டைவிரலா, வலதுகால் சுண்டுவிரலா என்று பட்டிமன்றம் நடத்திக் கொஞ்சுவது அதில் தலையாய ஒன்று. இந்தக் கூத்தில் சொந்தக் கட்சிக்காரர்கள் தாண்டி தோழமைக் கட்சிக்காரர்களும் சேர்ந்துகொள்வார்கள்.
சரி போகட்டும். கருணாநிதியே சொல்லிவிட்டாரே, இன்று முதலாவது இந்த வாழும் வள்ளுவமே, காவியமே, கற்பகமே எல்லாம் அடங்கிப்போய்விடும் என்று பார்த்தால் அது எப்படி?
சென்னை புத்தகக் கண்காட்சியின் இறுதி நாள் அன்று நிகழ்ச்சியில் மேயர் மா. சுப்பிரமணியன், உயர் நீதிமன்ற நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா, பொது நூலக இயக்குனர் அறிவொளி, சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழுத் தலைவர் கயல் தினகரன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் மேயர் சுப்பிரமணியனும் கயல் தினகரனும் கட்சிக்காரர்களுக்கே உரித்த தன்மையோடு கருணாநிதியைப் புகழ்ந்து தள்ளினர்.
கயல் தினகரன், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தகவலைச் சொன்னார். ஜெயலலிதா ஆட்சியில், நள்ளிரவில் கருணாநிதி கைது செய்யப்பட்டபோது மதன் எழுதிய ‘வந்தார்கள்… வென்றார்கள்…’ புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தாராம். மற்றபடி தமிழகத்திலேயே அண்ணாதுரைக்கு அடுத்து கருணாநிதிதான் படிப்பில் சிறந்து விளங்கும் முதல்வராம். (ஆக, முதல் இரு இடங்கள் உறுதியாகிவிட்டன. ராஜாஜி முதல் பிறர் மூன்றாவது இடத்துக்கு வேண்டுமென்றால் போட்டி போட்டுக்கொள்ளலாம்.)
இப்படித் தொடர்ந்த பேச்சைத் தாங்கமுடியாது, நேராக ‘கலைஞர் செய்திகள்’ சானலில் ‘ஒரு மணியில் ஒரு நாள்’ நேரலை நிகழ்ச்சியில் கிரிக்கெட் பற்றி உரையாடச் சென்றுவிட்டேன்.
மேயர் சுப்பிரமணியன் சொன்னதில் ஒரு உருப்படியான விஷயம். சொத்து வரிமீது வசூலிக்கப்படும் மீவரி (நூலகத்துக்குச் செல்லவேண்டியது) சுமார் 40 கோடி சென்னை மாநகராட்சி தரவேண்டியது இன்னும் நிலுவையில் உள்ளது என்று அறிவொளி கூறியிருந்தார். அதனை உடனடியாகத் தருவதோடு, இனி ஒவ்வோர் ஆண்டும் இந்த நிலை ஏற்படாது உடனடியாகத் தந்துவிடுவதாக வாக்களித்துள்ளார் மேயர். இதனை குடிமக்களாகிய நாம்தான் கண்காணிக்கவேண்டும்.
*
இன்று இறுதி நாள் ஆனதால், நடைபாதைக் கடைகளைப் பார்வையிட்டேன். இன்றுதான் அதற்கு நேரம் கிடைத்தது. முதலில் ஒரு கடையில் பொருளாதாரம் சார்ந்த புத்தகங்களாக அழகாக அடுக்கிவைத்திருந்தார் கடைக்காரர். அவரைப் பார்த்தால் படித்த நபராகத் தெரியவில்லை. குத்துக்காலிட்டு பீடி பிடித்தபடி இருந்தார். ஆனால் அவ்வளவு சரியாக அவர் புத்தகங்களை அடுக்கியிருந்தது வியக்கத்தக்கதாக இருந்தது. எப்படி அவருக்கு அந்தப் புத்தகங்கள் கிடைக்கின்றன என்று விசாரித்தேன். தெளிவான பதில் கிடைக்கவில்லை.
பைரேட் செய்யப்பட்ட ஆங்கிலப் புத்தகங்கள் நிறையக் கிடைத்தன. ராமச்சந்திர குஹாவின் இந்தியா ஆஃப்டர் காந்தி, அமர்த்தியா சென்னின் தி ஐடியா ஆஃப் ஜஸ்டிஸ், நந்தன் நீலகெனி, நாராயண மூர்த்தி என்று எக்கச்சக்கமான புத்தகங்கள் இப்படி. இதைப் பற்றி யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
பிற அனைவரும் பழைய புத்தகங்களை 20 ரூ, 30 ரூ, 50 ரூ என்று கூவி விற்றுக்கொண்டிருந்தனர். அவற்றில் ஒருசிலவே மாணிக்கங்கள், மீதம் உபயோகமற்றவை. உட்கார்ந்து தேடினால் மட்டுமே நல்லவை கிடைக்கும். நான் ஒரு புத்தகத்தை மட்டும் வாங்கிக்கொண்டேன். காவ்யாவின் பல புத்தகங்கள் கிடைத்தன. ஒரியண்ட் பிளாக்ஸ்வான் முன்னொரு காலத்தில் போட்ட தமிழ்ப் புத்தகங்கள் சில கருக்கழியாமல் கிட்டத்தட்டப் புதிதாகக் கிடைத்தன.
* இந்தப் புத்தகக் கண்காட்சியின் சிறந்த இரண்டு நாள்கள் முதல் வார இறுதிதான். அதாவது 8, 9 ஜனவரி 2011. அந்த நாளில்தான் பெரும்பாலும் அனைத்துக் கடைக்காரர்களும் தங்கள் சிறந்த விற்பனையைப் பார்த்திருப்பார்கள். பொதுவாக இரண்டாவது சனி, ஞாயிறுதான் எல்லாப் புத்தகக் கண்காட்சிகளிலும் சிறப்பானவையாக இருக்கும். இம்முறை பொங்கல் காரணமாக அது தடைப்பட்டுள்ளது என்பதே என் கருத்து.
*
ஒரு முக்கியமான பரிசோதனையை இந்த ஆண்டு பபாஸி செய்து பார்க்கவேண்டும். ஆறு மாதம் கழித்து ஜூன், ஜூலை மாதவாக்கில், நந்தம்பாக்கம் சென்னை டிரேட் செண்டரில் ஒரு புத்தகக் கண்காட்சியை நடத்தவேண்டும். ஒரேயடியாக ஜனவரி கண்காட்சியை அங்கே எடுத்துக்கொண்டு போகவேண்டியதில்லை. ஆண்டுக்கு இரு புத்தகக் காட்சிகளை சென்னையில் எளிதாகச் செய்யலாம். தென் சென்னை ஆசாமிகள் வருவதற்கு எளிதாக இருக்கும்.
இதனை இம்முறை வலியுறுத்திப் பேசப்போகிறேன். வேறு சிலருக்கும் இதேபோன்ற கருத்து இருப்பதாகத் தெரிகிறது.
*
ஹரன்பிரசன்னா சொன்னதுபோல, ஒவ்வொரு தினமும் விடாது எழுதுவது, அதுவும் இரவில் நெடுநேரம் விழித்திருந்து செய்வது அசதியாக உள்ளது. ஆனால் எடுத்துக்கொண்டுவிட்டோமே என்றுதான் ஓட்டினேன். படித்திருக்கும் உங்களுக்கும் அப்படியே தோன்றியிருக்கும். இன்றுடன் நிறைவுபெறுகிறது இந்தத் தொல்லை. இனி, பிற விஷயங்களில் கவனம் செலுத்தலாம்.
மலேசியாவில் இருந்து கலைவேட்கை கொண்டு ஓர் இளைஞன் சென்னையில் கால் பதிக்கின்றான். எந்தவிதமான செல்வாக்கும், கலைப்பின்னணியும் இல்லாத ஒரு புது இடத்தில்தான் அவன் பாடகனாகத் தன் சுற்றை ஆரம்பிக்க வேண்டிய சவால். அவனுக்குத் தேவை ஒரு நல்ல வாய்ப்பு. டெல்லி டூ மெட்ராஸ் என்ற படத்தில் அவனுக்குப் பாடவாய்ப்புக் கிடைக்கின்றது. அதுவும் கிணற்றில் போட்ட கல்லாய் வெளிவராத பாட்டாக அமைந்து விடுகின்றது. ஒரு நல்ல திருப்பத்துக்காகக் காத்திருந்த அவனுக்கு “ஆட்டுக்குட்டி முட்டையிட்டு” என்ற 16 வயதினிலே படப்பாடல் அமைந்து விடுகின்றது. ஒரு வெள்ளந்தித்தனமான அந்தக் குரலே பட்டிதொட்டியெங்கும் அந்தக் கலைஞன் யாரென்று திரும்பிப் பார்க்க வைத்து விடுகின்றது.
அந்தப் பாட்டில் ஆரம்பித்த சுற்று, முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ரசிகர் மனங்களில் கம்பீரமாக உட்கார்ந்து கொள்ளும் அளவுக்கு அங்கீகரிக்கப்படுகின்றார். அவர் தான் மலேசியா வாசுதேவன்.
எண்பதுகளிலே ரஜனி – கமல் என்ற எதிரெதிர் துருவ நட்சத்திரங்கள் தமிழ்த் திரையுலகின் அடுத்த போக்கைத் தீர்மானிக்கும் நட்சத்திரங்களாக உயர்ந்து நிற்கின்றார்கள். கமல்ஹாசனின் நகலாக அச்சொட்டாகப் பொருந்திப்போய் விடுகின்றது எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரல். ஸ்டைலாக, நடிப்பிலங்கணங்களைக் கடந்த எதார்த்தமான ரஜினிகாந்தின் குணாம்சத்துக்குப் பொருந்திப் போக ஒரு குரல் தேவைப்படுகின்றது. அந்த வேளை மலேசியா வாசுதேவனின் குரல் தான் சூப்பர் ஸ்டாராக மாறிக்கொண்டிருந்த ரஜினிகாந்திற்கு அணி செய்யும் விதத்தில் அமைந்து விடுகின்றது.
உதாரணமாக தர்மயுத்தம் படத்தில் வரும் தங்கை செண்டிமெண்ட் பாடல் “ஒரு தங்க ரதத்தில் என் மஞ்சள் நிலவு”, அதே படத்தில் வரும் “ஆகாய கங்கை” என்ற காதல் பாட்டு. இந்த இரண்டு பாடல்களையும் மலேசியா வாசுதேவன் பாடியியிருக்கும் பாணியைக் கவனித்தாலே போதும், ரஜினிகாந்த் என்ற எல்லாத்தரப்பு ரசிகர்களையும் கவரும் ஒரு மாஸ் ஹீரோவுக்கு இந்தக் குரல் எவ்வளவு தூரம் நெருங்கி ஒத்துழைத்திருக்கின்றது என்று.
ஒரு காலக்கட்டத்தில் டி.எம். செளந்தரராஜன் குரலுக்கு மாற்றீடாக யாரையும் பொருத்திப் பார்க்க முடியாத சிவாஜி கணேசனுக்கு மலேசியா வாசுதேவனின் குரல் அச்சொட்டாக ஒட்டிக் கொண்டது. எண்பதுகளில் வந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த படங்களிலே மலேசியா வாசுதேவன் குரல் தான் அவருக்கான குரலாகப் பொருந்தியிருக்கின்றது. குறிப்பாக, முதல் மரியாதை என்ற காவியத்திற்கு மலேசியா வாசுதேவனின் குரலின் பரிமாணம் அப்படத்தின் பாடல்களில் வெளிப்பட்டு படத்தின் உணர்வோட்டத்திற்கு உயிரூட்டியதொன்று. அந்தப் படத்திலேயே அவருக்குத் தேசியவிருது கிட்டியிருக்க வேண்டியது வேறெந்தப்படத்துக்கும் கூடக் கிடைக்காதது பெரும் துரதிஷ்டம்.
நடிகராக வரவேண்டும் என்று சினிமாத்துறைக்கு வந்தவர் பாடகராகப் புகழ் பெற்றதோடு நில்லாமல் தன் நடிப்புத்திறமைக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தமிழ் சினிமாவின் தனித்துவமான வில்லன், சக குணச்சித்திர நடிகராகக் கவர்ந்து கொண்டார். குறிப்பாக கைதியின் டயரி என்ற படத்தில் ஆரம்பித்து முதல் வசந்தம், ஊமை விழிகள் என்று மலேசியா வாசுதேவனுக்கான பாத்திரங்களைச் சிறப்பாகவே செய்து அதிலும் தன் முத்திரையைக் காட்டியவர்.
சாமந்திப் பூ உட்பட நான்கு படங்களுக்கு இசையமைத்தது மலேசியா வாசுதேவனின் இன்னொரு பரிமாணம். சாமந்திப்பூ படத்தில் தானே இசையமைத்துப் பாடிய “ஆகாயம் பூமி” பாட்டைத் தவிர எஸ்.பி.பாலசுப்ரமணியம் , எஸ்.பி.சைலஜா பாடிய “மாலை நேரம்” பாடல் வந்த காலகட்டத்தில் இலங்கை வானொலி ஒலிபரப்பிச் சலிக்காத பாடலாக இருந்தது.
1990 ஆம் ஆண்டு மலேசியா வாசுதேவனை இயக்குனராகவும் தமிழ் சினிமா அறிமுகப்படுத்திக் கொண்டது. ஹரிஷ் என்ற இளம் நாயகன் நடிக்க “நீ சிரித்தால் தீபாவளி” படத்தை இயக்கியிருந்தார் மலேசியா வாசுதேவன். 90 களின் ஆரம்பத்தில் வைகாசி பொறந்தாச்சு மூலம் பிரசாந்த் ஆரம்பித்து வைத்த புதுமுகப் புரட்சி மூலம் 90, 91 களில் ஒரு சில முன்னணி நடிகர்கள் தவிர மற்றைய அனைத்துமே புதுமுகங்களோடு வந்த படங்களாக இருந்தன. இந்த வரிசையில் நீ சிரித்தால் தீபாவளி படம் அமைந்திருந்தாலும் அந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.
மலேசியா வாசுதேவன் தன் ஆரம்ப காலகட்டத்தில் மணிப்பூர் மாமியார் படத்தில் “ஆனந்தத் தேன் காற்று தாலாட்டுதே” பாடலை திருச்சி லோகநாதன் குரல் பாணியில் பாடியிருப்பார். அதே போல திறமை என்ற படத்தில் உமா ரமணனோடு பாடிய “இந்த அழகு தீபம்” பாடலிலும் அந்தப் பழமை என்றும் இனிமையான குரலைக் காட்டியிருப்பார். “மாமனுக்கு மைலாப்பூரு தான்” (வேலைக்காரன்) பாட்டிலே வெளிப்படும் எள்ளல் குரல், “எங்கெங்கும் கண்டேனம்மா” (உல்லாசப்பறவைகள்) பாட்டில் வரும் வெண்ணிற ஆடை மூர்த்தித்தனமாக இன்னொரு குரல், “கோடை காலக் காற்றே” (பன்னீர் புஷ்பங்கள்) பாட்டில் வரும் மென்மையாக ஒலிக்கும் குரல் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம், இவரது குரலின் பரிமாணங்களை.
எண்பதுகளின் தமிழ் சினிமாவைப் பற்றிப் பேசும் போது மலேசியா வாசுதேவனுக்கான பக்கங்கள் தனியாக ஒதுக்கப்படவேண்டியவை. இது அவருக்கு மரியாதை கலந்த அஞ்சலி செலுத்தப்படவேண்டிய தருணம்.
லிபியாவில் போராட்டக்காரர்களை ஒடுக்க ராணுவம் மேற்கொண்ட அதிரடி தாக்குதலில் பொதுமக்கள் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் இறந்தவர்களையும் சேர்த்து கடந்த 4 நாட்களில் பலியானோர் எண்ணிக்கை 140 ஆக உயர்ந்துள்ளது.
அரபு நாடுகளில் ஒன்றான லிபியாவில் கடந்த 42 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறார் மொம்மர் கடாபி. இந்த நூற்றாண்டில் அதிக ஆண்டுகள் ஆட்சியிலிருந்த சர்வாதிகளுள் இவரும் ஒருவர்.
டுனீஷியா மற்றும் எகிப்தில் நடந்த மக்கள் போராட்டங்கள் மற்றும் ஆட்சி மாற்றங்களின் விளைவாக இப்போது லிபியாவிலும் ஆட்சிக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது.
போராட்டத்தை அடக்க அதிபர் கடாபி ராணுவத்தை ஏவியுள்ளார். அவர்கள் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றனர். நேற்று லிபியாவின் மேற்கு பகுதியில் உள்ள பெங்காஷி நகரில் போராட்டத்தில் இறந்தவர்களின் இறுதி ஊர்வலம் நடந்தது. அப்போது அதில் ஈடுபட்ட மக்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியது ராணுவம்.
இதில் நூறுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். கடந்த 4 தினங்களில் இறந்தவர் போராட்டக்காரர்களின் எண்ணிக்கை 140 என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகக் கூட இருக்கலாம் என்கிறார்கள்.
இருந்தும் அங்கு போராட்டம் ஓய்ந்தபாடில்லை. தீவிரம் அடைந்துள்ளது. மேலும் அங்கு நேற்று மாலை 2 மணியிலிருந்து இன்டர்நெட் சேவை ரத்து செய்யப்பட்டது. வெளியுலகத் தொடர்புகளை முற்றாக நிறுத்தவும் ராணுவம் முடிவு செய்துள்ளது.
இதற்கிடையே, வீடு விடாக புகுந்து போராட்டத்தில் ஈடுபடுபவர்களை தாக்க கடாபியின் ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் மக்கள் பதட்டத்தில் உள்ளன.
இந்தப் போராட்டம் காரணமாக, லிபியாவில் உள்ள தங்கள் நாட்டு மக்களை அந்தந்த நாடுகள் திருப்பி அழைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளன. பல நாடுகள் லிபியாவில் உள்ள தங்கள் மக்கள் பத்திரமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளன.
லிபியாவில் இந்தியர்கள் நிறையப் பேர் வசிக்கிறார்கள். இவர்கள் அனைவரும் பத்திரமாக இருப்பதாக வெளியுறவுத் துறைச் செயலர் நிருபமா ராவ் கூறியுள்ளார்.
வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியிலிருந்து மூன்று படகுகளில் கடற்தொழிலுக்கு புறப்பட்டு சென்ற ஆறுபேர் கரை திரும்பாததனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேறறு காலை வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியிலிருந்து மூன்று படகுகளில் கடற்தொழிலுக்கு என புறப்பட்டவர்களில் குறிப்பிட்ட மூன்று படகுகளில் சென்ற ஆறுபேரும் கரை திரும்பாதமையினால் இந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் முதல் இவர்களை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ள போதிலும் இதுவரை அவர்கள் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்திய கடற்தொழிலாளர்கள் 136பேர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பருத்தித்துறை மாதகல் பகுதிகளில் வைத்து யாழ் கடற்தொழிலாளர்களினால் சிறைபிடிக்கப்பட்ட சம்பவத்தின் எதிரோலியாக இவர்கள் இந்திய கடற்தொழிலாளர்களால் கடத்தப்பட்டிருக்கலாம் அல்லது தாக்கப்பட்டிருக்கலாம் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது.
தெற்கு மொசாம்பிக் கடற்பகுதி அருகே கப்பல் மூழ்கியதில் 50 சோமாலிய அகதிகளும், ஒரு தான்சானிய கேப்டனும் பலியாகியுள்ளதாக அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீஸ் செய்தித் தொடர்பாளர் பெட்ரோ கோசா தெரிவித்ததாவது,
ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் இருந்து 129 எத்தியோப்பிய மற்றும் சோமாலிய அகதிகள் சட்டவிரோதமாக தென் ஆப்பிரிக்காவுக்கு கடந்த 9-ம் தேதி கப்பலில் புறப்பட்டனர். ஆனால் அந்த கப்பல் கடந்த 13-ம் தேதி தெற்கு மொசாம்பிக் கடற்பகுதி அருகே தண்ணீருக்குள் மூழ்கியது. இதில் 50 சோமாலிய அகதிகளும், ஒரு தானாசானிய கேப்டனும் கடலுக்குள் மூழ்கி இறந்தனர்.
இதில் காப்பாற்றப்பட்ட 89 பேரையும் மொசாம்பிக் கடற்படையினர் அந்நாட்டில் உள்ள அகதிகள் முகாமிற்கு அனுப்பி வைத்தனர். அதில் ஏற்கனவே 3 ஆயிரம் அகதிகள் உள்ளனர்.
இந்த விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை என்றார்.
ஆப்பிரிக்காவில் பொருளாதாரம் மற்றும் அரசியல் பிரச்சனைகள் அதிகம் இருப்பதால் அங்குள்ள மக்கள் தென் ஆப்பிரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுகின்றனர். அவ்வாறு செல்பவர்களில் ஏராளமானோர் வழியில் ஏற்படும் விபததுகளில் பலியாகின்றனர்.
சென்னை திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஐஞர் டிவி அலுவலத்தில் சிபிஐ அதிகாரிகள் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை சோதனை நடத்தினர். மேலும் இந்த சேனலின் நிர்வாகி சரத்குமாரின் வீட்டிலும் சிபிஐ சோதனை நடத்தியது. 10 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் இந்தச் சோதனைகளை நடத்தினர். சரக்குமாரின் வீட்டிலிருந்து சில ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மிகக் குறைந்த விலையிலான 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் லாபமடைந்த ஷாகித் உசேன் பல்வாவின் ஸ்வான் டெலி்காம்-டி.பி ரியாலிட்டி நிறுவனத்தின் துணை நிறுவனமான சினியுக் மூலம் கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடி பணம் தரப்பட்டதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.
ஆனால், சினியுக் நிறுவனம் தங்கள் நிறுவனத்தின் பங்குகளை வாங்கவே ரூ. 214 கோடியை முதலீடு செய்ததாகவும், பங்கு விலைகள நிர்ணயிப்பதில் சிக்கல் எழுந்ததால் அந்தப் பணத்தை திருப்பி ரூ. 31 கோடி வட்டியோடு சேர்த்து சினியுக் நிறுவனத்திடம் தந்துவிட்டதாகவும் கலைஞர் தொலைக்காட்சி கூறியுள்ளது.
மேலும் சினியுக்-டி.பி.ரியாலிட்டி நிறுவனங்களின் தொடர்பு குறித்து தங்களுக்கு ஏதும் தெரியாது என்றும் கலைஞர் தொலைக்காட்சி கூறியுள்ளது. ஆனால், இதை சிபிஐ நம்பவில்லை. குறைந்த விலையில் ஸ்பெக்ட்ரம் தரப்பட்டதற்காக லஞ்சமாக தரப்பட்ட பணத்தில் ஒரு பகுதி தான் இந்த ரூ. 214 கோடி என்றும், ஸ்பெக்ட்ரம் விவகாரம் வெளியில் வெடிக்கும் முன் இந்தப் பணத்தை கலைஞர் தொலைக்காட்சிக்கு டி.பி.ரியாலிட்டி தந்ததாகவும், பின்னர் பிரச்சனை பெரிதான பின் அதை கலைஞர் தொலைக்காட்சி திருப்பித் தந்துவிட்டதாகவும் சிபிஐ கருதுகிறது.
இது தொடர்பான ஆவணங்களைத் தேடியே இன்று ரெய்ட் நடத்தப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து வந்த 10 பேர் கொண்ட சி.பி.ஐ. குழு நேற்று நள்ளிரவு 12.10 மணிக்குத் தொடங்கி அதிகாலை 5.30 மணி வரை கலைஞர் டிவி அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டது.
அப்போது கலைஞர் டி.வி. அதிகாரிகள் உடன் இருந்தனர்.
கனிமொழியிடமும் விசாரணை நடத்த சிபிஐ முடிவு?-கேள்வி பட்டியலை.
2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக கலைஞர் தொலைக்காட்சியில் ரெய்ட் நடத்தியுள்ள சிபிஐ விரைவில் முதல்வர் கருணாநிதியின் மகளும் ராஜ்யசபா எம்பியும் கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரருமான கனிமொழியிடமும் விசாரமாநிலங்களவை திமுக உறுப்பினருமான கனிமொழியிடம் விசாரணை நடத்தவுள்ளதாகத் தெரிகிறது.
அதே போல கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாகி சரத்குமாரிடன் வீட்டில் ரெய்ட் நடத்தப்பட்டுள்ள நிலையில் அவரிடமும் சிபிஐ விசாரணையை ஆரம்பித்துவிட்டது.
கலைஞர் தொலைக்காட்சியில் முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு 60 சதவீத பங்குகளும், கனிமொழிக்கு 20 சதவீத பங்குகளும், சரத்குமாருக்கு கொஞ்சம் பங்குகளும் உள்ளன.
சன் டிவியின் பங்குகளை தயாளு அம்மாள் திருப்பித் தந்தபோது கிடைத்த பணத்தை வைத்து கலைஞர் டிவியில் பங்குகளை வாங்கியுள்ளார் தயாளு அம்மாள். அதே போ ல சன் டிவியின் பங்குகள் மூலம் முதல்வர் கருணாநிதி தனக்குக் கிடைத்த பணத்தில் பிரித்துக் கொடுத்த ரூ. 2 கோடியை முதலீடு செய்து கனிமொழி கலைஞர் டிவி பங்குகளை வாங்கியுள்ளார்.
ஆனால், பங்குதாரர் என்ற அளவோடு தயாளு அம்மாள் நின்று கொண்டார். அதே போல பெயரளவுக்கே கனிமொழியும் கலைஞர் டிவியின் இயக்குனராக இருந்துள்ளார். மற்றபநிர்வாகத்திலோ அதன் பண பரிவர்த்தனைகளிலோ இருவருமே தலையிடுவதில்லை என்று அந்தத் தொலைக்காட்சி கூறியுள்ளது.
முக்கிய முடிவுகளை சரத்குமார் தலைமையிலான அதிகாரிகளே எடுத்து வந்துள்ளனர்.
இந் நிலையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் பலனடைந்த ஸ்வான் டெலிகாமின் தாய் நிறுவனமான டி.பி.ரியாலிட்டி தனது இன்னொரு துணை நிறுவனமான சினியுக் மூலம் கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடியைத் தந்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தப் பணத்தை கலைஞர் டிவி திருப்பித் தந்துவிட்டாலும் கூட, எதற்காக இந்த நிறுவனம் பணத்தை டிவியில் முதலீடு செய்ய முன் வந்தது என்று சிபிஐ கேள்வி எழுப்புகிறது.
இதனால் இது தொடர்பாக கலைஞர் டிவியின் தலைமை நிர்வாக அதிகாரி சரத்குமார், இயக்குநர் என்ற முறையில் கனிமொழி ஆகியோரிடம் விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்திருந்தது.
இந் நிலைசில் சரத்குமாரின் வீட்டில் நேற்றிரவு சிபிஐ அதிகாரிகள் ரெய்ட் நடத்தியதோடு அவரிடம் விசாரணையையும் ஆரம்பித்துவிட்டனர்.
அடுத்த கட்டமாக கனிமொழியிடம் விசாரணை நடக்கும் என்று தெரிகிறது. இது தொடர்பாக கேள்விகள் அடங்கிய பட்டியலை சில நாட்களுக்கு முன்பே சிபிஐ அதிகாரிகள் கனிமொழிக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் தெரிகிறது.
அதே நேரத்தில் கலைஞர் டி.வியின் வெறும் முதலீட்டாரான இன்னொரு இயக்குநர் தயாளு அம்மாளை விசாரணைக்கு அழைக்கும் திட்டம் ஏதும் இல்லை என்று சிபிஐ கூறியுள்ளது. அவர் தொலைக்காட்சி விவகாரங்களில் எந்த விதத்திலும் தொடர்பில்லாதவர் என்று சிபிஐ கூறியுள்ளது.
சம்மன் வரவில்லை-கனிமொழி:
இந் நிலையில் சிபிஐயிடமிருந்து தனக்கு சம்மன் எதுவும் வரவில்லை என்று கனிமொழி கூறியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், சிபிஐயிடமிருந்து எனக்கு சம்மன் எதுவும் வரவில்லை. கலைஞர் டி.வியில் சிபிஐ சோதனை நடத்தியது குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்றார்.
சிபிஐயின் இந்த நடவடிக்கைகள் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையை பாதிக்குமா என்று கேட்டதற்கு பதிலளிக்க கனிமொழி மறுத்துவிட்டார்.
125 ஆண்டுகளுக்குப் பிறகு இரகசியமாக வைக்கப்பட்ட கோகோ கோலாவின் சூத்திரம் வெளியாகியுள்ளது. கடந்த 1886ம் ஆண்டு தான் கோகோ கோலா முதன் முதலாக தயாரிக்கப்பட்டது. முதலில் அட்லாண்டாவில் மட்டுமே விற்பனையான இந்த குளிர்பானம் பிறகு உலகம் முழுவதும் விற்பனையாகி வருகிறது. கோகோ - கோலா விற்பனையாகத் தொடங்கியது முதல் பலரும் அதற்கு பிரத்தியேக சுவை அளிக்கும் சூத்திரத்தை தெரிந்துகொள்ள முயன்றனர். அதில் பலர் தாங்கள் கண்டுபிடித்துவிட்டதாகக் கூட கூறினர். ஆனால் யார் கையிலும் சிக்காமல் சூத்திரம் பரம ரகசியமாகவே பாதுகாக்கப்பட்டு வந்தது. அப்படிப்பட்ட சூத்திரத்தை கண்டுபிடித்தவர் ஜான் பெம்பர்டன். இந்த சூத்திர இரகசியத்தை அமெரிக்காவில் இருந்து ஒலிபரப்பாகும் ஒரே ரேடியோ தெரிவித்துள்ளது. அதன் நிகழ்ச்சி ஒரு இணையத்தளத்திலும் வெளியாகி உள்ளது. கோகோ - கோலாவின் அதிகார பூர்வமான எழுத்துப் பிரதி அட்லாண்டாவில் உள்ள சன்டிரஸ்ட் வங்கியின் பாதுகாப்பு அறையில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் 2 ஊழியர்களுக்கு மட்டும்தான் அந்த சூத்திரம் தெரியும் என்று கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் ஒன்றாகப் பயணிப்பதில்லை என்று தெரிகிறது. இந்நிலையில் அவ்விருவர் மூலமும்தான் இரகசியம் வெளியாகி இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.
எம்.ஜி.ஆர்.ஆட்சிக்காலத்தில் தமிழக காவல் துறையில் பணியாற்றிய மோகன்தாஸ் ஒரு சுவாரசியமான மனிதர். எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமானவர்; இவரை ஆலோசனை செய்யாமல் எம்.ஜி.ஆர். முக்கிய முடிவுகளை எடுக்க மாட்டார்; எம்.ஜி.ஆருக்கு கண்ணும், காதும் மோகன்தாஸ்தான் என்றெல்லாம் சொல்வார்கள். அவர் ரிடையர் ஆனவுடன், ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோவிலுக்கு அருகில் அவர் வசித்த உள்ள அடுக்கு மாடி குடியிருப்பின் மொட்டை மாடியில் இருந்த அவரது பிரத்யேக அறையில் (அதற்கு செல்லமாக “டென்” என்று பெயரிட்டிருந்தார்) கல்கிக்காக அவரை சந்தித்து பேட்டி கண்டேன். அதற்கு முன்பும், பின்னரும் கூட சில தடவைகள் அவரை சந்தித்திருக்கிறேன் என்றாலும், சொன்ன விஷயங்களின் அடிப்படையில் பார்த்தால், ரிடையர் ஆனதும் அளித்த பேட்டி முக்கியமானது.
அவர் உத்தியோகத்தில் இருந்தபோது விவரமாகப் பேச முடியாமல் போன விஷயங்கள் உட்பட சுமார் இரண்டு மணி நேரம் பேசினார். பழைய போட்டோக்கள் சிலவற்றை தன் சொந்த புகைப்பட ஆல்பத்திலிருந்து எடுத்துக் கொடுத்தார். “நீங்கள் எப்படி எம்.ஜி.ஆருக்கு நெருக்கமானீர்கள்? மலையாளி என்பதால்தானா?” என்று கேட்டபோது, ” அவர் என்னை தமிழ்நாடு போலிசின் இன்டலிஜென்ஸ் பிரிவின் தலைவராக்கினார். 24 மணி நேரமும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய பொறுப்பு அது. மாநிலம் முழுவதும் என்ன நடக்கிறது? என்பதை மட்டுமின்றி, பக்காவான இன்டலிஜென்ஸ் நெட் ஒர்க் மூலமாக அடுத்து எங்கே என்ன நடக்கப்போகிறது என்பதைக் கூட அறிந்து முதலமைச்சருக்கு தெரிவிக்கக் கடமைப் பட்ட பதவி அது. எம்.ஜி.ஆரும், நானும் என்று இல்லை, ஒரு மாநில முதலமைச்சருக்கும், ஐ.பி. தலைவருக்கும் நெருக்கமான தொடர்பு இருக்கவே செய்யும்” என்று விளக்கியவர், தனது பதவிக்காலத்தில் இறுதிக்கட்டத்தில் ஏற்பட்ட சில சங்கடங்களையும் கூட தயங்காமல் பகிர்ந்துகொண்டார்.
“ஐ.பி. தலைவராக நான் எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக இருந்தது, பலருடைய பொறாமையை சம்பாதித்துக் கொடுத்தது. நான் என் மகள் திருமணத்துக்காக ஒரு மாசம் லீவு போட்டுவிட்டு கேரளாவுக்குப் போயிருந்த சமயம், மரியாதை நிமித்தம் அப்போதைய கேரள முதலமைச்சர் கருணாகரனை சந்தித்தேன். இரண்டே நிமிட சந்திப்புதான் அது என்றாலும், இந்தியன் எக்ஸ்பிரஸ் அதை அரை மணி நேர உரையாடல் என்று செய்தியாக்கிவிட்டது.
என்னை எப்படியாவது சங்கடத்தில் மாட்டிவிடவேண்டும் என்று காத்திருந்தவர்கள் எம்.ஜி.ஆரிடம் போய், ” நான் எம்.ஜி.ஆர்.பற்றிய ரகசியங்களை கருணாகரன் மூலமாக ராஜிவ் காந்திக்குச் சொல்லி அனுப்பி, எம்.ஜி.ஆர். மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்திருப்பதாக கதை கட்டிவிட, எம்.ஜி.ஆரும் அதை நம்பிவிட்டார். மகள் திருமணத்துக்கு பத்தே நாட்கள் இருந்த நிலையில், என் லீவை ரத்து செய்து, பணிக்குத் திரும்ப உத்தரவிட்டார். பணிக்குத் திரும்பிய என்னை, பழைய பதவியில் தொடர விடாமல், ஒரு டம்மியாக ஓரிடத்தில் உட்காரவைத்தார்கள். இந்த உதாசீனம் என்னை ரொம்ப பாதிக்கவே, ராஜினாமா கடிதம் கொடுத்தேன். அப்புறம் நிலைமை சீரடைய, ராஜினாமாவை வாபஸ் பெற்றுக் கொண்டேன்” என்றும் விளக்கினார்.
ஓய்வு பெற்ற பிறகு, எம்.ஜி.ஆர் பற்றி மோகன்தாஸ் ஒரு புத்தகம் கூட எழுதினார். “எம்.ஜி.ஆர்: தி மேன் அண்ட் தி மித் ” என்று தலைப்பு. அந்தப் புத்தகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டது.
ராஜிவ் காந்தி படுகொலை நடந்தபோது சிறப்பு புலனாய்வுக் குழு ராஜிவ் படுகொலையைச் செய்தவர்கள் விடுதலைப் புலிகள்தான் என்ற கோணத்திலேயே புலனாய்வினை மேற்கொள்வது சரியல்ல என்ற அவரது கருத்து கூட சலசலப்பை ஏற்படுத்தியது. இதே கருத்தை அடிப்படையாக வைத்து மோகன்தாஸ், ஆங்கிலத்தில் ஒரு நாவல் கூட எழுதினார். ராஜிவ் காந்தி, நரசிம்ம ராவ், சந்திரா சுவாமி என்று எந்தப் பெயர்களையுமே நேரிடையாகக் குறிப்பிடாமல் நாவலில் கதாபாத்திரங்களை உருவாக்கி இருந்தார். அந்த நாவலின் மூலமாக அவர் சொல்ல வந்தது, நம் ஊரில் இருக்கும் அந்த அரசியல் கட்சியின் முக்கியஸ்தர்கள், தங்கள் தலைவரது ஊழல் காரணமாக கட்சிக்கு ஏற்பட்டிருக்கும் அவப்பெயரைப் போக்கி, மீண்டும் ஆட்சிக்கு வர அந்த தலைவரையே பலியாக்கி, அனுதாப அலையை வீசச் செய்யும் வியூகத்தை வகுக்கிறார்கள். அந்தப் படுகொலையை, அந்தத் தலைவரின் மீது கோபம் கொண்ட அயல்நாட்டு போராளிக்குழுவின் மூலமாகச் செயல் படுத்துகிறார்கள். அயல் மண்ணின் போராளிக் குழு, தலைவரது படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கருவிதான் என்பது அந்த நாவலின் ஹைலைட். அந்த நாவல் எதிர்பார்த்த பரபரப்பை ஏற்படுத்தவில்லை.
மோகன்தாஸ் சி.பி.ஐ. யில் இருந்த நாட்களில் அவர் துப்பு துலக்கிய கேஸ்கள் பல. உயர்நீதி மன்ற நீதிபதி ஒருவரது தம்பி தன் 60 வது பிறந்த நாளைக்கொண்டாடியதன் அடிப்படியில், விசாரணை நடத்தியதில் அந்த நீதிபதி பொய்யான வயது கொடுத்து வேலைக்குச் சேர்ந்தது அம்பலமானது. அதன் பிறகு, அந்த நீதிபதி தானாகவே முன் வந்து பதவியிலிருந்து ஓய்வு பெற்றுக் கொண்டதாகச் சொன்னார் மோகன்தாஸ்.
தன் சர்வீசின் ஆரம்ப காலத்தில் தூத்துக்குடியில் பணியாற்றிய அனுபவம் பற்றிச் சொன்னார் மோகன்தாஸ். அப்போது தூத்துக்குடி ரௌடியிசத்துக்குப் பேர் போன ஊராம். அங்கே, இவர் கையாண்ட ரௌடி தூத்துக்குடி கொம்பன் கேஸ் மிகப் பிரபலம். அந்தக் கொம்பன், மேலே ஏழெட்டு கொலை கேஸ்கள் இருந்தன. ஆனால் அவன் மீது போலிஸ் கை வைத்தது இல்லை. அவனைப் பிடிக்க சரியான ஒரு தருணத்துக்கு பொறுமையோடு காத்திருந்து, சாமர்த்தியமாகப் பிடித்து, கோர்ட்டில் நிறுத்தி, அவனுக்கு ஏழாண்டுகள் சிறைத் தண்டனை வாங்கிக்கொடுத்தார் மோகன்தாஸ்.
அவர் சொன்ன இன்னொரு சுவாரசியமான கொலை வழக்கில் நான்கு பேர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. ஆனால் மூன்றாவது, நான்காவது நபர்கள் தங்களுக்கும் இந்த கொலைக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது என்று சொன்னார்கள். ஆனால் அந்த கேஸின் முதல் தகவல் அறிக்கையில் அந்த நான்கு பேருடைய பெயர்களுமே குறிப்பிடப்பட்டிருந்தன. மோகன்தாஸ் தீவிர புலன் விசாரணை நடத்தினார். துப்பு துலங்கியது. முதல் இருவரும்தான் கொலையோடு சம்மந்தப்பட்டவர்கள். பர்சனல் விரோதம் காரணமாகப் பழி வாங்கும் நோக்கத்துடன் மற்ற இரண்டு பேர்களின் பெயர்களும் கேஸில் சேர்க்கப்பட்டிருக்கின்றன என்பது தெரியவந்தது. குற்றம் சாட்டப்பட்ட நாலு பேர்களில் தக்க ஆதாரங்களைத் திரட்டி முதல் இருவருக்குத்தான் கொலையில் சம்மந்தமுண்டு; மற்ற இருவரும் சம்மந்தமில்லாத அப்பாவிகளென்று நிரூபித்து, அந்த இருவருக்கும் விடுதலை கிடைக்கச் செய்தார். இதை நீதிபதிகள கூட பாராட்டினார்கள்.
மனைவியுடன்
எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் இந்தியா விடுதலைப் புலிகளுக்குக் கொடுத்துவந்த ஆதரவு நிலைபாடு அனைவருக்கும் தெரியும். விடுதலைப்புலிகள் மற்றும் இதர போராளிக் குழுக்கள் பற்றிய அனைத்துத் தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருப்பார் மோகன்தாஸ். காக்கிச் சீருடைப் பணிக்காலத்தில் அவரது மாபெரும் சாதனை என்று நான் நினைப்பது அவர் விடுதலைப் புலிகளிடம் நடத்திய ஆயுதப் பறிப்புதான். அது நடந்தபோது கூட அந்த ராஜ தந்திர வியூகம் பற்றி பற்றி விரிவாகப் பேசாத மோகன்தாஸ் ரிடைர்மென்ட்டுக்குப் பிறகு என்னிடம் விரிவாகப் பேசினார்.
மோகன் தாஸ் என்னிடம் விவரித்ததை நான் இங்கே பகிர்ந்துகொள்கிறேன்: “விடுதலைப் புலிகள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆயுதமேந்தித் திரிந்து வந்த காலம் அது. வேதாரண்யம், சென்னை போன்ற ஒரு சில இடங்களில் நடந்த சம்பவங்கள் காரணமாக மத்திய அரசு போராளிகளிடமிருந்து ஆயுதங்களைக் களைய வேண்டும் என நினைத்தது. ஆனால் அதைச் செய்கிற பணியை எம்.ஜி.ஆரிடம் விட்டுவிட்டது. இது பற்றிப் பேச என்னை அழைத்தார் முதலமைச்சர்”
“விடுதலைப்புலிங்க கிட்டேயிருந்து ஆயுதங்களைப் பிடுங்கிடுங்க” என்றார் எம்.ஜி.ஆர். நான்,” அது இயலாத காரியம்”என்றேன். அவரோ,” எப்படியாவது செய்தே ஆகணும்” என்றார். “நிறைய உயிர்ச் சேதம் ஆகுமே?” என்று நான் சொல்ல,” மத்திய அரசுக்கு நான் வாக்கு கொடுத்துவிட்டேன்” என்றார்.
மத்திய, மாநில அரசுகள், உள்நாட்டுப் பாதுகாப்பு, அயலுறவு விவகாரம், உள்ளூர் அரசியல் என பல பரிமாணங்கள் கொண்ட மிகவும் சிக்கலான ஆயுதப் பறிப்பை எப்படிச் செய்வது என்று தீவிரமாக யோசித்தேன். நான் ஸ்பெஷலாக உருவாக்கிய கமாண்டோ படையினரைக் கொண்டு இதனைச் செயல்படுத்த ஒரு திட்டம் வகுத்தேன். இது ரொம்பவும் ரகசியமாகச் செய்ய வேண்டிய விஷயம் என்பதால், முதலமைச்சருக்குக் கூட நீங்கள் உத்தரவிட்டபடி ஆயுதப் பறிப்பை செய்யப்போகிறேன்” என்று மட்டும் சொன்னேனே ஒழிய எப்போது என்று தேதியைச் சொல்லவில்லை.
தமிழ்நாட்டில் போராளிகளின் முகாம்கள் எங்கெங்கே உள்ளன? அவற்றில் உள்ள முக்கிய போராளிகள், அவர்களிடமிருக்கும் ஆயுதங்கள் என எல்லா விவரங்களும் எனக்குத் தெரியும். ஒரு குறிப்பிட்ட தினத்தில் ஒவ்வொரு போராளி முகாமிற்கும் ஒரு கமாண்டோ சென்று, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, “சமீபகாலமாக போராளிகள் ஆயுதங்களோடு திரிவது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இன்னும் ஒரு வார காலத்துக்காவது நீங்கள் ஆயுதங்களை கையிலெடுக்காமல் இருக்கவேண்டும் என அரசாங்கம் நினைக்கிறது.” என்று சொன்னதும் அவர்களும் நிலைமையைப் புரிந்து கொண்டார்கள்.
“எல்லா ஆயுதங்களையும் உங்கள் முகாமிலேயே ஒரு அறையில் போட்டுப் பூட்டி, சாவியை நீங்களே வைத்துக் கொண்டால்போதும்” என்றதும் உடனடியாக அப்படியே செய்தார்கள். இப்படியாக தமிழகத்தின் ஒவ்வொரு முகாமிலும் ஆயுதங்கள் ஒரு பூட்டிய அறையில் முடக்கப்பட்டன; போராளிகள் நிராயுதபாணிகளானார்கள். கமாண்டோக்கள் நன்றி தெரிவித்துவிட்டுத் திரும்பிய அரை மணிநேரத்தில் நவீன ஆயுதங்கள் தாங்கிய ஸ்பெஷல் கமாண்டோ படையினர் போராளிகளின் பல்வேறு முகாம்களுக்கும் அதிரடியாகச் சென்று சுற்றி வளைத்தார்கள். ஆயுதங்கள் வைத்திருந்த அறைகளின் பூட்டைத் தகர்த்து அனைத்து ஆயுதங்களையும் அள்ளிப்போட்டுக் கொண்டு வந்துவிட்டார்கள். அதிர்ச்சியிலிருந்து மீண்டு, என்ன நடக்கிறது என்று போராளிகள் அறிந்துகொள்வதற்கு முன்பாகவே எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. நவீன ஆயுதங்களுடன் வந்த கமாண்டோ படையினரை நிராயுதபாணிகளான போராளிகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
அன்றைக்கு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். டெல்லி சென்றிருந்தார். டெலிபோனில், விவரம் சொன்னபோது,” சாவு ரொம்பவுமா? என்றார். “ஒரு கேஷுவாலிடி கூட இல்லை” என்றதும் ஆனந்த அதிர்ச்சி அடைந்தார்” என்று அந்த அத்தியாயத்தைச் சொல்லி முடித்தார் மோகன்தாஸ். இதில் ஆன்டி-கிளைமாக்ஸ் என்னவென்றால், ஆயுதப் பறிப்பு அமைதியாக நடந்து முடிந்துவிட்டாலும், அடுத்த சில நாட்களில் பிரபாகரன் ஆயுதங்களைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என உண்ணாவிரதம் இருக்க, எம்.ஜி.ஆர். அப்படியே செய்தார்.
கதை மற்றும் நடிப்பின் மீது நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ… கவர்ச்சியின் மீது நம்பிக்கை வைத்து ரீலிஸ் ஆகும் சில படங்களை தமிழ் ரசிகர்கள் வெற்றிபெறச் செய்ததாலோ என்னவோ தமிழ் திரையுலகிற்கு டப்பிங் கவர்ச்சி படங்களுக்கு என்றுமே பஞ்சம் வந்ததில்லை.
அந்த வரிசையில் காரசாரமான ஆந்திர மசாலா படங்கள் இரண்டு கவர்ச்சியை மட்டுமே நம்பி திரையிடப்படவிருக்கின்றன. நம்மூரில் காட்டாத கவர்ச்சியையெல்லாம் தெலுங்கு தேசத்திற்கு சென்று காட்டும் நம்மூர் நாயகிகள் நடித்த படங்கள்தான் அவை.
நடிகர் நாகார்ஜுனா நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ப்ரியாமணியும், அனுஷ்காவும் போட்டி போட்டு கவர்ச்சி காட்டி நடித்திருக்கும் படம் வம்பு என்ற பெயரில் ரீலிஸ் ஆகிறது.
இதேபோல நடிகர் மகேஷ்பாபுவும்- அனுஷ்காவும் நடித்த படம் ஒன்றும் ரீலிஸ் ஆகவிருக்கிறது.
இந்த 2 படங்களுமே செய்தியின் ஆரம்பத்தி்ல் சொன்னபடி நாயகியரின் கவர்ச்சியை மட்டுமே நம்பி தமிழக தியேட்டர்களை அலங்கரிக்கவுள்ளன. தமிழ் ரசிகர்களை கவரும் வகையில் பிரத்யேக கவர்ச்சி போஸ்டர்களும் தயாராகி விட்டன. அனுஷ்கா – ப்ரியாமணியின் கவர்ச்சியை தமிழ் ரசிகர்கள் ரசிக்காமல் விட்டுவிடுவார்களா என்ன?
Automatic Writing என்பது நிரூபணம் செய்ய இயலாத ஒன்று (பிறப்பு இறப்புச் சுழற்சி போல). ஒரு குழந்தையைப் பார்த்து அது ஒரு தாயின் வயிற்றிலிருந்து வெளிவந்ததென்று தெரிந்து கொள்கிறோம் . அதேபோல ஒரு இறப்பின்போது உயிர்ச்சக்தி போய்விட்டது என்பதைத் தெரிந்து கொள்கிறோம். அதே போல தன்னிச்சையான எழுத்தென்பதைப் பார்க்கவும் வாசிக்கவும் இயலும். ஆனால் அதை எழுதவோ டைப் பண்ணவோ இயக்கும் அந்த விசை எமது எந்த ஐம்புலன்களாலும் அறிய முடியாத ஒன்று. பல புத்தகங்கள் இந்த மாதிரி எழுதப்படிருக்கின்றன. அவற்றுள் ஒன்று Patience Worth Series Received by a Midwestern Housewife என்பதும் இன்னொன்று The Fascinating New Testament Stories Dictated through Geraldine Cummins என்பதுவும் அடங்கும்.
பொதுவாக இப்படிப்பட்ட உந்துசக்தி நம்மைப்போலப் பிறந்து வாழ்ந்து இறந்து போன ஒருவரிடமிருந்து வருவதாகச் சொல்லப்படுகிறது. இந்த விஷயங்களை மறுப்பவர்கள் பொதுவாக இது எமது அடிமனத்திலிருந்துதான் வருவதாகச் சொல்வார்கள். அடிமனத்தில் தான் எல்லா நினைவுகளும் தேக்கி வைக்கப்பட்டிருப்பதாகச் சொல்வார்கள். இப்படியாகக் கருத்து வேறுபாடுகள் பல விதமாக உள்ளன.
என்னால் இவற்றுக்கெல்லாம் பதில் சொல்லமுடியுமென்று சொல்லவரவில்லை. என்னால் ஒன்று மட்டுமே சொல்ல இயலும். அதாவது இப்புத்தகத்தில் வரும் மறுவாழ்வைப் பற்றிய விளக்கங்களெல்லாம் எனது கற்பனையோ இயற்றியதோ இல்லை. அவை எனது டைப்ரைட்டரில் டைப்பண்ண முன் எனக்குத் தெரியாதவை.
உதாரணத்துக்கு இந்தியாவிலிருக்கும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த உதய்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த டாக்டர் ஐ.சி.சர்மா என்பவர் எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அவர் உதய்பூர் பல்கலைக்கழகத்தின் தத்துவவியற் பீடத்துக்குத் தலைவராவார் (head of the department). அக்கடிதத்தில் அவர் தனது மாமியார் இறந்ததை முன்னிட்டு உடனடியாக 'ஹிஸார்' என்ற இடத்துக்குச் செல்ல வேண்டியிருந்ததாகவும், உதய்பூர் வந்ததன் பிற்பாடு எனக்குத் தன்னிச்சை எழுதுகை (automatic writing) வருவதையறிந்ததாகவும் தனது மனைவி பாக் (Bhag) க்கு ஆறுதல் தரும் விதமாக ஏதாவது செய்ய இயலுமா ஏனெனில் அவரது மாமியார் 'சீதா தேவி மனுஜா' அகால மரணமடைந்ததாகவும் எழுதியிருந்தார்.
அடுத்த நாள் காலை ஆர்தர் போர்ட் (Arthur Ford) இடம் இறந்த 'சீதா தேவி'யைப் பற்றி ஏதாவது தெரியுமாவெனக் கேட்டதற்கு ஆர்தர் சொன்ன (எழுத்து மூலமான) பதில் "நாம் அவரைச் சந்தித்தோம். அவர் சந்தோஷமான ஆத்மா. இங்கு வந்ததில் அவர் வெகு சந்தோஷமாகவும் சக்தியுடனும் இருப்பதாகவும் அவரது பூவுலகத்திலிருக்கும் குடும்பத்தினரைப் பிரியவில்லை என்றும் கூடிய நேரம் அவர்களுடன் தான் இருப்பதாகவும், அவர்கள் மனத்தைத் தேற்றுமளவும் தான் அப்படியிருப்பேன் என்று சொன்னதாகவும் அதனுடன் வேறு பல பிரத்தியேகச் சமாச்சாரங்கள் எழுதப்பட்டதுடன் ஒரு குறிப்பிட்ட நீல மலரொன்றைச் சொல்லித் தனக்கு விருப்பமான அந்த மலரைப் பார்க்கும் போது தன்னை நினைக்கும் படியும் அந்த நேரத்தில் அங்கு தானும் இருப்பேனென்று சொன்னதாகவும் எழுதப்பட்டது.
இந்த சீதா என்பவரைப் பற்றி எனக்கு ஒரு நாளும் தெரியாது. அவர் இருக்கும் இடத்தில் அந்த நீலப்பூப் பூப்பது பற்றியும் எனக்குத் தெரியாது. எனவே இதை டாக்டர் சர்மாக்கு எழுதுவதற்குத் தயக்கமாக இருந்தது. இருந்தாலும் எதற்கும் எழுதுவோமெனத் தீர்மானித்து எழுதினேன். ஏப்பிரல் 20 ஆம் திகதி 1971 ஆம் ஆண்டு டாக்டர் சர்மா ஜோட்பூரிலிருந்து அதற்குப் பதில் எழுதினார். ஆர்தருடைய ஒவ்வொரு சொல்லும் உண்மையென்றும் அந்த நீலப்பூவைப் பற்றித் தனக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை என்றும் ஆனால் மாமனார் சொன்னதாக ஒரு விஷயம் அதில் எழுதியிருந்தார். கடந்த ஆறு மாதங்களாக சீதா பூக்களில் அதிகம் விருப்பமடையவராக இருந்ததாகவும் அதிலும் குறிப்பாக அந்த நீலப்பூவை அவர் உண்டாக்கி அதை வீட்டை அழகுபடுத்த அவர் உபயோகித்ததாகவும் மாமனார் சொன்னதாக எழுதியிருந்தார்.
சர்மாவுக்கோ அவரது மனைவிக்கோ கூட சீதாவின் இந்தக் கடந்த ஆறுமாதமாக நீலப்பூவிலிருந்த ஈடுபாடு தெரிந்திருக்கவில்லை. எனக்கோ திருமதி சர்மாவின் பெற்றார் உயிருடனிருக்கிறார்களா என்பதே அவரது (மாமியாரின் இறப்பைப் பற்றிய) கடிதம் வருமளவும் தெரியாது. எனவே இந்த விஷயம் சாதாரணமான வழிகளில் எனக்குத் தெரிந்திருக்க நியாயமே இல்லை. நிச்சயமாக இது ஆர்தர் சீதாவை மேலுலகில் சந்தித்தை உறுதிப்படுத்துகிறது.
இப்புத்தகம் மேலுலகைப் பற்றிய சந்தேகங்களை ஆர்தரின் சொந்த அனுபவங்களின் மூலமாக நிவர்த்திக்கும்
முதல்நாள் முதல் காட்சியில் ‘பயணம்’ திரைப்படத்தைப் பார்ப்பேன் எனக் கனவிலும் நினைக்கவில்லை. ஏற்கெனவே ‘மொழி’, ‘அபியும் நானும்’ தந்த கடும் மனச்சிக்கலில் இருந்து, ராதா மோகனின் இன்னொரு செண்டிமெண்ட் இண்டெலெக்சுவல் காமெடிக் கொடுமையைக் காணத் துணியவில்லை. அலுவலகத்தில் நண்பர்களோடு சேர்ந்து போகலாம் என்று முடிவானதும் ஒரு சின்ன நப்பாசை ஒட்டிக்கொண்டது. ராதா மோகன் மட்டுமே தற்காலத் தமிழ் நாட்டின் தலைசிறந்த இயக்குநர் என்ற முடிவுக்கு, ராதா மோகனின் முதல் படம் வருவதற்கு முன்பே வந்துவிட்ட பாராவும் உடன் வருகிறார் என்பதால் உடனே ஒப்புக்கொண்டேன். வேலை இருக்கிறது என்ற ஒரு வரியில் பாரா ஒதுங்கிக்கொண்டார் இன்று. நான் படத்துக்குப் போனேன். அங்கே கடவுளும் சைத்தானும் ஒன்று சேர்ந்து டிக்கெட் கிழித்தார்கள்.
பள்ளிக்கூடத்தை கட் அடித்துவிட்டுப் படத்துக்குச் செல்லும்போது யுனிஃபார்முடன் செல்வதுபோல, நான் கிழக்கு டி ஷர்ட்டுடனும் உள் நெஞ்சில் ‘வேலையை விட்டுட்டு படம் பார்க்க வந்திருக்கமே’ என்னும் குறுகுறுப்புடனும், ராதா மோகனின் மொக்கை மீது முன்முடிவுடனும் உட்கார்ந்துகொண்டிருந்தபோது, நாகார்ஜூனா என்று திரையில் ஓடியது. அடுத்து பிரம்மானந்தம் என்று வந்தது. இது தமிழ்ப்படமா டப்பிங் படமா என்ற சந்தேகமும் என் குறுகுறுப்புடன் சேர்ந்துகொண்டது. கூடவே நாகார்ஜூன் நம்மைக் காப்பாற்றுவார் என்னும் சிறிய சந்தோஷமும் சேர்ந்துகொண்டது.
படத்தை அதன் பாராட்டுப் பத்திரத்திலிருந்து துவங்கிவிடலாம். இடைவேளை வரை மிக பலவீனமான திரைக்கதை எளிதில் ஊகிக்கக்கூடிய மொக்கை காட்சிகள், நாலாந்தர செண்டிமெண்ட் காட்சிகள், நேரத்தை வீணடிப்பதற்காகவே அநாவசியமாகச் சேர்க்கப்பட்ட ஃப்ளாஷ் பேக் காட்சி, தீவிரவாதிக்கு உதவியனைப் பிடிக்கும் காட்சி என நீண்டு சலிக்கும் காட்சிகள், இந்தப் படம் எப்ப முடியும் என்கிற டென்ஷனை எகிற வைத்தன. இதில் போதாக்குறைக்கு இது டப்பிங் படம்தான் என்ற முடிவுக்கு வரவைக்கும் வாயசைப்புப் பிரச்சினை. ஒரே ஆறுதல் காந்த நடிகரும், பாலாஜியும் வரும் காட்சிகள்தான். இப்படிப் போய்கொண்டிருந்த படத்தை தூக்கி நிறுத்துகிறார்கள் நாகார்ஜுனாவும் பிரம்மானந்தமும். இடைவேளைக்குப் பிறகு காட்சிகள் வேகம் பெறுகின்றன. வழக்கம்போல ஆனந்தவிடகன் ஜோக் போன்ற வசனங்கள்தான் என்றாலும், சில வசனங்கள் சிரிக்க வைக்கின்றன. ஓர் ஆக்ஷன் படத்துக்குத் தேவையான நிமிடப்பரபரப்பும் சேர்ந்துகொள்கிறது. சுகர் வந்து இளைத்துப் போகாத கவுண்டமணியான பிரம்மானந்தத்தின் அனாயசமான யதார்த்தமான ரீயாக்ஷனும், நாகார்ஜுனாவின் அடக்கமான நடிப்பும், திகைக்க வைக்கும் சில காமெடி காட்சிகளும் (குறிப்பாக ‘என்ன கதகளியா ஆடற’ என்று பிரம்மானந்தம் கேட்கும் காட்சி) நம்மை வசீகரிக்கின்றன. சாதாரண மனிதர்களை உச் கொட்ட வைக்கும் க்ளிஷே காட்சிகள் அமைக்கும் களன்கள் கூர்மை பெறுகின்றன. கடைசியில் எப்படி நாகார்ஜுனா பயங்கரவாதிகளை முறியடிக்கிறார் என்பது கதை.
பாராட்டவேண்டிய இன்னொரு விஷயம் பிரகாஷ்ராஜ். பிரகாஷ் ராஜ் என்றாலே ஓவர் ஆக்டிங் என்கிறது என் அகராதி! அவர் நடித்து நான் ரசித்த ஒரே ஒரு திரைப்படம் காஞ்சிவரம் மட்டுமே. இப்போது இந்தப் படம். எந்த இடத்திலும் கொணட்டல்கள் இல்லை. அதீத முகபாவம் இல்லை. அதிலும் குறிப்பாக, அவர் கோபம் கொண்டு கத்தும் காட்சி, அவரது நடிப்பின் உச்சம். தான் தயாரிக்கும் படம் என்பதால் தன் காட்சிகளை அதிகம் வைத்துக்கொள்ளவில்லை என்பதற்கும் சேர்த்துப் பாராட்டலாம். (பிரகாஷ் ராஜை நான் பாராட்டுவேன் என நான் நினைத்ததே இல்லை.)
பிறகு என்னதான் இந்தப் படத்தில் பிரச்னை? அரசியல். ராதா மோகனின் அரசியல். கமலை மிஞ்சுகிறார். ராதா மோகனின் படங்களில் கிறித்துவ சார்பு உண்டு என்பதும், ஃபீல் குட் என்ற பெயரில் வரும் செண்டிமெண்ட் மொக்கைகளும், ஆனந்தவிகடனில் இருந்து பொறுக்கி எடுத்தாரோ என்று ஐயம் கொள்ள வைக்கும் சொறி விட்டுகளைத்தான் காமெடியாகத் தருகிறார் என்பதும், ராதா மோகன் மீது எனக்கு ஏற்பட்டிருந்த முன் தீர்மானத்துக்கு அடிப்படைகள். இப்படமும் அதற்கு விதிவிலக்கல்ல. அப்பட்டமான கிறித்துவப் படம். சார்பு என்ற சொல்கூட அநாவசியம். முதல் காட்சியிலிருந்து பாதிரியார் தொடங்கும் அன்புப் புராணஅதிதீவிர காவியம், என்ட் கார்டு வரையில் நம்மைத் துரத்து துரத்து என்று துரத்துகிறது. மொழி திரைப்படத்தில் வரும் பாஸ்கர்தான் பாதிரியாராக நடித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் அக்கதாபாத்திரத்தின் தொடர்ச்சிதான் இக்கதாபாத்திரமோ என்ற சந்தேகமே நமக்கு ஏற்பட்டுவிடுகிறது. பாதிரியார் இப்படத்தில் ராதா மோகன் வழியே செய்திருக்கும் சாதனை, காண்டம் என்னும் சொல்லைப் பயன்படுத்தியதுதான். மலையாளப் படங்களில் இப்படிப் பேசும் தோழமையான பாதிரிகளைப் பார்த்திருக்கிறேன். தமிழில் இது தொடக்கமாக இருக்கலாம். இந்தப் பாதிரிப் புராணத்தில் மூச்சு முட்டி ஓடுபவர்களுக்கு எதிரில் காத்திருக்கிறது ஹிந்து மத அரசியல் நிந்தனை. நேரடியாகவே பாஜகவைத் திட்டியிருக்கலாம் ராதா மோகன். பாப்ரி மசூதி இடிப்புக்கு முன்னர் இந்தியா ‘பால் வரும் தேன் வரும் பூமியாக’ இருந்ததை எல்லோருமே அறிந்திருந்தார்கள். ஆதியில் இந்தியா அப்படித்தான் இருந்தது. ராதா மோகன் இந்தப் படத்தில் அதனை மீண்டும் நினைவூட்டுகிறார். அவரே ஒரு கதாபாத்திரமாக வருகிறார் என்னும்போது அவர் பேசும் வசனங்கள் இன்னும் ‘அர்த்தம்’ பெறுகின்றன. அவர் பெயரையே அதாவது ‘இயக்குநர் ராதா மோகன்’ என்றே இப்படத்தில் காட்டியிருக்கலாம். இப்படி எதிரே நளினமாக ஆடும் ஹிந்துத் தாக்குதலில் மேலும் மூச்சு முட்டும்போது ‘இருவாசல் மூடி ஒரு வாசல் வைப்பான் இறைவன்’ என்று நம்மை ஆசுவாசப்படுத்துகிறார் ராதா மோகன். ஆம், இதுவரை தமிழ்த் திரை காணாத அளவுக்கு இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதத்தின் கோர முகத்தின் காட்சிகளை நெடுகிலும் காட்டிச் செல்கிறார்.
அதிலும், ஒரு பயங்கரவாதி தான் அன்பாகப் பேசிய குழந்தையிடம் வெடிகுண்டை மறைப்பது அதன் உச்சம். ராதா மோகன் இப்படி எல்லாம் எடுக்கமாட்டாரே என்று இஸ்லாமிய அடிப்படை வாதத்தை முன்வைத்து ஹிந்துத்துவாதிகளும், அதே இஸ்லாமிய அடிப்படைவாத எதிர்ப்பை முன்வைத்து முற்போக்காளர்களும் குழம்பும்போது, கிறித்துவர்கள் மட்டும்தான், மீட்பர் அனுப்பியிருக்கும் புதிய சீடரின் வருகையை நினைத்து மயிர்க்கூச்செறிதலுடன் நிம்மதியாக மூச்சு விட்டுக்கொண்டிருந்தார்கள். இதில் படத்தின் கடைசி சட்டகத்தில் உறையும் காட்சி முக்கியமானது. அதுவரை நமக்கு இருந்துவரும் சந்தேகங்களை எல்லாம் அறவே நீக்குவது. படத்தில் வரும் ஹிந்து நிந்தனைக் காட்சிகள்கூட சப்பைக்கட்டுத்தானோ என்று சந்தேகம் கொள்ள வைப்பது. ஐந்து பயங்கரவாதிகளின் பிணங்கள் மீதும் அவரது பெயர்கள் நிலைபெறுகின்றன. ஐந்தும் இஸ்லாமியப் பெயர்கள். (இனி இஸ்லாமியர்கள் உள்ளிட்ட முற்போக்காளர்கள் இங்கிருந்து தொடங்கிக் கொள்ளவேண்டும்!)
கமலாவது ‘உன்னைப் போல் ஒருவனில்’ ஒரு கடத்தல் தாதாவையாவது ஹிந்து எனக் காட்டினார். அந்த ‘இரக்கம்’கூட ராதாமோகனுக்கு இல்லை. அத்தனையும் இஸ்லாமியப் பெயர்கள். வெடிகுண்டை விமானத்தினுள்ளே கடத்திப் போக உதவியரும் இஸ்லாமியராம். என்ன அநியாயம் பாருங்கள். தீவிரவாதிகளின் புனிதப் போர்ப் பெயர்க்காரணமாக ஒரு வசனம் வருகிறது. எந்தப் பொண்ணையாவது நாங்க கை வெச்சோமா என்று. இதற்கு இஸ்லாமியர்கள் வருத்தப்படவேண்டுமா, சந்தோஷப்படவேண்டுமா என்று திகைக்க வைக்கிறார் இயக்குநர். இன்னொரு விஷயம், நாகார்ஜுனாவின் உதவியாளராக வருவது ஓர் இஸ்லாமியர். எங்கே அவரும் தீவிரவாதிகளுக்கு உதவினார் என்று காட்டி ராதாமோகப் பூனைக்குட்டி வெளியே வந்துவிடுமோ என்று பயந்தேன். அல்லது அவர்தான் இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாதிகளைக் கொன்றார் என்று காட்டி செக்யூலர் பூனை வெளிவருமோ என்று ஆர்வத்துடன், ஆம், மீண்டும் பயந்தேன். இரண்டுமே நடக்கவில்லை. இப்படி நிகழாததில் ஒரு நுண்ணரசியல் உள்ளது. என்ன அந்த நுண்ணரசியல்? குழப்பமும் உள்ளது. என்ன அந்தக் குழப்பம்?
ரஜினிகாந்த் போன்ற பஞ்ச் டயலாக் கமர்சியல் உச்ச நடிகர்களை ஆதி முதல் அந்தம் வரை போட்டுத் தாக்குகிறார் ராதா மோகன். ஆரம்பம் முதல் முடிவு வரை எவ்விதத் தொய்வும் இல்லாமல் வந்துகொண்டே இருக்கும் ஒரே விஷயம் இது மட்டுமே. இடையிடையே வரும் இரண்டு நிமிட செண்ட்டிமெண்ட் அறுவைக் காட்சிகள்கூட இதைப் போலத் தொடர்ந்து வருவதில்லை. ஆனால் கடைசி காட்சியில், அதுவரை வந்த அத்தனை விமர்சனங்களையும் போட்டு நொறுக்கும் வகையில், அந்த நடிகர் வீரராகிறார். இப்படி ஒரு மாற்றம் இஸ்லாமியர்களின் வாயிலாக நடப்பதில்லை. அதற்கான வாய்ப்புகள் இருந்தும் அதனை ராதா மோகன் செய்யவில்லை. இது நுண்ணரசியலா அல்லது ஸ்கிரிப்டா?
பொதுவாக ஹிந்துத்துவச் சார்பு உள்ள எனக்கு இந்தப் படத்தின் மூலம் வந்த சந்தோஷங்கள் என்ன என்ன?
01. எல்லாப் படத்திலும் மெல்லிய கிறித்துவச் சார்பை பின்னணியில் வைத்து பார்வையாளர்களை, அவர்கள் அறியாமலே தன்னரசியலுக்குப் பயன்படுத்தும் அல்லது தான் நம்பும் சூடோ செக்யூலரிசத்துக்கும் பயன்படுத்தும் ராதா மோகனின் முகமூடி கிழிகிறது. அவர் இனி நேரடியாகவே கிறித்துவ ஆதரவுத் திரைப்படம் எடுக்கலாம்.
02. ஹிந்து அரசியல் தவறுகளைச் சொல்லும் ராதா மோகன் என்னும் முற்போக்காளர், இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாதத்தைப் பற்றிப் படம் எடுத்த தீரர், இனி கிறித்துவத்தின் மதமாற்ற அரசியலைப் பற்றி எடுப்பாரா? எடுத்தால் நிச்சயம் அவருக்கு ஒரு சலாம் உண்டு. எல்லா மதங்களையும் உண்மையிலேயே ஒரே மாதிரியாகப் புறக்கணிப்பவர்கள் வணங்கத் தக்கவர்களே. படமாக எடுக்க முடியாவிட்டாலும், குறைந்த பட்சம் ஒன்றிரண்டு காட்சிகளாவது…?
03. சாரு நிவேதிதாவும் எத்தனை நாள்தான் ‘உன்னைப் போல் ஒருவன்’ படத்துக்காக கமலைத் திட்டிக்கொண்டிருப்பது? அது என்னவோ சாருவின் ராசி, அவர் யாரையாவது பாராட்டினால், இப்படி நடந்துவிடுகிறது. ‘மொழி’யைப் பாராட்டினார். இனி ராதா மோகன் பெயரையும் பாராட்டு என்னும் வார்த்தையையும் ஒரே வரியில் அவர் எழுத வாய்ப்பே இல்லாத அளவுக்கு இப்படி நடந்துவிட்டது. அதிலும் இப்படம் இஸ்லாமியர்களுக்கான எதிர்க்குரல். சாருவின் அறச்சீற்றத்தை இனி யாரால் தடுக்க இயலும்? இனி தொடங்கப் போகும் சாருவின் எழுத்து ரகளையை ரசிக்கலாம்!
04. ஒரு திரைப்படத்தில் ஒருவர் ஓர் எதிரியைத்தான் உருவாக்கிக்கொள்வார். இதில் ராதா மோகன் ஹிந்துத்துவ இஸ்லாமிய எதிரிகளைச் சம்பாதித்திருக்கிறார். இனி என்ன நடக்கும் என்னும் ஆர்வம்.
05.ஹிந்துக்களை நிந்திப்பதும், அரசியல் ஹிந்துக்களை விமர்சிப்பதும் மட்டுமே எளிது என்பது இனி ராதா மோகனுக்கு உறைக்கத் தொடங்கும்.
06.நாட்டில் நிலவும் உண்மை ஒன்று, ஹிந்துக்களுக்கு எதிராக இருந்தால் மட்டுமே தைரியமாக அதை நீங்கள் சொல்லமுடியும் என்பதும் ராதா மோகனுக்குப் புரியும்.
07.முற்போக்காளர் பட்டம் பெற முப்பது வருஷம், அதைப் போட்டு உடைக்க முப்பது நிமிடம் என்பதும் புரியும்.
அரசியலை ஆழப் பார்க்கப் பழகாத மக்கள் இத்திரைப்படத்தைக் கொண்டாடுவார்கள். பெரும்பாலான நம் மக்கள் இவ்வகையினர்தான் என்பதால் இதுவே நிகழும் என்றுதான் பெரும்பாலும் நினைக்கிறேன். கூடவே பாடல் இல்லாத, காதல் இல்லாத, சண்டை இல்லாத, தனிப்பட்ட ஹீரோயிஸ க்ளிஷே இல்லாத படம் என்று பத்திரிகைகள் எழுதும். அதோடு, சூடோ செக்யூலரிசக் காட்சிகளின் பாராட்டும் சேர்ந்துகொள்ளும். இதுவும் நிகழ்ந்தே தீரும் என்றுதான் பெரும்பாலும் நினைக்கிறேன். ஆனால் இணைய வாசகர்கள், எழுத்தாளர்கள், வலைப்பதிவர்கள், டிவிட்டர்கள்? இந்த வகையினரை ஏமாற்றுவதில்தான் ராதா மோகன் தோற்றுவிட்டார். அவர்கள் இந்தப் படத்தைக் கைமா செய்யாமல் விடமாட்டார்கள் என்றுதான் பெரும்பாலும் நினைக்கிறேன். என்னிலிருந்து எண்ணிக்கொள்ளுங்கள்.
சரி, ராதா மோகனின் இத்தனை குழப்பங்களுக்கு என்ன காரணம்? அவரே இப்படத்தில் சொல்கிறார், காந்தியையும், கார்ல் மார்க்ஸையும் படிச்சு இப்படி ஆயிட்டேன் என்கிறார். குழப்பம் எந்த ‘இடத்திலிருந்து’ துவங்குகிறது பார்த்தீர்களா?!