ராதா மனோகர் : போர் காலங்களில் உலகம் முழுவதும் புலம் பெயர்ந்தனர் ஈழத்தமிழர்கள்
அந்தந்த நாடுகளுக்கு செல்லும் அனைவரும் அந்தந்த நாடுகளில் வதிவிட அனுமதி பெற்று தங்கள் வாழ்வை வளமாக்கி கொள்ள முயன்றனர்
என்ன காரணம் கொண்டும் இலங்கைக்கு திரும்பி சென்றால் கொல்லப்படுவோம் என்று கூறித்தான் தங்கள் அகதி அந்தஸ்து கோரிக்கைகளை இன்றுவரை முன் வைக்கின்றனர்.
ஆனால் இந்தியாவுக்கு புலம் பெயர்ந்து சென்று தங்கி இருப்பவர்கள் மட்டும் இலங்கைக்கு திரும்பி செல்லவேண்டும் என்று செல்வநாயகத்தின் வாரிசுகள் ஒற்றை காலில் நிற்கின்றன.
இலங்கையில் உள்ள தமிழர்களின் குடிப்பரம்பல்தான் அவர்களுக்கு முக்கியமாக தெரிகிறது
ஆனால் இலங்கையில் குறைந்து வரும் குடிப்பரம்பலை நிரம்ப வைக்க கனடா பிரான்ஸ் இங்கிலாந்து அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ளவர்கள் ஒரு போதும் முன்வர மாட்டார்கள்
ஆனால் இந்தியாவில் உள்ளவர்களுக்கு இலங்கையில் ஒரு பிரச்னையும் இல்லையாம்
ஒரே குரலில் தாங்கள் திரும்பி போனால் இலங்கையில் பிரச்சன்னையாம்
ஆனால் இந்தியாவில் உள்ளவர்கள் திரும்பி போனால் அங்கு பாலாறும் தேனாறும் ஓடுமாம்
எப்பேர்ப்பட்ட கேவலமான சிந்தனை?
செல்வநாயகத்தின் மகன் சந்திரஹாசன்தான் இதில் புலி ஏஜெண்டாக செயல் படுபவர்
திரு சுப்பிரமணியம் சாமி இந்தியாவில் உள்ளவர்களுக்கு குடியுரிமை கொடுப்பதில் தமக்கு ஆட்சேபனை இல்லை என்று கூறிய அருமையான சந்தர்ப்பத்தை தட்டி கொட்டிய பாவி இவர்.
அப்போது தேவகவுடாவின் அமைச்சரவையில் சுப்பிரமணீயம் சாமி அவர்கள் அமைச்சராக இருந்தார்.
இந்த விடயத்தை ஒரு கானொலி பேட்டியிலேயே கூறி இருந்தார்.
இந்த விடயம் பற்றி தேசம் நெட் ஜெயபாலனின் முகாம் வாழ் மக்களை பேட்டி கண்டுள்ளார்
இந்த காணொளியை தவறவிடாதீர்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக