புதன், 30 செப்டம்பர், 2026

விமானியை கத்தியால் குத்திவிட்டு கடத்த முயற்சி - துபாயில் இஸ்ரேல் விமானம் கடத்த முயற்சி முறியடிப்பு

May be an image of text

 சக விமானியை கத்தியால் கு*த்தி விட்டு இஸ்ரேலியர்கள் பயணித்த விமானத்தை விபத்துக்குள்ளாக்குவதற்கு விமானியொருவர் முயன்றார் என, இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றம்சாட்டியுள்ளார்.
துபாயிலிருந்து இஸ்ரேல் நோக்கி இன்று பயணித்த விமானமொன்று, சஊதி அரேபியாவில் அவசரமாகத் தரையிறங்கியது.
விமானிகளுக்கு இடையில் ஏற்பட்ட சண்டையின் காரணமாகவே, இந்த நிலை ஏற்பட்டதாக ஆரம்பத்தில் கூறப்பட்டது. 
ஆனால், விமானியொருவர் சக விமானியை கத்தியால் குத்தியதாகவும், கிட்டத்தட்ட - முழுவதும் இஸ்ரேலியர்கள் பயணித்த அந்த விமானத்தை, குறித்த விமானி, விபத்துக்குள்ளாக்குவதற்கு முயற்சித்ததாகவும், நெதன்யாகு கூறியுள்ளார்.


இது தொடர்பில் அவர் பேசிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அதில் அவர்; "துபாயிலிருந்து இஸ்ரேல் நோக்கி இன்று காலை வந்த விமானத்தில் - மிக மோசமான பாதுகாப்ப சம்பவமொன்று நடந்தது. 
விமானத்தில் இருந்த பயணிகளில் கிட்டத்தட்ட அனைவரும் இஸ்ரேலியர்கள். விமானம் இஸ்ரேலை நெருங்கிக் கொண்டிருந்த போது, விமானிகளில் ஒருவர் மற்றைய விமானியை க*த்தியால் குத்தினார்.
அவர், விமானத்தில் இருந்த பயணிகளுடன் சேர்த்து, விமானத்தை விபத்துக்குள்ளாக்க முயன்றதாகத் தெரிகிறது. 
இஸ்ரேலிய பணியொருவரிடம் நான் பேசினேன். விமானம் கட்டுப்பாட்டை இழந்து சுழன்று, கீழ்நோக்கி வேகமாகச் செல்லத் தொடங்கியதாக அவர் என்னிடம் தெரிவித்தார்.
எதிர்பாராத சூழ்நிலையிலும், அவர் விமானக் குழு உறுப்பினர் ஒருவருடன் சேர்ந்து - விமானி அறைக்குள் நுழைந்துள்ளார். 
விமானத்தின் அமைப்புகளைச் சேதப்படுத்த முயன்று கொண்டிருந்த - கத்தியால் தாக்கிய விமானியைக் கட்டுப்படுத்த அவர்கள் இருவரும் முயன்றுள்ளனர். 
விமானத்தில் இருந்த ஏனைய விமானக் குழு உறுப்பினர்களும் - விமானி அறைக்குள் நுழைந்து, விமானத்தை மீண்டும் நிலைப்படுத்த முடிந்தது. 
விதிவிலக்கான சமயோசிதமும் துணிச்சலும் காட்டிய வீரர்களை நான் பாராட்டுகிறேன். அவர்கள் பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளனர். மிகப்பெரிய பேரழிவு ஏற்படுவதைத் தடுத்துள்ளனர். 
விமானம், சஊதி அரேபியாவின் தபுக் விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். 
கத்தியால் தாக்கியதாகக் கூறப்படும் விமானி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது சஊதி அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வருகிறார்” என, நெதன்யாகு மேலும் தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை: