மின்னம்பலம் - மதி : , “வரலாற்றில் ஒரு தலைவன் உருவாகின்றான்”ன்னு ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்ன ப்ரோ.. சிச்சுவேஷன் ஷாங்கா?
இல்லை ப்ரோ.. இன்னைக்கு மாஜி சிஎம் ஸ்டாலினை சிஎம் விஜய் சந்திச்சு பேசுனார் இல்லையா.. அதுக்கு இந்த பாட்டை வெச்சுதான் ரீல்ஸ் போட்டுகிட்டு இருக்காங்க.. உங்க இன்ஸ்டாவை திறந்து பாருங்க..
ஸ்டாலினை விஜய் சந்திச்சதுல என்ன விஷேசம் இருக்கு ப்ரோ?
விஜய் நேத்து சிஎம்மா பதவியேற்ற பங்ஷன்ல தமிழ்த் தாய் வாழ்த்தை 3-வதாக பாடுனது, சம்பந்தமே இல்லாம வந்தே மாதரம் பாட்டை முதலில் பாடுனது எல்லாமே பிரச்சனையாகிடுச்சு..
ஸ்டாலின் தொடங்கி ஆட்சிக்கு ஆதரவு தர்ற கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக வரைக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பிடுச்சு.. முதல் நாளே சோசியல் மீடியாவுல விஜய்க்கு ரொம்பவே டேமேஜ் ஆகிடுச்சு..
அதே மாதிரி வேப்பேரி பெரியார் திடல் போய் திக தலைவர் வீரமணியை மரியாதை நிமித்தமா விஜய் சந்திச்சாரு..
அப்ப விஜய்கிட்ட வாழ்த்துகளை சொன்ன கி.வீரமணி, “தமிழ்த் தாய் வாழ்த்து பாடலோட பின்னணி.. அதை அரசு விழாக்களில்ல பாடுறதுல இருக்கிற தனித்துவம்னு க்ளாஸ் எடுத்துட்டு.. மதச்சார்பா இருக்கிற வந்தே மாதரம் பாடலை தவிர்க்கனும்”னு அவரும் தன் பங்குக்கு அட்வைஸ் செஞ்சாரு…
இப்படி முதல் நாளிலேயே எல்லா பக்கமும் அடிங்கிற கதையாகிப் போனதுல விஜய்யும் அவரோட டீமும் செம்ம அப்செட்.. ஆரம்பிக்கும் போதே இப்படியா?ன்னு எல்லாரும் வருத்தப்பட்ட நேரத்துலதான் இதை பேலன்ஸ் பண்ற மாதிரி ஒன்னு செய்யலாம்னு ஜான் ஆரோக்கியசாமிதான் ஐடியா கொடுத்தாரு..
அதாவது வீரமணியை சந்திச்ச மாதிரியே சட்டசபையில இல்லாத தலைவர்களான ஸ்டாலின், வைகோ, திருமா, அன்புமணி, சீமான்னு எல்லா லீடர்ஸையும் சந்திச்சு வாழ்த்து பெற போகலாம்.. இது டேமேஜை கண்ட்ரோல் பண்ணிடும்னு ஜான் ஐடியா கொடுக்க விஜய்யும் ஓகே சொல்லிட்டாரு…
இன்னைக்கு சட்டசபையில எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு நடந்துச்சு.. பிற்பகல்ல முதல்ல மாஜி சிஎம் ஸ்டாலின் வீட்டுக்கு போறதுன்னு முடிவு பண்ணி அவருக்கு தகவல் கொடுத்தாங்க.. ஸ்டாலினும், ”சரிங்கர வர சொல்லுங்க.. எத்தனை மணிக்கு வர்றாங்க?”ன்னு சொல்லிட்டு, “ஸ்நாக்ஸ் எதுவும் ரெடி பண்ணனுமா?”ன்னும் கேட்டிருக்காரு.. ஆனா விஜய் சைடுல இருந்து , “அதெல்லாம் வேண்டாம் சார்’னு சொல்லிட்டாங்க..
விஜய் வர்ற தகவல் பிரேக்கிங் நியூஸா டிவியில ஓட தலைமை செயலகத்துல இருந்து ஸ்டாலின் வீடு இருக்கிற சித்தரஞ்சன் சாலை வரைக்கும் ரெண்டு பக்கமும் அவ்வளவு கூட்டம்.. சாமானியன்ல இருந்து அப்பர் கிளாஸ் வரைக்கும் சிஎம் விஜய்யை பார்க்க ரோட்டுல பெருந்திரளா கூடிட்டாங்க..
அதுக்குள்ள உதயநிதி, திமுக சீனியர்ஸுக்கும் தகவல் கிடைக்க அவங்களும் சித்தரஞ்சன் சாலை வீட்டுல ஆஜரானாங்க..
சிஎம் விஜய் காரை விட்டு இறங்கினதும் வாசலிலேயே உதயநிதி அவரை ஆரத் தழுவி வரவேற்று அழைச்சுகிட்டு போனாரு…
வீட்டுக்குள்ள விஜய் நுழைஞ்சதும் ஸ்டாலினும் விஜய்யை அன்பாக தழுவி வரவேற்றார்.. விஜய்யுடன் கை கோர்த்தபடி பேசிகிட்டே ஷோபாவில உட்கார வெச்சாரு ஸ்டாலின்.. உதயநிதி, புஸ்ஸி ஆனந்தும் இந்த சந்திப்புல கூட இருந்தாங்க..
ஸ்டாலின் பேசும் போது, “வாழ்த்துகள் நல்லா பண்ணுங்க”ன்னு சொல்ல விஜய் மகிழ்ச்சியோடு தலையாட்டினார்..
அதுக்கு அப்புறமா, “எங்க தோழமை கட்சி தலைவர்கள் எல்லார்கிட்டேயும் நான்தான் உங்களை ஆதரிக்க சொன்னேன்”ன்னு ஸ்டாலின் ”சீக்ரெட்டை’ உடைக்க விஜய்யோ, சிரிச்சுகிட்டே கேட்டுகிட்டார்..
கொஞ்ச நேரத்துல விஜய் அங்க இருந்து புறப்பட ஸ்டாலினும் அன்பா வழியனுப்பி வெச்சாரு ப்ரோ.. இந்த சந்திப்பு வீடியோவைத்தான் ரீல்ஸ் போட்டு வைரலாக்கிட்டு இருக்காங்க வெர்ச்சுவல் வாரியஸ்..
ஸ்டாலின் வீட்டுல இருந்து அப்படியே நேரா அண்ணா நகர் போய் வைகோவை சந்திச்சாரு விஜய்.. வைகோ ரொம்பவே நெகிழ்ச்சியா இருந்தாரு.. தன் வீட்டு பணிப் பெண்களை எல்லாத்தையும் கூப்பிட்டு விட்டாரு.. அப்ப, “இவங்க எல்லாம் விசிலுக்கு ஓட்டுப் போட்டவங்க”ன்னு வைகோ கமெண்ட் அடிக்க , விஜய் உள்ளிட்டவங்க சிரிச்சுட்டாங்க..
ஸ்டாலின், வைகோவை சந்திச்ச கையோட அன்புமணி, சீமானையும் சந்திச்சாரு விஜய்.. இவங்களை சந்திச்ச மாதிரி திருமாவை நாளைக்கு சந்திக்க போறாராம் விஜய்..
நேத்து எல்லாருமே ‘காய்ச்சி எடுத்த’ காயம் எல்லாம் ஆறிப் போற மாதிரி விஜய் இன்னைக்கு நடத்தின இந்த சந்திப்புகளுக்கு பாராட்டு மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டிகிட்டே இருக்கு.. எல்லா சைடுல இருந்தும் பாராட்டு மழைதான் போங்க ப்ரோ என்றபடியே டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடி ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக