tamil.oneindia.com - Yogeshwaran Moorthi : சென்னை: தவெக தரப்பில் இருந்து 10 அமைச்சர் பதவி தருவதாக பேரம் பேசப்பட்டதாக அதிமுக எம்எல்ஏ கேசி வீரமணி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக மீது குதிரை பேர குற்றச்சாட்டு எழுந்திருக்கும் சூழலில், எஸ்பி வேலுமணி தரப்பு ஆதரவு எம்எல்ஏ கேசி வீரமணி பேசி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சட்டசபைத் தேர்தலில் அடைந்த தோல்விக்கு பின் அதிமுகவில் உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் 22 எம்எல்ஏ-க்களும், எஸ்பி வேலுமணி தலைமையில் 25 எம்எல்ஏ-க்களும் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். அதிலும் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எஸ்பி வேலுமணி தரப்பில் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தது. இதனால் எடப்பாடி பழனிசாமி அவர்களின் கட்சிப் பதவியை பறித்தார்.
ஆனால் அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸ் பதவியை மட்டும் பறிக்கவில்லை. இதன் காரணமாக அதிமுகவில் நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் சிலருக்கு அமைச்சர் பதவியும், வாரியத் தலைவர் பதவியும் கொடுப்பதாக தவெக ஆசை வார்த்தை கூறி இழுக்க முயற்சித்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த நிலையில் எஸ்பி வேலுமணி தரப்பில் இருக்கும் கேவி வீரமணி சில தகவல்களை பகிர்ந்திருக்கிறார். அதில் கேசி வீரமணி பேசுகையில், இவ்வளவு தூரம் தேர்தலுக்கு செலவு செய்து பயன் இல்லாமல் போய்விடக் கூடாது. கட்சியில் 4 பேராவது பயன் அடையட்டும் என்று தவெக அரசுக்கு ஆதரவு அளிக்க முடிவு எடுத்தோம். உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெற முடியும்.
அடுத்த தேர்தலிலும் கூட்டணி அமைக்க முடியும் என்பதற்காகவும் ஆதரவு கொடுத்தோம். இதனால் அதிமுக நிர்வாகிகள் என் மீது என்ன குற்றம் சுமத்தினாலும் ஏற்கிறேன். விஜய்க்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவிக்கலாம் என்று சொன்னதை எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை. தவெக தரப்பில் 10 அமைச்சர் பதவி தருவதாக கூறினார்கள்.
அமைச்சராக இருந்தால் கொஞ்சம் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தில் எடப்பாடிஉஇடம் கூறினோம். எடப்பாடி பழனிசாமி தான் எங்களின் பொதுச்செயலாளர். அவர் பின்னால் தான் இருப்போம். அதேபோல் தவெக ஆதரவு நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. எஸ்பி வேலுமணி மற்றும் சிவி சண்முகம் தலைமையில் செயல்பட்டு வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
தவெக மீது எடப்பாடி பழனிசாமி குதிரை பேரக் குற்றச்சாட்டை முன் வைத்து வருகிறார். இப்படியான சூழலில் தவெகவில் இருந்து 10 பேருக்கு அமைச்சர் பதவி கொடுப்பதாக பேசினார்கள் என்று கேசி வீரமணி போட்டு உடைத்துள்ளார். இதனால் தூய சக்தி என்று சொல்லிக் கொள்ளும் தவெக மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ள
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக