ராதா மனோகர் : தமிழ் தேசிய கூட்டணியின் முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் எம்பி திரு கனகேந்திரன் அவர்களின் பேட்டி!
புலிகள் இயக்கம் உருவானது கல்வியின் காட்டில்தான்!
வல்வெட்டி துறையில் அல்ல
அதை உருவாக்கியது செட்டி தனபாலசிங்கம்
செட்டி தனபாலசந்ததின் சிஷ்யனாகத்தான் பிரபாகரன் போராட்டத்திற்கே வந்தார்
புலிகள் இயக்கத்தின் முதல் பெரிய தாக்குதலை மேற்கொண்டவர் திரு செல்லக்கிளி
இவர் திரு செட்டி தனபாலசிங்கத்தின் ஒன்றுவிட்ட சகோதரன் ஆகும்.
இந்த செல்லக்கிளியின் அண்ணன்தான் இந்த காணொளியில் பேட்டி வழங்கும் திரு கனகேந்திரன் அவர்கள்.
இவர் முல்லை தீவு மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார்
இவரை தமிழ் தேசிய கூட்டணி வேட்பாளராக பிரபாகரன்தான் நியமித்தார்
போரின் இறுதி கட்டம் வரை முள்ளிவாய்க்காலில் நின்ற ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இவர்தான்
ஆரம்ப காலத்தில் இவரின் வீட்டில்தான் புலிகள் இயக்கத்தின் எல்லா நடவடிக்கைகளுக்கும் திட்டமிடல்களும் நடந்தன.
அதன் காரணமாக இவரது வீடு அடிக்கடி போலீசும் ராணுவமும் படையெடுக்கும் வீடாக இருந்தது
யார் யாரையோ எல்லாம் தேடிவரும் போலீஸ் இவரைத்தான் அடிக்கடி பிடித்து கொண்டு போகும்
ஏனெனில் இவர் வெளிப்படையாகவே இருந்தார.
ஒரு போதும் ஓடி ஒழியவில்லை.
சாரதியாக கடமையாற்றி குடும்பத்தை சுமந்து கொண்டிருந்தார்
அதனால் போலீசுக்கு பயந்து ஒழித்து ஓடமுடியாத ஒரு இக்கட்டில் இருந்தார்
இவரை எனக்கு நன்றாக தெரியும் இவரின் தம்பி செல்லக்கிளி எனது வகுப்பு தோழராவார்
புலிகள் இயக்கத்தில் இருந்தாலும் ஒருபோதும் எவராலும் கைநீட்டி குற்றம் சுமத்த முடியாத அளவு நேர்மையாகவும் இரக்க குணம் படைத்தவராகவும் இருந்தார்
இவரின் நல்ல குணத்திற்காகத்தான் இவரை இயற்கை இன்றுவரை காப்பாற்றி நல்ல ஆரோக்கியத்தோடு வைத்திருக்கிறது என்றெண்ணுகிறேன்
உண்மையில் கொடூரமே உருவான அந்த இயக்கத்தில் இப்படிப்பட்டவர் கூட இருந்திருக்கிறார் என்பது என்னை பொறுத்தவரை ஒரு அதிசயம்தான்
இந்த பேட்டியில் இவர் பேசும் ஒரு வார்த்தை கூட பொய்யில்லை
வரிக்கு வரி அத்தனையும் உண்மை
இந்த உண்மைகளை வெளிகொண்டுவந்த திரு கனகேந்திரன் எம்பி அவர்களுக்கு எனது உளமார்ந்த நன்றி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக