ஞாயிறு, 4 பிப்ரவரி, 2024

நடிகர் விஜய்க்கு அரசியலை தவிர வேறு ஆப்ஷன் இருப்பதாக தெரியவில்லை

May be an image of 2 people and beard

ராதா மனோகர் : நடிகர் விஜய்க்கு அரசியலை தவிர வேறு ஆப்ஷன் இருப்பதாக தெரியவில்லை
அடுத்தடுத்து ஊத்திக்கொண்ட படங்கள்
அவற்றை வெற்றி படமாக காட்டுவதற்கு செலவு செய்த பணம் ...
மார்க்கெட்டிங் உத்தியால் மட்டுமே இன்னும் எத்தனை நாளைக்குதான் மாஸ் ஹீரோ இமேஜை தக்க வைத்து கொள்ள முடியும் என்ற கவலை
எல்லாவற்றிலும் பார்க்க தலைக்கு மேல் இருக்கும் வருமான வரி அந்நிய செலாவணி சிக்கல் போன்ற பல கோப்புக்கள்
வர இருக்கும் சட்ட சிக்கல்களை சமாளிக்க கொஞ்சம் அரசியல் பலம் தேவைப்படுகிறது
ஒன்றிரண்டு வீத வாக்கு வாங்கி இருந்தாலும் பேரம் பேச வசதியாக இருக்கும்
அரை நூற்றாண்டை எட்டி இருக்கும் விஜய் இதுவரை மக்கள் நலன் சார்ந்த அரசியல் கோட்பாடு பற்றி எதாவது உருப்படியாக பேசி உள்ளாரா?


தன்மீது ஒரு தூசி படாமல் .. அங்கிட்டு ஒரு தடவல் இங்குட்டு ஒரு தடவல்
இதுவென்ன அரசியல்?
ஊழல் எளிமை போன்ற பார்முலா  வார்த்தைகளை விட்டு விட்டு உன் கொள்கை என்ன?
கல்வி சுகாதாரம் வேலை வாய்ப்பு போன்ற விடயங்களில் உங்கள்  கருத்து என்ன? 

இவரது வீடே இதுவரை ஒரு மர்ம மாளிகையாகதான் இருக்கிறது
இவரை உயரே தூக்கி விட்ட தயாரிப்பாளரை ( எஸ் ஏ சந்திரசேகர்) இவர் எப்படி மதிக்கிறார்?
அடிப்படை நன்றியே இல்லாத .. ஒரு தற்குறி  .. வகுப்பு எடுக்கிறது   

இந்த இடத்தில நடிகர் பிரகாஷ் ராஜ் பேசும் அரசியலை ஒப்பீடு செய்து பார்க்கவேண்டியது அவசியமாகிறது!
திரையில் கிடைத்த ஊடக வெளிச்சத்தை பயன் படுத்தி மக்களுக்கு தேவையான விழிப்புணர்வை  முன் வைக்கும் ஒரே ஒரு சினிமா அரசியல்வாதி பிரகாஷ் ராஜ் மட்டுமே.

கருத்துகள் இல்லை: