சனி, 10 பிப்ரவரி, 2024

கணித் தமிழ் மாநாடு: ஏஐ தொழில்நுட்பத்தில் திருக்குறள்

மின்னம்பலம் - Selvam :  கணித் தமிழ் மாநாடு: ஏஐ தொழில்நுட்பத்தில் திருக்குறள்
சென்னை நந்தம்பாக்கத்தில் பன்னாட்டு கணித் தமிழ் மாநாட்டை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நேற்று (பிப்ரவரி 8) துவக்கி வைத்தார்.
இந்த மாநாடானது வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களில் தமிழின் நிலை குறித்து ஆராய்தல், விவாதித்தல், புதிய சிந்தனைகளை உருவாக்குதல், இளம் திறமைகளை அடையாளம் காணுதல் உள்ளிட்ட நோக்கங்களோடு நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற்ற இரண்டாவது நாள் கருத்தரங்கில் கிஸ்புளோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுரேஷ் சம்பந்தம் தலைமையிலான குழுவினர் செயற்கை நுண்ணறிவு யுகத்தில் திறக்குறளை எளிமையாக அறிந்துகொள்ள உதவும் thirukural.ai என்ற இணையதளத்தை அறிமுகப்படுத்தினர்.இதுகுறித்து சுரேஷ் சம்பந்தம் கூறும்போது, “தமிழ் என்று சொன்னாலே முதலில் நமது நினைவுக்கு வருவது திறக்குறள் தான். கூகுளில் நாம் திறக்குறளை தேடிப்பார்த்தால், நிறைய வெப்சைட்டுகள் வரும். அதை கிளிக் செய்தால் முழுவதும் விளம்பரமாக வரும். திறக்குறள் முழுமையாக தெரியாது.

மேலும், search ஆப்ஷனை கிளிக் செய்தாலும், search பண்ண முடியாது. அதை யாருக்காவது காப்பி செய்து அனுப்பலாம் என்றால் அதுவும் முடியாது. இதனை எளிமைப்படுத்துவதற்காகவும், திறக்குறளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்காகவே, ஏஐ திருக்குறள் இணையதளத்தை ஆரம்பித்துள்ளோம்.

தமிழின் சிறப்பே பழமையான மொழி. ஆனால் பழமைத்துவத்தை பாராட்டாமல், தன்னைத் தானே புதுப்பித்துக்கொள்ளும் மொழி. 100 சதவிகித தமிழர்களில் 10 சதவிகித தமிழர்கள் தான் முற்போக்கு சிந்தனை கொண்டவர்கள். அவர்கள் தான் மீதமுள்ள 90 சதவிகித தமிழர்களை வழிநடத்துகிறார்கள்.
கடந்த இரண்டு வாரத்தில் இந்த இந்த இணையத்தை எங்கள் டீம் வடிவமைத்தது” என்று தெரிவித்தார்.
செல்வம

கருத்துகள் இல்லை: