சனி, 10 பிப்ரவரி, 2024

நடிகர் விஜயின் ரிமோட் கண்ட்ரோல் புஸ்ஸி ஆனந்த். ஒரு விறகு கடை முதலாளி அமித் ஷாவின் அடியாளாக வரலாறு

May be an image of 3 people
புஸ்ஸி ஆனந்த் -  முதல்வர் ரங்கசாமி  - நடிகர் விஜய்

தோழர் வினேஷ்பாபு  :  வில்லங்கமான விறகுக்கடை முதலாளி புஸ்ஸி ஆனந்த்!
யார் இந்த புஸ்ஸி ஆனந்த்??
புதுச்சேரியில், வெறும் 5,000 ஓட்டுகள் உள்ள சிறிய சட்டமன்றத் தொகுதி தான் 'புஸ்ஸி தெரு'.
இந்த தொகுதியில் புதுச்சேரி கண்ணன் தொடங்கிய புதுவை மாநில காங்கிரஸ் சார்பில், 2006-ம் ஆண்டு தேர்தலில் நின்று 2,500 ஓட்டுகள் வாங்கி ஜெயித்து, பின்பு அதே தொகுதியில்  2 முறை தோற்ற நபர்தான் இந்த புஸ்ஸி ஆனந்த்.
புதுச்சேரியில் சாதாரண விறகுக்கடை வியாபாரம் செய்து வந்த புஸ்ஸி ஆனந்த், முன்னாள் எம்.எல்.ஏ என்ற அந்தஸ்தில் விஜய் ரசிகர் மன்றத்தின் சாதாரண கிளை தலைவராக இருந்து வந்த இவரை, தமிழக விஜய் ரசிகர் மன்றத் தலைவராக பதவி கொடுத்தவர் நடிகர் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்.



கடைசியில், புஸ்ஸி ஆனந்த் கேரளா மந்திரவாதிகளை வைத்து எனது மகனை எங்களிடம் இருந்து பிரித்து விட்டார் என விஜய்யின் அப்பா, அம்மா புலம்பும் அளவிற்கு,பெற்றோரை பிரித்து விஜய்யிடம் பெரும் செல்வாக்கு பெற்றவர் தான் இந்த புஸ்ஸி ஆனந்த்.

புதுச்சேரி புஸ்ஸி தெருவில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் வாசலில் படுத்திருந்த ரிக்ஷக்காரர் ஒருவர் இறந்து விட,அவரது பிணத்தை வங்கி கட்டிடத்திற்குள் போட்ட புஸ்ஸி ஆனந்த், இதை வைத்து பெரும் பிரச்சனை செய்ய, அந்த கட்டிட உரிமையாளர் புஸ்ஸி ஆனந்துக்கே அந்த சொத்தை குறைந்த விலையில் விற்று விட்டார்.
இதுபோல, புதுச்சேரி முழுவதும் குடியிருக்கும் பிரான்ஸ் நாட்டவர்களின் வில்லங்கமான சொத்துக்களை அபகரிப்பதுதான் புஸ்ஸி ஆனந்தின் முழுநேர தொழில்.
இவர் மீது பல வில்லங்கமான புகார்கள் உள்ளது. பல பத்திரிகைகளில் செய்திகளாகவும் வந்துள்ளது.
நடிகர் விஜய்யின் சித்தப்பா, புதுவை எல்லப்பிள்ளை சாவடி பகுதியில் வசித்து வருகிறார்.
நடிகர் விஜய் அடிக்கடி வேளாங்கண்ணி கோயிலுக்கு போகும்போது அவரது சித்தப்பாவை சந்திக்க வருவார். அப்போது தான் விஜய்யுடன் பழக்கமானார் இந்த புஸ்ஸி ஆனந்த்.
பாண்டிச்சேரி எஸ்.பி.-யாக இருந்த விஜயகுமார், புஸ்ஸி ஆனந்தின் மாமா ஆவார்.
விஜயகுமாருக்கு, புதுச்சேரி பாஜக அரசின் பொதுப்பணித்துறை அமைச்சராக இருக்கும் நமச்சிவாயம் மிகவும் நெருக்கமானவர்.
தனது மாமா மூலம் அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் புதுச்சேரி முதல்வர் ரெங்கசாமியுடன் நெருக்கமாகிறார் புஸ்ஸி ஆனந்த்.
பாஜக அமைச்சர் நமச்சிவாயம் மூலம் அமித்ஷாவுக்கு அறிமுகமாகிறார் புஸ்ஸி ஆனந்த்.
விஜய் ரசிகர் மன்ற தலைவர், ரியல் எஸ்டேட், பைனான்ஸ் என பிஸியாக இருக்கும் புஸ்ஸி ஆனந்த்.தனது கண் அசைவின் மூலம் விஜய் என்ன செய்ய வேண்டும் என்பதை அவரே முடிவு செய்கிறார்!
புஸ்ஸி ஆனந்தை தாண்டி யாரும் அவ்வளவு எளிதாக விஜய்யை பார்க்க முடியாது.
புஸ்ஸி ஆனந்த் முயற்சியால்,புதுச்சேரி முதல்வர் ரெங்கசாமி பலமுறை விஜய்யை சந்தித்து பேசியுள்ளார்.
வரும்-2026 சட்டமன்ற தேர்தலில், திமுகவுக்கு சாதகமாக விழும் இளைஞர் ஓட்டுகளை விஜய் பிரிக்க வேண்டும்.
அதன் மூலம், தங்களது கூட்டணி வெற்றி பெறும் இதுதான் பாஜக தலைமை போட்டிருக்கும் அரசியல் கணக்கு.
இந்த அரசியல் கணக்கு தான், விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்கான பிள்ளையார் சுழி.
இதற்கான அனைத்து செலவுகளையும் பாஜக ஏற்றுக் கொண்டுள்ளது.
தமிழ்நாட்டில் பிரபல திரை நட்சத்திரங்கள் மூலம் எளிதில் வெற்றி பெறலாம் என்ற திட்டப்படி ரஜினிகாந்தை இழுத்து பார்த்த பாஜக,தற்போது புஸ்ஸி ஆனந்த் மூலம் பலநாட்கள் நடந்த ரகசிய திட்டப்படி விஜய்யை களமிறக்கியுள்ளது.
இதனிடையே வரும் 2026-ல் தமிழகத்தின் முதல்வர் நடிகர் விஜய்,புதுவை முதல்வர் 'நான்தான்' என அனைவரிடமும் தெளிவாக பேசி வருகிறார் புஸ்ஸி ஆனந்த்.
-X பதிவு

கருத்துகள் இல்லை: