புதன், 7 பிப்ரவரி, 2024

தாமோதரம்பிள்ளை திருநாவுக்கரசு! புலிகளின் இரத்த வெறிக்கு பலியான கிழக்கு மாகாண ஆளுமை

Poornima Karunaharan
:   ஒரு தேசத்தின் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றியது மாபெரும் துரோகமாம்.
அதனால் துரோகி என்று நடு வீதியில் சுட்டுக் கொல்லப்பட்டார்  
பெற்றோலியக் கூட்டுத்தாபன கிழக்குப் பிராந்திய முகாமையாளர். அவர் பெயர் தாமோதரம்பிள்ளை திருநாவுக்கரசு. ஆமாம் அவர் தான் எனது தந்தை.
பாடசாலையில் கல்வி கற்கும் காலத்தில் ஒவ்வொரு பாடசாலையிலும் அதிபர் தேசியக் கொடியை ஏற்றுவதும் நாங்கள் தேசிய கீதம் பாடுவதும் காலங்காலமாக நடைபெறும் நிகழ்வாகும்.
அதேபோல அரச உத்தியோகத்தர்களுக்கும் அது ஒரு கடமையாகும். எனது தந்தை ஒரு உயர் அதிகாரி. அவர் அரசாங்கத்திடம் ஊதியம் பெறுபவர்.
அவர் தனது கடமையை மறுக்க முடியாது. அப்பாவும் தனது கடமையை செய்தார். அது மரணதண்டனை குற்றமாகக் தீர்ப்பளிக்கப்பட்டு நடு வீதியில் நிறைவேற்றப்பட்டது.
அப்போது எனது வயிற்றில் எனது மூத்த பிள்ளை ஏழு மாதங்கள். அப்பாவுக்கு பேரக் குழந்தையை காணப் போகிறேன் என்ற பேரவா. நான் ஒரு கர்ப்பிணி பெண். அப்பாவின் இழப்பால் நான் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டேன்
 ஆனாலும் எனது கருவில் இருந்த குழந்தையை உசுப்பேத்தவில்லை. எனது மூன்று ஆண் பிள்ளைகளுக்கும் புலிகள் துரோகிகள் என்று சொல்லி வளர்க்கவில்லை. ஒரு தாயாக சமூக அக்கறையுடன் எனது பிள்ளைகளை சுதந்திர சிந்தனைகளோடு வளர்த்தேன். யார் நல்லவர்கள்? யார் கெட்டவர்கள்? எது நல்லது? எது கெட்டது? எல்லாவற்றையும் அவர்கள் தமது சுய புத்தியோடு உணர்ந்து கொள்ள வேண்டும் என்று வளர்த்தெடுத்தேன். நான் எப்போதும் சுயநலத்திற்காக அடுத்தவர் வாழ்க்கையை கெடுத்ததில்லை. எனது பிள்ளைகள் என்றாலும் அவர்களுக்குள் வலுக்கட்டாயமாக எனது உணர்வுகளை திணிக்க முடியாது. இது எனது தந்தையிடம் இருந்து நான் கற்றுக் கொண்டது.
 No photo description available.

கடந்த யுத்த காலங்களில் விதைக்கப்பட்ட நச்சு விதைகளையே இன்று வரையிலும் அறுவடை செய்கிறார்கள். அடுத்தவர் இறப்புகளை குதூகலமாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். காரணம் ஊட்டப்பட்ட நச்சு சிந்தனைகள். நீங்கள் எப்படியோ இருந்து விட்டுப் போங்கள். நான் எனது கருத்துக்களை விதைத்துக் கொண்டேயிருப்பேன். அதுவே எனது தந்தைக்கு மகளாக நான் செய்யும் கைமாறு.
ஒரு நாள் எல்லாமும் மாறும். அப்போது நான் தைரியமாக நிமிர்ந்து நிற்பேன். எனது மரணம் வரையிலும் இந்த குணம் மாறாது. உங்களுக்கு இழப்புகள் எப்படியோ அதே போலவே எனக்கும் எனது குடும்பத்தாருக்கும்.
உங்கள் அகராதியில் துரோகிகள் என்றால் நல்லவர்கள் என்று அர்த்தம். அதனால் பெருமையாக உங்கள் துரோகிப் பட்டத்தை ஏற்றுக் கொள்கிறேன்..
அப்பாவின் முப்பதாவது வருட நினைவு தினம்..🙏🙏🙏 1991.02.06 - 2021.02.06

கருத்துகள் இல்லை: