புதன், 2 பிப்ரவரி, 2022

மக்களவையில் ராகுல் காந்தி பாய்ச்சல் : you will never ever in entire your life rule over the people of tamilnadu

Rahul Gandhi : I go to my brother in tamilnadu and i say what you want? and he says this is what i want and he ask me what you want? and i said this is what i want its a partnership its a not a kingdom. remember that you will never ever in entire your life rule over the people of tamilnadu please listen what i am saying

 மாலைமலர் : 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வேலையில்லாத் திண்டாட்டம் நாட்டில் நிலவுவதாக ராகுல் காந்தி பேசினார்.
பணக்காரர்களுக்கு ஒரு இந்தியா, ஏழைகளுக்கு ஒரு இந்தியா உருவாகிவிட்டது- மக்களவையில் ராகுல் காந்தி பாய்ச்சல்
மக்களவையில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசியதாவது:-
ஜனாதிபதியின் உரையில் எந்த பிரச்சினை பற்றியும் ஆழமாக குறிப்பிடப்படவில்லை. நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அந்த உரையில் எதுவும் இல்லை. வேலைவாய்ப்பின்மை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

ஒரு குடிமகனாக நாட்டில் நடைபெற்று வரும் விஷயங்கள் குறித்து கவலை கொண்டுள்ளேன். 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வேலையில்லாத் திண்டாட்டம் நாட்டில் நிலவுகிறது. இந்தியா என்பது கூட்டாட்சி, ராஜாங்கம் இல்லை. தமிழகத்தில் நீட் குறித்த விவகாரத்துக்கு நீங்கள் (மத்திய அரசு) செவிசாய்க்கவில்லை. தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களுக்கும் அதன் கண்ணியம், கலாச்சாரம், வரலாறு உள்ளது. அதனை மதிக்க வேண்டும். மாநிலங்களின் குரலை ஒடுக்க வேண்டும் என நினைப்பது ஒருபோதும் நடக்காது.

பணக்காரர்களுக்கு ஒன்று, ஏழைகளுக்கு ஒன்று என இரண்டு இந்தியா உள்ளது. இந்த இரண்டுக்கும் இடையே இடைவெளி அதிகரித்து வருகிறது. இன்று, 84 சதவீத இந்தியர்களின் வருமானம் குறைந்து, அவர்கள் வறுமையை நோக்கி தள்ளப்பட்டுள்ளனர். அமைப்புசாரா துறை முற்றிலுமாக அழிந்துவிட்டதால், மேக் இன் இந்தியா என்பது நடக்காத காரியம். இந்த அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட இரண்டு இந்தியாவையும் ஒன்றிணைக்கும் பணியை பிரதமர் தொடங்கவேண்டும்.

இவ்வாறு ராகுல் காந்தி காரசாரமாக பேசினார்.

கருத்துகள் இல்லை: