திங்கள், 31 ஜனவரி, 2022

கரூர் ஜோதிமணி - காங்கிரசோடு தகராறு திமுகவோடு தகராறு ... பாஜக அமைச்சர்களை தொடர்ந்து சந்திப்பு..

May be an image of 1 person and text that says "புதிய தலைமுறை உண்மை LL ce தற்போது AASSN ஜோதிமணிக்கு கரூர் காங்கிரஸ் கண்டனம் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தன்னிச்சையாக செயல்பட்டு தோல்வியை தேடித் தர முயற்சி அமைச்சர் செந்தில் பாலாஜி பற்றி காழ்ப்புணர்ச்சியில் ஜோதிமணி பேசுவதாக கரூர் மாவட்ட காங்கிரஸ் கண்டனம் Follow us on 31|01|2022 www.puthiyathalaimurai.com"

Venkat Ramanujam :  முதல் பெண்ணாக  தமிழ்நாடு #காங்கிரஸ்  தலைவர் பதவிக்கு வருவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில் ..,
அருமையாக
 செயல்பட்டு வரும் கரூர் கலெகடர் உடன் தேவையில்லாத  தகராறு ..
தான் மட்டும் தனியாக சென்று #பாஜக மந்திரிகளை ஒன்றன் பின் ஒன்றாக பார்த்தது மட்டுமில்லாமல் அவர்களை தேவையில்லாமல் புகழ்ந்ததால்  வந்த சர்ச்சை ..
இன்றைக்கு  இப்போது கூட்டணி பேச்சுவார்த்தையின்போது #திமுக உடன் மட்டுமல்லாமல் கரூர் காங்கிஸார் கூடவும்  தகராறு ..
இந்தியாவை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லாமல் பின்னோக்கி அழைத்துச் செல்லும் #RSS எனும் கொடூரனை ..
ஜனநாயக பாதையில் சென்று அழிப்பது அத்தனை இலகுவான பாதை அல்ல..


ஆனாலும் ஜனநாயக படி ஊர் கூடி ஒன்றாக செயல்பட்டால் மட்டுமே இந்த இலக்கினை நாம் அடைய முடியும் ..
2019 ஆண்டின் தமிழ்நாடு கூட்டணி சிந்தாமல் சிதறாமல் தொடர்ந்தால் தானே ..
2024 ஆண்டில் அதே வெற்றியை ஈட்ட முடியும் ..
அப்படி நடந்தால் தானே மோடியை #pegasusscam #pmcares #scam #rafalescam #petrolscam   ஊழல் காரணமாக சிறைக்கு அனுப்ப முடியும் ..
ஆகவே குறுகிய  காலத்தில் பெரும் வள்ர்ச்சி கண்ட ஜோதிமணிக்கு கூட்டணிக்குள் பிணக்கை ஏற்படுத்த செய்யும் முயற்சி  அழகல்லவே ..
காங்கிரஸ் கட்சியின் சத்தியமூர்த்தி பவனை காமராசர் உடன் சேர்ந்து கட்டி முடித்த அன்றைய காங்கிரஸ் தலைவர்  சட்டனாத கரையாளர் (அம்மா வழி) பேரன் என்ற முறையில் வேண்டுகிறேன் ..
அவர் தனது காரியங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரம்  அருகி உள்ளது ..
K.S Alagiri  என்கிற தலைவர் பொறுப்பில் இருக்கும் போது வால் ஆடலாமா..
கூட்டணி பேச்சு வார்த்தைகளை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் விட்டு ..
தனது எம்பி பொறுப்புக்களை உணர்ந்து  மாற்றி கொள்வாரா அவரது நடவடிக்கைகளை ..
நம்பிக்கையுடன் ..
#சவெரா 31-01-2022 இரவு 20:30

கருத்துகள் இல்லை: