திங்கள், 2 நவம்பர், 2020

இரு மகள்களுக்கு பாலியல் தொல்லை.. தந்தையை கொலை செய்த தாய், மகள்கள்!!

A 42-year-old woman allegedly killed her husband with the help of her teenage daughters in Noida on Thursday. The man was strangled to death with a dupatta at his residence in Noida. 


 tamil.oneindia.com : பல ஆண்டுகளாக மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த கணவரை, தனது மகள்களுடன் சேர்ந்து மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நொய்டாவை சேர்ந்தவர் 50 வயது நபர். இவர் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்தார். இவர் நொய்டாவில் மனைவி, 3 மகள்களுடன் வசித்து வந்தார். இவரை மனைவியும் அவரது மகள்களும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டனர். இதுகுறித்து தாய் கூறுகையில் எனது கணவருக்கு குடிப்பழக்கமும் போதை பழக்கமும் இருந்தது. அது போல் அவர் உடலுறவிலும் அதிகம் நாட்டம் கொண்டவர். இதனால் தினமும் என்னை கொடுமைப்படுத்தி வந்தார். என்னை ஒரு முறை கொலை செய்யவும் அவர் தயங்கவில்லை. மற்றொரு முறை இதற்கு நான் ஒப்புக் கொள்ளாததால் என்னை தீ வைத்து எரிக்கவும் முயற்சித்தார். இந்த நிலையில் எனது மகள்கள் வளர்ந்துவிட்ட நிலையில் அவர்களுக்கு இவர் கடந்த சில ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்துவந்தார். எனக்கு 16, 14, 11 வயதுகளில் 3 மகள்கள் உள்ளனர்.



பாலியல் தொல்லை

இதில் 11 வயது மகளை பெற்ற தந்தையே பலாத்காரம் செய்து கொலை செய்து விட்டார். இதுகுறித்து நான் அசிங்கத்தின் காரணமாகவும் என் கணவர் மீதான அச்சத்தின் காரணமாகவும் யாரிடமும் சொல்லவில்லை. என் கணவரின் பாலியல் தொல்லையால் அதிக உதிரப்போக்கால் என் மகள் இறந்தார்.

பாலியல் சித்ரவதை

இந்த நிலையில் மற்ற இரு மகள்களுக்கும் அவர் பாலியல் தொல்லை கொடுக்கத் தொடங்கிவிட்டார். கடந்த சில ஆண்டுகளாக அவரின் தொல்லையால் நாங்கள் மூவருமே மனஉளைச்சலால் இருந்தோம். இதனால் அவரை கொலை செய்ய முடிவு செய்தோம். இவ்வாறு செய்தால் தங்கள் தினந்தோறும் இந்த பாலியல் சித்ரவதைகளிலிருந்து தப்பிக்கலாம் என முடிவு செய்தோம்.

காவல் நிலையத்தில் புகார்

அதன்படி எனது மூத்த மகள் அவரது கழுத்தை துப்பட்டா கொண்டு நெரித்தார். எனது இளைய மகள் அவரது இரு கைகளையும் இறுக்கமாக பிடித்துக் கொண்டார். நான் அவரது கால்களை இறுக்கமாக பிடித்துக் கொண்டேன். அவரது உயிர் பிரிந்தவுடன் கால்களை விட்டு விட்டேன். இது போன்று கணவரின் தொல்லை குறித்து நாங்கள் மோர்னா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தோம்.

கணவர்

எனது மகள்கள் எந்த மாதிரியான பாலியல் தொல்லையை அனுபவித்தார்கள் என்பது அந்த காவல் நிலையத்தில் உள்ள அனைவருக்குமே தெரியும். எனினும் எனது கணவருக்கு எதிராக யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனக்கும் எனது மகள்களுக்கும் உதவவில்லை என தெரிவித்தார். இதுகுறித்து போலீஸ் அதிகாரி பிரபாத் தீட்சித் கூறுகையில் அந்த சம்பவம் குறித்து அவரது கணவரிடம் விசாரிக்க முற்படுவோம். ஆனால் அவரோ எப்போதும் போதையிலேயே இருப்பதால் நாங்கள் சொல்வதை காது கொடுத்தே கேட்டதில்லை என்றார்.

கருத்துகள் இல்லை: