Karthikeyan Fastura :Term Insurance என்பது தான் உண்மையான இன்சூரன்ஸ். அது தான் indemnityஐ பெரிய அளவில் கொடுக்கிறது. சராசரியாக இன்று ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கொடுக்கிறது.
வாழும் போதே பணம் கிடைக்கும் என்ற பாலிசிகள் அனைத்தும் indemnity நீங்கள் செலுத்தும் ப்ரீமியம் தொகையை காட்டிலும் இரண்டு மடங்கு மட்டுமே கொடுக்கும். அதாவது 3 லட்சம் ப்ரீமியம் செலுத்தினால் உயிரிழப்பு நேரும்போது கிடைக்கும் இழப்பீட்டு தொகை சராசரியாக 6 லட்சம் கிடைக்கும். இது சராசரி அளவு திட்டத்திற்கு திட்டம் இது மாறுபடும்.
அதே சமயம் எல்லோராலும் Term இன்சூரன்ஸ் எடுத்துவிட முடியாது. அவர்கள் இன்சுரன்ஸ்ஸில் நீண்டகால முதலீடாகவும் ஓரளவிற்கு நல்ல indemnityம் சேர்த்து கொடுக்கும் பாலிசிகள் நிறைய உள்ளன. அதில் சேரலாம்.
வங்கியில் குறுகியகால, நீண்டகால முதலீட்டை விட இன்சுரன்ஸ் பாதுகாப்பானதே. கூடவே உங்களுக்கு கிடைக்கும் ரிட்டன்ஸ்க்கு முழுவரிவிலக்கு கிடைக்கிறது.
இவற்றை எல்லாம் ஒற்றை பதிவில் எல்லோருக்கும் விளக்கிவிடமுடியாது. ஒவ்வொருத்தருக்கும் ஒரொரு தேவை, சூழல் இருக்கும். அவரரவர்க்கு ஏற்ற பொருத்தமான பாதுகாப்பு மற்றும் முதலீட்டு திட்டத்தை அறிய நல்ல நிதி ஆலோசகரிடம் செல்வது நல்லது.
அந்தவகையில் உங்களுக்கு ஏற்ற சரியான வழிகாட்டுதல்களை தர தயாராக இருக்கிறேன்.
பணத்தோட்டம் சேனலில் வருமானவரி தாக்கல் செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து அலசியிருப்பேன்.
தொழில்புரிபவர்கள் டெர்ம் இன்சுரன்ஸ் எடுக்க வேண்டும் என்றால் அவசியம் இது தேவை. அதுவே வேலைக்கு சென்று மாத சம்பளம் வாங்குபவர்கள் டெர்ம் இன்சுரன்ஸ் வேண்டும் என்றாலும் ஓரிடத்தில் தேவை. எங்கே என்றால் உங்கள் Payslipல் PF இருந்தே ஆகவேண்டும். இல்லையென்றால் வருமானவரி தாக்கல் செய்த காப்பி இருக்கவேண்டும்.
இதுபோன்று நிறைய விஷயங்கள் இருக்கிறது. 6 நிமிடம் தான். பார்த்துவிடுங்கள்.
பங்குசந்தையில் முதலீடு என்பது நேரடியாக நாமே செய்வது தான் சிறந்தது. ஆலோசனைகளை தர்க்கரீதியாக ஆராய்ந்து ஏற்றுக் கொள்ளலாம். அது சிரமம் என்றால் யூலிப் பாலிசிகளில் முதலீடு செய்வது பாதுகாப்பானது. அதைவிட்டால் நல்ல மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்வது நல்லது.
அதைவிடுத்து தனிநபர்கள் யாரென்றாலும் அவர்களது கணக்கிற்கு பணம் அனுப்பி அதை அவர்கள் பங்குசந்தையில் முதலீடு செய்து வரும்லாபத்தில் உங்களுக்கு மாதம் தோறும் தருகிறேன் என்றாலும் ஆண்டுக்கொருமுறை தருகிறேன் என்றாலும் நம்பாதீர்கள்.
சிலர் இவ்வாறு கூறி முதலீடு திரட்டுவதாகவும் அவர்களை நம்பலாமா என்றும் என்னிடம் தனிப்பட்ட முறையில் கேட்கிறார்கள். இதுபோன்ற முதலீடுகள் ஆபத்து மட்டுமல்ல அரசின் அங்கீகாரம் இல்லாததும் கூட. கம்பெனியாக பதிந்து உங்களையும் பங்குதாரராக ஆக்குகிறேன் என்று சொல்லி உங்கள் முதலீடை அவர் பங்குசந்தையில் முதலீடு செய்தாலும் ரிஸ்க் தான்.
என் ஸ்டார்ட்அப் நிறுவனத்திற்காக நான் கூட முதலீட்டை திரட்டி இருக்கிறேன். அதிலும் மிக மிக அளவாக தேவைக்கு தக்கன மட்டுமே. ஆனால் நான் அதை பயன்படுத்தி முதலீடு செய்தது தொழிலில். பங்குசந்தையில் அல்ல.
பங்குசந்தையில் முதலீடு செய்வது நல்லதே. அதை நாமே கற்று நேரடியாக செய்ய வேண்டும். அல்லது மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் வழியே செய்யலாம். Investment Portfolio நிறுவனங்களை கூட நான் பரிந்துரைக்கமாட்டேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக