ஞாயிறு, 1 நவம்பர், 2020

எனக்கு தெரிந்த கலைஞர் .....ஈழவிடுதலையை உள்ளத்தில் ஒரு நெருப்பாக கொண்டிருந்தார் என்பதை அறுதியிட்டு கூறுகிறேன்!

ஐந்து முறை முதல்வராக இருந்த கலைஞர் பெரும்பாலும் economy classல் விமானத்தில் பயணத்துள்ளார். எங்கு சென்றாலும் ஹெலிகாப்டர், தனி விமானம் என்று ஆடம்பரத்தில் திளைத்த ஜெயலலிதா போல் இல்லாமல் கடைசிவரை எளிமையாகவே இருந்தார்.

 எனக்கு தெரிந்த கலைஞர் ....  மிக மிக இள வயதிலேயே எல்லா உச்சங்களை வேகமாக எட்டி பிடித்தவர்  அதுவும் ஒரே காலக்கட்டத்தில் அரசியல் நாடகம் திரைத்துறை பத்திரிகை இலக்கியம் என்று பல தோணிகளில் புயல்வேகம் காட்டியவர்.

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம்  நலிந்த மக்களின் நலன்களை தேடி தேடி செய்தவர்.      கலைஞருக்கு ஒரு ராசி உண்டு .எவர் எவருக்கெல்லாம் நன்மை செய்தாரோ அவர்கள் எல்லாம் பெரும்பாலும்  கலைஞரை ரவுண்டு கட்டி அடிப்பதிலேயே குறியாக இருப்பார்கள். 

கலைஞரின் கொள்கைகள் வேலைத்திட்டங்கள் பலருக்கு நன்மை பயத்தாலும் எப்போதும் சிலருக்கு கசப்பாகவே இருக்கும் .  அது உலக நியதி . பெரும்பாலும் அப்படி கசந்தவர்கள் தங்கள்  தரப்பு உண்மையை வெளிப்படையாக கூறமுடியாமல் திணறுவார்கள் .   அப்படிப்பட்டவர்கள் வேறு ஏதோதோ  காரணங்களை கூறி கலைஞர் மீது வசை மாரி பொழிவார்கள்.      ஆனால் காலம் வேறு விதமாக கூறிக்கொண்டு இருக்கிறது.   ஈழ விவகாரத்தில் கலைஞர் சொல் கேட்டு இருந்தால் எண்பது ஏழுகளிலேயே பெருவெற்றி பெற்றிருப்பார்கள் .  கலைஞர் சொல் கேட்கவிடாமல் எது தடுத்தது? 

இது ஒரு உதாரணம் மட்டுமே.. இன்னும் என்னன்னவோ உதாரணங்கள் கூறலாம்.

ஈழவிடுதலை போராளிகளுக்கு தமிழகத்தில் மட்டுமல்ல இந்திய அளவிலும் கூட பெரும் ஆதரவு தளத்தை  செதுக்கி தந்தவர் கலைஞர் பெருமகன் .

கலைஞர் உருவாக்கிய ஆதரவு கோட்டையை களவு கொண்டு மக்களை காவு கொடுத்தவர்கள் வரலாற்று குற்றவாளிகள்.

 அந்த குற்றவாளிகளின் பட்டியல் இன்னும் நீண்டுகொண்டுதான் இருக்கிறது . மக்களை காவுகொடுத்த கொலைப்பழியை யார் தலையிலாவது போட்டுவிட வேண்டுமென்று கயவர்கள் திணறுவது தெரிகிறது.

காலம் எப்போதும் கயமைக்கு காவலாக இருக்காது . 

கலைஞர் எப்போதும் ஈழவிடுதலையை  உள்ளத்தின் உள்ளே ஒரு நெருப்பாக கொண்டிருந்தார் என்பதை அறுதியிட்டு கூறுகிறேன்.  

கலைஞர் ஆலோசனையை புறக்கணித்ததால்தான் ஈழவிடுதலை போராட்டம்  தோல்வி அடைந்தது .

இதுதான் உண்மை . எல்லோரும் நம்பவேண்டும் என்ற அவசியம் எனக்கு கிடையாது . நான் கூறித்தான் உலகுக்கு இந்த உண்மை தெரியவேண்டும் என்பதில்லை .. 

இனி வரப்போகும் காலமெல்லாம் இந்த உண்மையை உலகம் அழுத்தமாக கூறத்தான் போகிறது


கருத்துகள் இல்லை: