சனி, 7 நவம்பர், 2020

மறைந்த அமைச்சர் துரைக்கண்ணு பினாமிகள் ஐவர் அடுத்தடுத்து கைது ..வேலுமணியின் 300 கோடி ரூபா எங்கே?

இறந்த அமைச்சர் துரைக்கண்ணு பினாமிகள் ஐவர் அடுத்தடுத்து கைது
வேலுமணி கொடுத்துவைத்த 300 கோடி ரூபாப் கட்சிப்பணம் எங்கே?.. விகடன் செய்தி
சக அமைச்சரிடம் கொடுத்து வைத்தது மட்டுமே 300 கோடி எனில் கொரோனாவை வென்ற நாயகனிடமும் வெளிநாட்டில் தீவும் ஹெலிகாப்டரும் வாங்கியதாக சொல்லப்படும் மகனிடமும் எவ்வளவு இருக்கும்
கோவை மெயிலின் நாயகனுக்கு எப்படி அவ்வளவு பணம் வந்திருக்கும் என்பவர்களுக்கு ஒரு சின்ன விசயம் சொல்றேன் விசாரிச்சு பாருங்க
நீங்க வசிக்கும் பகுதிகளில் பஞ்சாயது அல்லது நகராட்சி சார்பில் வீதீ விளக்குகள் மாட்டிருப்பாங்க
அந்த LED விளக்குகள் சமீபத்திய வருடங்களாக எவ்வளவு முறை பீஸ் போயிருக்கிறது எத்தனை முறை மாற்றப்பட்டிருக்கிறது என விசாரித்து பாருங்கள்
உதாரணத்திற்கு எங்க பூர்வீக கிராமத்தில் உள்ள LED விளக்குகளில் 80% எறிவதில்லை அல்லது அடிக்கடி மாற்றப்படுகிறது இதே போன்ற நிலைதான் தமிழகமெங்கும் நிலவுகிறது
காரணம் என்ன தெரியுமா ஒரு LED பல்புக்கு 4300 ரூபாய் என டெண்டர் விடப்பட்டு வாங்கப்பட்டது
(நான் என் நிறுவனத்தில் இதே வாட்ஸ் அளவுள்ள LED பல்புகளை பிலிப்ஸ் ஜாக்குவார் போன்ற ப்ராண்டுகளில் 1300ருபாய் முதல் 1500 ரூபாய்வரை விலை கொடுத்து வாங்கி மாட்டி இருக்கிறேன் பல வருடங்களுகளாக எந்த பிரச்சினையும் இல்லை ஒன்றிரண்டு எப்போதாவதுதான் பீஸ் போகும்)
இதனுடைய உண்மையான விலையை காட்டிலும் பல மடங்குவிலை வைத்து தரமில்லாத ப்ரண்ட் LED லைட்டுகள் வாங்கப்பட்டிருக்கிறது
இதில் மட்டுமே பல்லாயிரம் கோடி ரூபாய் சில வருடங்களாக கொரோனா நாயகனுக்கு கிடைத்திருக்கிறது
இப்படி கோடிக்கணக்கில் கிடைத்த பணம் பல வழிகளில் ஆங்காங்கே கொடுத்து வைக்கப்பட்டு இருக்கிறது
அதில் ஒரு பகுதிதான் கொரோனோ பாதிப்பால் இறந்த அமைச்சரின் ஆட்களிடம் ரெய்டு
உள்ளாட்சிதுறை முறைகேடுகள் தொடர்பாக பல வழக்குகள் நீதீமன்றத்தில் ஆதாரங்களோடு தொடுக்கப்பட்டிருக்கிறது
நீதீமன்றமும் இவ்வழக்கில் முகாந்திரம் இருப்பதாக சொல்லி இருக்கிறது
சட்டத்தின் அத்தனை ஒட்டைகளையும் அதிகார பலத்தையும் வைத்து தப்பித்து வரும் நாயகனுக்கு எதிராக நேற்று கூட ராதாபுரம் அப்பாவு அவர்கள் ஏற்கனவே தான் தொடர்ந்த வழக்கில் மேலும் சில இணைப்புகளோடு மேல் விசாரணைக்கு கேட்டிருக்கிறார்
அவ்வழக்கு வரும் 16 ம் தேதி விசாரணைக்கு வர இருக்கிறது .
இது குறித்தெல்லாம் எந்த நடுநிலை ஊடகங்களும் வெளியே சொல்வதில்லை
அதிமுகவை புனித பிம்பமாக காட்டி தங்கள் வயிற்று பிழைப்பை நடத்துவதில் மட்டும் குறியாக இருக்கிறார்கள்
நன்றி
Rajendran Raj.

கருத்துகள் இல்லை: