திங்கள், 2 நவம்பர், 2020

டிரம்பின் தேர்தல் பேரணிகளில் கலந்துக் கொண்ட 700 பேர் பலி அதிர்ச்சித் தகவல்!

zeenews.india.com :அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சில நாட்களில் நடக்கவிருக்கும் நிலையில் பல மாதங்களாக தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்துள்ளன. ஜூன் 20 முதல் செப்டம்பர் 22 வரை தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்துக் கொண்ட 18 தேர்தல் பேரணிகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆய்வில், டிரம்பின் பேரணிகளில் கலந்துக் கொண்ட 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் கண்டறியப்பட்டுள்ளது.

புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜூன் முதல் செப்டம்பர் வரை நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் 18 தேர்தல் பேரணிகளை நடத்தியுள்ளார். இந்த பேரணிகளில், ட்ரம்ப் பொதுமக்களின் வாக்குகளைப் பெற முழு மூச்சாக முயன்றார். அவரது பிரசாரத்திற்காக பொது மக்கள் கொடுத்திருக்கும் விலை அதிகம் என்று தற்போது ஒரு ஆய்வு கூறுகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சில நாட்களில் நடக்கவிருக்கும் நிலையில் பல மாதங்களாக தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்துள்ளன.

ஜூன் 20 முதல் செப்டம்பர் 22 வரை தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்துக் கொண்ட 18 தேர்தல் பேரணிகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆய்வில், டிரம்பின் பேரணிகளில் கலந்துக் கொண்ட 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் கண்டறியப்பட்டுள்ளது.

டிரம்பின் பேரணிகள் குறித்து ஆராய்ச்சி  
நவம்பர் 3 ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வேட்பாளர்கள் தேர்தல் பேரணிகளை தொடர்ந்து நடத்தி வந்தார்கள். இந்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் வழக்கத்தை விட மிகவும் மாறுபட்டு இருக்கிறது. கொரோனா வைரஸ் தாக்குதல் உலகையே ஆட்டிப் படைக்கும் இந்த நேரத்தில் தேர்தல் நடைபெறுவது இயல்பானதாக இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்க முடியாது. 
அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக அறிஞர்கள் அதிபர் டிரம்பின் பேரணிகள் குறித்து ஆய்வு செய்துள்ளனர். அதிபர் டிரம்பின் பேரணிகளில் கலந்துக் கொண்ட அவரது ஆதரவாளர்களில் ஏராளமானோர் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். 
2020 ஜூன் 20 முதல் 2020 செப்டம்பர் 22 வரை நடந்த டிரம்பிற்கான 18 தேர்தல் பேரணிகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்துள்ளனர். டிரம்பின் பேரணிகளில் கலந்துக் கொண்ட 30,000 க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது, அதே நேரத்தில் 700 க்கும் மேற்பட்டோர் தொற்றுநோயால் இறந்துள்ளனர்.

பொது சுகாதார அதிகாரிகளின் எச்சரிக்கை  

கொரோனா காலத்தில் நடைபெறும் பிரசார நிகழ்வுகள் வைரஸ் தொற்றை பரப்பும் என்று பொது சுகாதார அதிகாரிகள் பலமுறை எச்சரித்துள்ளனர். ஏனெனில் இந்தப் பேரணிகள் குறிப்பாக கோவிட் -19 நோய்த்தொற்றின் விகிதம் ஏற்கனவே அதிகமாக இருந்த இடங்களில் நடத்தப்பட்டன. 

அரசியல்வாதிகள் இந்த எச்சரிக்கையை அலட்சியப்படுத்தியதன் விளைவு தற்போது ஆராய்ச்சியின் மூலம் அம்பலமாகியுள்ளது.  இந்த பேரணிகளில் கலந்து கொண்ட மக்கள் தேர்தலுக்கு முன்னரே பெருமளவிலான பாதிப்பை அனுபவித்துவிட்டன. கொரோனா தொற்றுநோயைத் தடுக்க சமூகத் தொலைவை பின்பற்றுவது முக்கியம் என்ற நிலையில் தேர்தல் பேரணிகள் அவை அப்பட்டமாக மீறப்படும் என்பதை சொல்லித் தான் தெரிய வேண்டுமா என்ன?   பேரணிகளில் ஒரே இடத்தில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் கலந்துகொள்வதால், தொற்று வேகமாக பரவுகிறது.

சுகாதார பாதுகாப்புக்கான ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மையத்தின் (Johns Hopkins Center for Health Security) தொற்று நோய் நிபுணர் அமேஷ் அடால்ஜா (Amesh Adalja) இந்த அறிக்கையை பரிந்துரைப்பதாக விவரித்தார். இந்த அறிக்கை குறித்து தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 
அமெரிக்காவில் இதுவரை 93,18,043 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவிட்-19 நோய்க்கு அமெரிக்காவில் 2,36,072 பேர் பலியாகிவிட்டனர்

 

கருத்துகள் இல்லை: