செவ்வாய், 3 நவம்பர், 2020

ஒரேநாளில் 7 பில்லியன் டாலர் முகேஷ் அம்பானி சொத்து மதிப்பில் சரிவு.. அதிர்ச்சி !

tamil.goodreturns.in/ கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட வர்த்தக மற்றும் பொருளாதாரப் பாதிப்பில் இந்திய மக்களும், இந்திய நிறுவனங்களும் மோசமான சூழ்நிலையை எதிர்கொண்ட போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது டெலிகாம் மற்றும் ரீடைல் வர்த்தகத்தை விரிவாக்கும் முயற்சியாக இப்பிரிவு பங்குகளை விற்பனை செய்து 2 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதியை முதலீடாகப் பெற்றுப் பங்குச்சந்தையில் தாறுமாறான வளர்ச்சியைக் கண்டது. 

இந்நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தற்போது மோசமான காலாண்டு முடிவுகள் மற்றும் பியூச்சர் ரீடைல் ஒப்பந்தத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் இந்நிறுவன பங்குகளை மிகவும் மோசமான சரிவை எதிர்கொண்டுள்ளது. திங்கட்கிழமை பங்குச்சந்தை வர்த்தகத்தின் ஒரு நாள் சரிவில் ஏற்பட்ட பாதிப்பு முகேஷ் அம்பானி சொத்து மதிப்பில் சுமார் 5 பில்லியன் டாலர் அளவிலான சரிவை ஏற்படுத்தியுள்ளது. 

இதுமட்டும் அல்லாமல் இந்நிறுவன முதலீட்டாளர்கள் இன்று ஒரு நாள் வர்த்தகத்தில் மட்டும் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை இழந்துள்ளனர்   ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்காரர் ஆக விளங்கும் முகேஷ் அம்பானி-யின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்த லாக்டவுன் காலத்தில் மட்டும் அதிகளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்து பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கும், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் புதிய நம்பிக்கையைக் கொடுத்தது. 

ஆனால் இன்றைய வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள சரிவு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் 3 மாத உயர்வை முற்றிலுமாகக் குறைத்துள்ளது. 

காலாண்டு முடிவுகள் செப்டம்பர் 30 உடன் முடிந்த காலாண்டு முடிவுகளில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லாபத்தில் 15 சதவீத சரிவையும், வருமானத்தில் 24 சதவீத சரிவையும் பதிவு செய்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் காலாண்டு முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த அதிர்ச்சியின் வெளிப்பாடு தான் இன்றைய வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள 7.8 சதவீத சரிவு.

முக்கியக் காரணம் இக்காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் சுத்திகரிப்புப் பிரிவில் கிடைத்த வருமானம் மற்றும் பெட்ரோல், டீசல் வர்த்தகத்தில் ஏற்பட்ட வர்த்தகப் பாதிப்புகள் பெரிய அளவிலான வருவாய் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நிதியாண்டில் இதே காலாண்டில் ஓரு பேரல் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பில் 9.4 டாலர் வருமானம் கிடைத்த நிலையில், தற்போது 5.7 டாலர் மட்டுமே கிடைத்துள்ளது. ஆனால் இதேகாலகட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ மூலம் கிடைக்க லாபத்தில் அளவு 3 மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


அமேசான் - பியூச்சர் குரூப் - ரிலையன்ஸ் ரீடைல் பியூச்சர் குரூப் - ரிலையன்ஸ் ரீடைல் வர்த்தக ஒப்பந்தத்திற்கு அமேசான் சிங்கப்பூரில் தற்காலிக தடை பெற்ற நிலையில், பியூச்சர் குரூப் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையத்திற்கு அமேசான் ஒப்பந்தத்தைத் தவறாகப் புரிந்துகொண்டது. இதைத் தடையை இந்தியச் சட்டதிட்டத்தில் இடமில்லை எனத் தெரிவித்துள்ளது. மேலும் பியூச்சர் குரூப், அமேசானுக்கு எதிராக இந்திய நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க ஆலோசனை செய்து வருகிறது.


பங்குச்சந்தை தரகர் நிறுவனங்கள் (Brokerage) இதுமட்டும் அல்லாமல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பங்குச்சந்தை தரகர் நிறுவனங்கள் அதிகமானோர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளை வாங்க வேண்டாம் என 'Hold' 'Reduce' 'Underperform' பிரிவில் பட்டியலிட்டுள்ளதால், முதலீட்டாளர்கள் ரிலையன்ஸ் பங்குகளை அதிகளவில் விற்பனை செய்யத் துவங்கினர்


இன்றைய வர்த்தகத் துவக்கத்தில் இருந்து ரிலையன்ஸ் பங்குகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட காரணத்தால் இந்நிறுவனத்தின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வந்தது. திங்கட்கிழமை காலையில் ஒரு பங்கு விலை 2,027 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், வர்த்தக முடிவில் 9.00 சதவீதம் சரிவடைந்து 1,869.00 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்தது.

கருத்துகள் இல்லை: