வியாழன், 5 நவம்பர், 2020

அர்னாப் கோஸ்வாமிக்கு 14 நாள் நீதிமன்ற காவல் - ஏன் அர்னாப் கோஸ்வாமி கைது?

அர்னாப்பினால்  தற்கொலை செய்தவரின் மனைவியும் மகளும்

  dailythanthi.com : மும்பை அலிபாக் பகுதியில் கடந்த 2018 ஆம் ஆண்டு கட்டிட உள்வடிவமைப்பாளர் அன்வாய் நாயக் மற்றும் அவரது தாய் தற்கொலை செய்த வழக்கு தொடர்பாக தனியார் தொலைக்காட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை போலீசார் இன்று கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.மும்பையில் உள்ள வீட்டில் இருந்து தன்னை போலீசார் வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி அழைத்துச் சென்றதாக அர்னாப் தெரிவித்திருந்தார். அவரது கைதுக்கு பா.ஜ.க. கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் சட்ட விதி மீறல் எதுவும் இல்லை என மராட்டிய அரசு தெரிவித்துள்ளது.இதற்கிடையில் மும்பையில் உள்ள இல்லத்தில் சென்று கைது செய்ய முயன்றபோது காவலர்களை தாக்கியதாக அர்னாப் கோஸ்வாமி, அவரது மனைவி மற்றும் 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அர்னாப் கோஸ்வாமியை அலிபாக் மாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Bilal Aliyar : ஏன் அர்னாப் கோஸ்வாமி கைது ?!  

அர்னாப் மிரட்டலால் இறந்து போன அன்வை நாயக் அவர்களின் மகள் கூறுகிறார் படியுங்கள்..    

என் அப்பாவுக்கு தர வேண்டிய 83 லட்ச ரூபாயை அர்னாப் கோஸ்வாமி தரவில்லை. பணத்தை தொடர்ந்து கேட்ட போது என் தந்தை அர்னாபால் மிரட்டப்பட்டார். எங்களை பின்தொடர்ந்து யாராவது பைக்கில் வருவார்கள்.... எங்கள் தொலைபேசியை ஒட்டு கேட்பது.... வீட்டுக்குள் வந்து சிலர் உட்கார்ந்துகொண்டு மன உளைச்சல் ஏற்படுத்துவார்கள்... என்னுடைய வேலை, தொழிலை ஒன்றுமில்லாமல் செய்து விடுவதாக மிரட்டினர்.... என் அப்பா தற்கொலை செய்யும் முன் அர்னாப் பெயரை எழுதி வைத்துவிட்டு இறந்தார்.... என் அப்பா சாவுக்கு காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி நாங்கள் ஏறாத இடம் இல்லை... ஆனால் திடீரென்று ஒரு நாள் வழக்கு முடிக்கப்பட்டுவிட்டது என்று சொன்னார்கள்......"
"அர்னாப் கோஸ்வாமி கைதுக்காக இத்தனை நாள் காத்திருந்தோம்... இந்த கைதை வரவேற்கிறோம்.... எங்களுக்கு நீதி வேண்டும்...."

போன ஆட்சி பாஜக ஆட்சி என்பது குறிப்பிடத்தகுந்தது.. அவர்கள் மூடி மறைத்த வழக்கை, சிவ சேனா ஆட்சி மீட்டு எடுத்துள்ளது..

இதில் எங்கே பத்திரிக்கையாளர்களின் குரல்வளைக்கு ஆபத்து வந்தது ?! ஒரு திருட்டு பயலின் மீதே அரசு நடவடிக்கை எடுத்துள்ளது... !!

கருத்துகள் இல்லை: