வெள்ளி, 6 நவம்பர், 2020

விஜய் எத்தனையோ முறை சொல்லியும் எஸ்ஏசி கேட்கவில்லை.. விஜய்யின் தாயார் ஷோபா பேட்டி

 

 Velmurugan P - tamil.oneindia.com : சென்னை: விஜய் எத்தனையோ முறை சொல்லியும் அரசியல் பயணம் குறித்து பொதுவெளியில் பேசுவதை எஸ்ஏ சந்திரசேகர் நிறுத்தவில்லையாம். இதனால் விஜய் அவருடைய தந்தையுடன் பேசுவதை நிறுத்திவிட்டார் எ னநடிகர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் கூறினார். 

கற்பனையான கேள்வி

சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்ட இந்த நேரத்தில், நடிகர் விஜய், தனது விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றி உள்ளதாகவும் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சி ஆரம்பக்க உள்ளதாகவும் செய்தி ஊடகங்களின் சமூக வலைதளங்களில் நேற்று தகவல்கள் காட்டுத் தீயாக பரவின. இந்நிலையில் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர், அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சிக்கு நான் தான் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்துள்ளேன்.                   இது என்னுடைய முயற்சி. இது விஜயின் அரசியல் கட்சி அல்ல" என்று நேற்று விளக்கம் அளித்தார். விஜய் விளக்கம் இதையடுத்து அரசியல் பிரவேசம் குறித்து விளக்கம் அளித்த நடிகர் விஜய், " என் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகா் அவா்கள் ஓா் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளார் என்பதை ஊடகங்களின் வாயிலாக அறிந்தேன். அவா் தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்வித தொடா்பும் இல்லை என திட்டவட்டமாக எனது ரசிகா்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.   ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்  ஒரு எம் எல் ஏயாக  முடியல்லியே நோ பீஸ் ஆப் மைண்ட் அல்லது 




அதில் சேர வேண்டாம் இதன் மூலம் அவா் அரசியல் தொடா்பாக எதிர்காலத்தில் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கைகளும் என்னை கட்டுப்படுத்தாது என்பதை தெரியப்படுத்திக்கொள்கிறேன். மேலும் எனது ரசிகா்கள், எனது தந்தை கட்சி ஆரம்பித்துள்ளார் என்பதற்காக தங்களை அக்கட்சியில் இணைத்துக் கொள்ளவோ கட்சி பணியாற்றவோ வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். அக்கட்சிக்கும் நமக்கும் நமது இயக்கத்திற்கும் எவ்வித தொடா்பும் கிடையாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

என் பெயரை பயன்படுத்தக்கூடாது மேலும் என் பெயரையோ புகைப்படத்தையோ எனது அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடா்புபடுத்தி ஏதேனும் விவகாரங்களில் ஈடுபட்டால் அவா்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்." இவ்வாறு விஜய் கூறினார்.


கற்பனையான கேள்வி இதைத்தொடர்ந்து இன்று நடந்த பிரஸ் மீட்டில் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உங்களுக்கும் விஜய்க்கும் 5 ஆண்டுகளுக்கும் மேல் பேச்சு வார்த்தை இல்லை என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்த எஸ்ஏ சந்திரசேகர், சிலரின் கற்பனைக்கெல்லாம் நான் விளக்கம் கூற முடியாது. நாங்கள் கொரோனா காலங்களில் கூட பல முறை சந்தித்து பேசினோம் என்றார்.


கையெழுத்து போடவில்லை இந்நிலையில், தனது அரசியல் பயணம் குறித்து பொதுவெளியில் பேச வேண்டாம் என விஜய் பலமுறை கூறியும் தனது கணவர் கேட்கவில்லை என விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், அசோஷியன் என்ற பெயரில் முதலில் எஸ்.ஏ.சி என்னிடம் கையெழுத்து வாங்கினார். ஆனால் சில மாதங்களுக்கு முன்பு அவர் கட்சி என்ற பெயரில் கையெழுத்து கேட்டபோது நான் போட மறுத்துவிட்டேன்.

 

விஜய்யின் அரசியல் விஜய்க்கு தெரியாமல் நீங்கள் செய்யும் காரியங்களில் நான் ஈடுபடமாட்டேன் என்று கூறினேன். அந்த கட்சியில் நான் இல்லை. விலகிவிட்டேன். நான் அவருடைய கட்சியின் பொருளாளர் இல்லை. தன்னுடைய அரசியல் குறித்து பொதுவெளியில் பேச வேண்டாம் என்று விஜய் பலமுறை எஸ்ஏ சந்திரசேகரிடம் கூறியுள்ளார். ஆனால் அவர் அதை கேட்கவே இல்லை. தொடர்ந்து அரசியல் பேசி வருகிறார். இதனால் விஜய் அவருடன் பேசுவதில்லை. விஜய்யின் அரசியல் குறித்து விஜய்யிடம்தான் கேட்க வேண்டும்" என்றார்.


கருத்துகள் இல்லை: