சோபியா இஸ்லாத்தை ஏற்ற நிகழ்வைப் பற்றி முதலில் சில விடயங்களை பார்த்துவிட்டு கடிதத்தை வாசிக்க முயல்வோம்.
சோபியா இஸ்லாத்தை ஏற்கக் காரணம் அவரை பணயக் கைதியாக பிடித்து வைத்திருந்த இஸ்லாமிய போராளிகளின் சிறந்த இஸ்லாமியப் பண்புகள்தான் என்று சோபியாவின் புண்ணியத்தில் இஸ்லாத்தை உச்சி குளிரப் புகழ்ந்து தள்ளுகின்றார்கள் முஸ்லிம்கள்.
சோபியாவை நான்கு வருடங்கள் பணயக் கைதியாக பிடித்து வைத்திருந்தது ஜமாஅத் நஸ்ர் அல் இஸ்லாம் வல் முஸ்லிமீன் (JNIM) எனும் இஸ்லாமிய அமைப்பாகும். இந்த அமைப்பு யாருடைய அமைப்பு என்று பார்த்தால் உஸாமா பின் லேடனின் அல் கைதாவின் ஆபிரிக்கத் துணை அமைப்பாகும். இப்பொழுது முஸ்லிமான சோபியாவை கொண்டாடும் முஸ்லிம்களுக்கான கேள்வி என்னவென்றால் அல் கைதா தூய முஸ்லிம் அமைப்புத்தான் என்பதையும் ஏற்றுக்கொள்கின்றீர்களா என்பதாகும். நாளை இந்த JNIM விமானங்களைக் கடத்தி எதாவது கோபுரங்களைத் தாக்கிவிட்டால் "அவர்கள் முஸ்லிம்களே இல்லை" என்று நாக்கூசாமல் பொய் சொல்லாமல் "மாஷா அல்லாஹ்" என்று மகிழ்ச்சி கொள்வீர்களா? சோபியா கூட பணயக் கைதியாகவே பிடித்து வைக்கப்பட்டு இருந்தார் என்பதை மறக்க வேண்டாம், ஆகவே பணயக் கைதிகளாக சாதாரண பொது மக்களை பிடிப்பது இஸ்லாமிய முன்மாதிரி என்று ஏற்றுக் கொள்கின்றீர்களா? உஸாமா பின் லேடனை தூய முஸ்லிம் என்றும், அல் கைதா இஸ்லாமிய அமைப்பு என்றும் ஏற்றுக் கொள்கின்றீர்களா? சோபியா இஸ்லாத்தை ஏற்ற நிகழ்வை நீங்கள் கொண்டாடுவதாக இருந்தால் இவை அனைத்தையும் நீங்கள் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். நாயோடுதான் கோவம், அதன் வாலோடு இல்லை என்று சொல்ல முடியாதே?
இஸ்லாமிய பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த 75 வயதான சோபியா இஸ்லாத்தை ஏற்றது எப்படி சாத்தியமானது என்பதற்கு விடை காண வேண்டின், நீங்கள் Stockholm Syndrome என்றால் என்ன என்பதை அறிந்துகொள்ள வேண்டியிருக்கும், ஆர்வமிருந்தால் அதனை தேடித் தெரிந்து கொள்ளுங்கள். ISIS இஸ்லாமிய பயங்கரவாதிகள் ஈராக்கின் மொசூல் நகரை கைப்பற்றிய பொழுது அங்கு பணிபுரிந்த 48 இந்திய தாதிமாரை பிடித்து வைத்திருந்து, பின்னர் விடுதலை செய்தார்கள். அப்படி விடுதலையாகி வந்த இந்தியத் தாதியர் ISIS அமைப்பு தம்மை நடாத்திய விதத்தை புகழ்ந்து ஊடகங்களுக்கு கருத்து கூறி இருந்தமையையும் ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.
இப்பொழுது கடிதம் தொடர்பான விடயத்தை பார்ப்போம். உப்புச் சப்பில்லாமல் விடயத்தை உடனேயே முடிப்பதென்றால், 'சோபியா அப்படியொரு கடிதத்தை எழுதவேயில்லை என்பதுதான் நிஜம்' என்று உண்மையைப் போட்டு உடைப்பதைத் தவிர வேறு வழியில்லை. முதலில் அப்படியொரு கடிதம் அரபு மொழியில்தான் சமூக வலைத்தளங்களில் வெளியாகியது. பின்னர் அல்ஜீரிய வலைத்தளம் ஒன்று அதனை பிரெஞ் மொழிக்கு மொழிபெயர்த்தது. அந்த மொழிபெயர்ப்பில் கூட "இஸ்லாத்தை பூண்டோடு அழிப்பதற்கு கனவு காணும் இஸ்ரேலின் சதித் திட்டங்களுக்கு உதவுகின்றீர்கள்" போன்ற தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கு ஊட்டப்பட்டுள்ள கற்பனை சார் வசனங்கள் எல்லாம் இல்லை, அவை பெரும்பாலும் போலிக் கடிதத்தை தமிழுக்கு மொழி பெயர்த்த மூமினால் இலவச இணைப்பாக சேர்க்கப்பட்டவையாக இருக்க வேண்டும். யாழ்ப்பணத்தில் பிறந்து நோர்வேயில் வசிக்கும் பிராமண இந்துப் பெண்ணான வாசுகி மோகன் என்பவர் குர்ஆனை ஆய்வு செய்து அமெரிக்கப் பலகலைக் கழகத்தில் PhD முடித்து இருக்கின்றார் என்று நம்பிக்கொண்டு யாரோ ஒரு இந்திய வம்சாவளி மலேசியப் பெண்ணின் புகைப்படங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட பேக் ஐடியின் மொக்கைப் பதிவுகளுக்கு விழுந்தடித்து "மாஷா அல்லாஹ் சகோதரி" போடும் மொக்கு முஸ்லிம் கூட்ட வகையறாக்கள் இந்த போலிக் கடிதத்தையும் பகிர்ந்து உள்ளம் பூரித்துப் போயிருக்கின்றன. இந்தக் கூட்டங்கள் அறிந்தோ அறியாமலோ, அல்கைதாவும், உஸாமா பின் லேடனும் தூய முஸ்லிம்கள் என்று பிரச்சாரம் செய்துகொண்டு இருக்கின்றன, JNIM இற்கு இஸ்லாமிய அங்கீகாரத்தை கொடுப்பதன் மூலம். வாழ்க இஸ்லாம், வளர்க பொய்யும் புரட்டும்.
பொறுப்புத்துறப்பு:
எனது பதிவுகள், இடுகைகள், பகிர்வுகள், பின்னூட்டங்கள் மற்றும் பதில்களின் கீழே பதியப்படும் கருத்துக்களில் மிகவும் காத்திரமான கருத்துக்கள் மட்டுமே கவனத்திற் கொள்ளப்பட்டு பதிலளிக்கப்படும், அல்லது அவற்றிற்கான பதில்கள் முக்கியத்துவம் கருதி தனிப் பதிவாக இடப்படும். அர்த்தமற்ற புலம்பல்கள், நேரம் மற்றும் வளங்களை விரயமாக்கும் நோக்கில் அமைந்த கருத்துக்கள் மற்றும் கேள்விகள், ஆரோக்கியமற்ற கருத்துக்கள், விடய அறிவு இன்றி முன்வைக்கப்படும் கருத்துக்கள், பதிவுடன் எவ்விதத்திலும் தொடர்பற்ற கருத்துக்கள், காழ்ப்புணர்வின் காரணமாக வெளிப்படுத்தப்படும் கருத்துக்கள் ஆகியவை கவனத்தில் கொள்ளப்படமாட்டது. அத்துடன் மோசமான மொழிநடையில் அமையும் கருத்துக்கள் காணப்பட்டால் அவை அவ்வப்பொழுது நீக்கப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக