புதன், 4 நவம்பர், 2020
இலங்கையில் கரை ஒதுங்கிய 100 திமிங்கலங்கள் மீண்டும் கடலுக்குள் அனுப்பும் பணி தீவிரம்
sathiyam.tv :இலங்கையில் சுமார் 100 திமிங்கலங்கள் கரை ஒதுங்கியதால் திடீர் பரபரப்பு
ஏற்பட்டுள்ளது. அதனை மீண்டும் கடலுக்குள் அனுப்பும் பணியில் அதிகாரிகள்
ஈடுபட்டுள்ளனர். இலங்கை தலைநகர் கொழும்பு அருகே உள்ள பாணந்துரை கடற்கரையில் யாரும்
எதிர்பார்க்காத வகையில் சுமார் 100 திமிங்கலங்கள் அடுத்தடுத்து கரை
ஒதுங்கியது. சம்பவம் அறிந்து வந்த காவல்துறையினர், இலங்கை கடலோர
காவல்படையின் உதவியுடன் மீன்களை மீண்டும் கடலுக்குள் அனுப்பும் பணியில்
ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு திமிங்கலமும் சுமார் 10 அடி முதல் 25 அடி நீளமுடையவை என
தெரிகிறது. திமிங்கலங்கள் திடீரென கரை ஒதுங்கியது குறித்து விசாரணை
நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் கரை ஒதுங்கியுள்ள
திமிங்கலங்களை காண பொது முடக்கத்தை மீறியும் பொதுமக்கள் அதிகளவில்
குவிந்தனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக