வணிக சந்தைக்குள் நுழைகிறது ஜல்லிக்கட்டு :
'பீட்டா'வுக்கு 'டாட்டா' காட்டும் பிரபலங்கள்<
ஜல்லிக்கட்டு போராட்டத்தால், வணிக நிறு வனங்கள், தங்கள் பார்வையை
அதன் பக்கம் திருப்ப துவங்கியுள்ளன. 'பீட்டா' உறுப்பினர் களாக வலம் வந்த
பிரபலங்களும், மாற துவங்கியுள்ளனர்.
தமிழகத்தின்
பாரம்பரிய விளையாட்டான, ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த, விலங்குகள் நல
ஆர்வலர்கள் என, கூறிக்கொள்ளும், 'பீட்டா' போன்ற அமைப்புகளின் வழக்கால் தடை
ஏற் பட்டது. அந்த அமைப்பு, ஜல்லிக்கட்டு குறித்த தவறான தகவல்களை, மத்திய
அரசுக்கும், நீதிமன்றத்துக்கும் தெரிவித்து, தடை பெற்ற தாக, தமிழக மக்கள்
கருதுகின்றனர்.
இதையடுத்து, 'பாரம்பரிய உரிமையை மீட்டு எடுக்க
வேண்டும்' எனக் கூறி, மாணவர்கள் அறவழி போராட்டத்தில் இறங்கினர். மதுரை
மாவட்டம், அலங்காநல்லுாரில் துவங்கிய அந்த போராட்டம், இன்று தமிழகம்
முழுவதும் விரி வடைந்துள்ளது. சென்னை, மெரினா கடற்கரை யில் நடந்து வரும்
போராட்டம், தேசிய
ஊடகங்கள் மட்டுமல்லாது, சர்வதேச ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பீட்டா அமைப்புக்கு ஆதரவு தெரிவித்த, சினிமா பிரபலங்கள், தற்போது, 'பீட்டாவுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை' என, கூறுகின்றனர். 'பீட்டா' என்ற பெயர் அச்சடித்த, 'டி - சர்ட்'கள் அணிந்தவர்களும், தற்போது, ஜல்லிக்கட்டு ஆதரவு வாசகங்கள் உள்ள, டி - சர்ட்களை அணிகின்றனர். பெரிய வணிக நிறுவனங்களின் கவனமும், ஜல்லிக்கட்டு பக்கம் திரும்பியுள்ளது.
மக்களின் விருப்பம், எந்த பொருளின் மீது இருக்கி றதோ, அதை அடிப்படையாக வைத்தே, சந்தையை வணிக நிறுவனங்கள் தீர்மானிக்கும். அந்த வகை யில், குளிர்பானங்கள், உடைகள், உணவுகள், அலங் கார பொருட்கள், மொபைல் போன்கள் தொடர்பான சந்தை கட்டமைக்கப்படுகிறது.
தற்போது, ஜல்லிக்கட்டுக்கு பெருகியுள்ள ஆதரவை, வணிக நிறுவனங்கள் கூர்ந்து கவனிக்கின்றன. ஜல்லிக்கட்டு என்ற பெயர், காளைகளின் உருவம், காளைகளைஅடக்கும் வாலிபர் போன்ற உருவங் கள், அதை உருவகப்படுத்தும் பொருட்கள் ஆகிய வற்றை, வணிக ரீதியாக விளம்பர பொருளாக பயன்படுத்துவது குறித்து, வணிக நிறுவனங்கள் ஆலோசிக்க துவங்கியுள்ளன.
இதுகுறித்து, வணிக நிறுவனங்களுக்கான விளம்பர வடிவமைப்பாளர் ஒருவர் கூறிய தாவது: சிறிய நிறுவனங்கள், தற்போது, ஜல்லிக்கட்டு படங் களை, வணிக பொருட் களில் பயன்படுத்த துவங்கி விட்டன.
இதனால், பெரிய நிறுவனங்களும், அந்த போட்டியில் இறங்க தயாராகி வருகின்றன. ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகள் போல, ஜல்லிக்கட்டும் வணிக ரீதியாக பிரபலப்படுத்த வாய்ப்புகள் உள்ளன.
அதற்கான, சந்தை வளர்ந்தால், ஜல்லிக் கட்டுக்கு எதிரான அமைப்புகளின் நடவடிக்கை, வணிக ரீதியாக ஒடுக்கப்படும். தமிழக மக்களின் அறவழி போராட்டம், ஜல்லிக்கட்டு போட்டிகளை, பாரம்பரியம் என்ற தளத்தில் இருந்து, வணிக சந்தையில் பிரதான பொருளாக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் - - தினமலர்
கை கழுவும் பிரபலங்கள் :

மாற்றம் :

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக