ஞாயிறு, 22 ஜனவரி, 2017

புது கட்சி துவங்காவிட்டால்... தீபாவுக்கு ஆதரவாளர்கள் கெடு

வேலுார்:'உடனடியாக தனிக் கட்சியை துவங்கா விட்டால், வேறு அணிக்கு சென்று விடுவோம்' என, தீபாவுக்கு, அவரின் ஆதரவாளர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். ஜெ., அண்ணன் மகள் தீபாவுக்கு, வேலுார் மாவட்டத்தில், அதிகளவு ஆதரவு உள்ளது. ஆம்பூரில் துவங்கப்பட்டுள்ள தீபா பேரவையில், இதுவரை, இரண்டு லட்சம் பேர் உறுப்பினர் களாக சேர்ந்துள்ளனர். கடந்த, 17ல் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில், தீபா தனிக் கட்சி < துவங்குவார் என, அவரது தொண்டர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால், தனிக் கட்சி துவங்காத தால் ஏமாற்றம் அடைந்தனர். தீபா பேனர் வைத்தவிவகாரத்தில், தீபா பேரவை நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு, வேலுார் சிறை யில் அடைக்கப் பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்து, தீபா அறிக்கை வெளியிடவில்லை. இதனால், தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, தீபா பேரவையினர் கடந்த இரண்டு நாட்களாக, தீபாவுக்கு நுாற்றுக்கணக்கான கடிதங்கள் எழுதி அனுப்பியுள்ள னர். அக் கடிதத்தில் கூறியிருப்பதாவது:    அட போங்கய்யா காமடி பண்ணிக்கிட்டு .........இனி தீபா பேரவை அம்மா பேரவை எதுவுமில்லை ....தமிழ்நாடு மாணவர் பேரவை மட்டும்தான்


நீங்கள்உடனடியாக தனிக் கட்சி துவங்குவீர்கள் என்ற எதிர்பார்ப்பில் தொண்டர்கள் காத்திருக்கின்ற னர்.எனவே, காலம் தாழ்த்தாமல் தனிக் கட்சி துவங் கினால், இப்போது அ.தி.மு.க.,வில் உள்ளவர்கள், மாற்றுக்கட்சியினர் உங்களோடு வருவர்.தனி கட்சி துவங்க இது நல்ல நேரம். உள்ளாட்சி தேர்தலில்< கணிசமான இடங்களில் வெற்றி பெறலாம்.

இந்த நேரத்தை கோட்டை விட்டால், தங்களுக்காக தொண்டர்கள் காத்திருக்க மாட்டார்கள்; வேறு அணிக்கு சென்று விடுவர். எனவே, உடனடியாக தனிக் கட்சி துவங்க வேண்டும்.இவ்வாறு கடிதத்தில்
குறிப்பிட்டுள்ளனர்.  தினமலர்

கருத்துகள் இல்லை: