சேலத்தில்
ஜல்லிகட்டுக்கான போரட்டங்கள் தீவிரமடைந்துள்ளது தமிழர்களின் பாரம்பரிய
கலைகளான தாரை தப்பட்டை கரகாட்டம் மேள தாளங்கள் முழங்க சேவல் சண்டை,
சிலம்பாட்டம் மூலம் தங்களின் வீரத்தை வெளிப்படுத்தி பல்லாயிரக்கணக்கானோர்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பீட்டா
அமைப்பிற்கு தடை விதிக்க வேண்டும், ஜல்லிகட்டுக்கு அனுமதி அளித்திட
வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த இரண்டு நாட்களாக இரவு பகல்
பாராமல் மாணவர்கள் தங்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இதன்
ஒரு பகுதியாக சேலத்தில் மத்திய அரசை கண்டித்து, மாணவ மாணவியர்களின் சேலம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரே மூன்றாவது நாளாக போராட்டம்
தொடர்ந்தது..
இந்த நிலையில் இன்று மாணவ
மாணவியர்களுக்கு ஆதரவாக அவர்களது பெற்றோர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் என
பல்லாயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டு
ஜல்லிக்கட்டு தடையை நிரந்தரமாக நீக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு
வருகின்றனர்.
இளைஞர்களின் இந்த போராட்டத்திற்கு ஆதரவு பெருகிவருவதால் போராட்ட களம் மேள தாளம் ஆடல் பாடலுடன் திருவிழா களமாக மாறிவருகிறது.
பொதுமக்கள்
கூட்டம் கூட்டமாக தங்கள் குழந்தைகளுடன் வந்து போராட்டத்தில் ஈடுபட்டு
உள்ள இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருவதால் எங்கு பார்த்தாலும் மனித
தலைகளாக காட்சி அளிக்கிறது இன்று நான்காவது நாளாக நடைபெறும் இன்றைய
போரட்டத்தில் குடும்பம் குடும்பமாக மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு
குவியத்தொடங்கி உள்ளனர்.
தமிழர்களின்
பாரம்பரிய கலையான தாரை தப்பட்டை கரகாட்டம் கோலாட்டம், சிலம்பாட்டம்,
மற்றும் பொய்க்கால் குதிரை என பல்வேறு கலைகள் மூலம் தங்கள் திறமைகளை
வெளிப்படுத்தி மத்திய அரசு மற்றும் மாநில அரசிற்கு எதிராக தீவிரப்படுத்தி
உள்ளனர்.ஆங்காங்கே இளைஞர்கள் பட்டாளம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே
அமர்ந்து ஜல்லிக்கட்டை வலியுறுத்தி கோசங்களை எழுப்பி உள்ளனர்.
குழந்தைகள்
முதல் பெரியவர் வரை பாராபட்சமின்றி போராட்ட களத்தில் அமர்ந்த
ஜல்லிக்கட்டுக்கு உடனடியாக அனுமதி வழங்க கோரி ஈடுபட்டு வருகின்றனர்.
இது
ஒருபுறம் இருக்க சேலம் ஜங்சன் பகுதியில் இருந்து நான்காயிரத்திற்கும்
மேற்பட்ட மாணவிகள் ஒன்று திரண்டு ஊர்வலம் நடத்தினர் ஊர்வலத்தில்
ஜல்லிகட்டுக்கு உடனடயாக அனுமதி வழங்ககாவிட்டால் போராட்டத்தை
தீவிரப்படுத்தப்போவதாகவும் எச்சரிக்கை விடுத்தனர் முழுக்க முழுக்க மாணவிகள்
மட்டுமே பங்கேற்ற இந்த பேரணி ஐந்து ரோடு சாலையில் முடிவடைந்ததுமாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளவர்களின் களைப்பு போக்கும் வகையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நீர் மோர், குடிநீர், மற்றும் ஆவி பறக்க மதிய உணவுகளை வழங்கியது தமிழர்களின் ஒற்றுமையை பறைசாற்றுவதாக அமைந்தது.
மொத்தத்தில்
ஜல்லிக்கட்டின் உரிமையை பறிததின் மூலம் தமிழர்கள் அனைவரும் ஜாதி மத
பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து நடத்தி வரும் போராட்டம் தமிழர்களின்
உணர்வுகளையும், ஒற்றுமையும் பறைசாற்றுவதாகவே அமைந்துள்ளது என்றால் அது
மிகையல்ல. லைவ்டே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக