புதன், 24 பிப்ரவரி, 2016

நீதிபதி தத்து தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவர்! ஜெயாவுக்கு சுட சுட ஜாமீன்...அதே அதே.. Dattu build Rs.500,000,000 house..


தினமணி.com  :தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (என்ஹெச்ஆர்சி) புதிய தலைவராக உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி எச்.எல். தத்துவை (65) நியமிக்கலாம் என்று குடியரசுத் தலைவருக்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. How did CJI H.L. Dattu build Rs.500,000,000 house, questions Markandey Katju
வினவு Flashback :தலைமை நீதிபதி தத்துவின் யோக்கியதையோ சந்தி சிரிக்கிறது. தீர்ப்பு வழங்குவதற்கு சில நாட்கள் முன்பு தலைமை நீதிபதி தத்து நேரடியாகவே பெங்களூரு வந்து, ஜெயலலிதாவை விடுவிப்பதாக தீர்ப்பு இருக்கவேண்டுமென்பதை உத்திரவாதம் செய்து கொண்டதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றன. ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்குவதில் தொடங்கி, இடையிடையே வரும் சிக்கல்களைச் சமாளித்து, கடைசியில் வழக்கைச் சாதகமாக முடித்துக் கொடுப்பது வரை ஒரு பேக்கேஜ் ஆக பேசி முடிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்புதான் இது என்று தெரிகிறது.
 தலைமை நீதிபதி தத்து, எதிர்த்தரப்பான கர்நாடக அரசுக்குத் தகவல் கூடத் தெரிவிக்காமல் ஜெயலலிதாவுக்குப் பிணை கொடுத்தது, நாரிமன் கேட்காமலேயே உயர்நீதி மன்ற அப்பீல் விசாரணைக்கு தானே முன்வந்து ஏற்பாடு செய்தது,
பிணை மனு விசாரணை வேறு நீதிபதியிடம் செல்லாமல் தன்னிடமே பிடித்து வைத்துக் கொண்டது, பவானி சிங் நியமனம் செல்லாது என்று நீதிபதி லோகூர் தீர்ப்பளித்தவுடனே, அதன் மேல்முறையீட்டை விசாரிப்பதற்கான 3 நீதிபதிகள் அமர்வை அவசரம் அவசரமாக செட்டப் செய்தது, ஓய்வு பெறுவதற்கு சில மாதங்களே உள்ள கர்நாடக உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி வகேலாவை அவசரம் அவசரமாக இடமாற்றம் செய்தது – போன்ற நடவடிக்கைகளில் தத்துவின் யோக்கியதை சந்தி சிரிக்கிறது. ஆனால், அவர் கவலைப்படவில்லை. ஐயாயிரம் பேரோடு மொட்டை போட்டுக்கொண்டு கூச்சமே இல்லாமல் பத்திரிகைக்கு போஸ் கொடுக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் தத்துவுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.  www.vinavu.com/2015/06/16/kumarasamy-judgement-a-study-in-indian-jurisprudence/



தினமணி.com  :தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (என்ஹெச்ஆர்சி) புதிய தலைவராக உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி எச்.எல். தத்துவை (65) நியமிக்கலாம் என்று குடியரசுத் தலைவருக்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.
 ஆணையத்தின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்வுக் குழுக்
  கூட்டம் தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் குழுவின் உறுப்பினர்களான மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே. குரியன், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பணியாற்றி கடந்த ஆண்டு டிசம்பரில் ஓய்வு பெற்ற எச்.எல். தத்துவின் பெயரை தேர்வுக் குழு இறுதி செய்தது. இதைத் தொடர்ந்து, அவரது பெயரை ஆணையத்தின் தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கும் கடிதத்தை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு தேர்வுக் குழு அனுப்பி வைத்தது. இதற்கு ஒப்புதல் தெரிவித்து ஆணையத்தின் புதிய தலைவராக தத்துவை நியமிக்கும் ஆணையை குடியரசுத் தலைவர் விரைவில் பிறப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 எட்டு மாதங்களுக்கு பிறகு..:
 தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் பணியாற்றி கடந்த ஆண்டு மே மாதம் ஓய்வு பெற்றார். அதன் பிறகு சில மாதங்கள் காலியாக இருந்த அந்தப் பதவிக்கு உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான பி. சதாசிவம் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் சதாசிவத்தை கேரள ஆளுநராக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நியமித்தார். இதைத் தொடர்ந்து, ஆணையத்தின் பொறுப்புத் தலைவராக பணியாற்றும்படி அதன் உறுப்பினர்களில் ஒருவரான ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சிரியாக் ஜோசஃப் கேட்டுக் கொள்ளப்பட்டார். இந்த நிலையில், எட்டு மாதங்களுக்குப் பிறகு ஆணையத்தின் தலைவர் பதவிக்கு தத்துவின் பெயரை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது.
 தத்துவின் பின்னணி: அரசியலமைப்பு விதிகளின்படி தன்னிச்சையான அதிகாரம் பெற்றுள்ள தேசிய மனித உரிமைகள் ஆணைய சட்டத்தின்படி உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற ஒருவரைத்தான் ஆணையத்தின் தலைவராக நியமிக்க முடியும். அந்த அடிப்படையில் ஆணையத்தின் புதிய தலைவர் பதவியை தத்து வகிப்பார். கர்நாடக மாநிலம், சிக்கமகளூரில் பிறந்தவர் தத்து. 1975-இல் வழக்குரைஞராக தொழிலைத் தொடங்கி 1983-ஆம் ஆண்டு வரை பல்வேறு நீதிமன்றங்களில் ஆஜராகி வந்தார். பின்னர் அரசு வழக்குரைஞராக நியமிக்கப்பட்டார். 1995-இல் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2007-இல் சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தில் சில மாதங்களும் அதன் தொடர்ச்சியாக கேரள உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றினார். 2008-இல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர், பதவி உயர்வு பெற்று 2014, செப்டம்பர் முதல் கடந்த ஆண்டு டிசம்பர் 2-ஆம் தேதி வரை தலைமை நீதிபதியாகப் பணியாற்றினார்.

கருத்துகள் இல்லை: