வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு இந்திய நிறுவனங்கள் வெடிகுண்டு மூலப் பொருள் விற்பனை?

ஐஎஸ் தீவிரவாதிகள் வெடிகுண்டுகள் தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை 7 இந்திய நிறுவனங்கள் விற்பனை செய்திருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு கிடைக்கும் உதவிகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் நடத்திய ஆய்வு முடிவுகள் வெளியிட்டுள்ளன. அதில் ஐஎஸ் தீவிரவாதிகள் பயன்படுத்தும் வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்களை 20 நாடுகளைச் சேர்ந்த 51 நிறுவனங்களின் தயாரிப்புகள் இடம்பெற்றிருந்தது. அதிகபட்சமாக துருக்கியில் செயல்படும் 13 நிறுவனங்கள், தீவிரவாதிகளுக்கு தேவையான ஆயுதங்களை விநியோகிப்பதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


ஐஐடி எனப்படும் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள், டெடனேட்டர்கள் அவற்றை வெடிக்கச் செய்வதற்காக வயர்கள் போன்றவற்றை 7 இந்திய நிறுவனங்கள் விற்பனை செய்திருப்பதும் ஆய்வில் கண்டறிப்பட்டுள்ளது. 7ல் 4 நிறுவனங்கள் இத்தகவலை திட்டவட்டமாக மறுக்கும் நிலையில், நேரடியாக அவற்றை தீவிரவாதிகளுக்கு விற்கவில்லை என 2 நிறுவனங்கள் விளக்கமளித்துள்ளன. தங்களது தயாரிப்புகளை வாங்கும் பிற நிறுவனங்கள், அவற்றை தீவிரவாதிகளுக்கு அளித்திருக்கலாம் என்றும் அவை கூறியுள்ளன. dinakaran.com

கருத்துகள் இல்லை: