வியாழன், 5 நவம்பர், 2015

கெஜ்ரிவால் :பா.ஜ., தோற்கடிக்கப்பட வேண்டியது அவசியம்

புதுடில்லி: பீஹார் சட்டசபை தேர்தலில் பா.ஜ., தோற்கடிக்கப்பட வேண்டியது அவசியம் என டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறியுள்ளார்
இது தொடர்பாக டுவிட்டரில் கூறியதாவது: ;பீஹார் சட்டசபை தேர்தலில், பா.ஜ., தோற்கடிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம். அப்போது தான், மத உணர்வுகளை தூண்டும் விதமாக இனி பிரசாரம் செய்ய கூடாதென, பா.ஜ., தலைவர்களுக்கு புரியும் என கூறியுள்ளார்.விளம்பரத்தால் சர்ச்சை: >பீஹாரில் இறுதிக்கட்ட தேர்தல் நடக்கும் பகுதிகளில், பா.ஜ., சார்பில் நேற்று பத்திரிகைளில் விளம்பரம் கொடுக்கப்பட்டிருந்தது. அதில், இந்துக்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவதாக, லாலு பிரசாத் உள்ளிட்ட தலைவர்கள் கூறியது தொடர்பான வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. 'முதல்வர் நிதிஷ் குமார், இதற்கு பதில் கூறாமல் மவுனம் காப்பது ஏன்' என்ற கேள்வியும் கேட்கப்பட்டிருந்தது. இதையடுத்து, தேர்தல் நேரத்தில் மத உணர்வுகளை துாண்டும் வகையில் பா.ஜ.,வினர் விளம்பரம் கொடுத்துள்ளதாக, தேர்தல் கமிஷனிடம், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.


பீஹாரில் இன்று இறுதிக்கட்ட தேர்தல்:

பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, 243 சட்டசபை தொகுதிகளுக்கு, ஐந்து கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆளும் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணியில், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உள்ளன. பா.ஜ., தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணியில், இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா, லோக்ஜன சக்தி ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. நான்கு கட்ட தேர்தல் முடிந்து விட்ட நிலையில், மீதமுள்ள, 57 தொகுதிகளில், இன்று இறுதிக்கட்ட தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில், 1.5 கோடி வாக்காளர்கள் ஓட்டளிக்க தகுதி பெற்றுள்ளனர். 827 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்; இவர்களில், 58 பேர் பெண்கள். நக்சலைட் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் தேர்தல் நடப்பதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய துணை ராணுவப் படையினரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தலில் பதிவான ஓட்டுகள், வரும், 8ல், எண்ணப்பட்டு, அன்று மாலைக்குள் பெரும்பாலான முடிவுகள் அறிவிக்கப்பட்டு விடும். பீஹாரில், நிதிஷ் குமார் மீண்டும் ஆட்சியை பிடிப்பாரா அல்லது பா.ஜ., ஆட்சி அமைக்குமா என்பது, அன்று மாலை தெரிந்து விடும். தினமலர்.com

கருத்துகள் இல்லை: