செவ்வாய், 3 நவம்பர், 2015

ஆர்ப்பாட்டம் மீது போலீஸ் கொடூர தாக்குதல்..கோபன் கைதை கண்டித்து மக்கள்.......


மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மைய கலை மக்கள் பாடகர் கோவன் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சியில் உள்ள அவரது வீட்டில் அதிரடியாக நள்ளிரவில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
 தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தி மக்களுக்கான விழிப்புணர்வு பாடல் மூலம் மக்களை தூண்டி விடுவதாக கூறி அவர் மீது தேச பாதுகாப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று கொடைக்கானலில் உள்ள வன விலங்கு சரணாலயத்தை அழிக்க வேண்டும் என்ற நோக்கில் அங்குள்ள பழங்குடியினரை இடத்தை காலி செய்ய வேண்டும் என்று அரசு கூறியதால் அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து கோவன் பாடிய பாடல்கள் மக்களை போராடுவதற்க்கு தூண்டிவிடுவதாக கூறி அவர் மீது நேற்று இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 இந்நிலையில் தமிழகம் முழுவதும் மக்கள் கலை இலக்கிய கழகத்தினர் கோவனை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.  
மக்கள் வரிபணத்தில் சம்பளம் வாங்கும் இந்த போலீஸ்கு மக்களை அடிக்கும் அதிகாரம் யார் குடுத்தது.குடிக்கு ஆதரவாக அரசும்,போலீஸ் இருப்பது பெரிய அவமானம்..
< அதன் ஒருபகுதியாக திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அண்ணாசிலை அருகில் மக்கள் கலை இலக்கிய கழகம் சார்பில் ஆர்பாட்டம் நடத்துதற்கு முறைப்படி கோட்டை காவல்நிலையத்தில் அனுமதி பெற்று இருந்தனர். இந்த நிலையில் இன்று காலை தீடீர் என்று ஆர்பாட்டம் கொடுத்த அனுமதியை ரத்து செய்கிறோம் என்று ஆர்பாட்டத்திற்காகன அனுமதியை ரத்து செய்தனர். ஆனாலும் திருச்சியில் உள்ள மகஇகவினர் மற்றும் மக்களின் அதிகாரம் அமைப்பை சேர்ந்தவர்கள் சுமார் 100க்கும் மேல் கோவனை விடுதலை செய்ய வேண்டும், மதுகடைகளை இழுத்து மூட வலியுறுத்துவது குற்றமா? என்று தமிழக அரசிற்க்கு கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் காவல்துறையினர் அவர்களுக்கு ஒலி பெருக்கிகளை வைக்க அனுமதி அளிக்காததால் தங்களுடைய போராட்டத்தை தீவிர படுத்திய போராட்டகாரர்கள் போராட்டம் தொடர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ஆர்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால் காவல்துறையினருக்கும் மக்கள் கலை இலக்கிய கழகத்தினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த காவல்துறையினர் போராட்டகாரர்களை கொலை வெறியாக தாக்கியதோடு குண்டுகட்டாக தூக்கி ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 92 பேரை கைது செய்தனர். இதில் இரண்டு பேருக்கு மண்டை உடைந்தது. ஏன் ஆர்பாட்டத்திற்கு அனுமதி மறுத்தீர்கள் என்று திருமண மண்டபத்தில் கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் உண்ணாவிரமாக மாற்றி ஒத்துழையாமை இயக்கம் நடத்த ஆரம்பித்து இருக்கிறார்கள். இதனால் கோட்டை காவல்நிலைய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டுயிருக்கிறார்கள். ஏன் எங்கள் மீது தடியடி நடத்துனீர்கள், ஏன் பேராட்டத்திற்கு கொடுத்த அனுமதியை ரத்து செய்தீர்கள், எங்களுக்கு மீண்டும் போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும், பாடல் படினவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்வதை கண்டித்து ஆர்பாட்டம் நடத்தினால் அதையும் தடை செய்வீர்களா? என்கிற கேள்வியோடு கைது செய்யப்பட்ட திருமண மண்டபத்திலே உண்ணாநிலையில் இருக்கிறார்கள். -ஜெ.டி.ஆர்.  nakkheeran.com

கருத்துகள் இல்லை: