திங்கள், 2 பிப்ரவரி, 2015

இலங்கை முன்னாள் அமைச்சர் திசா அத்தநாயகே கைது!

இலங்கையில் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் ஆட்சி காலத்தில் போது   சுகாதார துறை மந்திரியாக இருந்தவர் திசா அத்தநாயகே. ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த இவர், அதிபர் தேர்தலுக்கு முன்பு அக்கட்சியில் இருந்து விலகி ராஜபக்சே கட்சியில் சேர்ந்தார்.அதிபர் தேர்தல் சமயத்தில் இவர் பரபரப்பான ஆவணம் ஒன்றை வெளியிட்டார். 13-வது அரசியல் சட்ட திருத்தத்தின்படி, தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது தொடர்பாக சிறிசேனா வுக்கும், ரனில் விக்கிரமசிங்கேவுக்கும் இடையே ரகசிய உடன்பாடு ஏற்பட்டு இருப்பதாக கூறினார்.இது தொடர்பான ஆவணத்தில் சிறிசேனா, ரனில் விக்கிரமசிங்கே இருவரும் கையெழுத்திட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்த சிறிசேனாவும் ரனில் விக்கிரமசிங்கேவும் அந்த ஆவணத்தில் உள்ள கையெழுத்து தங்கள் கையெழுத்து அல்ல என்றும் போலியானது என்றும் கூறி புகார் செய்தனர்.
இந்த நிலையில், போலியான ஆவணத்தை தயாரித்து மோசடியில் ஈடுபட்டதாக கூறி முன்னாள் மந்திரி திசா அத்தநாயகேவை கொழும்பு குற்றப்பிரிவு போலீசார் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.nakkheeran.in

கருத்துகள் இல்லை: