வியாழன், 5 பிப்ரவரி, 2015

தி.முகவின் பழனிமாணிக்கம், ரகுபதி அ தி.மு.க.வுக்கு ? இந்த காலில் விழுவதை விட அந்த காலில் விழுந்தால்......

சென்னை: முன்னாள் அமைச்சர்கள் பழனிமாணிக்கம், புதுக்கோட்டை ரகுபதி ஆகியோர் தி.மு.க.வில்தான் தொடர்ந்து நீடிக்கப் போவதாக விளக்கம் அளித்துள்ளனர். தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களான பழனிமாணிக்கம், புதுக்கோட்டை ரகுபதி, அனிதா ராதாகிருஷ்ணன், நெல்லை கருப்பசாமி பாண்டியன் மற்றும் முல்லைவேந்தன் ஆகியோர் அண்ணா தி.மு.க.வில் ஐக்கியமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இது தொடர்பாக பழனி மாணிக்கம் மற்றும் புதுக்கோட்டை ரகுபதி தரப்பில் நாம் விளக்கம் கேட்டோம். இதற்கு பதிலளித்துள்ள பழனிமாணிக்கம், தி.மு.க.வில் மரியாதை கிடைக்கிறது கிடைக்கவில்லை என்பது பிரச்சனையே இல்லை. தற்போது உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர் பதவி கொடுத்துள்ளனர். என்னைப் பொறுத்தவரையில் தி.மு.க.வில் நான் எப்படி நடத்தப்பட்டாலும் சாகும்வரை கட்சியில்தான் இருப்பேன் என்று கூறியுள்ளார்.ஸ்டாலின் தலைமையில் திமுக இருப்பதை பார்க்கையில் இன்னொரு அதிமுகவை போலவே இருக்கிறது . இரண்டுமே அடிமைகள் கூட்டத்தை வைத்து ஆட்டம் போடுகின்றன .இங்கே ஆடினால் என்ன அங்கே ஆடினால் என்ன ?
இதேபோல் புதுக்கோட்டை ரகுபதி தமது ஆதரவாளர்களிடம், அண்ணா தி.மு.க.வுக்கு போனால் என்ன மாதிரியான மரியாதை கிடைக்கும் என்பது தெரிந்த கதைதான்.. தி.மு.க.வில் கிடைக்கிற மரியாதையை வைத்துக் கொண்டு இங்கேயே இருந்துவிடுவேன் என்று கூறியிருக்கிறார். மேலும் தி.மு.க. தலைமையால் உட்கட்சி பூசலால் கட்சியில் நீக்கப்பட்டிருக்கும் முல்லைவேந்தனோ, தாம் சென்னையில்தான் இருக்கிறேன்;.... ஆனால் போயஸ்தோட்டத்துக்குப் போகவில்லை என்று பட்டும் படாமலும் தெரிவித்துள்ளா
/tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: