வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதலில் சவுதி அரேபிய முன்னாள் மன்னர் குடும்பம் உடந்தை!

டெல்லி: நியூயார்க் இரட்டை கோபுரத்தில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு சவுதி அரேபியா உதவி செய்துள்ளதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் நண்பனாக அறியப்படும் சவுதி அரேபியாவின் முன்னாள் மன்னரின் குடும்பத்தினர் இந்த சதிக்கு உதவியாக தகவல் வெளியாகியுள்ளது. 9/11 தாக்குதல் தொடர்பாக அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் நடத்திய விசாரணை 800 அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் 28 பக்கங்களில் சவுதி அரேபியாவின் தொடர்பு குறித்து விளக்கம் உள்ளது. தாக்குதலுக்கு உடந்தையாக இருந்து தற்போது ஆயுள் தண்டனை பெற்றுள்ள தீவிரவாதி ஷகாரியாஸ் மொசாய், விசாரணையின்போது கூறிய தகவல்களும் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. இரு செனட் உறுப்பினர்களிடமிருந்து அறிக்கையிலுள்ள அம்சங்கள் தகவல் கசிந்துள்ளது. வால்டர் ஜோன்ஸ் மற்றும் ஸ்டீபன் லைன்ஸ் ஆகிய எம்.பிக்கள் இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளனர். அறிக்கையை ஜார்ஜ் புஷ் அரசு வெளியிடாமல் தடுத்து வைத்ததாகவும், இதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். நியூயார்க் தாக்குதலில் சவுதி அரேபிய முன்னாள் மன்னர் குடும்பம் உடந்தை!: திடுக் சிஐஏ தகவல் லீக்!! அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏவிடமிருந்து கசிந்த இந்த தகவல்களை எம்.பிக்கள் கண்டுபிடித்து வெளியிட்டுள்ளனர். சிஐஏ லீக் செய்த தகவல்படி, அல்கொய்தாவோ அல்லது தாலிபான்களோ நியூயார்க் இரட்டை கோபுரத்தை தாக்கவில்லை, அதற்கு முழு காரணமும் சவுதி அரேபியாதான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் அம்சங்கள் இவைதான்: சவுதியின் உளவுத்துறை, சர்வதேச விவகாரத்துறை அதிகாரிகள், விமான கடத்தல்காரர்களுக்கு முழு உதவி, ஒத்துழைப்பு செய்துள்ளனர். சவுதி மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான், தீவிரவாதிகளுக்கு, உதவி செய்ய வேண்டும் என்ற உத்தரவை அதிகாரிகளுக்கு பிறப்பித்துள்ளனர். விமான கடத்தலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் காலித் அல்-மிக்தார் மற்றும் நவாப் அல்-ஹஸ்மி ஆகியோரை வரவேற்று உதவி செய்து கொடுத்தது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள சவுதி அரேபியாவின் தூதரகம்தான். சவுதியின் உளவுத்துறை அதிகாரி ஒசாமா பஸ்னான் என்பவர் மற்றும் உளவாளி உமர் பயோவ்மி ஆகியோர் இணைந்து சான்டியாகோ நகரில் கடத்தல்காரர்களுக்கு வீடு எடுத்துக் கொடுத்துள்ளனர். இங்கு வைத்துதான், அல்கொய்தாவின் அன்கர் அல்-அவலக்கியும், கடத்தல்காரர்களும் சந்தித்து சதி திட்டத்தை முடிவு செய்துள்ளனர் நியூயார்க் தாக்குதலில் சவுதி அரேபிய முன்னாள் மன்னர் குடும்பம் உடந்தை!: திடுக் சிஐஏ தகவல் லீக்!! செல்வம்மிக்க நாடான சவுதி அரேபியாதான், கடத்தல்காரர்களுக்கு ஏகப்பட்ட பணத்தை அனுப்பியுள்ளது. அமெரிக்காவுக்கான சவுதி தூதராக இருந்த இளவரசர் பந்தர் $130,000 அளவுக்கு நிதியை ஒசாமா பஸ்னானுக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த பணம் கடத்தல்காரர்கள் கைகளுக்கு சென்று சேர்ந்துள்ளது. மேலும், விர்ஜினியாவில் இஸ்லாமிக் மையம் ஒன்றை அமைக்கவும் பந்தர் முயன்றுள்ளார். அல்கொய்தாவை சேர்ந்த அவ்லக்கியும், பந்தரும் இணைந்துதான் சதியை முழுமையடையச் செய்துள்ளனர். அவ்லக்கி ஒருமுறை அமெரிக்காவில் இருந்து தப்பியோட முயலும்போது, ஜேஎப்கே ஏர்போர்ட்டில் கைது செய்யப்பட்டார். ஆனால், சவுதி அதிகாரிகளிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து மீண்டும் தப்பியோடிய அவ்லக்கி, ஏமன் நாட்டில் சில காலம் தங்கியிருந்தார். அதன்பிறகு கொல்லப்பட்டார். இவ்வாறு அந்த அறிக்கை கூறுகிறது. இதனிடையே, சவுதி அரேபியா இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது.
://tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை: