பழமையான தேவதாசி முறை ஒழிக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், இன்னும் சில
மாநிலங்களில் நீடிப்பதாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தெரியவந்துள்ளது.
இதனையடுத்து தேவதாசி முறையை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் உள்துறை அமைச்சகத்தின்
சார்பில் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
அந்த கடிதத்தில், ‘தேவதாசி முறை மனிதாபிமானமற்ற செயல். பெண்களின்
கண்ணியத்தை குறைக்கும் மோசமான செயல் ஆகும். தேவதாசி முறை முழுமையாக
ஒழிக்கப்பட்டு விட்டதாக கூறப்பட்டாலும், இன்னும் சில மாநிலங்களில்
நடைமுறையில் இருப்பதாக ஊடகங்கள் வாயிலாக தெரியவந்துள்ளது. இது இந்திய
தண்டனை சட்டத்தை மீறிய செயலாகும். எனவே தேவதாசி முறையை ஒழிக்க கடும்
நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு உள்ளது. dailythanthi.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக