ஈரோடு வேலைப்ப வீதியில் ஒரு குரங்கு தனது கைகளில் ஒரு நாய்க்குட்டியை பத்திரமாக காவிகொண்டு திரியும் காட்சி பார்ப்பவர் மனதை நெகிழ செய்கிறது. நாய்க் குட்டியும் குரங்கையே தனது தாய் போல எண்ணி மிகவும் மகிழ்ச்சியாக சுகமாக இருக்கிறது, மனிதர்கள் தங்கள் சொந்த குழந்தைகளிடம் கூட இவ்வளவு பாசமாக இருப்பார்களா என்று அதிசயக்கும் படி இவர்களின் அன்பு தெரிகிறது
ஈரோட்டில் குரங்கு ஒன்று நாய் குட்டியை பாசத்துடன் வளர்த்து வருகிறது.
ஈரோடு முத்து வேலப்ப வீதியில் சுற்றி திரிந்த ஒரு ஆண் குரங்கு,
பிறந்து ஒரு மாதமே ஆன நாய்குட்டியுடன் பழகி வருகிறது. குரங்கு, நாய்
குட்டியுடன் பாசத்துடன் பழகுவதை கண்ட மக்கள், நாய்குட்டியை பிரித்து
கொண்டு செல்ல முயற்சித்தனர். ஆனால் குரங்கு நாய் குட்டியுடன் மாயமாக
மறைந்து விட்டதாம். தற்போது மீண்டும் அதே பகுதியில் குரங்கு, நாய்
குட்டியுடன் தென்படத் தொடங்கியுள்ளது.

நாய்க்குட்டி மீது பரிதாபப்பட்டு அதற்கு பிஸ்கட், திராட்சை பழங்களை
போட்டால் அதனை குரங்கு எடுத்து சாப்பிட்டு விடுகிறதாம். கடந்த 3 நாட்களாக
குரங்கின் பிடியில் இருந்து நாய்க்குட்டியை விடுவிக்க மக்கள் போராடி
வருகின்றனர். குரங்கோ எந்த நேரமானாலும் அந்த நாய்குட்டியை விட்டு
பிரிவதில்லை. மக்கள் குரங்கை விரட்டினாலும், அந்த குரங்கு பொதுமக்களை தாக்க
வருகிறதாம்.
குரங்கு, நாய்க்குட்டியை வைத்துள்ளது குறித்து வனத்துறையினருக்கும் தகவல்
தெரிவிக்கப்பட்டுள்ளது. வனத்துறையினர்தான் குரங்கிடம் இருந்து நாயை மீட்க
வேண்டும் என்று மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக